நாளாம் நாளாம் திருநாளாம் என்று கண் நிறைய காதலுடன் வாய் ஒழுகும் ஆறாக ஜொள்லோடும் யுவதிகள் பின்னால் காதல் அடிமையாக யுவன்கள் அவர்களை அழுது தொழுது காலடி பின் தொடர்வார்கள். அவனியெங்கும் காதலர்களின் புண்ணிய தினமாக கொண்டாடப்படும் பெப்ரவரி பதினான்கு நாளைக்கு. டி. கல்லுப்பட்டியிலிருந்து புதுடில்லி வரை நாளை ரோஜாப்பூவுக்கு ஏக மவுசு இருக்கும். கருப்பு ரோஜா செல்வமணியை காதலித்து திருமணம் புரிந்துகொண்டார் என்பது தெரிந்தும் சிகப்பு ரோஜாப்பூவிற்கு தனி மரியாதை. அனேக பேர் மணமில்லாத ரோஜாப்பூவை மனமில்லாமல் பரிமாறிக்கொண்டு காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்.
நாளை "காதல் வந்துருச்சு ஆசையில் ஓடிவந்தேன்.." என்று கல்யாணராமன் பாணியில் ரோசாப்பு கொடுத்து தங்களது காதலன் ஸ்டேட்டசை தக்கவைத்துக் கொள்வார்கள். இன்னமும் நிறைய காதலர்கள் இருட்டுக்குள் தான் பேசிக்கொள்கிறார்கள். தெருவிளக்கு இல்லாத இருளோன்று இருக்கும் தெருமூலையில், சுவர் ஓரமாய் நிர்கதியாக நிற்கும் கார் மறைவில், பீச்சாங்கரை படகு மறைவில், கல்யாணம் ஆகும் முன்னரே ரெஸ்டாரன்ட் ஃபேமிலி ரூம்களில் என்று ஒதுங்கிவிடுகிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பதால் வெளிச்சம் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை தான். அதனால் இதையெல்லாம் கூட நாம் மன்னித்துவிடலாம். ஆனால் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு பள்ளிப் பருவம் தாண்டாத பிஞ்சுகள் சைக்கிள் பின்னாலோ பைக் பில்லியனிலோ பல்லி போல ஓட்டிக்கொண்டு முன்னால் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது நெஞ்சு பதபதைக்கிறது.
ஸ்டாப் அட்வைஸ் என்று எல்லோரும் சேர்ந்து இரைவது காதில் விழுகிறது.
காதல் காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி. மீசைக்காரன் சொன்னதை அமுல் படுத்தியவன் நான். காதலர் தின சிறப்பு பாடல்களாக என் உள்ளத்தை தொட்ட சில..
முதன் முதலில் பார்த்தேன்..
தேவா ஏதோ ஒரு ஹிந்தி படத்திலேர்ந்து காப்பி அடிச்சாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது.. ஸ்டார் வால்யூ இல்லாம சிம்பிளா ஜோக்கா எடுத்த படம் ஆஹா.
அப்டி பார்க்கதுல்லாம் வேணாம்...
அழகுக் கோணல் வாய் சவுந்தர்யா ஆர்.பார்த்திபன்.... ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன் புத்தகத்தில் அச்சாவேன்.. என்ற பழனி பாரதியின் அமர்க்களமான வரிகளுடன்... ராஜா... இளையராஜா இசையில்...
காதலின் தீபம் ஒன்று..
எஸ்.பி.பி இளையராஜா கூட்டணியில் விளைந்த அதி அற்புதமான பாடல்.. இடை இடையே வரும் வயலின் குழல் இரண்டும் பாழும் மனதை பாடாய்ப்படுத்துகிறது. என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன்...
எஸ்.பி.பி இளையராஜா கூட்டணியில் விளைந்த அதி அற்புதமான பாடல்.. இடை இடையே வரும் வயலின் குழல் இரண்டும் பாழும் மனதை பாடாய்ப்படுத்துகிறது. என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன்...
வெள்ளி மலரே.....
ஏ.ஆர். ரஹ்மான் எஸ்.பி.பி .. வைரமுத்துவின் வைரவரிகள்.. அற்புதம்.. இளந்தளிரே..இளந்தளிரே.. என்று எஸ்.பி.பி ஆரம்பிக்கும் கட்டம்... அடடா...
நறுமுகையே நறுமுகையே.. நீ ஒரு நாழிகை நில்லாய்.
உன்னிகிருஷ்ணன் - பா.ஜெயஸ்ரீ இருவரும் வைரமுத்துவின் காவியக் காதலுக்கு குரல் கொடுத்தது போல.. மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன... செம்புலப் பெயல் நீர் ... அன்புடை நெஞ்சம் கலந்ததுவே... இலக்கியக் காதல்... காட்சி அமைப்புகள் அற்புதமான ஒன்று... ரஹ்மானின் இமாலய இசை.. நடுநடுவே வரும் அந்த ஃப்ளூட். சூபெர்ப்.
எந்தன் நெஞ்சில் நீங்காத...
யேசுதாஸ்.. ஜானகி.. பனியில் நனையும் மார்கழிப் பூவே... வரிகள் வாலியுடையதா வைரமுத்துவுடையதா.. உதடுகள் உரசிடத்தானே வலிகளும் பறந்திடும் மானே...
பின் குறிப்பு: இன்னமும் நிறைய உள்ளது. காதலர் தினத்திற்காக இது ஒரு சம்ப்ரதாய பதிவாகி விட்டது. காதல் ரசம் சொட்ட கதை ஒன்று எழுதி வைத்திருந்தேன்.. டாஷ் போர்டு கிளீன் செய்யும்போது சற்றுமுன்னர் அழித்துவிட்டேன். வாலண்டைனுக்கு பிடிக்கலை போலருக்கு. நீங்கள் தப்பித்து விட்டீர்கள்.
-
ஏ.ஆர். ரஹ்மான் எஸ்.பி.பி .. வைரமுத்துவின் வைரவரிகள்.. அற்புதம்.. இளந்தளிரே..இளந்தளிரே.. என்று எஸ்.பி.பி ஆரம்பிக்கும் கட்டம்... அடடா...
நறுமுகையே நறுமுகையே.. நீ ஒரு நாழிகை நில்லாய்.
உன்னிகிருஷ்ணன் - பா.ஜெயஸ்ரீ இருவரும் வைரமுத்துவின் காவியக் காதலுக்கு குரல் கொடுத்தது போல.. மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன... செம்புலப் பெயல் நீர் ... அன்புடை நெஞ்சம் கலந்ததுவே... இலக்கியக் காதல்... காட்சி அமைப்புகள் அற்புதமான ஒன்று... ரஹ்மானின் இமாலய இசை.. நடுநடுவே வரும் அந்த ஃப்ளூட். சூபெர்ப்.
எந்தன் நெஞ்சில் நீங்காத...
யேசுதாஸ்.. ஜானகி.. பனியில் நனையும் மார்கழிப் பூவே... வரிகள் வாலியுடையதா வைரமுத்துவுடையதா.. உதடுகள் உரசிடத்தானே வலிகளும் பறந்திடும் மானே...
பின் குறிப்பு: இன்னமும் நிறைய உள்ளது. காதலர் தினத்திற்காக இது ஒரு சம்ப்ரதாய பதிவாகி விட்டது. காதல் ரசம் சொட்ட கதை ஒன்று எழுதி வைத்திருந்தேன்.. டாஷ் போர்டு கிளீன் செய்யும்போது சற்றுமுன்னர் அழித்துவிட்டேன். வாலண்டைனுக்கு பிடிக்கலை போலருக்கு. நீங்கள் தப்பித்து விட்டீர்கள்.
-
38 comments:
காதல் பொங்கல் வைத்துவிட்டீர்கள்.. பாடல்கள் அமர்களப்படுத்திவிட்டீர்கள்..
