ஐ.ஐ.டி யில் படிப்பு.
பெரிய உத்தியோகம்.
பாதி சம்பளத்தை மாதாமாதம் இ.எம்.ஐ கட்டி வாங்கின பெரிய பங்களா மாதிரி சொந்த வீடு.
குண்டு குழி இல்லாத ரப்பர் போல வழுக்கும் ரோடு.
சுத்தமான நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் ருசியான சரவணபவன் சாப்பாடு.
லுஇ பிலிப், வான் ஹுசைன் வரிவரி சர்ட் மற்றும் பேண்ட்.
ஊருக்கு உள்ளேயும் வெளியேயும் ஹாயாக போய்ட்டு வர சொகுசு கார்.
இலவம் பஞ்சு அடைத்து தைத்த அருமையான மெத்தை. மெத்தைக்கோர் தத்தை. தத்தைக்கோர் முத்தம் நித்தமும்.
காத்து இல்லாத வெக்கை காலத்திலும் கம்பளி போர்த்தும் குளிரடிக்க ஒரு ஜிலுஜிலு ஏ.ஸி.
காண சகிக்காத முகத்தைக் கூட மிளர மற்றும் ஒளிரச் செய்யும் அழகு நிபுணத்துவங்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை உல்லாச சுற்றுலா.
ஸ்கூல் படி மிதிக்காமல் கோட்டை ஏறி கொடியை நாட்டும் பொதுவாழ்வு எனும் ஜால வித்தை.
ஒரு ரூபா சம்பளம் வாங்கி ஒரு தெருவில் பாதி வீதி கரையக் கட்டிய அரண்மனை.
சுவரில் மாட்டிவைத்த ஐம்பத்தி நான்கு இன்ச் ஆஜானுபாகு LED டி.வி.
மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் டி.வி சொரூபத்தில் வந்து பிழிய பிழிய அழவைக்கும் அரசிகள், செல்விகள், தங்கம்கள்....
காணி நிலத்திற்கு வெட்டுக் குத்து சண்டை போடும் ஒரே ரத்தங்கள்.
ஊரை ஏச்சு சம்பாதிச்ச மீதி இருக்கும் கட்டுக் கட்டுக் கரன்சியில் இ.சி.ஆரில் பண்ணை வீடு.
ஒரு வீடு இருவீடானதும் ஒன்று இரண்டான கார், டீ.வி, பொண்டாட்டி.. மற்றும் இத்யாதி..இத்யாதிகள்...
நாட்டுக்கே ராஜா! எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!!
(நாட்டு ராஜா என்ற தலைப்பை பார்த்தவுடன் ராசாவை நம்பி மக்கள் ஏமாந்தால் கம்பெனி பொறுப்பல்ல..)
இனி காட்டு ராஜா...
இவருக்கு நான் ஒன்றும் அறிமுகம் தரத் தேவையில்லை. நீங்களே பாருங்களேன்.
இது பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் வசிக்கும் காட்டுவாசிகள். Survival என்ற அமைப்பினர் இப்படியும் இங்கே வாழ்கிறார்கள் என்று படம் எடுத்து போட்டிருக்கிறார்கள். பேட்டியில் ஒரு வயசாளியும் தேக்குமரத் தேகம் கொண்ட ஒருவரும் வெள்ளை மனிதர்கள் வந்து மரங்களை வெட்டி கொள்ளை கொண்டு போனது பற்றி பேசுகிறார்கள். பெரியவர் முகத்தில் என்ன ஒரு ஆக்ரோஷம். பெண்டு பிள்ளைகள் கள்ளம் கபடம் இல்லாமல் சுற்றித் திரிகிறார்கள். பேட்டி காண்பவரும் சப் டைட்டிலிலும் இந்தியன் என்றே விளிக்கிறார்கள். சிகப்பிந்தியர்கள் என்றாவது போட்ருக்கலாம். காடு அமோகமாக உள்ளது. நீர்வீழ்ச்சியும், விண்ணைத் தொடும் மரங்களும், செடிகொடிகள் நிறைந்த ஒளிபுகா அடர்ந்த பசுமை நிறைந்த காடுகளும், மாசற்ற சுற்றுப்புற சூழ்நிலையும், இயற்கை உணவுகளும்... நாமதான் இதை விட்டுவிட்டு ரொம்ப தூரம் வெளியில் வந்துவிட்டோமோ!!
அமேசான் காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்..
இக்கரைக்கு அக்கரை பச்சை! இந்தக் காடுக்கு அந்தக் காடு சொர்க்கம்!!
-
35 comments:
மண்ணை மைனருக்கு வெறும் விளையாட்டு மட்டும் தான் தெரியும் என்றில்லை. நாட்டை பற்றியும் அவ்வப்போது எழுதுவது சிறப்பு.அப்படித்தான் இருக்க முடியும். "நமெக்கென்ன வந்தது " என்றிருந்தால் நாளை நமக்கும் அதேதானே வரும். இந்த உணர்வு பதிவர்களிடம் மிகுந்து காணப்படுவது நல்ல அறிகுறியே. வீடியோ இரண்டும் மிக தெளிவு. இது போன்ற செய்திகளை உடன் தெரிந்து கொள்ள வலைதளமே சிறந்தது. வேறு எதுவும் இதற்கு ஈடாகாது. நன்றி chrome-extension://chiikmhgllekggjhdfjhajkfdkcngplp/arrows/dual/arrow_only_blue.pngமைனரே!:)))
மனதைத் தொட்டு விட்டீர்கள் ஆர்.வீ.எஸ்! ஆதிவாசிகளின் உணர்ச்சிகள் கவலைகளை என்ன அழகாக ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்? ரொம்ப தூரம் விலகிவந்து விட்டோமா என்ற உங்கள் கேள்வியின் கவலை புரிகிறது..
ஆம் ரொம்பவே...
நானும் யோசித்துப் பார்க்கிறேன்! மீண்டும் அந்த வாழ்க்கைக்குள்
'காற்றோட்டமாக ' நடந்து சென்றுவிடத்தான் தோன்றுகிறது. ஆணியில்லை! டிவி இல்லை!
காலையில் காப்பி கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை!
யார் இவ்வளவு கவலைப் படுகிறார்கள் காட்டு வாசிகளை பற்றி... இப்பொழுது காட்டுவாசிகளின் கவலையெல்லாம்...நாட்டு ராஜாக்கள் நாட்டை சுரண்டிமுடித்துவிட்டு...காட்டையும் கபளிகரம் செய்ய வரக்கூடாதே என்பதுதான்....
////பேட்டி காண்பவரும் சப் டைட்டிலிலும் இந்தியன் என்றே விளிக்கிறார்கள். சிகப்பிந்தியர்கள் என்றாவது போட்ருக்கலாம். /////
Why were Beothuks called "Red Indians?" Was their skin red?
It wasn't really red, but the Beothuks painted their bodies and clothing with red ochre paint. Many Indians used red ochre as an insect repellant, but the Beothuks considered red a sacred color and wore it all year long. Neighboring tribes called them the Red People, and the Europeans called them Red Indians.
Aren't other tribes Red Indians too?
Some Europeans started using "Red Indians" to refer to all Native Americans, not just the Beothuk tribe. Other tribes strongly dislike this term, though. They consider "Red Indian" a RACIAL INSULT, and prefer to be called American Indians, Native Americans, or First Nations.
//இக்கரைக்கு அக்கரை பச்சை! இந்தக் காடுக்கு அந்தக் காடு சொர்க்கம்!!//
ம்ம்...பெருமூச்சும்...பொறாமையுமாய் தான் இருக்கிறது ..அந்த ரீங்காரம் ஒலிக்கும் காடுகளின் வசந்த வாழ்வை பார்த்து....
mee the fist.
but no coments..
இக்கரைக்கு அக்கரை பச்சை..
அதே அதே.. எப்போதுமே. எல்லாவற்றிலுமே.
இந்தக் காடுக்கு அந்தக் காடு சொர்க்கம்!!
கான்க்ரீட் காடுகளுக்கு அந்த காடு எவ்வளவோ மேல்! ஆனால் அவர்களையும் வாழவிடாமல் கெடுத்துக் கொண்டு இருக்கிறோம்! நல்ல பகிர்வு.
அப்டேட் வரலையே ???
கவலை.
"கல்லறையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா...காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?"
டச்சிங் டச்சிங் உண்மைய சொல்லனும்னா நாமதான் வெளியே வந்துட்டோம்...
காட்டைப் பத்தியும் அதில வசிக்கறவங்களை
பத்தியும் யாரும் கவலையே படறதில்ல தெரிஞ்சு கூட
வச்சுக்கறதில்லை.அவசியமான பதிவு
தன் நாட்டின் மரவளம் பறிபோய்விடக்கூடாதே என்று அமெரிக்கா வளரும் நாடுகளிலிருந்துதான் தன் மரத் தேவையைப் பூர்த்திசெய்து கொள்கிறது.
எத்தனை சுயநலம்? எத்தனை கயமை?
கருணையும் அன்பும் நிரம்பிய ஆதிவாசிகளின் குரல் வெளியே வருவதேயில்லை. வெளிவரும்போது காடுகள் இருப்பதில்ல.
நல்ல பகிர்வு.
ஆதிவாசி என்று சொல்லிவிடுகிறோம், ஒரு காலத்தில் நாமும் ஆதி வாசிகளாகத்தானே இருந்திருப்போம்.
நாம் சுற்றி இருக்கும் நிலங்களை மொட்டையடித்து விட்டு, இதோ காடுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் அழிக்க.
நல்ல பகிர்வு அண்ணா.
அமெரிக்கர்கள், மரத்தேவையை மட்டுமல்ல, கிரேனைட் போன்ற இயற்கை வளங்களையும் ,மண்வளத்தை நாசமாக்கும் சாயப்பட்டரைகளையும் தோல் பதனிடல் போன்றவற்றால் வளரும் நாடுகளையே பதம் பார்க்கிறார்கள்.கற்களை வெட்டி எடுத்தால் பூகம்பம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
Super RVS
@கக்கு - மாணிக்கம்
நன்றி மாணிக்கம். உங்களைப் போல் மக்கள் அக்கறைப் பதிவுகள் நிறைய போட முடிவதில்லை! ஏதோ என்னால் இயன்றது! ;-)
@மோகன்ஜி
நன்றி அண்ணா! காப்பி கேட்டீர்கள் பாருங்கள்! ஹி..ஹி.. ;-)
@பத்மநாபன்
ஏற்கனவே நம்நாட்டில் காட்டைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிட்டர்கள் பத்துஜி! ஒன்றும் செய்வதற்கில்லை!
@Chitra
விளக்கங்களுக்கு நன்றி சித்ரா! ;-)
@ஆனந்தி..
அந்தப் பச்சை பசுமைகளைப் பார்த்தால் பொறாமையாகத் தான் இருக்கிறது.. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ;;-)
@siva
அண்ணே! கமெண்ட்டுங்க.. பேசலாம்.. ;-) நன்றி ;-)
@வித்யா
அதே! அதே! கரெக்க்டுதான்! ;-) ;-)
@வெங்கட் நாகராஜ்
காண்கரீட் காடுகள்.. அற்புதமான சொல்லாடல். நன்றி தலைநகரத் தல..;-)
@எல் கே
பார்க்கணும் எல்.கே. தெரியலை என்னாச்சுன்னு... ;-)
@ஸ்ரீராம். said...
//
"கல்லறையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா...காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?"
//அற்புதங்க.. ஏதாவது சினிமாப் பாட்டா? ;-)
@MANO நாஞ்சில் மனோ
நீங்க சொல்றது ரொம்ப சரி மனோ! ஆனா மோகன்ஜி கேக்குறாரு பாருங்க.. அதுக்கு என்ன பண்றது ;-) ;-) ;-)
@raji
நன்றிங்க ராஜி! காட்டை விடுங்க.. வீட்டுக்கு பக்கத்துல இருக்கறவங்க பத்தியே நம்ம ஜனம் தெரிஞ்சு வச்சுக்கரதில்லை! கருத்துக்கு நன்றி ;-)
@சுந்தர்ஜி
நூறு சதவிகிதம் உண்மை. பிக் ப்ரதர் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை! ;-)
@கோவை2தில்லி
நன்றி! ;-)
@இளங்கோ
நன்றி இளங்கோ (டெம்ப்ளேட் பதில்) !! ;-) ;-)
@இராஜராஜேஸ்வரி
தெரிஞ்சும் செய்யறாங்களே! என்ன பண்றது? ;-(
@சாய்
Thank you very much! ;-)
//"அற்புதங்க.. ஏதாவது சினிமாப் பாட்டா? ;-"//
நீங்கள் ரெஃபெரியிருக்கும் அதே இக்கரைக்கு அக்கரை பச்சை பாடல்தாங்க அது...!
Post a Comment