Thursday, January 27, 2011

சம்போ கந்தா!!

பத்துக்கு பதினொன்னு சைசில் ரெண்டு பேபி ஃபேன் க்ரீச்சிட்டு சுழலும் அறை அது. ஃபேனின் அடிபாகம் தெரியாமல் மேலே வெள்ளை வெளேர் என்று பொய்க்கூரை வேயப்பட்டிருக்கும். சுவற்றில் நாலைந்து கவர்ச்சி பேபிகள் பேபி ட்ரஸில் பலவிதமான காம யோகா போஸில் சிரித்தபடி தொங்குவார்கள். தேங்காய் சீனிவாசன் உட்கார்ந்து சுத்திவிடச் சொல்லும் சேர் போல சிகப்பு கலரில் இரண்டு ஆஜானுபாகுவாய் அந்த இரண்டு பேபிக்களுக்கு (இம்முறை ஃபேன்) நேரே தரையில் ஆணியடித்து பொருத்தப்பட்டிருக்கும். சொகுசாய் சாயவும், காலை நீட்டி உட்காரவும் தோதாக இருக்கும். அந்தக் கண்ணாடி அறையில் ஒரு ஐந்தடி நீள மர பெஞ்சில் பேப்பரோடு பேப்பராக உட்கார்ந்து சிகையழகுக் கலை நிபுணரை வேலை செய்ய விடாமால் வெட்ட விடாமல் வாயோயாமல் பேசி மக்கள் படுத்தும் பாடு இருக்கிறதே... கூட்டு அரட்டையில் மக்களுக்கு எவ்வளவு ஈர்ப்பு, ஈடுபாடு இருக்கிறது என்று ஞாயிறு காலை ஏழுமணிக்கு பார்பர் ஷாப் சென்றால் தெரிந்துகொள்ளலாம். திண்ணைக் கச்சேரியின் இந்த அத்தியாயத்திற்காகத்தான் மேலே எழுதிய ஒரு பாரா பில்ட்-அப்! கண்டுக்காம கீழே படிங்க.

********** ஜெகன்மோகினி***********
இது ஒரு அபூர்வமான படம். என்னவென்று தெரிகிறதா. விடை கடைசியில்..

jegan mohini

***********எடக்கு மடக்கு அணி*************
எதிர்வரும் தேர்தல்ல இந்த உப தலைப்பு போலத்தான் அரசியல் கூட்டணிகள் அமையும் போலிருக்கிறது. ஆனா நான் எழுத வந்தது வேற. என்னோட கண்ணாலம் கட்டிக்கிட்ட நாள் பதிவுல கன்னாபின்னா என்று கிறுக்கிவிட்டு மடக்கு அணி என்று ஒரு சரடு விட்டிருந்தேன். 'ரசிகமணி' பத்துஜியும் பெரியமனசு பண்ணி தமிழ்த் தாயும் உங்களை வாழ்த்துவார் என்று கமெண்டியிருந்தார்.  தீவிர இலக்கியம் மற்றும் இலக்கணம் பயிலும் முயற்சியில் இறங்கியிருப்பதால் தண்டி என்பவர் அணிகள் பற்றி எழுதிய இலக்கண புஸ்தகமான தண்டியலங்காரத்தை தேடுகையில் கிடைத்த மடக்குகள் சில...
  1. சம்போகந்தா... இதை சம்போ+கந்தா என்றும் சம்போகம்+ தா என்று விஷமமாகவும் படிக்கலாம் - இது நம்ம வாத்தியார் சுஜாதா.
  2. படித்தேன் தமிழ் படித்தேன்... இதை படித்தேன் தமிழ் படி+தேன் (ஒரு படியளவு தேன்) என்றும் படிக்கலாம்  - இது பாவேந்தர் பாரதிதாசன்.
  3. அம்பிகா காபி ஹோட்டல்.. இதை அம்பி+காகாபி ஹோட்டல் என்றும் படித்து இன்புறலாம் - இது மண்ணாங்கட்டி மன்னை ஆர்.வி.எஸ்.
இன்னும் நிறைய எடுத்துக்காட்டுகள் என் தளத்திர்க்கு வருகைதரும் சிவகுமாரன், அப்பாஜி போன்ற தமிழ் வல்லுனர்கள் பின்னூட்டத்தில் என் போன்ற ஆர்வலர்களுக்காக தெரிவிக்கலாம். என் கண்ணுக்குத் தெரியாமல் வந்து படிக்கும் தமிழறிஞர்கள் கூட சொல்லல்லாம். தப்பில்லை.

மடக்கு படிக்கும் போதே அணிகள் எல்லாவற்றையும் பற்றி புரட்டலாம் என்று பார்த்தபோது உயர்வு நவிற்சி அணி பற்றியும் சிறிது படிக்கலாம் என்று தமிழ் விக்கிபீடியா பக்கம் சென்றால் அங்கே ஒரு அற்புதமான பாடல். அந்த எடுத்துக்காட்டப்பட்ட பாடலை இங்கே நிச்சயம் தரவேண்டும். பாப் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு இது உயர்வு நவிற்சி டு தெ பவர் ஆப் இன்ஃபினிடி அணி.

தூசியின்றித் தெளிந்தோடும்
துறையினிலே நான்
மூழ்கித் தொட்டதேதோ
பாசி என்றெண்ணிக்
கையாலே பறித்தெறியப்
பற்றினேனா?
கூசி எதிர்த் துறையில்
குளித்த இளங்குமரி
எந்தன் கூந்தலென்றாள்
(கவிஞர் நீலாவணன்)
தூசியே இல்லாத தெளிந்த நீர்துறை. அக்கரையில் அவள் குளிக்கிறாள். இக்கரையில் நான். ஏதோ கைப்பட பாசி என்று பற்றினேன். எதிர்துறையிலிருந்து அவள் என் கூந்தல் என்று கத்துகிறாள். அவ்வளவு நீளமான கூந்தல்
நீலாவணன் - பேர் ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல.... ;-)

 ***********பார்க்காமலே************

கண்ணைக் கட்டி காட்டில் விட்டா மாதிரி இருக்கு அப்படின்னு அடிக்கடி சலிச்சுப்போம். நிஜமாகவே நம்மளோட கண்ணைக் கட்டி நடக்கவோ, நீச்சல் அடிக்கவோ, கார் ஓட்டவோ சொன்னால் எப்படி செய்வோம் தெரியுமோ? ஓரம் பார்க்காமல் ஒரே நேர்க்கோட்டில் நம்மால் போகமுடியாதாம். நம்முடை கால் செல்லும் பாதை, உணர்வு செலுத்தும் பாதை முழுக்க வளையங்கள் தானாம். ஏன் இப்படி என்று இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது. கீழ் காணும் வீடியோவில் அதை படம் பிடித்து காண்பிக்கிறார்கள். Worth Watching!



A Mystery: Why  Can't We Walk Straight? from NPR on Vimeo.

***********ராஜ பார்வை************
கண்ணைக் கட்டினால் மனிதன் எப்படி தாறுமாறாய் போகிறான் என்பதற்கு மேற்கண்ட வீடியோ எடுத்துக்காட்டு. ஆனால் அந்தக் கண்ணே தெரியாமல் குருடாய்ப் போனால்.. கண்ணே மணியே என்று கையைப் பிடித்து ரோட்டோரமாய் அழைத்துப் போவார்கள், சைக்கிளில் பாரில் உட்கார்த்தி வைத்து ரவுண்டு அடிப்பார்கள், பார்க்கில் மடிமேல் கிடத்தி தாவாங்கட்டையை பிடித்து கொஞ்சுவார்கள், ஸ்விம் சூட் அணிந்து நீச்சல் பயிற்சி தருவார்கள்.. இப்படி பலப் பல உபயோகமான விஷயங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு வசதி எப்படி?



*********** கௌரவ பிச்சை***********
"நா பிச்சை எடுக்கல.." என்று பாண்ட் ஷர்ட் அயர்ன் பண்ணி டக் இன் செய்து கைநீட்டியவனை பார்க்க எனக்கு என்னமோ போல் பாவமாக இருந்தது. காதில் அலைபேசியில் காதலி அழைக்க அந்த ஜனசந்தடியுள்ள மார்க்கெட்டில் ஒரு வாழை மண்டியருகில் நின்றிருந்தேன். ரெண்டாம் முறை குரலை உயர்த்தி "நா பிச்சை எடுக்கலை.." என்று முகத்துக்கு நேரே கோபமாக சொன்னார் அந்த உயர்ரக பிச்சைக்காரர். காதிலிருந்து ஃபோனை எடுக்காமல் "என்ன வேணும்?" என்றேன். "ஐயா. எனக்கு உணவு வேண்டும்" என்று இம்முறை செந்தமிழுக்கு பேச்சை மாற்றினார். நான் கையை ஆட்டி "வேற இடம் பாருங்க.." என்றதும் உஷ்ணப்பட்டு "நா பிச்சை எடுக்கலைன்னு சொன்னேன்ல.." என்று விரலை கொன்னுடுவேன் காண்பித்து ஆட்டினார். முறைத்தேன். இப்போது காதில் ஒலிக்கும் காதலியின் குரலைக் காட்டிலும் செல்லமாக "ப்ளீஸ். ஐ வான் ஃபுட்" என்று ஆங்கிலத்தில் குழைந்தார். அமெரிக்கன் அக்சென்ட். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தபோது "நா பிச்சை எடுக்க வரலை.." என்று என்னை அடிக்க ஆக்ரோஷமானார். வண்டியை எடுத்துக்கொண்டு நான் ஒரு மூலைக்கு தள்ளி வந்துவிட்டேன். ஒரு முக்கால்மணி நேர கடலைப் பேச்சுக்கு பிறகு திரும்பிப் பார்த்தேன். யாரோ முன்பாரம் பின்பாரம் நிறைந்த இருசக்கர வாகன குடும்பஸ்தனிடம் கையை நீட்டி "நா பிச்சை எடுக்கல..." என்று சாந்தமாக ஆரம்பித்திருந்தார். ராத்திரி பத்து மணி ஆகியிருந்தது.

மேலே எழுதியது ஒரு பாராக் கதை. பாராமல் படிக்காமல் போய்டாதீங்க!


பதிவின் முதலில் போட்ட படத்திற்கு கேட்ட கேள்விக்கான விடை. இப்படி உடம்பின் ஒரு எம்.எம். கூட காட்டாமல் முழுவதும் இழுத்துப் போர்த்திக்கொண்டு போஸ் கொடுக்கும் நமீதா படத்தை இப்பூவுலகில் எவரும் பார்த்திருக்கவே முடியாது. ஆகையால் இப்படம் அபூர்வ அந்தஸ்தை பெறுகிறது.  

பட உதவி: orutamilwebsite.blogspot.com

-

38 comments:

raji said...

மடக்கு அணி:

அத்திக்காய் காய் காய் பாட்டுல நிறைய வருதே

கோவைக்காய்: இதை கோவைக்காய்னும், கோவை+காய் னும் எடுத்துக்கலாம்
கொற்றவரைக்காய்: கொற்றவரைக்காய்னும், கொற்றவரை+காய் னும் எடுத்துக்கலாம்.


//ஓரம் பார்க்காமல் ஒரே நேர்க்கோட்டில் நம்மால் போகமுடியாதாம்//

புது தகவல்
அந்த வீடியோவும் சூப்பர்

தக்குடு said...

அண்ணா, உங்களுக்கு நமிதாவை பிடிக்கும்னா தாராளமா போட்டோவை போட்டுக்கோங்கோ, அதுக்கு எதுக்கு காரணம் எல்லாம் சொல்லிண்டு!..:PP கூந்தல் பத்தின கற்பனை அருமை! தாவாகட்டையை பிடிச்சு கொஞ்சனுமா!! இருக்கட்டும்! இருக்கட்டும்!

அப்பாதுரை said...

சுவாரசியம்.

ஸ்ரீராம். said...

சம்போ கந்தா மாதிரி சுகந்தா

மூடிய நமீதா..தப்பித் தவறி தெரிஞ்ச பாகம் எப்படி தீப் பற்றி எரியுது பாருங்க...!

Anonymous said...

செம இண்ட்ரஸ்டிங் மேட்டர் அண்ணே! //இப்படி பலப் பல உபயோகமான விஷயங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் //
//இப்படம் அபூர்வ அந்தஸ்தை பெறுகிறது//
அக்மார்க் ஆர்விஎஸ் நையாண்டி! :)

எல் கே said...

தாவாக்கட்டை இருக்கணுமே கொஞ்ச ???

ஆக்க இன்னொரு தமிழறிஞர் வந்துட்டாங்க (ராஜி )


கதை நச் ரகம்...

கூந்தல் இன்னிக்கு இருக்கா ????

Madhavan Srinivasagopalan said...

// ஆகையால் இப்படம் அபூர்வ அந்தஸ்தை பெறுகிறது. //

அஹா..!
என்னமா யோசிக்குது இந்த நாட்டு ஜனம்..

வெங்கட் நாகராஜ் said...

கண்கட்டி விட்டால் யாராலும் நேர்க்கோட்டில் போக முடியாது - புதிய செய்தி. நன்றி.

அந்திமழைப் பாட்டு - அற்புதமான பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது!

நமிதா - ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை!

இளங்கோ said...

அணிகளும், கவிதையும், அந்த பார்க்காமலே வீடியோவும் அருமை..

நமீதாவின் படத்தை வெளியிட்ட உங்களை வன்மையாக ஆதரிக்கிறோம் !!

பத்மநாபன் said...

மன்னையின் திண்ணை கச்சேரி வித்தியாசமாக இருக்கிறது ..

தூசி , பாசி , கூசி ...இது தமிழ் இலக்கணம் கத்துக்கறமாதிரி தெரியலையே ...

கண்ணை மூடினால் வளையம் வளையமா செல்லகாரணம் பூமி , சூரியன் எல்லாம் ரவுண்டா சுத்துவது தான் காரணமா?

பிடிவாத பிச்சை காரர் கதையில் ஓரு பிடிவாதம் இருந்தது ....

இப்படி ஓரு கேவலமான நிலையில் நமிதா படத்தை வெளியிட்ட உங்களை வன்மையாக கண்டித்து ஆதரிக்கிறோம்

RVS said...

@raji
மடக்கு அணி கண்டுபிடித்த மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். நன்றி. ;-)

RVS said...

@தக்குடு
நமீதா.. யாரது? கோன் ஹை!!!
நமீதா, பபிதா, சவீதா, சரிதா, சில்க் ஸ்மிதா (நோக்கு பிடிச்ச அழகி) போன்றோர் ச்சீ..தா அப்படின்னு கேட்கும் போது... என்ன தரலாம்? ;-) ;-)

RVS said...

@அப்பாதுரை
தல.. இப்படியெல்லாம் கோச்சுக்ககூடாது.. நிஜமாகவே போன பதிவுல போட்ட 'எலி'ன்னு நீங்க சொல்றது எனக்கு என்னன்னு புரியலை.. அதுக்காக ஒரு வரியில சுவாரசியம்.. அப்படின்னு டெம்ப்ளேட் கமென்ட் போட்டுட்டு ஒதுங்கிட்டீங்களே!!! ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நீங்க அடிச்சு விளையாடுங்க.. சுகந்தா... இது பெயர்ச் சொல்லோ? ஹி..ஹி ...
தெரிஞ்ச பாகம் இதுவரையில மத்தவங்க நெஞ்சுலதான் தீப்பிடிச்சு எரிஞ்சுது.. இல்ல.. ;-)

RVS said...

@Balaji saravana
ரசித்ததற்கு என் நன்றிகள் பாலாஜி!! ;-)

RVS said...

@எல் கே
ஹா....ஹா.. நீங்களே போட்டுக்கொடுத்து தாவாங்கட்டையை பேத்துடுவீங்க போலருக்கு..
கதையை ரசித்தமைக்கு நன்றி..
கூந்தல்? கரெக்ட்டுதான்... ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
நல்ல வேளை நாட்டு ஜனம்ன்னு சொன்னீங்க.. காட்டு ஜனம்ன்னு சொல்லாம.... நன்றி ;-);-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
உங்க better half இங்க வரும்போது நீங்க நமீதாவை பற்றி ஒன்னும் சொல்லலைன்னு சொல்லிடறேன்... பயப்படாதீங்க..ராத்திரிக்கு ரொட்டியும் சப்ஜியும் கிடைக்கும்... ;-) ;-) ;-)

RVS said...

@இளங்கோ
//நமீதாவின் படத்தை வெளியிட்ட உங்களை வன்மையாக ஆதரிக்கிறோம் !!//
ரசித்து சிரித்தேன் இளங்கோ ;-)

RVS said...

@பத்மநாபன்
கேவலமான நிலையில் நமீதா.. தாக்குங்க.. பத்துஜி!!! நீங்களும் இளங்கோவும் அகில அண்டங்கள் நமீதா ரசிகர் மன்ற செயலாளர் மற்றும் பொருளாலர்களா? கண்டிக்கறோம்... ஆதரிக்கறோம் அப்படின்னு கூச்சல் போடறீங்க... ;-) ;-) ;-)

இளங்கோ said...

//நீங்களும் இளங்கோவும் அகில அண்டங்கள் நமீதா ரசிகர் மன்ற செயலாளர் மற்றும் பொருளாலர்களா//
உங்களுக்கு தெரியாதா.. ?
காத குடுங்க இன்னொரு ரகசியம் சொல்லுறேன்.. "நம்ம ஆர்விஎஸ் அண்ணாதான் மன்றத்து தலைவர், யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொன்னார்.. உங்க கிட்ட சொல்லிட்டேன்" :):)

raji said...

//மடக்கு அணி கண்டு பிடித்த
மகளிர் அணி//

ரைமிங்க்ஸூ..?

(கை தட்டி அழைத்து)
"யாரங்கே! மன்னை மன்னரின் மடக்கு அணி எகனை
மொகனைக்கு பரிசாக இன்னும் நாலு நமீதா ஃபோட்டோவை
அவருக்கு பரிசாக எடுத்து வரவும்.
என்ன? அவர் வீட்டிலயா? அதெல்லாம் அவரு
சமாளிச்சுப்பாரு,குனிஞ்ச தலை நிமிராம!!!!!

RVS said...

@இளங்கோ
நல்லவேளை!! எங்கிட்ட சொன்னதோட நிறுத்துக்கிட்டீங்க... நன்றி.. ;-)
(உங்களுக்கெல்லாம் தலைவராகும் எண்ணம் இல்லையா? ) ;-) ;-)

RVS said...

@raji
அவ்ளோ ஃபோட்டோவா!!! எனக்கே எனக்கா.. உங்களோட பரிசுன்னா நல்லாத்தான் இருக்கும்.. நன்றி ;-) ;-)
(கை தட்டி.. யாரெங்கே... சீக்கிரம் எடுத்துவாருங்கள்... )

சாய்ராம் கோபாலன் said...

நமீதா - மூடி வைத்தாலும் மறைக்கமுடியாதுங்க !! ஒரு அடி தள்ளி நின்னாவே இடிக்கும் - மறைச்சு என்னத்தை பண்ண !!

அது மாமிச மலை - மலை தானே சொன்னேன் !!

அப்பாதுரை said...

எனக்குப் புரியலைனு சொன்னேன் - அதுக்கும் சுவாரசியத்துக்கு முடிச்சு போட்டீங்களே? சுவாரசியம்னு எழுதினது இன்னும் சுவாரசியத்தைத் தாண்டிப் போகாததால். இன்னும் போகாததால்.

எல் கே said...

/மடக்கு அணி கண்டு பிடித்த
மகளிர் அணி/

புலவி

இளங்கோ said...

//உங்களுக்கெல்லாம் தலைவராகும் எண்ணம் இல்லையா?//
நீங்கள் பதவி விலகி அல்லது ஓய்வு பெற்று, எங்களைக் கை காட்டினால் நாங்களும் ஆக முடியும். :)
ஆனா, இப்போதைக்கு நீங்கள் பதவி விலக மாட்டீர்கள் என்றுதான் ஆருடம் சொல்கிறது. :) :)

RVS said...

@சாய்
இந்த மாதிரி 'A ' கமெண்ட்டுக்கு முன்னாடி ப்ரோபைல் போட்டவ மாத்தணும்.. அது ரொம்ப முக்கியம்... ;-) ;-)

RVS said...

@அப்பாதுரை
சரி விடுங்க தல.. நன்றி ;-) ;-) ;-)

RVS said...

@எல் கே
//புலவி//
அடேங்கப்பா... புலவா... ;-) ;-) ;-)

RVS said...

@இளங்கோ
இன்றிலிருந்து இந்த ப்ளாக் சமுதாயத்திற்கு தெரிவிப்பது என்னவென்றால்... இன்றிலிருந்து அண்ணன் இளங்கோ அவர்கள் ந.ர. மன்றத் தலைவராக தொண்டாற்றுவார்... எல்லோரும் என்னுடன் சேர்ந்து அவரை வாழ்த்த அழைக்கிறேன். ;-) ;-)

ADHI VENKAT said...

கூந்தல் பற்றிய கவிதை நன்றாக இருந்தது. கண்ணை கட்டி நடந்தால் நேர்க்கோட்டில் நடக்க முடியாது என்பது புதிய தகவல்.
ரசிகர் மன்றம் ஆரம்பிக்கறது, நாரதர் கலகம் பண்றது ………….. நாடு கெட்டு போய் விட்டது!! கடவுளே காப்பாற்று.

RVS said...

@கோவை2தில்லி
நாடு கெட்டுபோய்விட்டது.. ஹி..ஹி... நானும் இதை வழிமொழிகிறேன்.... ;-)

சாய்ராம் கோபாலன் said...

ஆர்.வி.எஸ்.

ப்ரோபைல் படம் மாற்றிவிட்டேன் ?

இந்த படம் போதுமா - இன்னும் கொஞ்சம் வேணுமா ?

- சாய்

RVS said...

@சாய்
அட்டகாசம் போங்க... அது பொம்மையா.. இல்லை நிஜமா.. எனக்காக வீராவேசம் காமிக்கறதா நினைச்சுகிட்டு அமெரிக்காவுல அடி வாங்கிடாதீங்க.. ஜாக்கிரதை... ;-) ;-)

இராஜராஜேஸ்வரி said...

கூந்தல் பற்றிய கவிதை-
அவள் அக்கரையில்
அக்கறையாய் குளித்திருப்பாள்.
சவுரி இக்கரையில் அவ்ன்
கையில் வசமாய் சிக்கி
இருக்கும்

சாய்ராம் கோபாலன் said...

//RVS said... @சாய்
அட்டகாசம் போங்க... அது பொம்மையா.. இல்லை நிஜமா.. எனக்காக வீராவேசம் காமிக்கறதா நினைச்சுகிட்டு அமெரிக்காவுல அடி வாங்கிடாதீங்க.. ஜாக்கிரதை... ;-) ;-)//

நானும் உண்மை - பெண்ணும் உண்மை. மெழுகு எதுக்கு ஆர்.வி.எஸ் !!

வீரபாண்டிய கட்டபொம்மன் ஊரில் இருந்து வந்தவன் நான் அதனால் - துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை ரகம் நான் !!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails