Thursday, February 17, 2011

அக்கா மாலா ரெசிபி

எலக்ஷன் வரப்போகிறது. ஆளாளுக்கு பொதுக்கூட்டம் போட்டு எதிராளி என்ன செய்யவில்லை இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று வாய் கிழிய பேசப்போகிறார்கள். மைக் செட்டு கட்டுவோருக்கு நல்ல காலம். பணம் பைசா பாக்கியில்லாமல் செட்டில் பண்ணினால்! ட்ராவல்ஸ்காரர்களுக்கும் அதே நிலை. கூட்டம் கூட்டமாக மந்தை மந்தையாக பொதுஜனங்கள் என்று கூறிக்கொண்டு "எதிர்க்கட்சி காரர்களிடம் கேட்கிறேன்.. நான் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...." என்று இவர்கள் ஆட்சியின் சாதனைக் கதைகள் புருடா விட கேட்பார்கள். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் ஓட்டுப்போட ரோட்டுக்கு வரமாட்டார்கள். அன்றைக்கு எக்ஸ்ட்ரா லீவு. டி.வி, சீரியல், அழுகை என்ஜாய். அது சரி. இப்போ திண்ணைக் கச்சேரிக்கு வருவார்களா மாட்டார்களா!

********சிகரெட் பிடிப்பதால் விளையும் நன்மைகள்**********
சப் டைட்டில் பார்த்து அதிர்ந்து விட்டீர்களா! தம் அடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்று நன்னெறி பாடி அட்வைஸ் மழை பொழிந்தாலும் ஊதித் தள்ளுபவர்கள் நிறுத்தியபாடில்லை. பாக்கெட் மேல் மண்டையோடு போட்டால் செத்தகாலேஜில் இருந்து சாம்பிளுக்கு போட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆகையால் 'தம்'மின் பயன்களை பட்டியல் இட்டுப் பார்த்தோம். தமிழ் எக்ஸாம் எழுதுவது போல.. அவையாவன..
ஒன்று. நாய் கடிக்காது.
இரண்டு. வீட்டிற்கு திருடன் வரமாட்டான். 
மூன்று. முதுமை வாராது.
இம்மூன்றும் ஏன் என்று யோசியுங்கள். காரணங்கள் பதிவின் முடிவில்...

*********** நிலையான முகவரி*************
ஏதோ கிண்டல் கேளிக்கையாக தொடங்கப்பட்ட இந்த தீ.வி.பி இணையத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டான். எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று ஒரு மக்கள் என்பது போல தனியே ஆண்டியாகாமல் www.rvsm.in என்ற வலை முகவரியைப் போன வாரத்தில் எனக்காக சொந்தமாக்கிக் கொண்டேன். net4.in நிறுவன பெருமக்கள் வேண்டிய அளவு தொந்தரவு கொடுத்துப் பார்த்தார்கள். உஹும். இறுதியில் எனக்கே வெற்றி! "ஏற்கனவே ப்ளாக்ஸ்போட்டில் ஒரு அட்ரெஸ் இருந்தும் எதற்கு காசு கொடுத்து ஒரு டொமைன் ரெஜிஸ்டர் செய்தாய்" என்ற ஹோம் மினிஸ்டரின் கவன ஈர்ப்புத் தீர்மான கேள்விக்கு என்னிடம் பதில் இல்லாமல் திருதிருவென்று வழக்கம் போல் முழித்ததில் அவர்களே திருவாய் மலர்ந்து பதில் செப்பினார்கள். "எல்லாம்.....(ஒரு பாஸ் கொடுத்து) பர்ஸுக்கு புடிச்ச கேடு".

இந்தப் புதிய உருவத்தில் சிரசில் இருக்கும் தலைப்புப் படம் மெல்போர்ன் விளையாட்டு மைதானம். ஸ்டேடியம் முழுக்க ரசிகர்கள் உட்கார்ந்திருக்க இரண்டு பக்கமும் பரந்து விரிந்த Panoramic View. காலையில் இருந்து மாலை வரை டோர்னமென்ட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்து கால் வலிக்க வலிக்க புரண்டு படுத்தபோது நான் கண்ட சொப்பனத்தில் வந்த அதே கிரவுண்டு இது. கபில்தேவ் என் தோளில் கை போட்டு அரவணைத்து அவுட்  ஸ்விங்கர் போடுவது பற்றி கையை பவுலிங் போடும் போஸில் ஒருபக்கம் க்ராஸாக ஒருக்களித்து காண்பித்து டிப்ஸ் கொடுத்தார். "தம்பி! காலேஜ் போகணும் எழுந்துக்கரியா.. இல்ல மேல தண்ணீ ஊத்தட்டுமா" என்று பாட்டி மிரட்டி எழுப்பிய பின்னர்தான் நான் மெல்போர்னில் இல்லை மன்னையில் இருக்கேன் என்ற ப்ரக்ஞை வந்தது. விடிகாலை கனவு பலிக்காமலே போய்விட்டது வருத்தம் தான். இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் இல்லை.

************ அக்கா மாலா ரெசிபி ************
வலையுலகில் கிச்சன் பதிவு எழுதும் அம்மணிகளின் அபிமான கவனத்திற்கு. கொத்துப் புரோட்டோ, மசால் தோசை, கைமா இட்லி போன்றவற்றை நீங்கள் சுடச்சுட தயாரித்து கணவன்மார்களை 'குஷி'ப்படுத்தியது போதாதென்று இப்போது கொக்ககோலாவின் தயாரிப்பு முறையை நெட்டில் விட்டிருக்கிறார்கள். என்னென்ன பதார்த்தங்கள்  எந்தெந்த விகிதாசாரத்தில் கலக்க வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள்.
The recipe:
Fluid extract of Coca: 3 drams USP
Citric acid: 3 oz
Caffeine: 1 oz
Sugar: 30 (unclear quantity)
Water: 2.5 gal
Lime juice: 2 pints, 1 quart
Vanilla: 1 oz
Caramel: 1.5 oz or more for color
The secret 7X flavor (use 2 oz of flavor to 5 gals syrup):
Alcohol: 8 oz
Orange oil: 20 drops
Lemon oil: 30 drops
Nutmeg oil: 10 drops
Coriander: 5 drops
Neroli: 10 drops
Cinnamon: 10 drops
பொருட்களை சொல்லிவிட்டார்கள். அடுப்பில் ஏற்றி இறக்கும் முறையை பகிரவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சி அனுபவம் உள்ளோர் முயற்சிக்கலாம். இதன் பின் விளைவுகளுக்கோ பக்க விளைவுகளுக்கோ எதிர் விளைவுகளுக்கோ இந்த வலைத்தளம் பொறுப்பேற்காது. குடித்து விஷச்சாராயம் அருந்தியது போல கண் தீஞ்சு போய், கிட்னி அவிந்து போய் அரசுமருத்துவமனியில் அட்மிட் ஆகும்படி தங்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோர் நிச்சயம் தயாரிக்க வேண்டிய ஒரு பானம்.

அடிக்கோடிட்ட குறிப்பு: Kerry Tressler என்ற கொக்ககோலாவின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் இதை திட்டவட்டமாக மறுத்து கைகொட்டி சிரித்திருக்கிறார். இது ஒன்றும் எங்கள் கம்பெனியாரின் ரெசிபி இல்லை என்கிறார். ஒருக்கால் 23-ம் புலிகேசி அரண்மனையில் தயாரித்தார்களே அதுதான் நிஜமான கலவையோ! சிம்புதேவனுக்கு கோலாவின் தொழில் ரகசியம் தெரிந்திருக்கிறது. ஏதேனும் படம் பப்படமானால் கோலா தயாரித்து பிழைத்துக்கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

************* ஒலக தண்ணி அடிப்போர் எண்ணிக்கை ************
டாஸ்மாக் வருமானத்தில் தமிழ்நாடு ஒளிருகிறது. பூமியே தண்ணியடித்து தலையை சுற்றுகிறது என்று குரு படத்தில் அபிஷேக் பச்சனை தண்ணியடித்து ஆடவிட்டு வைரமுத்து எழுதியிருப்பார். எஸ்.பி.பி வாய் குழறி அதி அற்புதமாக பாடியிருப்பார். உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள பதினைந்து வயதுக்கு மேற்பட்டோர் நாடு வாரியாக குடித்து மட்டையாகும் அளவு பற்றிய பயனுள்ள மப்பான மேப் கீழே.  ஐரோப்பியர்கள் அதிகம் குடிக்கிறார்களாம். புவனமெங்கும் ஆண்டொன்றுக்கு 2.5 மில்லியன் மக்கள் குடித்துச் சாகிறார்கள். இது எயிட்ஸ் மற்றும் டி.பியில் காலமாவோரை விட அதிக எண்ணிக்கையாம்.



************* சூர்யாஸ்தமயம்***************
அடிவானத்தில் சூரிய கோளம் தகதகவென்று சுழன்று கொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவது  போலிருந்தது. ஆரம்பத்திலேதான் கண் கூசும். சிறுது நேரம் உதறி நோக்கிக்கொண்டிருந்தால் பிறகு கண் கூச்சம் தீர்ந்து போய்விடும். இரண்டு வட்டத் தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும். கீழே இருப்பது சுத்தமான மின் வட்டம். மேலே மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை!

பச்சை தகடு பின்புறத்திலிருக்கும் மின் தகட்டை முழுதும் மறைத்துக் கொண்டிருக்கும். ஆயினும் இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக்கிரணங்கள் கண்மீது பாயும்.

பார்! சூரியனைச் சுற்றி மேகங்க ளெல்லாம் தீப்பட்டெரிவது போலத் தோன்றுகிறது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனை வித வடிவங்கள்! எத்தணையாயிர விதமான கலப்புகள்! அக்கினிக் குழம்பு! தங்கம் காய்ச்சிவிட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்! நீல ஏரிகள்! கரும் பூதங்கள்!

எங்கு பார்த்தாலும் ஒளித்திரள். வர்ணக் களஞ்சியம். போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது!

இந்தச் சூர்யாஸ்தமயத்தை வர்ணித்தது சாட்ஷாத் பாரதிதான்.  என்ன தமிழ்! என்ன தமிழ்! இதை தட்டச்சு செய்யும்போது மாலை நேர சூரியனை என் மனக்கண்ணால் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

************ பாஸ்கரனின் (அன்றைய) பணி நிறைவு **********

மேலே பாரதியின் வாசகங்களில் பார்த்த அஸ்தமனம் இங்கே...


***********

பதிவாரம்பத்தின் மூன்று தம் பயன்களின் காரணங்கள் பின்வருமாறு.
ஒன்று: //நாய் கடிக்காது.// சிகரெட் பிடித்து உடல் தளர்ந்து கைத்தடி வைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆகையால் நாய் கடிக்க வந்தால் குச்சியால் போட்டு தப்பித்துக்கொள்ளலாம்.
இரண்டு: //வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.// நுரையீரல்கள் முழுக்க தேவலோகப் புகை கட்ட ராத்திரி பூரா "லொக்கு லொக்கு" என்று இருமி முழித்திருக்கிறேன் என்று தெரியப்படுத்துவதால் செக்யூரிட்டி ஆகிறார்.
மூன்று: //முதுமை வாரா// இது கொஞ்சம் ஓவர் தான். என்னவென்றால் முதுமை வருவதற்குள் போய் சேர்ந்துவிடுவார். அதனால் முதுமை வாரா!

பட உதவிகள்: http://www.reefnews.com மற்றும் www.economist.com

-

38 comments:

பத்மநாபன் said...

யோசிப்புகளில் ஒன்றும் ,மூன்றும் சரியாக இருந்தது... இரண்டாவது எனது யோசிப்பு வித்தியாசமாக... இரவு பகல் பார்க்காமல் திருட்டு தம் அடிக்க வெளிய ஆள் சுத்திக்கொண்டிருப்பதால் திருடன் நெருங்க மாட்டான்...

பத்மநாபன் said...

மன்னை ஆர்.வி.எஸ் போட்டால் ,www.rvsm க்கு போறப்பவே நினைச்சேன் மைனர் எதோ பண்ணியிருக்கார்ன்னு .....
அக்காமாலா மாதிரி ஜிப்ஸி எப்படி பண்ணறாங்க அதையும் போட்டுருங்க..
ஐரோப்பா காரங்க குளிர் தாங்கம பழகுன பழக்கம்....நம்மாளுங்க குளிர் விட்டு போய் பழகுன பழக்கம்....

பத்மநாபன் said...

மாலையில் சூர்யஸ்தமன புகைப்படமும் பாரதியின் பாட்டு பகிர்வும் அருமை... இங்கு பாலையில் காலை மாலை உதய அஸ்தமத்தை கண்ணுற்று மகிழலாம்.....

Chitra said...

I think the Coca Cola recipe idea came from:

http://en.wikipedia.org/wiki/Coca-Cola_formula


... :-)

ஸ்ரீராம். said...

அக்கிரமம்....விடையை நாங்கள் சொல்வதற்குள் நீங்களே சொல்லியிருப்பது...இது மாதிரி ஒண்ணு ரெண்டு பதில்தான் தெரியும். அதையும் சொள்ளவிடவில்லை என்றால் எப்படி? (விடை போட்டு விட்டீர்கள் என்ற தைரியத்தில்தான்...!)
பாஸ்கரப் பணி நிறைவு படம் மனதை அள்ளுகிறது.

சாய்ராம் கோபாலன் said...

Congrats on own domain. You are going places RVS

R. Gopi said...

அஸ்தமனம் - பாரதி மேட்டர் சூப்பர்

பொன் மாலை பொழுது said...

மன்னார்குடி மைனர் விலாசிதள்ளுகிறார். சரியான क्रिकेट के लिए पाहल !! மெல்போர்ன் அரங்கு உண்மையிலேயே பிரமாதம்.கிரிகெட் திருவிழா வேறு ஆரம்பம்.சூரிய அஸ்தமன அழகில் மயங்கியதால் தான் //பொன்மாலை பொழுது // என பெயர் வைத்துக்கொண்டேன் மைனரே!:))))

Vidhya Chandrasekaran said...

புதுவீட்டிற்கு வாழ்த்துகள்:)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. பாரதியின் வார்த்தைகளும், சூரிய அஸ்தமனப் படமும் நன்று.

ADHI VENKAT said...

கலவையான பகிர்வுக்கு நன்றி.

raji said...

:-)))

என்னவோ தெர்ல வலது ஆள்காட்டி விரல்ல
பயங்கர வலி.டைப் பண்ண முடில அதான் ஸ்மைலி
இதே லெஃப்ட் ஹேண்ட் தான்

2 நாளா பதிவு வேற போட முடில:-(

(அப்பாடா தப்பிச்சோம்னுதான நினைக்கறீங்க.
:-)) இதுக்கு இந்த ஸ்மைலிய போட்டு என்னை
வெறுப்பேத்த நினைக்க வேணாம்)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வேறென்ன புதுசா சொல்ல இருக்கு ஆர்விஎஸ்? நல்ல முதிர்ச்சியான நகைச்சுவை. நல்ல ஃப்ளோ.

நிறைய இந்த மாதிரி ஸ்கிட்டா எழுதி வேஸ்ட் பண்ணிடாதீங்க.

எதாவது ஒரு பார்முக்குள்ள கொண்டுவாங்க.கதை-நாவல்-இப்படி.

இளங்கோ said...

//சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோர் நிச்சயம் தயாரிக்க வேண்டிய ஒரு பானம்//
:)

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! தனி டோமைனுக்கு வாழ்த்துக்கள். உங்க தூள் பக்கோடா அருமை.. அதுவும் பொட்டலம் கட்டின மந்தாரை இலை வாசனையோடு. அடிச்சு விளையாடுங்க மச்சான்.. அடிச்சு விளையாடுங்க!

Aathira mullai said...

சும்மா எட்டிப் பார்க்க வந்தா என்னமோ புது வீட்டுக்குள நுழைந்தமாதிரி இருந்திச்சு.. தவறி யார் வீட்லயோ நுழைந்து விட்டேனோ என்று பயந்தே விட்டேன்.

வலைப்பூ வடிவமைப்பு நல்லா இருக்கு.. பெரிய மைதானத்துல விளையாடற பிள்ளைன்னு எங்களுக்குத் தெரியும்... அதான் ஒரு ரசிகப்பட்டாளமே வச்சிருக்கீங்களே..

பதிவைப் பற்றி அப்பரம் சொல்றேன்.

RVS said...

@பத்மநாபன்
இரண்டாவதுக்கு நீங்க சொல்றா மாதிரி கூட வச்சுக்கலாம்!
நேரம் ரொம்ப செலவழிச்சாச்சு.. பணமும் செலவழிச்சேன்.. டொமைனுக்கு..
அது ஜிப்சி இல்லை கப்சி... (கப் அடிக்குமாம்)
மாலையிலே.. இளவெயிலே.. (நிற்பதுவே நடப்பதுவேயில் பாரதி!)

RVS said...

@Chitra
அங்கேர்ந்து எடுக்கலை! நான் மோஸ்ட்லி விக்கீபீடியாவில் எடுப்பதை தவிர்ப்பேன். இது நெட் மேய்தலில் சூடாக கிடைத்தது. அப்புறம் விக்கிபீடியா போய் பார்த்தேன். அந்தப் பக்கத்தை இந்த பெப்ரவரி பதினொன்றில் அப்டேட் செய்திருக்கிறார்கள். ;-) ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
படப் பாராட்டுக்கு நன்றி!
காரண காரியங்கள் (சிகரெட்) ஏதோ கன்னாபின்னான்னு போடறோம்... ;-)))))

RVS said...

@சாய்
Thank you Sai! ;-))))

RVS said...

@Gopi Ramamoorthy
நன்றி கோபி! ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
ஹிந்தியில கிரிக்கெட் பைத்தியம் அப்படின்னு திட்டியிருக்கீங்க.. நான் மத்யமா செகண்ட் கிளாஸ். எழுத்துக்கூட்டி படிப்பேன். பயித்தியம் போன்ற வார்த்தைகள் தெளிவாகத் தெரியும். ரொம்ப நன்றி. ;-)))))))

RVS said...

@வித்யா
புது வீட்டிற்கு வந்துபோனதர்க்கு நன்றிகள். வெளியில போகும் போது பை வாங்கிக்கிட்டீங்களா? ;-) ;-) ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தல. உங்க பக்கம் வரமுடியலை! கூடிய சீக்கிரம் வருகிறேன். ;-)

RVS said...

@கோவை2தில்லி
கலவையை பாராட்டியதற்கு நன்றி. ;-)

RVS said...

@raji
இடது கையால கமென்ட் போடும் தீவிர வாசகருக்கு மிக்க நன்றி. பதிவு போட முடியலையா? (அப்பாடி!) கை சீக்கிரம் குணமாக கும்புடறேன்.. சாமிகிட்ட.. ;-) ;-);-)

RVS said...

@சுந்தர்ஜி
வாழ்த்துக்கு நன்றி சுந்தர்ஜி!
சிறுகதை அடிக்கடி எழுதறேன்.. நாவலா.. ரொம்ப நேரம் ஒதுக்கணும். முடியுமான்னு தெரியலை.. ;-);-)

RVS said...

@இளங்கோ
என்னா ஸ்மைலியா.. மவனே.. ;-))))))))))))))))))))))))))))))))))))))))))))) இப்ப எப்பூடி? ;-)

RVS said...

@மோகன்ஜி //அதுவும் பொட்டலம் கட்டின மந்தாரை இலை வாசனையோடு. //
அட்டகாசம் அண்ணா! மந்தாரை இலையில் தூள் பக்கோடா பற்றி ஒரு பதிவே எழுதலாம்.. இப்பெல்லாம் கழுதைக்கு தரா மாதிரி பேப்பர்ல தரான். ;-)

//அடிச்சு விளையாடுங்க மச்சான்.. அடிச்சு விளையாடுங்க!//
இது யாருக்கோ அடிக்க சிக்னல் கொடுக்கறா மாதிரி இருக்கே! (சும்மா வெளையாட்டுக்கு) ;-) ;-)

RVS said...

@ஆதிரா
சரி மெதுவா சொல்லுங்க! ;-)

பொன் மாலை பொழுது said...

அய்யா மைனரே ! உமக்கு ஹிந்தி தெரியும் என்று ஞான் அறிஞ்சில்லா.:)))))))

/// @மோகன்ஜி //அதுவும் பொட்டலம் கட்டின மந்தாரை இலை வாசனையோடு. //
அட்டகாசம் அண்ணா! மந்தாரை இலையில் தூள் பக்கோடா பற்றி ஒரு பதிவே எழுதலாம்.. இப்பெல்லாம் கழுதைக்கு தரா மாதிரி பேப்பர்ல தரான். ;-)////


வீட்டில் சிறுவயதில் செல்லமாக அம்மாவிடம் வாங்கும் திட்டு. //// நாக்க அறுத்து நாய்கிட்ட போடு///

மந்தாரை இலையில் தூள் பக்கோடா என்ன? அல்வாவும் , நெய் காராபூந்தியும் ஆளையே அடித்துப்போடும். இதெல்லாம் சிறுவயதுகளில். இப்போ எங்காவது இருக்கா தெரியல. பேப்பரும் போயி பாலிதீன் சனியன் வந்துவிட்டது.

சிவகுமாரன் said...

அத்தனையும் அருமை.கிரீடத்தில் வைரம் பதித்தது போல் பாரதியின் சூரியாஸ்தமன வர்ணனை.

இளங்கோ said...

//என்னா ஸ்மைலியா.. மவனே.. ;-))))))))))))))))))))))))))))))))))))))))))))) இப்ப எப்பூடி? ;-) //

ஹஹஹ்ஹா... (இப்ப நான் ஸ்மைலி போடல !! )

RVS said...

@கக்கு - மாணிக்கம்
நீங்க பாராட்டா சொன்னதா எடுத்துகிட்டேன்! பாசிடிவ் திங்கிங். ;-)
நாக்கு நாலு முழம் இருக்கு அப்படின்னும் திட்டுவாங்க.. ;-)

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன்! கவிதை சுவாசிக்க வருகிறேன்! ;-)

RVS said...

@இளங்கோ
எனக்கு இப்படி ஒரு தம்பி! பெருமையா இருக்கு.. ;-))))))))

இராஜராஜேஸ்வரி said...

பாரதியின் பகலவன் பலமுறை படித்தும், கண்ணால் தரிசித்தும் மகிழ்ந்திருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

அப்பாதுரை said...

இதான் அக்கா மாலாவா? கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சுது..
இந்த இடுகைக்கான பின்னூட்டத்தை உங்களோட இன்னொரு இடுகையைப் ரிவைஸ் பண்ணிட்டிருந்தப்ப அங்கே எழுதிட்டேன் போல. (இன்னொருத்தர் பிலாகுல எழுதாம விட்டேனே, அதைச் சொல்லுங்க!)

கக்கு-மாணிக்கம்: மனம் விட்டுச் சிரிக்க வக்கறீங்க.. பாலையா டயலாக் டைமிங் மாதிரி. ரசிச்சு அனுபவிச்சு சிரிக்க முடியுது. 'பாலிதீன் சனியன்', ஊட்டி வரை உறவு 'சோத்து நடை'யை நினைவூட்டியது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails