என் ஜாதகத்திற்கு நடப்பு தசையில் புது வாகன யோகம் உண்டு என்று ஜோதிட சிம்மங்கள் கணித்து எல்லா பெயர்ச்சி புஸ்தகங்களிலும் போட்டிருப்பதாக வீட்டில் தகவல் சொன்னார்கள். ஒன்பது கட்டங்களும் ஒரு சேர ஒத்துழைப்பதால் வாங்கிவிடலாம் என்று தீர்மானித்து வண்டி வாங்கும் படலத்தில் இறங்கினேன். "மூணு வருஷத்துக்கு மேல ஒரு வண்டியை வச்சுக்ககூடாது சார்! தொல்லை கொடுக்கும். சீக்கிரம் மாத்திடுங்க." என்று தபோமுனிவர்கள் கைதூக்கி "தீர்க்காயுஷ்மான் பவ:" ஆசிர்வாதம் செய்வது போல காரறிவாலர்களின் அறிவுரை மழையில் நனைந்தேன். இப்போது நமக்கேற்ற நல்ல மாடல் சந்தையில் விற்பனையில் இருக்கிறதா என்ற விசாரணையின் போது If you could have waited for some more time, you would have got a better model என்று ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு நெடிதுயர்ந்த கட்டிட வாசலில் தேநீர் பருகும்போது என் ஒழுக்கசீல நண்பன் ஒருவன் கூறிய
பதிவு திசை தப்பி போகிறது. 'யு' டர்ன் அடித்து திரும்புவோம். நம் குடும்பம் மட்டும் செல்லும் ஐந்து இருக்கை வாகனமா அல்லது அம்மம்மா, அப்பப்பா, அண்ணன்னா, ங்கொக்காமக்கா என்று சுற்றம் சூழ எல்லோரையும் தூக்கி உள்ளே போட்டுகொண்டு செல்லும் வசதி மற்றும் கொள்ளளவு அதிகமாக இருக்கும் வண்டியா என்று யோசித்தோம். இந்த கலந்தாலோசனையின் போது "ரெண்டு நாள் மழைக்கு சென்னையின் சப்வே குளத்தில் சைலன்சர் நனையாமல் உயரத்தில் ஒட்டி இருக்கும் வண்டியே மிகச் சிறந்தது" என்று நாட்டாமை தீர்ப்பாக சொன்னேன். நமக்கு ட்ரைவன் புத்தி. குளத்தில் ஓட்டுவதற்கு போட் வாங்க வேண்டும் கார் வாங்குவது உசிதம் அல்ல ஆகையால் இது ஒரு காரணியே அல்ல என்று நறுக்கு தெறித்தாற்போல பேசி முற்றுப்புள்ளி வைத்தார் ஒரு முக்கிய அங்கத்தினர். யார் அதுவா? வேறு யாராக இருக்க முடியும்... என் வீட்டு உயரதிகாரி. தலைமை செயல் அதிகாரி. எங்களை மேய்க்கும் டைரக்டர். என் மனைவி. மனைவியே மணாளனின் பாக்கியம்!!
புது கார் வாங்குவது என்றால் இப்போது புழக்கத்தில் உள்ளதை விட பெரியதாக இருக்கவேண்டும் என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சிந்தனை. அப்பாவிடம் கோபித்துக்கொண்ட முருகப்பெருமான் பெரியது என்ன? என்று சுந்தராம்பாளிடம் கேட்டுப் பெற்ற பதிலைப் போல... பெரிய கார் என்பது சுமோ, ஸ்கார்பியோ, ஜைலோ(Xylo), இன்னோவா போன்ற எட்டு பேர் கொண்ட பெரியகுடும்பங்கள் பயணிக்கும் வண்டி. இப்போது போலவே சின்னதா செல்லமா ரொமான்சா இருக்கும் கார் எல்லாம் குட்டிக் கார் (தற்போது என்னிடத்தில் அவதிப்படும் Wagon-R-ஐ நான் Wagon Full of Romance என்று பீத்திக்கொண்டதின் விளைவாக) என்று கார்களை பகுத்து ஆராய்ந்து தரம் ரகம் பிரித்து எடுத்துச் சொல்லப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் பர்ஸுக்கு அதிகம் வேட்டு வைக்கும் கார் பெரிய்ய்யய்ய்ய்ய கார்! மற்றதெல்லாம் சோட்டா கார்.
ஸ்கார்பியோ வாங்கினால் வெள்ளை அண்ட் வெள்ளை போட்டு ஆலமரம் இல்லாமல் தெருவுக்கு தெரு கட்டப் பஞ்சாயத்து நடத்தும் வார்டு கவுன்சிலர்கள் போல் இருக்கும் என்று வீட்டு கவுன்சிலர்கள் ஏகமனதாக அபிப்பிராயப்பட்டார்கள். சுமோவிற்கு ஏற்கனவே FKV (Family Killing Vehicle) என்ற ஒரு கொலைகாரப் பட்டம் வாகன உலகத்தில் உண்டு. டாடா குழுமம் என்னதான் பிரேக்கிங் தொழில்நுட்பத்தை சீரமைத்தாலும் சீந்துவாரில்லை. இன்னோவாவிற்கு நம்மிடம் அந்தளவுக்கு ஹைவேஜு இல்லை. இல்லையென்றால் சொத்தை எழுதித் தந்தால் ஒரு அமர்க்களமான சீமையில் தயாரான ஒரு பெரிய வண்டி தருகிறேன் என்று கேட்கிறார்கள். அதில் ஒரு குடும்பம் குடியிருக்க முடியுமா என்றால் முறைக்கிறார்கள். இதில் இன்னொரு தேசியப் பிரச்சனை என்னவென்றால் ஒரு லிட்டர் பெட்ரோலோ டீசலோ ஒரு தெருவிற்கு மட்டும் தான் காணும். இம்மாம் பெரிய வண்டியில் இப்படி எரிபொருள் நிரப்பி சென்னையின் இருவேறு துருவங்களில் இருக்கும் என் ஆபீசுக்கும் வீட்டிற்கும் போய்விட்டு வருவதற்கு டேபிளுக்கு கீழ் கைநீட்டி காசு வாங்கும் "கௌரவமான" உத்தியோகமும் நான் பார்க்கவில்லை.
சென்னையின் உலகத்தரம் வாய்ந்த ரோடுகளில் என் போன்ற தினக் கூலிகள் இளையராஜா கச்சேரி வைத்து ஒரு கல்யாணம் முடிக்கும் பட்ஜெட்டில் கார் வாங்கி விடுவது பிரபுத்துவம் மிக்கதாக தெரிகிறது. இரண்டு மி.மீ இடைவெளியில் கரணம் தப்பினால் மரணம் போன்று ஆட்டோ ஒருபுறம் மாநகரப் பேருந்து மறுபுறம் அணைத்து கொண்டு ஆசை முத்தம் கொடுக்க சீறிப் பாய்ந்து வருகையில் கார் வாங்கிய லட்சங்கள் கண்முன்னே வந்து கைகொட்டி சிரிக்கும். மேலும் மக்களுக்கு எப்போதுமே பெரிய வீட்டை விட சின்ன வீடு அதிகம் கிக் அளிப்பதாகபட்டது எனக்கு. அதுபோல பெரியதை விட அதிக போதை தரும் சின்னது ஸ்லிம் பியுட்டி வாங்குவது என்று தேர்வாகியது.
இவ்வளவு அறுத்த/வறுத்த பின்னர் என்ன வண்டி என்று சொல்வதுதான் இந்தப் பதிவிற்கு முடிவுரையாக அமையும். மாருதி காரர்கள் பெயருக்காகவே ரொம்ப பிடிக்கும். யசோ தைரியத்திற்கு துணை வரும் அனுமனின் பெயர் தாங்கிய வாகனம். இந்திய சர்வதேசத்தர சாலைகளுக்கு ஏற்றார் போல் வண்டியின் கீழ் உள்ள பாகங்களை தயாரிக்கிறார்கள். ஒரு பள்ளத்தில் விழுந்து அடுத்த பள்ளத்தில் எழுந்தாலும் வண்டி உருக்குலைவதில்லை. ஒரு லிட்டருக்கு சில கிலோ மீட்டர்கள் ஓடி மீதியை நமக்கு சில்லரையாக தருகிறது. அதிக மைலேஜ். யானை வாங்கி அங்குசம் வாங்கமுடியாமல் தவிக்காமல் உதிரிகள் சொற்ப விலையில் கிடைக்கிறது. இவ்ளோ அளந்தியே என்னப்பா மாடல் என்று கூவுவது என் காதில் விழுகிறது. போன வாரத்தில் ஒரு மங்கள நாளில் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து Swift-Dzire-ZDI மாடல் காருக்காக கால் கடுக்க கியூவில் நின்றுகொண்டிருக்கிறேன்.
பின் குறிப்பு: (பு)கார்ப் படலம் என்பது புதிய கார்ப் படலம் என்பதை பொதுஜனங்கள் அறியுமாறு வேண்டிக்கொள்கிறேன். புக் பண்ணியதற்கு இப்படி என்றால் வாங்கியபின் என்ன செய்வானோ என்று கவலைப்படாதீர்கள். அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். யாராவது இதை மாருதி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு எடுத்துக்கொண்டு காரைப் பரிசளித்தால் நான் தன்யனானேன். நன்றி.
பட உதவி: http://images.vectorfinder.net/i
-
பட உதவி: http://images.vectorfinder.net/i
-
36 comments:
இதுவரையிலும் படித்த உங்களின் மற்ற எல்லா பதிவையும் விட
இந்த பதிவை நான் மிக ரசித்தேன்.
அப்படியே அந்த காரின் படத்தையும் போட்டிருக்கலாமே.
அதுக்கென்ன பரவாயில்ல.வாங்கினப்பறம் எப்படியும் அத
பத்தி ஒரு பதிவு போட மட்டீங்களா என்ன?அப்ப படம் போட்டுடுங்க
ஒரு சின்ன சந்தேகம்,உங்க ட்ரைவிங்கையும் நம்பி மூணு பேரா?
ஓ!அதுக்குத்தான் ஆஞ்சூஸை துணைக்கு வச்சுக்கலாமேனு மாருதியோ?!!!!!!!!!
no Maruthi car but real Maruthi available, are you ok with it? ;-)
hi!me d first?
ஆக்சுவலா இந்த போஸ்ட் என் டாஷ்போர்ட்ல அப்டேட் ஆகவே இல்லை
இப்பவும் கூட. கபடவேடதாரி போஸ்ட்கு வந்த கமென்ட்ஸ் பாக்க வந்தேன்.
வந்த இடத்துல உங்க கார் படலம் இருந்தது.
ஒருவேளை இன்னும் யாருக்கும் அப்டேட் ஆகலையோ
அதுதான் நான் வடையை
அடிச்சுட்டேனோ?
கார் கதை கலக்கல் .... நானும் 4 வீலர் வாங்க போறேன் .....போன வருஷம் ஒரு 2 வீலர் வாங்கியாச்சு ....இந்த வருஷம் ஒரு 2 வீலர் வாங்கணும் ...அப்ப கணக்கு நேராயிரும்.....
போன வாரத்தில் ஒரு மங்கள நாளில் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து Swift-Dzire-ZDI மாடல் காருக்காக கால் கடுக்க கியூவில் நின்றுகொண்டிருக்கிறேன்.
......அங்கே ஒரு கார் வாங்க இவ்வளவு கஷ்டமா? அவ்வ்வ்வ்.....
சீக்கிரம் கார், உங்கள் கைவசம் வரட்டும். பதிவில், படத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!
//If you could have waited for some more time, you would have got a better model//
//என் கண்ணுக்கு முன்னால் அங்கே வேலை பார்க்கும் நாலைந்து அழகிய பெண்கள் அந்தச் சாலையில் வளைய வந்துகொண்டிருந்தார்கள்//
ரசித்தேன் ஆர்விஎஸ்.உயரதிகாரி ப்ளாக் பக்கம் வரமாட்டாரோ?
நல்லதொரு புகார்ப்.. இல்லை கார்ப் படலம்.. :)
ட்ரீட் எப்போ அண்ணா ?
அட!இப்பத்தான் நல்லா பாத்தேன்.
மேலே இருக்கற கார் கார்ட்டூன்ல நீங்க உக்காந்துருக்கீங்களே
வெரிகுட் வெரிகுட்
(விரல் ரெகவர் ஆகி பதிவு போட்டு அறுக்க ஆரம்பிச்சாச்சே:-)))) )
ஐயோ ஐயோ...........சிங்காரசென்னையில் கார் ஓட்ட இன்னமும் ஆசை விடலையா??
பேசாம சிந்தாதிரி பேட்டையில் ஒரு பழைய லாரி வாங்கி கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து,பிடித்த கலரை அடித்தால் போச்சு.
அதுதான் இன்றைய நாளில் சிக்கனமும் கூட! அப்படியே லாரியின் பின் பக்கத்தை குடும்பம் முழுக்க தங்குவதற்கு ஏற்றார் போல மாற்றி விட்டால் வேலை முடிந்தது. படிக்கை அறை, டாய்லேட், கம்ப்யூட்டர் ரூம் என ஏசி வைத்து மாற்றிவிடலாம்தானே?
// Anonymous said...
no Maruthi car but real Maruthi available, are you ok with it? ;-)//
haah...hahhhhaaaa....haaa.........
இனி கார் வந்ததும் ஒரு பதிவு போடுங்க...
புது வீடு(இணையத்தில்). புது கார்..
கலக்கறீங்க போங்க:)))))))
If you could have waited for some more time, you would have got a better model //
Ever Green Dialog.
முதலில் உங்கள் போஸ்ட் அப்டேட் வரவில்லை. உங்கள் ஆர் எஸ் எஸ் செய்தியோடையை சரி பார்க்கவும்
சீக்கிரம் கார் வாங்கி ,காருடன் ஒரு போட்டோ போடவும்
@raji
கொஞ்சம் தேறி இருக்கேன்னு சொல்றீங்க.. நன்றி.. ;-)
ரெண்டு ஆட்டோ க்கு நடுவில் இருக்கும் சந்துல சிந்து பாடியவன் நான்...
மீடியேட்டருக்கும் அரசுப்பேருந்துக்கும் இடையில் புகுந்து வேடிக்கை காட்டியவன் நான்..
பை பாஸ் ரோடில் பிரேக் அடிக்காமல் நூற்று இருபது டச் செய்தவன் நான்..
பார்த்தசாரதியின் அருளால் நன்றாக ஒட்டுகிறேன் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம்..
;-))))))))))
@Anonymous
Why not? I always respect our elders. ;-) ;-)
@raji
rvsm.in மாறினத்துக்கு அப்பறம் இந்தப் ப்ராப்ளெம் இருக்குன்னு நினைக்கிறேன்.. பிக்ஸ் பண்ண ட்ரை பண்றேன்.. ;-)
@பத்மநாபன்
பத்துஜி. பாராட்டுக்கு நன்றி. இன்னும் ஒரு ரெண்டு வீல் வாங்கினா ஒரு டாரஸ் லாரியாயிடும்.. ஜாக்கிரதை! ;-)
@Chitra
Swift மட்டும் இப்படி வைட்டிங்க்ல போகுது.. ரொம்ப டிமாண்டு... கருத்துக்கு நன்றி சித்ரா. ;-))))
@சுந்தர்ஜி
ரசித்ததற்கு நன்றி. உயரதிகாரி நமக்கு நெருங்கிய நண்பர். ;-) ;-)
@இளங்கோ
ட்ரீட்டா .. ஈரோட்லேர்ந்து வாங்க.. வச்சிருவோம்.. ;-)))))
@raji
ச்சே.. நா மறைச்சு மறைச்சு போட்டாலும் நீங்க கரீட்டா கண்டு பிடிச்சிட்டீங்களே.. ;-)))))))
@கக்கு - மாணிக்கம்
அற்புதமான ஐடியா மாணிக்கம்.. லாரி வீடுகளில் குடித்தனம்... நெட்டில் வடநாட்டு லாரிக்காரர் ஓட்டும் கேபினில் குடும்பம் நடத்தும் போட்டோ ஒன்றை பார்த்தேன்.. ;-) ;-)
@raji
என்ன சிரிப்பா.. இந்த அனானிக்கு என்ன பதில் போட்ருக்கேன்னு மேலே பாருங்கோ.. ;-))))))
@MANO நாஞ்சில் மனோ
நிச்சயம் போடறேன்... நேயர் விருப்பம்... ;-)
@வித்யா
நன்றிங்க.... ;-)))
@இராஜராஜேஸ்வரி
ஆமாம்... எப்போதும் ever green dialogue. ;-))))
@எல் கே
ஆர்.எஸ்.எஸ் சரியாத்தான் இருக்கு.. என்னென்னு தெரியலையே.. ;-)))
காரோட ஒரு படமும் பதிவும் போடறேன்.. ;-)
ஆர்விஎஸ்!நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்ட உயரதிகாரியைக் கேட்டேன்.
@சுந்தர்ஜி
அப்பப்ப வந்து பாப்பாங்க.. அதிர்ஷ்டத்துல ஓடிகிட்டு இருக்கு.. ;-))))))))))
'swift'vaazhththukkal.ennadhum 'swift'dhan.. It is a driver's pleasure. Goodluck!
புக்கார் என்பதற்கு புதுப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். நடக்கட்டும்.
பத்மநாபன், நாஞ்சில் மனோ பின்னூட்டங்களுக்காக இன்னொரு முறை படிக்கலாம்.
உங்க வீட்டு உயர் அதிகாரிக்கு யாரோ இந்தப் பதிவின் காப்பி அனுப்பி இருக்காங்களாம்! :) புது கார் பதிவு எப்போ?
புதுக்காருடன் விரைவில் பதிவிட வாழ்த்துக்கள்.
அபார்ட்மெண்ட்டில் கார் பார்க்கிங் வசதி இல்லை.. அதனால் கார் வாங்கற ஐடியா வரல.. நண்பர்கள் பேசிக் கொள்ளும்போது என்னை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்கள். கார் வச்சிருக்கிற மக்களுக்கு தனி மொழி.. தனி தேசம்.. இருக்குமோன்னு தோணும்.. அவங்க பேசற தோரணையை பார்க்கும்போது.
@ரிஷபன்
டாட்டாக்காரன் லட்ச ரூபாய்க்கு கார் உட்ட உடனே.. எல்லோரும் ஓர் குலம். ஒன்னும் பெரிசா கொம்பு மொளச்சவங்க இல்லை. மெட்ராஸ்ல பாதி வண்டி நடு ரோட்ல தான் நிக்குது.. வாங்கி ஓட்டுங்க சார்! மூஞ்சில புகை அடிக்காம இருக்கும்..
கருத்துக்கு நன்றி. ;-)
Post a Comment