அகில உலக அம்மாக்கள் யூனிவர்சிட்டியில் வழங்கப்படும் ஒரு மாஸ்டர்ஸ் விருது பொண்டாட்டி தாஸன். கல்யாணம் கட்டிக்கொண்ட மூன்று மாதத்தில் இருந்து ஆறுமாதத்திற்குள் இப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுலகிலே அறுபது முதல் எழுபது 'விழு'க்காடுகள் வரை என்று சமீபத்திய கார்ட்னர் கள ஆய்வுகள் தெரிவிப்பதாக விவரம் அறிந்த வட்டாரங்களில் பேச்சு பலமாக அடிபடுகிறது. மீதமுள்ள முப்பது சதவீதத்தில் இருபத்தொன்பது அடுத்த ஆறுமாதங்களுக்குள் இவ்விருது கிடைக்கப்பெற்ற அபாக்கியசாலிகள். எஞ்சியிருக்கும் ஒரு சதவிகிதம் அம்மாக் கோண்டு என்ற பேச்சிலர் பட்டமும் வாங்கத் தெரியாமல் கல்யாணம் கட்டிக்கொண்டவர்களின் வாழ்நாளில் மிக உயர்ந்த விருதாகிய இப்பதிவின் தலைப்பையும் சம்பாதிக்கத் தெரியாத அசமஞ்சங்கள். அன்புக்கு கட்டுண்டும் அடிமையாகியும் அக்னி சாட்சியாக கையைப் பிடித்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டும் நடந்து கொண்டால் ஊர் உலகம் கொடுக்கும் இந்த தாஸ பட்டத்தை சிலர் பெருமையாக நினைப்பது உண்டு. இதையே பாசிடிவ் ஆக எடுத்துக்கொண்டு "காளிதாசன், கண்ணதாசன், பாரதிதாசன் மாதிரி தானே இந்த பொண்டாட்டி தாஸன்...." என்கிற தோரணையில் தலை நிமிர்ந்து வீதிகளில் பீடுநடை போட்ட ஹஸ்பெண்டுகளும் உண்டு.
ஆதி பொண்டாட்டி தாஸர் |
பெண் பார்க்கும் படலத்தின் போது பரிமாறப்படும் பஜ்ஜி சொஜ்ஜியின் தித்திப்பான நாக்கோடு "கவலையே படாதீங்கோ... உங்காத்து பொண்னை தாஸானதாஸனா பார்த்துப்பன்" என்ற மினிமம் கேரண்டி கொடுத்து மாட்டுப்பொண் ஆக்கிவிடுவார்கள். மேலே ஆய்வில் கூறியது போல பெரும்பான்மை ஆடவருக்கு எப்போது இது வழங்கப்படுகிறது என்று பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டதில் என்றைக்கு "இன்னிக்கி காபி தேவாமிர்தமா இருந்தது" என்று ருசித்து நாக்கை "ச்.." என்று ச்ச்சப்புக்கொட்டி கட்டியவளின் வளைக்கரம் தொட்டு வாயாரப் புகழப்படுகிறதோ அன்றிலிருந்து என்று தெரிய வருகிறது. "நம்ப காபி கசந்துபோச்சு..." என்று அடுத்தாத்து மாமியிடம் அங்கலாய்க்கும் போது வம்பு கேட்ட அந்த மாமி கை தட்டி கன்னத்தில் ஒரு கை வைத்துக்கொண்டு வழங்கும் பட்டம் தான் "இப்டி பொண்டாட்டி தாஸனா போயிட்டானே.." என்கிற கலைமாமணி விருது. இந்தக் கலைமாமணி விருது கிடைக்காதது இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் எழுதிய எனக்கும் தான் பாக்கி. இச்சமயத்தில் தமன்னா, அனுஷ்கா போன்ற கலைச்சேவை புரிபவர்கள் கூட கலைமாமணிக்கள் என்பதை அறிக. பத்மாவை மணம் புரிந்து வெற்றிகரமாக முந்தானை பிடித்து வாழ்க்கை நடத்தும் அந்த தாஸன் பட்டம் பெற்ற ஒருவருக்கு "பத்மாஸ்ரீ" என்று சிகரமாக ஒரு பட்டம் கொடுத்து எங்களூரில் ஒருவரை கௌரவித்தார்கள்.
"எவ்ளோதான் பெரிய ஹை கோர்ட் ஜட்ஜா இருந்தாலும் வீட்ல பொண்டாட்டிக்கு புருஷன் தானே. அந்த வீட்டம்மா அட்டானிக்கால் போட்டு ஒரு கால ஆட்டிகிட்டு ஹாலில் உட்கார்ந்திருக்க வேஷ்டியை மார் அளவுக்கு ஏத்தி கட்டிக்கிட்டு கொல்லைப்பக்கத்துல மாங்கு மாங்குன்னு பாவாடை தோச்சு போட்டுக்கிட்டு இருப்பார்." ஒரு பெரிய கம்பெனியில் மிக உயர்பதவியில் இருக்கும் ஒருவர் சொன்ன திருவாசகம் இது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வங்கிப் பணியில் இருக்கும் மனைவியை "மேடம்" என்றழைத்து மனைவிக்கு ஏக மரியாதையுடன் நடந்துகொள்வார். "என்ன சார்... பொண்டாட்டியை பார்த்தா இப்படி மட்டையா மடங்கிடுறீங்க.." என்று கேட்டால் "இதுக்கு பேர் தான் கொடுத்து வாங்கும் திட்டம். நமக்கு ஒன்னு வேணும்னா அதை நாம மொதல்ல கொடுக்கணும்" என்றார். "சரி சார்.. மனைவிகிட்ட இருந்து பூரி கட்டையால பூசை வாங்கினா... ஊர் உலகத்துல கணவன்மார்கள் முன்னாடி கொடுத்துட்டா அது மாதிரி வாங்கிக்கிறாங்க.." என்று இந்த அறியாச் சிறுவன் தெரியாமல் கேட்டதில் அவரிடமிருந்து பேச்சுமூச்சு இல்லை. புஸ்புஸ் என்று பெருமூச்சு விட்டு கண்களால் என்னை எரித்து விடுவது போல் பார்த்து முறைத்தார். அடுத்த கணம் அந்த ஏரியாவை காலி செய்தேன்.
"ஊர்ல பெரிய வஸ்தாதா இருந்தாலும் அவன் பொண்டாட்டி வாயத் திறந்தா பொட்டிப் பாம்பா அடங்கிடுவான் பார்த்ருக்கீங்களா" என்று இன்னொரு அனுபவஸ்தர் ஒரு பிட்டை போட்டார். "நீங்க வஸ்தாதா சார்!" என்று கேட்டால் "மடக்கி பேசறியா... உனக்கு ஒரு பயில்வான் ஒரு நாள் வராமலா போய்டுவான்.." என்று சாபம் விட்டார். ரொம்ப நாட்களாக "என்ன சார்! வீட்ல சிதம்பரமா? மதுரையா?" என்று சூசகமாக கேட்கும் வழக்கம் இருக்கிறது. இந்த விஷமமான கேள்விக்கு நூற்றுக்கு தொண்ணூறு சதம் வரும் பதில்..."ஹி..ஹி..நாம வெளியிலே சுத்திட்டு வரோமா.. அதனால வீட்ல எப்பவும் மதுரை தாங்க..". கட்டுக்கடங்காத என் வாய் "Universal Truth" என்று உளறியது. "சக்தி உபாசகர்" என்று எனக்கு தெரிந்த மாமா ஒருவர் இருந்தார். நிர்மலமான நெற்றியில் ஒரே ஒரு ஸ்டிக்கர் குங்குமப் பொட்டு மட்டும் புருவ மத்தியில் வைத்துக் கொள்வார். நடு வகிடு எடுத்து இருந்த கொஞ்சநஞ்ச முடியை வழித்து படிய படிய வாரிக்கொள்வார். கபாலத்துடன் ஒட்டிக்கொண்ட முடி அசுர காற்று அடித்தாலும், ஆளே பறந்தாலும் அது பறக்காது. மாமி நடந்தால் ஜெ.ஜெ பின்னால் வரும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் போல இரண்டடி ஒதுங்கி பவ்யமாக வருவார். கடைக்கண் பார்வைக்கு கட்டுப்படுவார். அம்மன் வழிபாடு செய்பவர் என்று நெடுநாள் நான் எண்ணியிருந்ததை தகர்த்தார் ஒரு நண்பர். "அவளை கேக்கணும்.. அவ சொன்னா.. அவ சொல்லுவா.. அவ வருவா.. அவளுக்கு பிடிக்காது.. அவளுக்கு பயம்.. அவ கோச்சுப்பா.." என்று சதா ஸர்வகாலமும் தனது மனைவியின் நாமாவையே (Replace அவ with கப்பு (அ) கற்பகம்) ஜெபித்துக் கொண்டிருப்பதால் ஊரார் வழங்கிய பட்டப் பெயராம் அது. என்ன ஒரு true லவ்!
பின் குறிப்பிற்கு பதிலாக இந்தப் பதிவிற்கு இணைப்பாக (பதிவிர்க்குதான்) கீழே இரண்டு கொடுத்துள்ளேன். ஒன்று வீடியோ மற்றொன்று ஒரு கவிதை.
இணைப்பு 1: வயலன்ஸ் காட்சி

எவ்ளோ அடிச்சாலும் தாங்கறார் இந்த வெள்ளைக்காரர். ரொம்ப நல்லவர்ப்பா! அவங்க அம்மாக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினார் போலருக்கு.. பாவம். பிரிச்சு மேஞ்சுட்டாங்க அவரோட வீட்டம்மா. அவங்க கை பேசியது. கடைசியில் அவ்வளவு அடியையும் வாங்கிக்கிட்டு கோட்டை தட்டிட்டு ஒண்ணுமே நடக்காதது போல அவர்பாட்டுக்கு வெளியில போய்ட்டார். (புருஷன்களுக்கு அதி முக்கியமான பாடம் இது) அந்தம்மா மயக்கமாகி கீழ விழுந்திடுச்சு. ரொம்ப பாவம். (இது மியூசிக்காம்!! க்ளாப்பிங் மியூசிக்! அடிதடி சங்கீதமா தெரியுது. 1970 களில் Steve Reich's இந்த கைதட்டல் மியூசிக் மிகப் பிரபலமாம்.) பிராக்கெட்டில் போட்டது இந்தப் பதிவிற்கு தேவையில்லாத விஷயம்.
இணைப்பு 2: வாழும் கவிதை
ஆக்டன் நாஷின் ஆங்கில மேற்கோள் ஒன்றை தமிழ்ப் படுத்தி ஒரு கற்றதும் பெற்றதும்மில் வாத்தியார் மணவாழ்க்கை சிறக்க எழுதியது.
முதலில் ஆக்டன் நாஷின் ஆங்கில வெர்ஷன்.
முதலில் ஆக்டன் நாஷின் ஆங்கில வெர்ஷன்.
இனி வாத்தியாரின் பட்டாசுத் தமிழில்..To keep your marriage brimming
With Love in the loving cup
Whenever you're wrong, admit it;
Whenever you're right, shut up.
இல்லற இன்பத்துக்குஇதுமட்டும் கத்துக்கொள்தப்பென்றால் ஒத்துக்கொள்சரியென்றால் பொத்திக் கொள்!
கடைசி இரு வார்த்தைகளை போல்டாக (எழுத்துரு கனத்தை சொன்னேன், என்னை பற்றி சொல்லவில்லை) போட்டது நான். இந்தக் கவிதையை கல்யாண நாள் அன்று வெளியிடலாம் என எண்ணியிருந்த என் மடமையை எண்ணி இப்போது சிரிக்கிறேன்!!!!
படக் குறிப்பு: கௌரி லீலை என்ற இத்திருப்படம் நான் இரு வருடத்திற்கு முன் திருச்சாத்தமங்கை (திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள பாடல் பெற்ற சிவ ஸ்தலம்) அயவந்தீஸ்வரர் கோயிலில் எடுத்தது. இந்தப் படத்தில் இருப்பவர் தனது உடலில் பாதியை பொண்டாட்டிக்கு அர்பணித்தவர். அவர் கொஞ்சும் அழகை பார்த்தீர்களா? இவரே "ஆதி பொண்டாட்டி தாஸர்". இவர் தாஸர் என்றால் இவரை துதிக்கும் நாமெல்லாம் தாஸாதி தாஸர்கள் தானே!! எங்கே கல்யாணம் ஆன எல்லோரும் ஜோரா ரெண்டு கையையும் தூக்குங்கப்பா! (இது ஃபினிஷிங் டச்.) இது ஒரு பின்குறிப்பு படக் குறிப்பு ஆன கதை.
-

53 comments:
//எவ்ளோ அடிச்சாலும் தாங்கறார் இந்த வெள்ளைக்காரர்.//
>>> எந்த நாட்டு கணவனாக இருந்தாலும்... சேம் பிளட்!
தாசனுதாசன்னு சொல்லி ஐஸோஐஸ் வச்சு கொமட்டு குத்தொட ரெண்டு மணி நேரம் வலைமேய ஒவர் டைம் வாங்கியாச்சு....ஜமாயுங்க...
சும்மாவே ஊட்டி மழை மாதிரி வார்த்தைகளை கொட்டித்தள்ளுவிங்க..
உண்மையை எழுதறப்ப கேட்கவா வேணும்..
வாத்தியாரின் பட்டாசு தமிழ் மொழி பெயர்ப்பை சுட்டியதற்கு சிறப்பு நன்றி...
கணவர்களிடன் ஒரு சர்வே எடுத்தால்..
90% மதுரை ஆட்சி என்று தான் சொல்வார்கள் ...மீதி 10 % சிதம்பர ஆட்சி என்பவர் பொய் சொல்பவர்கள் என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது....
//இந்தக் கலைமாமணி விருது கிடைக்காதது இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் எழுதிய எனக்கும் தான் பாக்கி.//
பொய்மையும் வாய்மை பயக்கும் புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்
//"இன்னிக்கி காபி தேவாமிர்தமா இருந்தது" என்று ருசித்து நாக்கை "ச்.." என்று ச்ச்சப்புக்கொட்டி கட்டியவளின் வளைக்கரம் தொட்டு வாயாரப் புகழப்படுகிறதோ அன்றிலிருந்து என்று தெரிய வருகிறது//
ஓஹோ! நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்...:P
பதிவு அருமையாக தத்ரூபமாக நகைச்சுவையாக இருந்தது.தாஸாதி தாஸனாக இருந்து நல்ல அனுபவம் இல்லாமல் இப்படியெல்லாம் எழுத வராதே! அதனால் என்ன? இருந்து விட்டுப் போவோமே !!
ha,ha,ha,ha,ha.... well-written!
.
எங்கள் வீட்டில் முடிவுகள் சேர்ந்தே எடுப்போம். சம உரிமை கொடுத்திருக்கிறார்கள் எனக்கு. எனக்குதான் முக்கியத்துவம் அதிகம். வீட்டில் என்ன செலவு செய்வது என்ன முடிவு எடுப்பது போன்றவற்றை மட்டுமே மனைவி எடுக்க, நான் முபாரக் செய்வது தவறு, அமேரிக்கா தலையிடுவது தவறு, மன்மோகன் தைரியமாகப் பேச வேண்டும் என்று முக்கிய முடிவுகள் எல்லாம் எடுப்பேன். அது மட்டுமல்லாமல் எங்கள் சண்டையில் எப்போதும் நான் தான் ஜெயிப்பேன். மனைவி அடிக்க வரும்போது கட்டிலுக்கு அடியில் சென்று விடுவேன். எவ்வளவு குனிந்தும் அவர்களால் அடிக்க முடியாமல் அவர்கள் தோற்று விடுவார்கள். நாங்களெல்லாம் வீட்டுல மதுரை வெளில சிதம்பரம்...
சிரித்தேன் ஆர்.வி.எஸ். நாயகன் சாயலில் "தெரியேலேயேப்பா" என்று சொல்லும் ரகம் தான் நிறைய ?
என் நண்பன் ( என் பாஸ் இன்பாக்ட்) ஒருவன் சொல்லுவான்
- ஏழை தாய் தந்தை நம் முன் ஜென்ம விதி
- ஏழை மாமனார் தேர்ந்து எடுப்பது "உன் முட்டாள் தனம்" என்று
அதேபோல் மதரையோ / சிதம்பரமோ - நான் கூட கொஞ்சம் நரசிம்ஹா அவதாரம் கண்ட உகபுருஷன் (மகன்) !!
யாரையும் விட்டுவைப்பதில்லை என்ற கொள்கையில் என் அம்மா, மனைவி, மகன்கள் ஏன் ஆபிசில் பாஸும் / colleague உட்பட எல்லோரையும் ஒட்டுமொத்தம் உண்டு இல்லை என்று பார்க்கும் உத்தமன் நான்
ஹஹஅஹா நல்ல நகைச்சுவை விருந்து...
ரசிகமணி சொன்னமாதிரி இப்படி ஐஸ் வச்சு சமாளிச்சுடேல் போல இருக்கு ஹ்ம்ம்
அவர் வாங்கியது ஏழே ஏழு அடிகள்தான்..
மற்றவைகள்.. ரீபீட்டோய்..
"நல்ல கலைமாமணி விருது" ஹா...ஹா.
ஹா ஹா.. அண்ணா செம! அந்த கவிதை சூப்பர்! :)
தாசா தாசாதி தாசனெங்கள் தாசா
கூசா தூக்காதே வேறு எங்கும் கூசா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நீ தாசா.
நல்லாயிருக்காண்ணே.
மனைவி = மனையின் தலைவி
இல்லாள் = இல்லத்தை ஆள்பவள்
அப்பாடா.. நான் தப்பிச்சுட்டேன் :)
ம்....
கவிதை அருமை...
I am the BOSS of my Home.
My wife permits me to tell as.
திருமீயச்சூரிலும்(லலிதா சகஸ்ரநாமம் பிறந்த தலம்) இதே சிற்பம் உண்டு.
பிரிந்த கணவன், மனைவியர் அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால்
பலன் கிடைக்குமாம்.
என் பிளாகில் ருக்மிணி கல்யாணம் எழுதியிருக்கிறேன். வந்து படியுங்கள்.புண்ணியம் கிடைக்கும்.
@! சிவகுமார் !
பஞ்ச் கமென்ட்ங்க!! அசத்தல். முதல் வருகைக்கு நன்றி. ;-)
@பத்மநாபன்
//சும்மாவே ஊட்டி மழை மாதிரி வார்த்தைகளை கொட்டித்தள்ளுவிங்க..
உண்மையை எழுதறப்ப கேட்கவா வேணும்..//
பத்துஜி!! இந்த குசும்பு தானே வேணாங்கறது.. சந்தடி சாக்குல போட்டு தள்ளவேண்டியது... ;-) ;-) ;-)
(நாங்கெல்லாம் டெரர்... யாருக்கும் பயப்படமாட்டோம். ) ;-) ;-)
@பத்மநாபன்
பத்துஜி நீங்க அந்த பத்து பர்செண்டா!! ;-)
@raji
அந்தக் குறளுக்கு இங்க என்ன அர்த்தம் ராஜி! சத்தியமா தெரியலை.. ;-);-) நீங்களும் நானும் இன்னும் கலைமாமணி பெறவில்லை என்று நினைக்கிறேன்.
@தக்குடு
பிற்காலத்துல இப்படி சொல்றவங்க எல்லோரும் இதைத்தான் சொல்லப்போறாங்க.. ;-) ;-)
@VAI. GOPALAKRISHNAN
//தாஸனாக இருந்து நல்ல அனுபவம் இல்லாமல் இப்படியெல்லாம் எழுத வராதே! அதனால் என்ன? இருந்து விட்டுப் போவோமே !!//
சார் பத்துஜியோட சேர்ந்துகிட்டு நீங்களும் ஓட்டறீங்க. பரவாயில்லை.. பரவாயில்லை.. ;-) ;-) ;-)
@Chitra
Thank you!! ;-) ;-)
@ஸ்ரீராம்.
வீட்ல மதுர வெளியில சிதம்பரம்.. யாரவது சினிமா டைட்டிலுக்கு யூஸ் பண்ணலாம். இப்படி ஒளிஞ்சு வாழறது ஒரு வாழ்வா? தெகிரியமா இருக்க வேணாம்... ( நான் ஒன்னும் சொல்லலை.. யாரும் போட்டுக் கொடுத்துராதீங்கோ.. );-)
@சாய்
நன்றி சாய்.. இது பதிவுதான்... என்னோட அனுபவங்கள் இல்லை. லேபிளில் அனுபவம் என்று போட்டிருந்தது பிறர் சொல்லக் கேட்ட அனுபவம். அம்புட்டுதான்... நன்றி ;-) ;-)
@எல் கே
உங்க எல்லோரையும் கிளப்பி விட்டுட்டார் ரசிகமணி பத்துஜி! நல்லா பூந்து விளையாடுங்க..
ஐசுக்கே ஐஸ் வைக்கிறதில்லை நான்.. (இது எப்படி இருக்கு.. யாரவது போய் எடுத்து சொல்லுங்கப்பா... ) ;-)
@Madhavan Srinivasagopalan
எவ்ளோ உன்னிப்பா மத்தவன் அடி வாங்கறதை பார்த்துருக்கேப்பா!!! கடைசி வரை அவன் தப்பிக்கவே இல்லை பார்த்தீங்களா.. ;-)
@மாதேவி
விருது கொடுத்ததற்கு நன்றிங்க மாதேவி! ;-)
@Balaji saravana
வாழ்த்துக்கு நன்றி! கவிதைக்கு புகழ் நாஷும் வாத்தியாரும். எப்போதோ படித்தது இதை எழுதும் போது நினைவில் இருந்தது. ;-) ;-)
@Samudra
;-) ;-);-) ;-);-) ;-);-) ;-)
@சேக்காளி
நா உங்களைப் பார்த்து பாடும்போது இன்னும் நல்லாயிருக்கு!!! ஊரே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து இதைத்தான் பாடிக்கிட்டு இருக்கு. ;-)
முதல் வருகைக்கும் கருத்தாழமிக்க பாடலுக்கும் நன்றி. ;-)
@இளங்கோ
இப்டி சொன்னா தப்பிச்சுட்டதா அர்த்தமா. யார் சொன்னா? ;-) ;-)
இதிலியே தெரியுதே... நீங்க வீட்ல எப்படின்னு.. ;-)
@வெங்கட் நாகராஜ்
என்னா தல. பிசியா.. ம். மட்டும் போடறீங்க...
கவிதை புகழ் சுஜாதாவிர்க்கே.. நன்றி ;-)
@இராஜராஜேஸ்வரி
//I am the BOSS of my Home.
My wife permits me to tell as.//
அட்டகாசம்.... ;-) ;-)
@எல்லோரும்
மேல எவ்ளோ சூப்பெரா ஒரு உண்மையான கமெண்ட்டு ;-) இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்.. ;-) ;-) ;-)
@இராஜராஜேஸ்வரி
ஆமாம் சரிதான். வந்து பார்த்தேன்.. உங்க சைட்ல ருக்மணி கல்யாணம் நடக்கலையே..
அது சரி பொண்டாட்டி தாசர்கள்ங்கற தலைப்பில் எழுதும்போது
இந்த மாதிரி குறளுக்கெல்லம் அர்த்தம் புரியவா போகுது.
எழுதிருக்கறத பாத்தாலே கலைமாமணியை விட உயர்ந்த
அவார்டே வாங்க்கிருக்கீங்கனு எல்லாருக்குமே புரியுது,இதுல
வாங்காதவங்க லிஸ்ட்ல இருக்க ஆசைப்பட்டா எப்டி?
அதான் சொன்னேன் பொய்மையும் வாய்மையிடத்தனு.
சரி ஏதோ அடி வாங்காம தப்பிச்சுக்க பொய் சொல்றறீங்கன்னா
உண்மைக்கு பதிலா சொல்லிக்கட்டுமேனுதான் அந்த குறள்
அண்மையில் ஒரு பதிவில் உங்களை "தாம்பத்திய வித்தகர்" என்ற அடைமொழியோடு குறிப்பிட்டேன்...
பட்டத்துக்கு ஏற்ற வால் பதிவு. சரி.. கொஞ்ச நாளைக்கு திட்டு வாங்காம ப்ளாக் எழுதப் போறீங்க!
நீர் சங்கீத உபாசகர்ன்னு நன்னாத் தெரியுமே!அதாவது நீங்க எழுதின சுஜாதா கவிதையை வலஜி ராகத்திலே பாடிப் பாருங்கோ!திவ்யமா இருக்கும்னு சொல்ல வந்தேன்.
எங்காத்துல இப்போ பழனி! காதலி ஊருக்கு போயிருக்கா!
இவ்வளோ அடியெல்லாம் நான் தாங்க மாட்டேம்பா .
( நம்ம பக்கம் வாங்க RVS )
இதுக்கு எதிர்ப்பதம் என்ன?
வீட்டிலே அம்மாவின் ஆட்சி என்றால் ஒத்து கொள்கிறார்கள், நம்ம செல்லங்களின் அம்மாவின் ஆட்சி என்றால் ஒத்து கொள்வதில்லை. என்ன நியாயமோ?
நல்லா இருந்தது.
ரொம்ப நாளாச்சு பின்னூட்டம் இட்டு.
நிறைய ஆணி (அதிலும் திருகாணிகள் - screws).
ரகு
////எவ்ளோ அடிச்சாலும் தாங்கறார் இந்த வெள்ளைக்காரர்.//
இவன் நெம்ப நல்லவண்டா....
ஆமாம், சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு...
ஒலகம் பூரா தேடினாலும், இந்த மண்டகப்படி மட்டும் எல்லா எடத்திலயும் நடந்துண்டு தான் இருக்கும்....
கலக்குங்க ஆர்.வி.எஸ்...சார்...
கணவன் : ஹலோ.... ஒரு காஃபி...
மனைவி : என்னடா சொன்ன?
கணவன் : இல்ல... வேணுமா... போட்டு தரவான்னு கேட்டேன்...
மனைவி : அதானே பார்த்தேன்...!!
தாஸ் தாஸ்...தாசர்கள் !
@raji
வை.கோ சாரின் கமெண்ட்டை படிக்கவும். ப்ளீஸ். ;-);-)
@மோகன்ஜி
நீங்க கோடு போட்டா நாங்க ரோடு போடணும். ஏன்னா நீங்க தான் எங்க டைரக்டர்.
தண்டாயுதபாணியா இல்லையே? ;-);-))))))
@சிவகுமாரன்
நாங்களும் கல்லடி பட்டாலும் கண்ணடி பட்டா தாங்க மாட்டோம்.
வரேன்..வரேன்.. கோச்சுக்காதீங்க.. ரசிகமணி அப்பாஜி மாதிரி பிரமாதமான கமென்ட் போட வராது. இருந்தாலும் ரசிப்பேன். ;-)
@அப்பாதுரை
பொண்டாட்டிக்கு 'எதிரி'ப் பதம் புருஷனோட அம்மா.. அதனால இதுக்கு எதிர்ப்பதம் "அம்மாக் கோண்டு". இது எப்படி? ;-)
@ரகு
ரொம்ப நாளா காணோமேன்னு பார்த்தேன். திருகாணி ... அட்டகாசம்... நன்றி சார்! ;-)
@R.Gopi
உங்க ஜோக்கும் கமெண்ட்டும் அருமை. உங்களோட அந்த வீடியோ இன்னும் பெண்டிங். எப்படியும் இன்னிக்கி கண் முழிச்சு பார்க்கிறேன். அன்பிற்கு நன்றி கோபி! ;-)
@ஆகாயமனிதன்..
ஹி..ஹி... இது குட், பெட்டெர், பெஸ்ட் மாதிரி இல்லையே.. கருத்துக்கு நன்றிங்க ;-)
what to say.
really super anna..
namma ooru karu nama orukarthan..
vaalga valamudan.
Post a Comment