மன்னார்குடி மைனர்வாள், (உபயம் தக்குடு ) என்ன ஒரே காதல் ரசம் அருவியாய் கொட்டிண்டு இருக்கு ஒய்?
முதல் கண்டனம்:
" அழகுக் கோணல் வாய் சவுந்தர்யா "
இன்னா ராசா? கண்ணு நல்லாகீதா ? போயி நம்ம டாக்குடர பாத்து கண்ணாடி போட்டுகினு வா தொற.
அந்த புள்ளைய போயி கோண வாயி அது இதுன்னு சொல்லிகினுகீர? பாவம் அத்துவும் பூடிச்சு நைனா! :(
டெம்ப்ளேட் சும்மா ஜோராகீது வாஜாரே. முன்ன எல்லாம் பெரும கோயிலு செவுரு மெறிக்கி வெள்ளையும் சேப்புமாதா இருந்துகிணுது.
இப்போ ஷோக்கா, நமீதா பொண்ணு கணக்கா பச்சையா கீது .அக்காங் !!
//ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு பள்ளிப் பருவம் தாண்டாத பிஞ்சுகள் சைக்கிள் பின்னாலோ பைக் பில்லியனிலோ பல்லி போல ஓட்டிக்கொண்டு முன்னால் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது நெஞ்சு பதபதைக்கிறது//
இதையெல்லாம் எடுத்து சொன்னால் கேட்டுக்கொள்ளக்கூடிய
மன நிலையில் கூட அப்படிப்பட்ட பிள்ளைகள் இல்லை
என்பதே உண்மை
அதன் விளைவுகளைப் பற்றிய கவலைகளும் அவர்களுக்கு இல்லை.
ஸோ வாட்! என்று தோளைக் குலுக்கிக் கொண்டு
விளைவுகளையும் அலட்சியமாக தள்ளிவிடும் மனப்போக்கில் செல்கிறார்கள்
என்பது அதை விட கசப்பான உண்மை
காதலின் தீபம் ஒன்று..
நறுமுகையே நறுமுகையே.. நீ ஒரு நாழிகை நில்லாய்.
எந்தன் நெஞ்சில் நீங்காத...
இவை எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள்
பகிர்வுக்கு நன்றி
ஓக்கே! ஓக்கே! நடக்கட்டும்! நடக்கட்டும்! ஒரு காலத்துல எனக்கு தெரிஞ்ச ஒரு மைனரும் இதே மாதிரி ரோஜாபூவும் கையுமா அலைஞ்சுண்டு இருந்தார்...:) எல்லா பாட்டும் நன்னா இருக்கு எனக்கும் அந்த 'ஆஹா' படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...:)
எல்லா பாட்டுமே சூப்பர் இத நான் வேற தனியா சொல்லனுமா என்ன? ;)டெம்ப்ளேட் அட்டகாசம். படத்துல இருக்கிற மைதானம் எங்க இருக்கு அண்ணா?
நல்ல தெரிவுகள்...
ஒன்றை தவிர மற்றவை அனைத்தும் எனக்கு மிக பிடித்தவை..
வோர்ல்ட் கப்புக்காக டெம்ப்ளேட்டையும் மேட்ச் பண்ணீட்டீங்களோ ஆர்விஎஸ்? அழகாய் இருக்கு.
நீங்க லிஸ்ட பண்ண பாட்ல எனக்கு வெள்ளிமலரே மட்டும் பிடிக்காது. டூ மச் செண்ட்மெண்ட் பேத்தலா இருக்கும் லிரிக்.
சீசனுக்கேத்த டெம்ப்ளேட்-சீசனுக்கேத்த இடுகைன்னு ஜமாய்க்கறீர் ஓய்.
ரொம்ப பிசி..
அப்புறமா படிச்சிட்டு கமெண்டு போடுறேன்.. ஓகே ?
புதிய டெம்ப்ளேட் அழகு. வாலண்டைன்ஸ் டே சிறப்புப் பாடல் பகிர்வு அருமை. ஒரீரு பாடல்கள் தவிர மற்ற எல்லாம் எனக்கும் பிடிக்கும்!
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.
வெள்ளி மலரே, என்ன ராகம்?
காதலர் தினத்தில் போட பாடல்களுக்கா பஞ்சம்...நல்ல பாடல்கள்...
டெம்பிளேட் ரொம்ப அழகா இருக்கு. வழக்கம் போல் ”காதல் ரசம்” சொட்டும் பாட்டுகளின் தொகுப்பு அருமை.
இது ஸ்வீட் மிக்ஸ்சர் !!
Lovely template, sir! already enga kumbal-la niraiyaa category bet vaikka start panniyaachchu--- naan world cup paththi sonnen! :) 83 magic marupadiyum nadanthaa nalla irukkum...!
oh! valentine's day post-aa ithu...! college mudinjapram intha valentine's day laam varathum theriyala.. porathum theriyala. kaalela Google Doodle paaththapram thaan gyaabagam vanthathu.
college-la dress code irukkum. Red- available, blue- committed, yellow- not sure, black, not interested, green- awaiting proposal nu oru color vittu vaikkaama ellaa colour-kum ethaavathu irukkum. onnum- vendaam-daapaa- nu white pottundu ponaa- "open relationship-aa" mbaanga!
innikku kaalela dress pannindu office kalambinen. amma kettaanga-- "enna daa dress code illaiyaa"nnu. "formals thaane pottirukken"nnu reply panninen. "athu illa daa. valentine's day dress code laam kedayaathaa"? nnanga!
haiyo haiyo! :(
office canteen-la lunch vaanga queue-la ninnaa- enakku munnaadi 7 pregnant ladies nikkaraanga. innum mosam-- project cabin la konjam ezhunthu ninnu etti paaththa orey glare adikkuthu, avanga bald head-la reflect aakara light!
intha azhagula colour code thaan oru kedu!
hope you had a great Velentine's day... :) enna vaangi thaantheenga- Mrs. RVS-ku? :P
sir, PS:
paattukalellaam-- nice selection. munbe vaa-vum intha list-la irunthirukkalaamnu ennoda avipraayam! 'enthan nenjil'(kalaingan) ennoda one of the favs.
ennoda all time fav. love songs list- la top 2 rendume hindi songs-- e-ajnabi (dilse.. poongaatrile- thamizh-la), aap ki nazron ne samjha (anpadh-ngara cinema.. lata singing for madan mohan music...)
good!
@சமுத்ரா
வெள்ளி மலரே பாடல் ஹிந்துஸ்தானி
வகையை சேர்ந்த மேக் மல்ஹர் (MEGH MALHAR)என்ற ராகம் ஆகும்
@பத்மநாபன்
நன்றி பத்துஜி! காதல் பாடல்களும் ஏராளம்.. காதலும் ஏராளாம்.. ;-)
@கக்கு - மாணிக்கம்
அசிங்கம் என்று சொல்லவில்லையே மாணிக்கம்.. அழகுதானே!! என்ன சொல்றீங்க? ;-) ;-)
@கக்கு - மாணிக்கம்
வாழ்த்துக்கு நன்றி! நமீதாவோட கம்பரிசன்... ??!!! உங்க லொள்ளுக்கு எல்லையே இல்லை.. ;-) ;-) ;-)
@raji
கரெக்ட்டுதான்.. They will shrug their shoulders and go.... ஒன்றும் சொல்வதற்கில்லை.. காதல் பாடல்கள் போட்டால் ஒரு ஐம்பது பதிவாது தேவைப்படும்.. இது மாதிருக்கு போட்டது.. ;-)
@தக்குடு
ஹி..ஹி..ஹி... போதுமா.. இதுக்கு மேலே சிரிக்க முடியாதுப்பா! உட்டுடு.. ;-)
ஆஹா ஒரு அற்புதமான படம். சாவு வீட்ல தாத்தா கூட பேசும் டில்லி கணேஷ்.காமெடி அட்டகாசம்.. படம் பூர சிரிப்பு வெடிகள்.. ;-)
@Balaji saravana
வாழ்த்துக்கு நன்றி தம்பி. மெல்போர்ன் ஸ்டேடியம்.. ;-) ;-)
@அன்பரசன்
நன்றி.. இதில் எந்தப் பாட்டு பிடிக்காது உங்களுக்கு? ;-) ;-)
@சுந்தர்ஜி
வேர்ல்ட் கப்புக்காகவும் வச்சுக்கலாம். மேலும் தீராத விளையாட்டுப் பிள்ளை அப்படிங்கரதுக்காக வச்சது.
வெள்ளி மலரே பாட்டு எஸ்.பி.பி. குரலுக்கு ...... தென்றலுக்கும் உங்களுக்கும் பேதம் இல்லை.. ஆடை கொள்ளப் பார்த்தீர் ஐயோ தள்ளி நில் நில்... ;-) ;-)
@Madhavan Srinivasagopalan
இன்னுமா பிசியா இருக்கே? ;-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலை.தலை.. ;-)
@சமுத்ரா
காபியா இருக்குமோ? எனக்கு ரொம்பத் தெரியாதுங்க..;-) ;-)
@ஸ்ரீராம்.
ரொம்ப சரிங்கண்ணா.. ;-)
@கோவை2தில்லி
நன்றிங்க சகோ.. ;-)
@இளங்கோ
அள்ளி சாப்பிடுப்பா...;-)
@Matangi Mawley
மாதங்கி... எப்பவுமே நானும் என் வைஃப்பும் வாலண்டைன் டே Feb 14 கொண்டாடினது இல்லை. ஏன்னா.. எங்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினம். ரொம்ப வருஷம் லவ்வினோம். கல்யாணம் கட்டிக்கிட்டோம். பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன்.
முன்பே வா ஒரு அட்டகாசமான பாடல். நிறைய இருக்கு. காதல் சீரீஸ் ஒன்னு ஆரமிச்சு ஒவ்வொன்னா போடறேன்.. எல்லோரும் கேப்போம். சரியா? ;-) ;-)
//கருப்பு ரோஜா செல்வமணியை காதலித்து திருமணம் புரிந்துகொண்டார் என்பது தெரிந்தும் சிகப்பு ரோஜாப்பூவிற்கு தனி மரியாதை. அனேக பேர் மணமில்லாத ரோஜாப்பூவை மனமில்லாமல் பரிமாறிக்கொண்டு காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்//
ஆஹா...என்ன ஒரு வார்த்தை பிரயோகம்...:)
//பள்ளிப் பருவம் தாண்டாத பிஞ்சுகள் சைக்கிள் பின்னாலோ பைக் பில்லியனிலோ பல்லி போல ஓட்டிக்கொண்டு முன்னால் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது நெஞ்சு பதபதைக்கிறது. //
உண்மை... ரெம்பவும் பயமா இருக்கு...
//அப்டி பார்க்கதுல்லாம் வேணாம்....//
சௌந்தர்யாவுக்காகவே நெறைய வாட்டி பாத்தா பாட்டு இது... அநியாயமா we lost her...(:
ரொம்ப அழகா இருக்கு
நம்மளையும் கொஞ்சம்
பாலோ பண்ணுங்க தல
@அப்பாவி தங்கமணி
நன்றி அ.தங்கமணி.. ;-)
சவுந்தர்யா... ஒரு ஸ்டன்னிங் பியூட்டி!! முகத்தில் அமைதி ததும்பும் அழகு. ;-) ;-)
@யாழ். நிதர்சனன்
வாழ்த்துக்கு நன்றி!
பாலோ பண்றேன் தல!! ;-) ;-)
என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன்...
அழகான கவிதைவரிகள்.காதலின் தீபம் சுடர் விடும் தங்க மின்னல்கள்.
Post a Comment