Tuesday, March 29, 2011

காதலுடன் கமல்

kamalசின்ன வயசில் இருந்தே எனக்கு கமல்ஹாசனைப் பிடிக்கும். ஏன் எதனாலன்னு தெரியாது. "எனக்கு கமலத்தான் ரொம்ப பிடிக்கும்". பத்தாவது படிக்கும் போது இப்படி சொன்னப்ப  கூடப் படித்த அரைடிராயர் ஒழுக்கசீலர்கள் "ஐயையே.. அவன் கன்னப்பின்னான்னு கிஸ்ஸு அடிப்பான். அவன புடிக்குமா"ன்னு அழகு காண்பித்து ஒதுங்கினார்கள். முத்தம் கித்தம் பித்தம்ன்னு ஒரு பாவமும் அறியாத வயசு புரியாத பருவம். காலேஜ் போனதுக்கப்புறம் ரஜினி கமல் என்று வித்தியாசம் பார்க்காமல் கட் அடித்து சினிமா பார்த்தது ஒரு காலம். ஒரு தீபாவளிக்கு குணாவும், தளபதியும் ரிலீஸ் ஆன போது ரஜினி படு ஸ்மார்ட்டா தலையை மேலே தூக்கி சீவி புத்தம் புது மோஸ்தரில் போஸ்டரில் ஸ்டைல் ஆக தெரிந்தார். நம்மாளு ஒரு மாதிரியா என்னைப் போல சைடு வகிடு எடுத்து ஒரு பக்கமாக தலைவாரி என்னை மாதிரி இல்லாமல் லேசா சித்தப் பிரமை பிடித்தவராக நடித்தார்.  என்ன இருந்தாலும், வாழ்வே மாயம், காக்கிச் சட்டை, சகலகலா வல்லவன், டிக்.டிக்.டிக்., உயர்ந்த உள்ளம், எனக்குள் ஒருவன், கலைஞன், உன்னால் முடியும் தம்பி, நாயகன், குரு, விக்ரம், வெற்றிவிழா, உல்லாசப் பறவைகள், தூங்காதே தம்பி தூங்காதே என்று பல படங்களில் மன்மதனை ஒத்த கமலை நாம் கண்ணார கண்டு ரசிக்க முடியும்.

சரி, எங்கயோ போய் விட்டோம். இப்ப இந்தப் பதிவு, நேற்றிரவு கொஞ்சம் சிலிர் காற்று அடித்த போது மொட்டை மாடியில் கேட்ட "முத்தம் போதாதே.. சத்தம் போடாதே" என்று எனக்குள் ஒருவனில் எஸ்.பி.பியும் ஜானகியும் ரொமான்டிக்காக என் வீட்டு சோனியில் பாடியபோது உதித்தது. எப்போதுமே காதலுக்கு ஜே போட்டு பாடுவதில் கமல் பிரசித்தம்.

ஷோபனா கொஞ்சம் உசரம் ஜாஸ்தி. கமல் ஹீல்ஸ் போட்டுகிட்டு நடிச்சாரோ?
இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்.. நாணமே ..நாணுதே..



அமலாவை கிச்சு கிச்சு மூட்டி, பல்லவனில் புட் போர்டு அடிக்க வைத்து... அமலா பயில்வான் காண்பிக்கும் கட்டம்... எஸ்.பி.பியும் லதாஜியும் .. சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணத் தேராட்டம்.
வளையோசை கல கல கலவென...



இந்தப் பாட்டை சேர்க்கவில்லை என்றால் கமல் பாபம் வந்து சேரும். இளையராஜாவின் இசை ராஜாங்கம். எஸ்.பி.பியும் ஜானகியும் பாடிய பாடல். காதுகளுக்கு தேன். கமல் காக்கிச்சட்டையில் கலக்கிய படம்...
கண்மணியே பேசு.. 


ஒரு போதையில் இருந்து மறு போதைக்கு வரவழைத்த நிரோஷாவுடன் கமல் பாடும் சூரசம்ஹாரம் படப் பாடல். அருண்மொழி பாடியது. நிரோஷாவுடன் கூட ரொமான்ஸ் பண்ணத் தெரிந்த கமல்....

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி..




பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பியில் எல்.கே.மலத்துடன் கமல் பாடும் டூயட். சைக்கிள் எழுந்திருக்க, மரம் பூச்சொரிய, இளமை துள்ளும் சீதாவுடன்....

இதழில் கதை எழுதும் நேரமிது....



ஒரு மாறுதலுக்கு குஷ்பு கிஸ் கொடுக்க ஆரம்பித்து கமல் கதை முடிக்கும் இந்த சிங்காரவேலன் படப் பாடல். எஸ்.பி.பி.. ஜானகி. குழலும், வயலினும் மாறி மாறி பின்னி பெடலெடுக்கும்.....

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்..



கொலைகாரப் பட்டம் கிடைத்து ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடும் கமல், ஈடு இணையில்லா இந்த்ரஜித்தாக நடித்த கலைஞன் படத்தில் இருந்து... ஜேசுதாஸ் ஜானகி பாடிய...

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா...



அம்பிகாவுடன் உயர்ந்த உள்ளத்தில் கிருஷ்ணர் போஸ் கொடுத்து நடு ஹாலில் ரொமான்ஸ் பண்ணும் கமல்.. இளையராஜா, எஸ்.பி.பி. ஜானகி. "டெட்லி ட்ரையோ!"

எங்கே என் ஜீவனே... கண்ணில் கண்டேனே...



பள்ளியறைப் பாடம் படிக்கும் வயதில் பள்ளிப் பாடம் படிக்கச் சொல்லும் ராதாவிடம் காதல் பேசும் கமல். ஒரு கைதியின் டைரி படித்தில் இருந்து..

ஏ.பி.சி நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. சோ ஈசி.. 


இரண்டாவது சரணம் முடிவில் எஸ்.பி.பியின் சிரிப்பிற்கும் கமல் நடிப்பிற்கும் அடாடா.. ஊர்வசி... கமல்.. அந்த ஒரு நிம்டம் படத்தில்.....

சிறிய பறவை சிறகை விரிக்க நினைக்கிறதே .. 



பின் குறிப்பு: இது ஒரு முடிவிலாப் பட்டியல். சட்டென்று தோணியதை இங்கே பகிர்ந்தேன்.

பட உதவி: mp3.tamilwire.com

-

41 comments:

பத்மநாபன் said...

காதல் இளவரசனின் பாட்டு தேர்வுகள் அனைத்தும் இளமையும் காதலும் உச்சத்தில் இருந்ததை ஒரே ரசனையாக அழகாக தொகுத்துள்ளீர்கள். அதில் வளையோசை சின்ன சோக முகத்தோடு அந்த தாடியில் குறும்பு கொப்பளிக்க அருமையான நடிப்புக்கு பின்ணனி பாலுவும் லதாம்மாவும் கிளாசிக்..
பதிவிற்கு சிறப்பு நன்றி....

அப்பாதுரை said...

எந்தன் நெஞ்சில் பாட்டில் யாரு பெண்மணி?

Sivakumar said...

மன்மதன் அம்புகளை சரமாரியாக ஏவி இருக்கிறீர்கள்.

//கமல்.. இளையராஜா, எஸ்.பி.பி. ஜானகி. "டெட்லி ட்ரையோ!"//

Deadly Trio...கமல் Tried Deadly in romantic scenes.

நானும் கமல் ரசிகன்தான். கமல் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு..http://nanbendaa.blogspot.com/2010/11/blog-post.html. நேரம்/விருப்பம் இருந்தால் படியுங்கள்.

எல் கே said...

நான் கமலின் ரசிகன் அல்ல. ஆனால் இங்குள்ள பெரும்பாலான பாட்டுகள் பிடிக்கும். காரணம் அதை பாடிய பாலு

Chitra said...

Present, Sir!

Unknown said...

ப்ரெசென்ட் சார் ..

CS. Mohan Kumar said...

நாயகன், பேசும் படம் காலத்து கமலை தான் பிடித்தது. ஏனோ தற்போது உள்ள படங்களில் (மன்மதன் அம்பு, etc )அதிகம் ரசிக்க முடியலை

VISA said...

ரோமான்சுக்கு பெயர் போனவர் கமல். அருமையான தொகுப்பு

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப ஆராய்ச்சி பன்னியிருக்கிங்க போல...

சக்தி கல்வி மையம் said...

பாடல்களின் தொகுப்பு அருமை..

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா நம்ம கமல் பாட்டுகள்..

பொன் மாலை பொழுது said...

மைனரே ...நீறு பெரிய கில்லாடிதானையா....

Anonymous said...

கலக்கல் கலக்சன் அண்ணா.. :)

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கன் அசத்தல்....

இராஜராஜேஸ்வரி said...

அழகய் ரசனையாய் ஒரு தொகுப்பு.

வந்தியத்தேவன் said...

அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.


பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பியில் எஸ்.கே.மலத்துடன் கமல் பாடும் டூயட்.

எஸ்.கே. மலமல்ல.எல்.கே.மலம் லலிதகமலம்

மோகன்ஜி said...

நல்ல பாடல்கள். நல்ல தேர்வு.. எனக்கென்னவோ பாடல்களை பாடகரையும் இசையமைப்பாலரையும் வைத்து மட்டுமே ரசிக்கவோ யோசிக்கவோ முடிகிறது..

நான் ஒண்ணும் 'கிஸ்'ஸிங்கர் கட்சியில்லை. ராமராஜன் பாட்டு ஏதும் போடப் படாதோ?

இளங்கோ said...

Good collection.. thanks for sharing.

R.Gopi said...

80-களில் இசைஞானியின் இசை சாம்ராஜ்யத்தின் உச்சியில் இருந்த போது கிடைத்த மிக மிக அருமையான பாடல்களில் சிலவற்றை தொகுத்து அளித்திருக்கிறீர்கள்...

காக்கிச்சட்டை படத்தில் எனக்கு “வானிலே தேனிலா” மிகவும் பிடித்த பாடல்..

விக்ரம் படத்தில் வனிதாமணி

80-களின் இளையராஜா பாடல்கள் தெவிட்டாத இசையின்பம்.. இன்றும் பருக பருக உற்சாகம் பொங்கும்..

சரி...சரி... எப்படியோ உங்க “தல”ய வச்சு ஒரு அட்டகாசமான பதிவு போட்டுட்டீங்க...

வாழ்த்துக்கள் ஆர்.வி.எஸ்...

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி... சத்யா எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. அதுவும் அமலாவும் கமலும் சேர்ந்து ஒண்ணா நின்னு வெயிட் பாக்கற சீன் ரொம்ப பிடிக்கும். ;-))))

RVS said...

@அப்பாதுரை
அந்த சுருட்டைத் தலையோட பேர் தெரியலை ஜி! அந்த ஒரு படம் மட்டும்தான் பண்ணிச்சு.. ;-))

RVS said...

@! சிவகுமார் !
படித்தேன் சிவா! நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ;-))

RVS said...

@எல் கே
கரெக்ட்டு எல்.கே . இந்தப் பாடல்களை ரசிப்பதற்கு கமல் ரசிகனாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.. ;-))

RVS said...

@Chitra

Attendance granted. ;-))

RVS said...

@siva

full day-ya half a day-ya? ;-)))

RVS said...

@மோகன் குமார்
எனக்கும் தான் மோகன். இப்போதுள்ள கமலிடம் அந்த துள்ளல் இல்லை என்பது தான் உண்மை. ;-)))

RVS said...

@VISA
நன்றி விசா! நீங்கள் தொடருங்கள் என்று சொன்ன கதையை முழுவதும் படித்தீர்களா? ;-)))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நான் பண்ணலை.. கமல் பண்ணியிருக்கார் கருன்... நான் ஒரு பாவமும் அறியாதவன். ;-)))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருன் ;-))

RVS said...

@அமுதா கிருஷ்ணா
ஆமாம்..ஆமாம்.. நம்ம கமலேதான்.. எப்பூடி.. ;-)))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மாணிக்கண்ணே.. உங்களை விடவா நான் கில்லாடி? ;-)))))

RVS said...

@Balaji saravana
நன்றி! அப்போப்போ காணாமப் போய்டறீங்களே.. ;-))

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
ஆமாங்க மனோ... இளையாராஜாவின் உச்சம் அது... ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு நன்றிங்க.. ;-))

RVS said...

@வந்தியத்தேவன்
முதல் வருகைக்கும் தவறை சுட்டியதற்கும் நன்றிங்க... மாற்றிவிட்டேன்.. அடிக்கடி வாங்க.. ;-))

RVS said...

@மோகன்ஜி
அண்ணா சொல்லியாச்சோன்னோ.... நிச்சயமா செஞ்சுடறேன்... தீ.வீ.பி.யில் கிராமராஜன் பாட்டுக்கள் விரைவில்... ;-))

RVS said...

@இளங்கோ
Thanks Elango. ;-)))
(Nowadays why only template commentsu...)

RVS said...

@R.Gopi
எண்பதுகளிலும் தொன்னூறுகளில் கூட ராஜாவின் ராஜாங்கம் இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் விரவி பரவிக் கிடந்தது கோபி. பாராட்டுக்கு நன்றி.. ;-))

இளங்கோ said...

//(Nowadays why only template commentsu...) //
என்ன பண்ணறதுன்னா.. ஆணிகள் கொஞ்சம் அதிகம்.. So
:(

ADHI VENKAT said...

தொகுத்துள்ள கமலின் படங்களும் பாடல்களும் அருமையானவை. வழக்கம் போல் சூப்பர்!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails