நகரேஷு காஞ்சி என்ற மூதுரைக்கு ஏற்றப்படி கடையும் கன்னியுமாக நல்ல ஷகராக இருக்கிறது இன்றைய காஞ்சிபுரம். இரண்டு சரவணபவன், ஒரு ஜாய் அலுக்காஸ் என்று ஜோரான சாப்பாடும் பளபள ஆபரணங்களாகவும் ஜொலிக்கிறது காஞ்சி. சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று முப்பெரும் தெய்வ வழிபாடுகளால் ஊரெங்கும் பக்தி மணம் கமழுகிறது. ஆட்டோக்கள் பக்தர்கள் சுமக்கிறது. வண்டியை சற்றே அதிகமாக திருப்பினால் ஏதாவது ஒரு கோயில் மதில் சுவற்றில் போய் இடிக்கிறது. இந்திய நகரங்களின் தலைவிதிப்படி இங்கும் கூட்டம் பெருத்தால் வண்டி பெருக்கிறது. வண்டி பெருத்தால் ரோடு நிறைகிறது. வீதியெங்கும் வாகனங்கள் விரவியிருக்க சாலையெங்கும் ஒரே மக்கள் வெள்ளம். நாலடிக்கு ஒரு காக்கித் தொப்பை நின்று இல்லை இல்லை தொப்பி நின்று கொண்டு போக்குவரத்தை சீர் செய்கிறேன் பேர்வழி என்று சீர் குலைக்கிறது. ஈ காக்காய் வராத ரோடுக்கு பச்சை கொடுத்து விட்டு நாற்பது வண்டி நின்று அலைமோதும் திசையை ஒற்றைக்குச்சியை குறுக்கே காட்டி நிறுத்தி வைத்தார்கள். யாரோ வி.ஐ.பி நமது லைனில் க்ராஸ் செய்கிறார் போலிருக்கிறது என்று நினைத்து எட்டிப் பார்த்த சமயத்தில் கையில் திருவோடு ஏந்திய மகாகனம் பொருந்திய பிச்சைக்காரர் ஒருவர் ரோடு கிராஸ் செய்தார். போலீஸ்காரர் நீட்டிய குச்சியை மடக்கிய பின் சராசரி இந்தியர்களுக்கே உரித்தான 'சிக்னல் விட்டவுடன் குறுக்கே ஓடும்' மகோன்னதமான மனோநிலையில் இருந்த ஒரு இளவயது ஆன்டி பூமி அதிர வேகமாக ஓடி எதிர்க்கரை அடைந்தார். வண்டி எடுக்காமல் இதை வேடிக்கை பார்த்தவர்களும் ஆக்சிஜன் அதிகம் தேவைப்பட்ட அந்த ஓடிய ஆ.யும் ஒருசேர மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினர்.
காஞ்சிக்கு தொட்டடுத்த ஓரிக்கையில் மஹா பெரியவரின் மணி மண்டபம் கும்பாபிஷேகம் சென்ற வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. சங்கரா டி.வியில் சுத்தி சுத்தி லைவ் காண்பித்தார்கள். மணி மண்டபம் சென்று பெரியவரின் அருள் பெற்று வரலாம் என்ற எண்ணத்தில் ஞாயிறு மதியம் கிளம்பி காஞ்சியை ஒரு மூன்று மணி சுமாருக்கு அடைந்தபோது நான் கண்ட சீன் மேற்கண்ட பாராவில் விளக்கியாயிற்று. ஓரிக்கை காஞ்சி-உத்திரமேரூர் வழித்தடத்தில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. காஞ்சியை டிராபிக் வெள்ளத்தில் நீந்தி தாண்டிய பிறகு உத்திரமேரூர் நெடுஞ்சாலை என்று போர்டு போட்டிருந்த இடத்தில் இரண்டு சிறுவர்கள் ஒளிந்து போலீஸ் திருடன் விளையாடும் அளவிற்கு கட கடா குடு குடு நடுவிலே பள்ளம். மழை வந்தால் அந்தப் பக்கம் இருக்கும் நெற்பயிருக்கு பாசன நீர் கொடுக்கும் கன்மாயாக விளங்குகிறது. தட்டுத் தடுமாறி வண்டியை உருட்டிக்கொண்டு ஓரிக்கை என்ற பெயர்ப்பலகை அருகில் கைலியோடு சுவாரஸ்யமாக தம் அடித்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவரிடம் "மஹா பெரியவா..." என்று ஆரம்பிக்கும் முன்னரே "பஞ்சாயத் ஆபிஸ் பக்கம் ரைட்டுல போற ரோட்ல உள்ள போங்க.. " என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
ஒரு குறுகிய சாலையில் நுழைந்து தெருவில் ஓடும் சிறுகுழந்தைகள், ஆடுகள், பாட்டிகள் மேலே வாகனத்தை ஏற்றாமல் ஒரு லெஃப்ட் ஒரு ரைட்டு ஒடித்தால் விசாலமான பெரிய இடத்தில் நடுவில் அழகாக மண்டபத்துடன் கோபுரம் தெரிகிறது. மன்னாதி மன்னர்களாலும் ராஜாதி ராஜாக்களினாலும் கட்டப்படும் கோயில்கள் "சுத்தா" (Suddha) என்ற வகைப்படும். அத்தகைய கோயில்களில் கட்டப்படும் பொருட்கள் பெரும்பாலும் கருங்கற்களை கொண்டு வேறு பொருட்கள் கலப்பு இல்லாமல் கட்டுவார்கள். கல், செங்கல், உலோகம் போன்ற பல பொருட்கள் கொண்டு எழுப்பப்படும் கோயில்கள் "மிஸ்ர விமானம்" என்றழைக்கப்படும். இந்த மணிமண்டபம் சுத்தா வகையை சார்ந்தது. முற்றிலும் வெண்ணிறமுள்ள பாறாங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. காரை நிறுத்தியவுடன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கக்கத்தில் ஒரு காஷ் பாக்கை இடுக்கிக்கொண்டு யாராவாது டோக்கென் போட வருவார்கள் என்று நினைத்து ஏமாந்து போனேன். ஏற்கனவே இருந்த மஹா பெரியவா சரணம் போட்ட ஒரு காரும், ஒரு வேனும் சில ஜனகளை இறக்கி விட்டுவிட்டு நின்றுருந்தது.
பளீர் என்று கண்ணைப் பறிக்கும் நீலக் கலர் உடையில் இருந்த செக்யுரிட்டி "மூனரை மணிக்கு தொறப்பாங்க" என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் ஒரு முறை அவரைக் கேட்டு தொந்தரவு செய்யாமல் ஆளைத் தூக்கும் காற்று அடிக்கும் அந்த மண்டபத்தில் அமர்ந்தேன். பசங்கள் ஓடி விளையாண்டது. கல்லை இழைத்து கட்டியிருக்கிறார்கள். ஒரு பெரிய கல்லில் நந்தியை அடிக்க ஆரம்பித்து முடிக்காமல் விட்டிருக்கிறார்கள். நல்ல தேஜஸுடன் அமைந்த நிறைய சிற்பங்கள் வடித்திருக்கிறார்கள். காலை நீட்டி விஸ்ராந்தியாக உட்கார்ந்ததில் நித்ரா தேவி உடனே வந்து என்னை ஆரத்தழுவிக் கொண்டாள். திருக்கோயில் மண்டபங்களில் அன்னதானத் திட்டத்தில் சாப்பிட்டுவிட்டு நிறைய பேர் இன்ஸ்டன்ட்டாக ஒரு தூக்கம் போட்டு ரெஸ்ட் எடுக்கும் மகத்துவம் விளங்கிற்று.
பாதி தூக்கத்தில் திடீரென்று ஒரே கசமுசாவென்று சத்தம். பள்ளிகொண்ட பெருமாள் போஸில் அசையாமல் அப்படியே அரைக்கண் திறந்து பார்த்ததில் இரண்டு மஹிந்திரா வேன் திணற திணற ஐம்பது மடிசார் மாமிகளை கொண்டு வந்து இறக்கியது. ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் விமான பணிப்பெண்கள் யூனிஃபார்ம் அணிவது போல அரக்கு பார்டர் வைத்த நீலக் கலர் ஒன்பது கஜம் பட்டுப் புடவைக்கு மேட்சிங்காக அரக்கு நிற சோளியில் வேன் குலுங்க இறங்கினார்கள். உடனே வாரி சுருட்டி எழுந்துவிட்டேன். தங்க்ஸ் ஒரு பார்வையில் என்னைப் புரிந்துகொண்டார்கள்.(?!). திறக்கபடாத சன்னதி முன்னர் எல்லோரும் ஆஜரானார்கள். வாட்டசாட்டமாய் இருந்த தலைமை மாமி "ம்.. உக்காந்து ஆரம்பிங்கோ..." என்று ஆஞகை பிறப்பிக்க சன்னதிக்கு வழிவிட்டு இரு புறமும் இரு அணிகளாக உட்கார்ந்தார்கள். அவர்கள் காவலுக்கு ரெண்டு மாமா இரண்டு பக்க கடைக்கோடி ஓரத்திலும் "ஈஸ்வரா" என்று சொல்லி மேல் துண்டால் தரையை தட்டி அமர்ந்துகொண்டார்கள். "சிந்தூராருண விக்ரஹா.." என்று பாம்பே சிஸ்டேர்ஸ் கணக்காக லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அடடா.. தூங்கி வழிந்துகொண்டிருந்த மணி மண்டபம் களை கட்ட ஆரம்பித்துவிட்டது. மூனரைக்கு சன்னதி திறந்தவுடன் எப்போதும் நம்மூர் கோயில்களில் ஏற்படுவது போல தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்களுடன் ஜோதியில் ஐக்கியமாகி மஹா பெரியவாளை தரிசித்தேன். அற்புதமான ஐந்தடி மூர்த்தம். அமர்ந்த திருமேனி. நேரே உட்கார்ந்து பேசுவது போல் இருந்தது. பக்கத்தில் "நா இருக்கேன்" என்று எழுதி மஹா பெரியவரின் ஆளுயர படம் ஒன்று வைத்திருந்தார்கள். அதில் நெஞ்சில் வலது கையை வைத்து உட்கார்ந்திருந்தார் பெரியவா. காண கண்ணாயிரம் வேண்டும். திவ்யமாக இருந்தது.

தரிசனம் முடித்துக்கொண்டு வரும் வழியில் காமாக்ஷியம்மனை தரிசித்தோம். இரட்டை யானை கோயில் வாசலில் வரவேற்றது. ஒரு ரூபாயை தும்பிக்கையை நீட்டி வாங்கிக் கொண்டு என் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் செய்தது. பாலபிஷேகம் பார்த்தோம். மக்கள் எல்லோரும் இரண்டறக் கலந்து அம்மனை தரிசித்தார்கள். கும்பலாக திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் மிதித்துக்கொண்டும் சாமி கும்பிட்டார்கள். உள்ளே அர்ச்சகரின் அர்ச்சனையும் வெளியே பக்தர்களின் அர்ச்சனையையும் காது ஒரு சேர வாங்கிக் கொண்டது. ப்ரதக்ஷிணம் செய்யமுடியாமல் வந்தவழியே திரும்பி வந்து துவஜஸ்தம்பம் அருகில் நமஸ்கரித்து அம்பாளிடம் இருந்து விடைபெற்றோம்.
திரும்பி வரும்வழியில் பெரியவள் அடுத்த வாரம் காஞ்சீபுரம் ஒன்ஸ் மோர் போலாமா டாடி என்று கேட்டாள்.
படங்கள்: அடியேன் எடுத்தது மற்றும் kamakoti.org, indiadivine.org என்ற தளங்களிலிருந்து...
-
திரும்பி வரும்வழியில் பெரியவள் அடுத்த வாரம் காஞ்சீபுரம் ஒன்ஸ் மோர் போலாமா டாடி என்று கேட்டாள்.
படங்கள்: அடியேன் எடுத்தது மற்றும் kamakoti.org, indiadivine.org என்ற தளங்களிலிருந்து...
-
68 comments:
அருமையான படங்களுடன், நல்ல பகிர்வு.
காஞ்சிபுரம் காமட்சியம்மன் கோவில் எனக்கு விருப்பமான கோவில்களுள் ஒன்று! ஒரு ஆன்மீக அதிர்வு என்னை சூழ்ந்து கொள்வது போன்ற எண்ணம் ஏற்படும் எப்பொழுதும்! உங்க விசிட் அருமை அண்ணே! :)
@Chitra
மிக்க நன்றிங்க... திருமண நாளை விமரிசையாக கொண்டாடினீர்களா? ;-)
@Balaji saravana
நன்றி ஆன்மீகத் தம்பி. ;-) ;-)
//உள்ளே அர்ச்சகரின் அர்ச்சனையும் வெளியே பக்தர்களின் அர்ச்சனையையும் காது ஒரு சேர வாங்கிக் கொண்டது.//
:)
அலையை தரிசனம் கோடி புண்ணியம் . அதுவும் மகா பெரியவாளை தரிசனம் பண்ணினா இன்னும் புண்ணியம் .. பகிர்வுக்கு நன்றி
மகா பெரியவா தரிசனம்.. !!
இதுக்குமேல எனக்கு ஏழுத வரலை.. நோ.. சான்சே இல்லை..
அழகான படங்கள்..
ஆதி சங்கரரின் அதிர்வுகள் கொண்ட காஞ்சிபுரத்துக்கு அடுத்த விடுப்பில் கண்டிப்பாக போகவேண்டும் என உறுதி எடுக்க வைத்தது உங்கள் பதிவு....காஞ்சி காமாட்சி கோவிலுக்கு அடுத்து வரதராஜரும் தீட்சன்யமாக இருப்பார் என்று கேள்விபட்டிருக்கிறேன்.. பதிவுக்கு நன்றி..
அப்புறம்
அரைக்கண் பார்வை ..அரக்கு பார்டர்...கிங்க் பிஷர் ..தீராத விளையாட்டு பிள்ளைங்கறது சரியாத்த இருக்கு...
மக பெரியவாளைப் பற்றி படிக்கும் போதே
மனதில் அமைதி நிறைந்து விடுகிறது
thanks for d article and photos
ஏழு வருடங்கள் காஞ்சியில் குடியிருந்தோம். என் பால்யப் பருவம் காஞ்சியில் தான். இன்றும் புத்தாண்டு, வீட்டில் சுபகாரியம் என எதுவென்றாலும் காமாட்சி அம்மனை தரிசித்துவிடவேண்டும் எங்களுக்கு.
பழைய நினைவுகளை கிளறிவிட்டது உங்கள் பதிவு.
காமாட்சி கர்ப்பகிரஹம் பக்கத்தில் சைடில் அரூப அம்மனும்,அம்மனின் தொப்புள் விழுந்த இடமும் பார்த்தீர்களா?
காஞ்சி முழுக்க, கடை "கன்னி"ன்னு சொல்லிட்டு ஆன்ட்டியைப் பத்தி மட்டும் சொல்லிட்டீங்க? இன்னொரு விஷயம், இந்த "கன்னர்"கள் (வேலையில்லா இளைஞர்கள்) அதிகம் இருக்கும் ஊர்கள் உருப்படியில்லைன்னு கவனிச்சிருக்கேன்.
அப்புறம் எப்பவும் போல் எழுத்துப்பிழை: ஆஞ்கை இல்லை ஆக்ஞை.
ஆமா, //பஞ்சாயத் ஆபிஸ் பக்கம் ரைட்டுல போற ரோட்ல உள்ள போங்க.. " என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.// பின்ன எப்படி சொல்லியிருக்கணும்? "நாட்டாமை எம்புட்டு படத்ல நடிச்சிருக்காரு, பஞ்சாயத் கூட்டியிருக்கார்? அவருக்கு இந்த கஷ்டம் வந்திருச்சே....ப்ச்! நம்மூர் பஞ்சாயத் ஆபீஸும் இருக்கு பாருங்க.... வடிவேலு படத்ல இப்பிடித் தான், ரைட்டா, ரைட்டானு கேப்பாங்களே... அதே ரைட்டு தான். ஆமா. சரி, கிளம்பறதுக்கு முன்னால பத்தி #tnfisherman என்ன நினைக்கிறீங்க?"ன்னா?
சரி, நான் எழுதி வெளிவந்த சிறுகதைக்கும் ஒரு ஆஜர் போட்டுவிடவும். இல்லையேல், மேற்படி எக்ஸ்ட்ரா வசனங்கள் நிறைய வர வாய்ப்புண்டு!
@இளங்கோ
ரைட்டு... வேலை ஜாஸ்தி புரிஞ்சுகிட்டேன்!! ;-)
ஆர்.வீ.எஸ்! நலம் தானே? இன்றைக்குத்தான் பட்டினப் பிரவேசம்.
பெரியவா பற்றிய நினைவு கோறலுக்கு நன்றி. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ புண்ணியம் செய்திருக்கிறோம். பிப்ரவரி பதினாலுக்கு முன்னர் புண்ணியம் சேத்துக்கறாப்பல இருக்கே. சமத்தா இரும்!
@எல் கே
ஆலய தரிசனமா?
நல்ல ட்ரிப்! ;-)
@Madhavan Srinivasagopalan
சரி மாதவா!! புரிந்துகொண்டேன்... ;-)
@MANO நாஞ்சில் மனோ
நன்றிங்க.. மனோ... ;-)
@பத்மநாபன்
பத்துஜி மணி மண்டபம் நல்லா இருந்ததா?
என்னிக்காவது ஹாஸ்யம் குறைச்சலா எழுதினா ராஜி Where is the standard? அப்படின்னு கமென்ட் போடறாங்கோ..... என்ன பண்றது... ;-)
அவங்களுக்காக "சதமடித்த திருதிராஷ்ட்ரன்" வேற எழுதணும்.. இலக்கியப் பணி தலைக்கு மேல இருக்கு.. ;-)
@raji
Thank you! ச.தி எழுதப் போறேன்!!
@வித்யா
அப்படியே உங்கள் நினைவலைகளையும் உங்க பதிவுல கொஞ்சம் கொளுத்திப் போடுங்க.. வந்து படிக்கறோம்... நன்றி ;-)
@அமுதா கிருஷ்ணா
சென்றமுறை சென்றபோது கோயிலின் தூண் தூணாக எல்லாவற்றையும் பார்த்து வந்தேன்.. நன்றிங்க.. ;-)
@கெக்கே பிக்குணி
நீங்க எழுதினதை படித்தேன்.. அமர்க்களம்..
நீங்க திருத்தினதைப் பற்றி.. சொல்ல வருது அடிக்க வரமாட்டேங்குது.. என்ன பண்றதுன்னு தெரியலை..
அந்த உ.வாசி பேச்சை நான் முடிக்கும் முன் அவர் முடித்துக்கொண்டார். அதனால் சுருக்கம் என்று எழுதினேன். நாம என்ன சம்பந்தமா பேசப்போறோம்? (இது எப்படி இருக்கு.. ) ;-)))))))))))) ;-))))))))))))))))))
ஆமா!! அடிக்கடி எங்க காணாமப் போய்டறீங்க!!! திடீர்னு திடீர்ன்னு என்ட்ரி கொடுக்கறீங்க!! ;-);-);-)
@மோகன்ஜி
அண்ணா!! போன பதிவுல சுந்தர்ஜிக்கு போட்ட கமெண்ட்டை நீங்களும் பத்துஜியும் படிக்கவும்.. ப்ளீஸ். ;-)
(பிப்ரவரி பதினாலுக்கு நிச்சயம் லூட்டி இருக்கு.. )
தோ... நான் இருக்கேன் என்று சொல்வது போலவே இருக்கும் மஹாப் பெரியவா கண்கள். நினைவு கூர வைத்ததிற்கு நன்றி ஆர்.வி.எஸ்!
//அலையை//
ஆலய
அந்த மெழுகு சிலை ஒன்னு மண்டபத்தில் இருக்கும். டக்குனு பார்த்தா பெரியவா உக்காந்து இருக்கற மாதிரியே தோணும். கொஞ்ச நேரம் ஆனாதான் அது சிலைன்னு நம்ம மண்டைக்கு உரைக்கும்
நகரேஷு காஞ்சி - காளிதாசர் சொன்னதுதானே. பொதுவா சொன்னது யாருன்னு தெரியலைன்னா மூதுரைன்னு சொல்லிடலாம். சொன்னது யார்னு தெரிஞ்சா அவங்க பேரையும் போடுங்க.
முப்பெரும் தெய்வ வழிபாடு - ஆறில் மூன்றுதான் அவை அப்படிங்க்றதையும் சொல்லுங்க.
வழக்கமா பதிவு நல்லா இருக்குன்னு சொல்லி போரடிச்சுப் போச்சு. அதான் வேணும்னே குறை சொல்றோம் :-)
நானும் ஓரிக்கை சென்று வரலாம் என்று இருக்கிறேன். என் வாழ்க்கையின் மிகவும் இக்கட்டான காலக் கட்டங்களில் எனக்குப் பற்றுக்கோடாக இருந்தது 'தெய்வத்தின் குரல்' தொகுப்புகள்தான்.
மஹா பெரியவாள் தரிசனம் செய்ததை விளக்கியது திவ்யம்..
எனக்கு மிகவும் பிடித்த கோவில்களின் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலும் ஒன்று...
பெரியவள் கேட்டாச்சு... ஸோ, நோ அப்பீல்... இந்த வாரமும் பெரியவாள பார்க்க அழைத்து செல்லுங்கள் ஆர்.வி.எஸ்...
சிற்பங்கள் அற்புதமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள் ,நகரேஷு காஞ்சி எல்லாம் பல்லவர் காலத்தோட போய்டுச்சுங்க :)
நல்ல பகிர்வு. மஹா பெரியவாள் - சொல்ல வார்த்தைகள் இல்லை. விழுப்புரத்தில் சங்கர மடத்திற்கு அடுத்த வீடு எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமானது. சிறுவயதில் அங்கு செல்லும்போது நிறைய முறை அவரைப் பார்க்கும் பாக்கியம் கிட்டியிருக்கிறது.
7-8 வருடங்கள் முன்பு அலுவல் விஷயமாக 3 நாட்கள் காஞ்சியில் தங்கி, மாலை நேரங்களில் கோவில் கோவிலாய் சுற்றியது நினைவுக்கு வருகிறது.
புகைப்படங்களுடன் கூடிய நற்பகிர்வுக்கு மிக்க நன்றி.
சுந்தர்ஜி, மோகன்ஜி, பத்துஜி , அப்பாஜி
இவங்களுக்கெல்லாம்
நீங்களா 'ஜி' போடணும்.
ஆனா இந்த 'ராஜி' க்கு யாரும்
போடாமலே இருக்கே!!!!!!!!!
ஹா ஹா ஹா!!!! இது எப்பிடி இருக்கு!!!
(சரி சரி! அதுக்காக தலைல எல்லாம் அடிச்சுக்காதீங்க)
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி சார்! அதி அட்ர்புதமான தரிசனம்.. லயித்து பார்த்தேன். ;-)
@எல் கே
ஆமாம் எல்.கே. சங்கரமடத்தில் இருப்பதை தானே சொல்கிறீர்கள். அற்புதமான மெழுகு... மெருகோடு இருக்கும். ;-)
@Gopi Ramamoorthy
இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன... சிலர் காளியை சொல்கிறார்கள் இன்னும் சிலர் பாணனை சொல்கிறார்கள். அதனால் பொதுவாக மூதுரை என்று சொல்லிவைத்தேன்.
புஷ்பேஷு ஜாதி, புருசேஷு விஷ்ணு, நாரிஷு ரம்பா, நகரேஷு காஞ்சி என்பது அந்த சொற்ட்றொடர்.
காணாபத்யம், கௌமாரம் அப்படின்னு எழுதினா வேற ரூட்டுக்கு போய்டும்ன்னு அடக்கினேன்.
பாராட்டவேண்டும் என்பது கட்டாயமில்லை கோபி! கருத்துக்கு நன்றி ;-)
@R.Gopi
நமையாளும் காமாட்சி!!!
நன்றி துபாய் ஆர். கோபி. சித்தம் பார்க்க சித்தமாயிருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்கிறேன். ;-)
@dr suneel krishnan
கண்களுக்கு விருந்து டாக்டர். பல்லவர்கள் காலம்... கரெக்ட்டுதான். ;-)
@வெங்கட் நாகராஜ்
விழுப்புரம் பெரியவாளின் அவதாரத் தலம். சங்கரமடம் பக்கத்தில் உங்கள் தாத்தா வீடு. பெரும் பேறு. ;-) கருத்துக்கு நன்றி த.தல. ;-)
@raji
அற்புதம் ராஜிஜிஜி..ஜி..ஜி.. (எவ்ளோ ஜி..!!!)
விளையாட்டா சொல்றேன்... கோச்சுக்கக்கூடாது...
பஜ்ஜி, சொஜ்ஜிக்கு கூட பேர்லயே இருக்கு... ஹா ஹா..ஹா...
(It is a Joke! I think you don't mind it!!! )
;-);-)
இல்லையே.பஜ்ஜி சொஜ்ஜிகெல்லாம் வெறும் 'ஜி' வரலயே.
ஜ் இல்லாம் அதுக்கெல்லாம் ஜி போட முடியாதே.
(ஹைய்யா!மடக்கிட்டேனா?எப்பிடி?சரி விடுங்க
இதுக்கெல்லாமா அழுவாங்க,என்னது? ஓ...!ஆனந்தக் கண்ணீரா!
அப்டினா ஓகே!யூ கேரி ஆன்!)
நல்ல பகிர்வு. புகைப்படங்கள் அருமை. அடுத்த முறை காஞ்சி செல்லும் ஆவலை தூண்டியுள்ளது.
what mams! transformed as writer!! can't believe!!! thinking of your days in national school!!!!
அருமையான படங்களுடன், நல்ல பகிர்வு.
மஹாபெரியவர் படத்தின் கீழே மாமிகள் பற்றிய வர்ணனை மிகவும் நெருடலாக இருந்தது. புரிதலுக்கு நன்றி!
@raji
ஜ் இல்லாம வந்தா அது பஜி.... தமிழ்ல துதின்னு அர்த்தம்.. ;-) இது எப்படி இருக்கு? ;-)
@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றிங்க.. நிச்சயம் பார்க்கவேண்டிய இடம். ;-)
@MoLlAmArI
Maaps! Who are you? How we should spell this name? ;-) ;-) ;-)
@Samudra
நன்றி சமுத்ரா!! ;-)
@தக்குடு
ஒன்றும் தவறாக சொல்லவில்லை என்று நினைத்தேன். மணிமண்டபம் போன பதிவு என்பதால் பெரியவா படம். மாமிகள் சீருடையில் வந்தது பற்றி சொன்னதை இப்போது திரும்பி பார்த்தேன். இந்தப் பொருள்பட ஆகும் என்று நினைக்கவில்லை. சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி தக்குடு. இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.!!!! நன்றி.. ;-) ;-)
பெரியவா ஆசி உமக்கு நிச்சயம் உண்டு. ( சே.. எனக்கும் அப்பாஜியின் "பெரியவர் ஆசி" ஞாபகம் வந்து தொலைக்குது )
மிகத் தாமதித்து வருகிறேன் இங்கே ஆர்.வி.எஸ்.
அது 1992 சித்திரை மாதம்.என் தங்கையின் திருமணம் தொடர்பாக கல்யாணப் பத்திரிக்கையை பெரியவரிடம் வைத்து ஆசிகள் பெறும் சம்ப்ரதாயம் இருந்த காலம்.என்னைக் கட்டாயப் படுத்தித்தான் என் அப்பா என்னையும் கூட்டிப்போனார்.
பெரியவரின் முகம் என்னை மிகவும் கவர்ந்தது என்பதைத் தவிர பெரியவரின் மேல் எனக்கு ரொம்பவும் ஆர்வமெதுவும் இல்லை.தவிர நேரில் சென்று பார்க்கவும் விருப்பமில்லாமல் அரைமனதுடன் அப்பாவுக்காகப் போனேன்.
வரிசை நகர்ந்தது.ஒரு புன்னகை.கையுயர்த்தி ஆசிகள்.சிலரிடம் விசாரணை.ப்ரசாதம் வழங்கல்.
நேரில் பத்திரிக்கையை வைத்து சாஷ்டாங்கமாகக் காலில் விழத் தோன்றியது.விழுந்து எழுந்தேன்.சாட்டையால் அடித்தது போல ஒரு கேள்வி.
”என்ன சுந்தர்ஜி? எழுதறத நிறுத்திட்டியா?
கணையாழி-காலச்சுவடு-கனவு-முன்றில்-பாலம்-இன்று என் சிறு பத்திரிகைகளில் மட்டும் எண்பதுகளில் எழுதிவந்த-யாருக்கும் தெரியாத என்னைத் தெரிந்து வைத்திருந்த ஞானத்ருஷ்ட்டியைக் கண்டேன்.
அதற்கு என்ன பதில் சொன்னேன் என்ற நினைவில்லை.கையுயர்த்திய ஆசிகளோடு கரைந்துபோனேன்.
அதற்குப் பின் காஞ்சிபுரம் போனதில்லை.உங்கள் கையைப் பிடித்துக்கொண்டு காஞ்சிபுரத்தை ஒரு சுற்று சுற்றிப் பார்த்தேன்.
மனது லேசானது போல் ஒரு ப்ரமை ஆர்.வி.எஸ்.
நாலடிக்கு ஒரு காக்கித் தொப்பை நின்று இல்லை இல்லை தொப்பி நின்று கொண்டு போக்குவரத்தை சீர் செய்கிறேன் பேர்வழி என்று சீர் குலைக்கிறது
இதை எல்லாம் கேட்பதற்கு காஞ்சி
காமாட்சிக்கு நேரமிருக்காது?
i ve never been to kanchipuram... poganum-nu oru wish...
unga post padichchapram, anga poitu vanthaapla irunthathu!
thanks for sharing...
சுந்தர்ஜியின் பின்னூட்டம் ஒரு பதிவு படித்த திருப்தியை தருகிறது.
இன்னா சாமீ, ஆபீஸ்ல வேலை ஜாஸ்தியா? Blogல ஒண்ணும் காணோம்.
கண்ணு பூத்து போச்சு சாமி....
சென்னையில் இருந்தவரையும் அப்பாவுடன் போயிருக்கின்றேன். மகா பெரியவா இருந்த வரை பிடிக்கும் அப்புறம் அங்கே செல்லவே தோணவில்லை.
மெடிக்கல் ரேப் ஆக இருந்தபோதும் (1986-88)- அந்த மடம் வழியே காஞ்சிபுரத்தில் மருந்து விற்பேன் ஆனால் அவர் பெரியவாள் இருந்த வரை தான் போவேன்.
@சிவகுமாரன்
ஆசிக்கு நன்றிகள். ;-)
@சுந்தர்ஜி
சிவகுமாரன் சொன்னதை ரிப்பீட்டிக்கிறேன். ஒரு உணர்வுபூர்வமான பதிவு படித்த நிறைவு ஜி! நன்றி ;-);-)
@Rajeswari
கருத்துக்கு நன்றி. என்ன சொல்ல வரீங்க? ;-)
@Matangi Mawley
Thanks Matangi. கும்பகோணம் போல திரும்பிய பக்கமெல்லாம் கோபுரம் தெரியுது. அமர்க்களமான ஊர். ;-)
@சிவகுமாரன்
ஆமாம். நானும் இதை வழிமொழிகிறேன். ;-)
@சோ. மாரி
ஆமாம். வேல பெண்டு நிமுத்துராங்கோ. முதல் கமெண்ட்டுக்கு நன்றி. ;-)
@சாய்
இப்போது நிறைய பேர் உங்கள் முடிவை எடுத்துவிட்டார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.
மண்டபம் படம் அழகு.
நண்பரின் வீட்டில் இருந்தேன் அப்போது. என்னவோ தெரியவில்லை.. பேச்சு திடீரென ‘பெரியவா’ பற்றி திரும்பியது. பேசினோம் ஒரு மணி நேரம். ‘டிவிய போடு’ என்று யாரோ குறுக்கிட்டார்கள். பேசும்போதா.. என்று எங்களுக்கும் மனசுக்குள். டிவி ஆன் ஆனதும்.. செய்திகள் தான். ‘பெரியவா’ ப்ருந்தாவனப் ப்ரவேசம். எங்களையும் அறியாமல் அவரைப் பற்றி பேசி இருக்கிறோம்.
@ஸ்ரீராம்.
இது என்னோட அமெச்சூர் படம். நேர்ல இன்னும் நல்லா இருக்கு. ;-);-)
@ரிஷபன்
தங்கள் அனுபவம் மெய் சிலிர்க்கவைக்கிறது சார்! ;-)
Post a Comment