Saturday, January 29, 2011

சிஷ்யேன்டா.....

ஒரு குருவிற்கு நித்யமும் திவ்யமாக சேவகம் செய்துகொண்டிருந்தான் சிஷ்யகேடி ஒருவன். எவ்வளவு செய்தும் அவன் பணிவிடைகளில் திருப்தியுறாத குரு அவனை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஒரு கரடியை சேவகத்திற்கு வைத்துக்கொண்டார். முதல் வேலையாக அவர் நிம்மதியாக தூங்குவதற்காக கரடிக்கு கொசு விரட்ட சொல்லிக்கொடுத்தார். இந்த வேலையை பார்த்து விட்டு அதற்குப் பிறகு ஆயில் மசாஜ் செய்து கைகால் பிடித்து விட கற்றுக்கொடுக்கலாம் என்று எண்ணியிருந்தார். அது நன்றாக ஈ கொசுக்களை விரட்டியது. இவரால் ஆசிரமத்தை விட்டு விரட்டப்பட்ட சிஷ்யகேடியின் நண்பன் அது கொசுவிரட்டும் போது கையில் ஒரு தடிக்கம்பை கொடுத்து விரட்டுவதற்கு மற்றும் அடிப்பதற்கு கள்ளத்தனமாக அசுர கோச்சிங் கொடுத்தான். கரடி மிக சுலபத்தில் கற்றுக்கொண்டு கர்லா கட்டை சுழற்றுவது போல சுற்றி நன்றாக விரட்டியது. ஆசிரமத்தில் பணியாளாக சேர்ந்தது அடியாளாக மாறிவிட்டது. குரு அகமகிழ்ந்து கரடிக்கு கம்பு சுழற்ற கற்றுக்கொடுத்தவனை கண்டுபிடித்து முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

குரு ஒரு நாள் நன்றாக குறட்டை விட்டு தூங்கி சிரமபரிகாரம் எடுத்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல் கரடி கட்டையோடு காவல் காத்தது. ஒரு கொசு கரடிக்கு மிகவும் ஆட்டம் காட்டியது. விரட்ட விரட்ட தொலையாமல் சுற்றி சுற்றி வந்து வெறுப்பேற்றியது. டென்ஷன் ஆன கரடி கட்டையை தூக்கிக் கொண்டு துரத்தியது. கடைசியில் பறந்து களைத்துப் போன அந்தக் கொசு தூங்கிக் கொண்டிருக்கும் குரு முகத்தில் போய் ரெஸ்ட் எடுக்க அமர்ந்தது. கட்டையால் கொசுவைப் பார்த்து ஓங்கி ஒரே போடுப்  போட்டது கரடி. கொசு, குரு இருவரும் ஒரே நேரத்தில் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.

சிஷ்யகேடி ரெண்டுபேரும் சந்தோஷமாக பர்ணசாலைக்கு வெளியே ஸ்வீட் ஊட்டிவிட்டுக் கொண்டு கொண்டாடி கை குலுக்கிக் கொண்டார்கள்.

இதனால் விளங்கும் நீதி? ஆசிரமக் கதை சொல்லிவிட்டு நீதி சொல்வது முரண்நகையாக இருந்தாலும்....
  1. ஆசிரமத்தில் யார் யார் எவர் கூட கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது குருவிற்கு அவசியம் தெரிய வேண்டும்.
  2. தூங்கும் போது பணிவிடைக்கு மிருகத்தை வேலைக்கு வைக்கக் கூடாது. எதுக்கும் பிரயஜோனம் இல்லை!!
  3. பிடிக்க கமெராதான் வைப்பார்கள் என்று இல்லை கதை முடிக்க கரடியையும் வைக்கலாம்.
பின் குறிப்பு: துக்கடா என்று சில பெரிய விஷயங்களை ராஜி தனது கற்றலும் கேட்டலும் வலைப்பூவில் எழுதியிருந்தார். உடனே நினைவுக்கு வந்ததை உங்களுடன் பகிர்ந்தேன். நீதியின் புல்லட் பாயின்ட்கள் நாட்டை நாறடித்த சமீப கால எந்த சம்பவத்துடன் துளிக்கூட தொடர்பில்லை என்பதை மீண்டும் ஒரு முறை வலியிறுத்தி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.

பட உதவி: http://www.outlookindia.com/

-

29 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice,
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

MANO நாஞ்சில் மனோ said...

//1.ஆசிரமத்தில் யார் யார் எவர் கூட கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது குருவிற்கு அவசியம் தெரிய வேண்டும்///

ஆமா ஆமா வரலாறு முக்கியம் ஆச்சே......

பொன் மாலை பொழுது said...

RVS நீங்கள் மீன் உண்ணும் நபர் இல்லைதான். ஆனாலும் நம் தமிழக மீனவர்கள் , அவர்களும் நம்மைப்போல உழைபாளிகதானே,அவர்களும் சக தமிழர்கள் தானே. அவர்களுக்காக நீங்களும் குரல் கொடுக்க வேண்டும் என ஆசை படுகிறேன்.நன்றி. இது தங்களின் பரந்த மனதை காட்டும் .

raji said...

where is RVS standard?

வை.கோபாலகிருஷ்ணன் said...

// 1. ஆசிரமத்தில் யார் யார் எவர் கூட கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது குருவிற்கு அவசியம் தெரிய வேண்டும்.
2. தூங்கும் போது பணிவிடைக்கு மிருகத்தை வேலைக்கு வைக்கக் கூடாது. எதுக்கும் பிரயஜோனம் இல்லை!!
3. பிடிக்க கமெராதான் வைப்பார்கள் என்று இல்லை கதை முடிக்க கரடியையும் வைக்கலாம்.//

ஏற்கனவே தெரிந்த கதையை கரடி விடுகிறீர்கள் என்று தான் படிக்கும்போது நினைத்தேன். ஆனால் அதன் கீழே கொடுத்துள்ள நீதிகள் மூன்றும் புல்லரிப்பதாகவே உள்ளன.. அதுவும் “எதுக்கும் பிரயோஜனம் இல்லை” என்ற வரி குபுக்கென்று சிரிப்பை வரவழைத்தது.

வெங்கட் நாகராஜ் said...

துக்கடா-விற்குத் தொடர்ச்சியாய் குருவின் தலையில் பக்கோடா [சே! எப்பவும் சாப்பாட்டு நினைப்பு!] மாதிரி வீங்க வைத்த பதிவு! ஆஹா என்னமா கருத்து சொல்றாங்கப்பா!

பத்மநாபன் said...

சாமியார்கள் எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டாலும் ....கடைசியில் ஒண்ணுமே தெரியாதவர்கள் மாதிரி ஆகிவிடுகிறார்கள்.. ஒண்ணுமே தெரியாது என நினைக்க ஆரம்பித்தால் எல்லா விஷயத்திலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள் ..கரடி வைத்தியம் கரெக்டு தான்....

RVS said...

@sakthistudycentre-கருன்
தலை குனிந்து நில்லடா படித்தேன்.. கருத்துக்கு நன்றி. ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
ரொம்ம்ம்ம்பப.... முக்கியம்.. ;-) ;-) ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
எழுதுகிறேன் மாணிக்கம்.. பள்ளியில் நான் படித்த காலத்திலிருந்து எனக்கு மீன் தின்னும் நண்பர்கள் தான் ஜாஸ்தி! ;-) ;-)

RVS said...

//@raji said...

where is RVS standard?
//

Where it was?

RVS said...

@VAI. GOPALAKRISHNAN
நன்றி வை.கோ சார்! ;-) ஏதோ எழுதிப் பழகுகிறேன்.. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
கருத்தை ரசித்தமைக்கு நன்றி தலைநகரத் தலைவரே!!! ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி இப்ப சாமியாருக்கு தெரியும்ங்கிறீங்களா.. தெரியாதுங்கிறீங்களா ;-) ;-)
கரடி வேலை கரெக்டுன்னு சொல்றீங்க.. பத்து நிமிஷத்ல இந்த பிட்டு எழுதிப் போட்டேன். மேல ராஜி ஏதோ சொல்றாங்க.. என்னன்னு உங்களுக்கு புரியுதா ரசிகமணி? ;-) ;-)

அப்பாதுரை said...

இன்னும் சுவாரசியத்தை விட்டு வெளியே வரவில்லை :)

RVS said...

@அப்பாதுரை
அப்பாஜி!!ஜி!ஜி! ;-)))))))))))))))

Madhavan Srinivasagopalan said...

முடிவு ஊகிக்க முடிந்தது.. நல்ல பாடம், எவருக்கும்..

raji said...

இந்திய கிரிக்கெட் அணிக்கு
ஒரு பால்தான் இருக்கும் ஒரு ரன் எடுக்க வேண்டிய
கட்டாயமும் இருக்கும்.
உங்களுக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு.
அதுக்குள்ள சதம் அடிப்பீங்களா மாட்டிங்களா?

ஸ்ரீராம். said...

கதை இன்னும் முடியவில்லை...!

//"சிஷ்யகேடி ரெண்டுபேரும் சந்தோஷமாக பர்ணசாலைக்கு வெளியே ஸ்வீட் ஊட்டிவிட்டுக் கொண்டு கொண்டாடி கை குலுக்கிக் கொண்டார்கள்.
"//

கூட்டணிக் கரடி இவர்களை அப்புறம் என்ன செய்யப் போகிறது? மூன்றாவது விதி இருக்கிறதே..!

yeskha said...

முடியல சார்........ வர வர தமிழ்நாட்டுல குட்டிக்கதை ஜூரம் ஏறிக்கிட்டே போகுது... இப்படியே போச்சுன்னா நானும் ரெண்டு குட்டிக்கதை போடவேண்டியிருக்கும்.

RVS said...

@Madhavan Srinivasagopalan
ஹி..ஹி.. சரிதான்... சாமியார் கதை என்றாலே முடிவு எல்லோருக்கும் தெரிந்ததுதானே... ;-) ;-)

RVS said...

@raji
வெயிட் ப்ளீஸ். அடிக்கறேன்..அடிக்கறேன்... அதுக்குள்ள ஒரு அவசர அவசியமான பதிவு.. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நாம என்ன தொலைக்காட்சியில் நெடுந்தொடர் எடுக்கறோமா என்ன? போதும்.. போதும்.. இத்தோட நிறுத்திப்போம்.. இதுக்கே அடிக்க வந்துடுவாங்க போலருக்கு.. ;-)

RVS said...

@சே.குமார்

Thank you!!! ;-)

RVS said...

@yeskha
தயவுசெய்து ஒரு 'குட்டி'க் கதை போடுங்க... ;-)

இளங்கோ said...

ஆஹா.. இங்கயும் கூட்டணி பற்றி பேச்சா.. ? :)

சிவகுமாரன் said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு RVS

RVS said...

@இளங்கோ
இந்தப் பிரபஞ்சத்தில் 'கூட்டணி' இல்லாத இடம் ஏதப்பா? ;-)

RVS said...

@சிவகுமாரன்
சிரித்ததற்கு நன்றி.. வயிறு புண்ணானதர்க்கு ஸாரி.. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails