ஒவ்வொரு பதிவிலும் சமூகத்தில் நிகழும் அவலத்தை கோபக்கனல் தெறிக்க எழுதும் பொன்மாலைப் பொழுது கக்கு-மாணிக்கம் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் சிங்கள வெறியர்கள் பற்றி எழுத உரிமையோடு கேட்டிருந்தார். அரசியல் மற்றும் நிகழ்காலத்தில் நடைபெறும் எந்த ஒன்றையும் பற்றியும் இதுவரை எழுதாமல் இருந்தேன். இருந்தாலும் அநியாயமாக அக்கிரமமாக தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா அரக்க சேனையை கண்டிக்கும் விதமாக இந்தப் பதிவு.
படகோட்டியில் எம்.ஜி.யாரின் மிகப் பிரபலமான பாடல்
"தரைமேல் பிறக்கவைத்தான்..
எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரைமேல் இருக்கவைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்கவைத்தான்" என்பது.
தப்படித்து அழுது பாடும் அந்தப் பாடல் நம் மீனவ நண்பர்களின் எக்கால சோகத்திற்கும் பறை சாற்றும் பாடல். தமிழனுக்கு தண்ணீரில் கண்டம் என்று நினைக்கிறேன். நெய்தல் நிலம் சிங்கள வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மீனவர்கள் தங்கள் ஜீவாதாரமான தொழிலை தொடர முடியாமல் முடங்கிப் போயிருக்கிறார்கள். நிச்சயம் இலவச டி.வி சோறு போடாது. மும்பை கடலில் மீன் பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி ஹிந்தி பேசும் மீனவன்ஜி ஒருவன் மேற்கு கடற்கரை ஓரம் குண்டடி பட்டிருந்தால் டெல்லிக்கு அடுத்த கணம் கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நாம் குடும்பங்களை இழந்து கதறி அழுதால் கூட "முஜே தமிள் நஹி மாலும் ஹை.." என்ற தோரணையில் செவிமடுக்காமல் நமது நாட்டில் காட்டாட்சி நடத்துகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் பேச்சு வார்த்தை, சுமூகத் தீர்வு என்று நயாபைசாவிர்க்கு பிரயோஜனம் இல்லாத நடவடிக்கைகள் எடுத்து நாட்கள் கடத்தி விவகாரத்தை நீர்த்து போகச் செய்துவிடும் தந்திரம் நிறைந்த குள்ளநரிகள் நிறைந்தது இந்த அரசியல் கூட்டம். பரப்பளவிலும் எண்ணத்திலும் குறைவாக உள்ள ஸ்ரீலங்காவிடம் இந்திய அரசாங்கம் ஏன் இப்படி பயந்து சாகிறது என்பது யாருக்குமே விளங்காத புரியாத புதிர். குடும்ப நலனும், கட்சி நலனும் பிரதானமாக கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் நாட்டு நலன் என்று ஒன்று உள்ளதையே ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டார்கள்.
தமிழர் நலன் ஒன்றே எங்கள் மூச்சு என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் "தமிழுணர்வு" மேலோங்கும் கட்சிகள் கூட இது போன்ற சம்பவங்களுக்கு ஒரு ஸ்திரமான போராட்டமோ அல்லது நாடு தழுவிய கண்டனத்தையோ மேற்கொள்ளாதது இன்னும் ஆச்சர்யமான ஒன்று. கொள்ளையடிக்கும் கூட்டணிகள் அமைந்த பிறகு வாய்க்கு வந்தபடி மேடை போட்டு பேசுவார்கள். இப்போது ஒருவருக்கு ஒருவர் கையை காண்பித்து உன் குத்தமா என் குத்தமா என்று குற்றத்தை இன்னொருவர் மேல் ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவு நாள் இந்த அவலம் தொடரும்?
இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. எந்தக் கட்சி இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்கிறதோ அவர்களுக்கு எங்கள் ஓட்டு என்று உறுதியான ஒரு முடிவை அறிவித்தோம் என்றால் ஏதோ எறும்பு கடித்தது போல உணர்ந்து ஏதாவது உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளலாம். அப்படியும் அடித்த காசில் தேர்தல் தினத்தன்று மக்கள் கையில் கொஞ்சம் பேப்பரில் சிரிக்கும் காந்தியை அழுத்தி கவனித்து முன்னேறிவிடுவார்கள்.
எல்லை தாண்டினார்களா இல்லையா என்பது முக்கிய விவாதம் அல்ல. கடல் அன்னை இயற்கையின் வரம். சுட்டு வீழ்த்த மீனவர்கள் தீவிரவாதிகளோ கடத்தல்காரர்களோ இல்லை. தங்கள் பிள்ளை குட்டிகளின் பசிப்பிணி போக்க கடலிறங்குகிரார்கள். இதில் எங்கே வந்தது வேட்டையாடும் படலம். "சோனியாஜி.... மன்மோகன்ஜி..... ராகுல்ஜி... இது தமிழன்ஜி... மீனவன்ஜி... பச்சாவ்..." (நம் ஆட்சியாளர்களிடம் கேட்டாலும் அவர்களும் அங்கே சென்று இப்படித்தான் கெஞ்சுவார்கள்) என்று அவர்கள் பாஷையில் புரியும்படி சொன்னாலாவது செவி சாய்ப்பார்களா என்று பார்ப்போம்.
-
40 comments:
பொருத்தமான பாடல். பிரச்னையை தீர்த்து வைத்தால்தான் ஓட்டு போடுவோம் என்று சொல்ல வேண்டும்
தமிழன் மாண்டுக்கொண்டிருக்கிறான் கடிதம் எழுதுகிறாராம் முதல்வர்ஜி என்ன சொல்வது வரும் தேர்தலில் ஓட்டே போடாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து தேர்தலை புறக்கணித்தால் விடிவு பிறக்குமா அல்ல காந்தி சிரிக்கும் நோட்டை பார்த்து நம்மவர்கள் தான் ஒன்று கூடுவார்களா நிச்சயம் வரும் தேர்தலில் அரசியலில் நல்ல ஒரு மாற்றம் ஏற்ப்படவேண்டும் ...
//பரப்பளவிலும் எண்ணத்திலும் குறைவாக உள்ள ஸ்ரீலங்காவிடம் இந்திய அரசாங்கம் ஏன் இப்படி பயந்து சாகிறது என்பது யாருக்குமே விளங்காத புரியாத புதிர். குடும்ப நலனும், கட்சி நலனும் பிரதானமாக கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் நாட்டு நலன் என்று ஒன்று உள்ளதையே ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டார்கள்//
true.
powerful writing
எனக்கு தெரியும் R V S. நீங்களும் எழுதுவீர்கள் என்றும் நம்பினேன். நமக்குள் ஆயிரம் பேதங்கள் இருந்தாலும் நாமெல்லாம் தமிழர்கள் என்ற உணர்வு நமக்கு இக்காலத்தில் மிக மிக இன்றியமையாதது. என் வேண்டுகோளை ஏற்று ஒரு வித்யாசமான பதிவினை இட்டு இங்கு அனைத்து தமிழர்களும் ஒன்றே என பிறருக்கும் உணர்த்திய உங்களின் பெரிய மனதுக்கு நன்றிகள்.தொடருங்கள் நண்பரே.
காந்தியையும் தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு மாண்டு போன, போய்க் கொண்டு இருக்கும் மீனவ நண்பர்கள் நினைவுக்கு வருவதில்லை. ஒரு பெரிய மாற்றம் இந்திய அரசியலில் வந்தால்தான் இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் பிறக்கும் என நினைக்கிறேன்.
ஒன்று படுவோம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை நிரூபிப்போம்......
காந்தி நோட்டுகளை புறக்கணிப்போம் இலவசங்களை குப்பையென காரி துப்புவோம்....
கடலில் என்ன எல்லை வேண்டி கிடக்கிறது ....பிழைக்க செல்லும் அவர்கள் அங்கு என்ன மிதக்கும் விடுதிகள் கட்டி சம்பாரிக்கவா போகிறார்கள் ... ஒவ்வொரு நாளும் துயரம் என உள்ளே செல்கிறார்கள் ... எத்தனையோ இயற்கை இடர்பாடுகளில் தப்பி தப்பி பிழைக்கிறார்கள் ... செயற்கையாக கொல்லும் அந்த இலங்கை மிருகங்களை கேள்வி கூட கேட்க நாதி இல்லாமல் இங்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறோம் .... இரும்பு மனுஷி இந்திரா அம்மையார் காலத்திலேயே இந்த கொசு க் கூட்டத் தை நசுக்கி அகண்ட பாரதம் ஆக்கி இருக்கவேண்டும் ....
நியாயமான ரெளத்திரத்தை சொல்லால் வடித்துள்ளீர்கள் ...
சகஇந்தியனாக, சகதமிழனாக, அதையும் தாண்டி சகமனிதனாக கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் ...
@எல் கே
ஆமாம் எல்.கே. ஒட்டுமொத்தமாக திரள வேண்டும்!!!
@தினேஷ்குமார்
கரெக்ட்டுதான் தினேஷ். உங்கள் கவிதையிலும் இந்த உணர்வு தெறிக்கிறது...
@raji
Thank you MAM!!!
@கக்கு - மாணிக்கம்
ஒரு பயனுள்ள காரியத்துக்காக எழுதவேண்டும். நான் பொதுவாக நாட்டு நடப்புகளைப் பற்றி எழுதாமல் இருந்து வந்தேன். அது பற்றி எழுத ஆரம்பித்தால் அப்புறம் ஏடாகூடமாக ஏதாவது எழுதிவிடுவேன் என்கிற பயம் எனக்கு. இப்போது கூட ரொம்ப அடங்கி எழுதினேன். கட்டற்று வந்த விஷயங்களை மட்டுப்படுத்தி எழுதியது இது..
@வெங்கட் நாகராஜ்
முடிந்தால் நீங்களும் எழுதவும்.. இது ஒரு தொடர்வினையாக எல்லோரும் எழுதி இந்தமட்டிலாவது நம் எதிர்ப்பை தெரிவிப்போம். நன்றி
@MANO நாஞ்சில் மனோ
இலவசத்திற்கும் தனது விலைமதிப்பில்லாத ஓட்டிற்கு மரியாதை இல்லாமல் மானம் கெட்டுப் போய்விட்டோம் மனோ.. இனி. ஏறுவது மிகக் கடினம். கருத்துக்கு நன்றி.
@பத்மநாபன்
அபாரம்!! பின்னூட்டத்திலேயே உங்கள் கண்டனங்களை பதிவு செய்து விட்டீர். அகண்ட பாரதம்.. அட்டகாசமான சிந்தனை!!!
உங்களிடமிருந்து இந்த பதிவு நான் எதிர்பாராதது. சாது மிரண்டால் காடு கொள்ளாது கடலும் கொள்ளாது. .
பொருத்தமான பாடல்.
TMS class song
நமது அரசுகள்தான் காரணம் என்று சொன்னால், "ஓட்டுப் போட்டது நீதானே" என்கிறார்கள். :(
ஓடும் சாக்கடைகளில், எது நல்ல சாக்கடை எனத் தெரிந்து யாருக்கு ஓட்டுப் போடுவது.
இந்தக் கொலைகளுக்கு எனது கண்டனங்களும்..
பொருத்தமான பாடலோடு, அழுத்தமான கருத்தை சொல்லி இருக்கீங்க.
//எல்லை தாண்டினார்களா இல்லையா என்பது முக்கிய விவாதம் அல்ல. கடல் அன்னை இயற்கையின் வரம். சுட்டு வீழ்த்த மீனவர்கள் தீவிரவாதிகளோ கடத்தல்காரர்களோ இல்லை. தங்கள் பிள்ளை குட்டிகளின் பசிப்பிணி போக்க கடலிறங்குகிரார்கள். இதில் எங்கே வந்தது வேட்டையாடும் படலம்.//
ரொம்ப ரொம்ப சரி.
தன் குடும்ப நலனை மட்டும் ப்ரதானமாக என்னும் ஆட்சியாளர்கள்(துரோகிகள்) மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் வரை இந்த அவல நிலையே நமக்கு மிச்சம்...:(
நியாயங்களை எடுத்துச்சொல்லி நியாயம் கேட்கும் நல்ல பதிவு. வாழ்த்துகள்!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
2007ல் துவக்கிய வலைப்பூவை 2010ல் தொடர்ந்த சுறுசுறுப்பிலிருந்து வாசிக்கத் துவங்கினேன் ஆர்.வி.எஸ்.
ஒரே வார்த்தையில் சொல்லக் கட்டாயப்படுத்தினால் அபாரம்.இரண்டு வார்த்தையெனில் அதி அபாரம்.
உங்களிடம் இருக்கும் பெரிய பலம் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்.எழுத்தின் முழு வீச்சும் நகைச்சுவையின் வழியே இதுவரை யாரும் கானாத பகுதியையெல்லாம் அடித்துச் செல்கிறது.
தீராத விளையாட்டு பிள்ளையின் பெயர்க்காரணம் தொடங்கி நேற்றைய சிஷ்யேண்டா வரைக்கும் இது ஜொலிக்கிறது.
ஏதோ பெயர் தெரியாத இத்தனை நாளும் மின்னிக்கொண்டிருந்த ஒரு நக்ஷத்திரத்தை என் கண்ணால் இன்று கண்டுவிட்டேன்.
தொடர்ந்து வருவேன்.
நன்றி ஆர்.வி.எஸ்.
’கானாத’வை ’காணாத’வாக மாற்றிக்கொள்ள இது.
tamilanukkaka paadal moolam kanneer vadikkum thangalin thyaga thiru ullaththu kodi namaskarangal. adutha electionla mannarkudi thoguthiyile ungalukku MLA seat kanndippaka kidaikkum. appuram neengalthaan meen vala thurai amaichar. adra chakkai! adra chakkai!! adra chakkai!!!
குடும்ப நலனும், கட்சி நலனும் பிரதானமாக கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் நாட்டு நலன் என்று ஒன்று உள்ளதையே ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டார்கள்.
அப்படியே உண்மை.
RVS
Profile picture changed again !!
@சிவகுமாரன்
நன்றி சிவகுமாரன். எனக்கு தோன்றியதை பகிர்ந்தேன்.
@சாய்
நன்றி சாய்!!
@இளங்கோ
சாக்கடையில் அதிக கெட்டிப் பட்டு போகாமல் இருப்பதை தூர் வாருவது சுலபம். அதைப் பார்த்து ஓட்டுப் போடா வேண்டுமோ?
@ஜிஜி
ரொம்ப ரொம்ப நன்றி!
@தக்குடு
ரொம்ப சரி தக்குடு. :-( :-(
@பத்மஹரி
நன்றி. எனக்கு பட்டதை சொன்னேன்.
@சுந்தர்ஜி
தங்கள் பாராட்டுகளில் நெகிழ்கிறேன். மிக்க நன்றி சுந்தர்ஜி!!! எனக்கு ஏற்கனவே பத்துஜி, மோகன்ஜி, அப்பாஜி என்ற 3Gக்கள் இருக்கிறார்கள். இப்போது உங்களோடு சேர்ந்து 4G.
@சுந்தர்ஜி
//’கானாத’வை ’காணாத’வாக மாற்றிக்கொள்ள இது.//
அடாடா.. அற்புதம்...
@thanda choru
நன்றி முதல் வருகைக்கு மற்றும் கருத்துக்கு. சீட் கிடைத்தால் நிச்சயம் ஜெயிப்பேன்.(நீங்கள் கிண்டலாக சொல்லவில்லை என்று பாசிடிவ் ஆக எடுத்துக் கொள்கிறேன்.) ஆர்.வி.எஸ். ஊரில் மிகப் பிரபலம். (யாரும் அடிக்க வரலையே!)
@ரிஷபன்
உண்மைக்கு ஒரு நன்றி சார்!
@சாய்
நான் சொன்னா மாதிரி வீட்டில் உதை கிடைத்ததா!! இவ்வளவு சீக்கிரமா தனியாளா சிரிக்கிற போட்டோ போட்டுட்டீங்க. நான் ஒரு வாரமாவது இருக்கும் என்று நினைத்தேன்..
உங்கள்ட்ட நாலு ஜி இருக்கறத வெளீல சொல்லதீங்க.
கருணாநிதி காதுலயும் சோனியாஜி காதுலயும் விழுந்துறப் போவுது.
அப்புறம் ராஜாவுக்கும் ராடியாவுக்கும் அவுங்க எங்கே போவாங்க ஆர்.வி.எஸ்.?
@சுந்தர்ஜி
இப்டி கட் அண்ட் ரைட்டா பேசுறீங்களே.. உங்களை டெல்லி ஆளுன்னு நினைச்சுடப் போறாங்க.. ஜாக்கிரதை ஜி. ;-) ;-) ;-)
ஒரு சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியுடன் ஒரு பத்து ட்விட் போட்டேன்..
இது ஒரு நவீன பாஞ்சாலி சபதம்..
பாஞ்சாலியின் மானத்தை எடுக்கிறார்கள்..இங்கு நம்மவர்கள் உயிரையே எடுக்கிறார்கள் சிங்கள துச்சாதனர்கள்! வழக்கம் போல், பீஷ்ம பிதாமகர் மன் மோகன் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டு ஒரு திரைப் படத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்..என்னத்தை சொல்ல?
மீனவர்களின் பிரச்சனை தீர வழி தான் என்ன?
அப்பாவிகள் பலியாவது தடுக்க ஏன் எந்த அரசும் எந்த முடிவும் எடுக்க தயங்குகிறது?
//கடலின் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ!!//
படகோட்டி பட பாடலில் வரும் இந்த வரிகள் மிகவும் ஆழமானவை...
காப்பவர் என்று யாராவது ஒருவர் ஆட்சியில் அமர மாட்டார்களா என்று நம்மை ஏங்க வைத்து விட்டார்கள் இன்றைய தலைமுறை ”அரசியல்வியாதி”கள்..
Post a Comment