Sunday, January 23, 2011

எந்தரோ மஹானுபாவுலு

சென்னையின் அதிசயமாக கண் அசராத இந்த வார ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்தில் கிரஹத்தில் படுத்துருண்ட வயசாளிகளுடன் கொஞ்ச நாழி இசை பற்றி அளவளாவியதில் நாளை நடைபெறும் தியாகராஜா ஆராதனை பற்றியும் பேச்சு வந்தது. நான் பிறந்து வளர்ந்து வம்புபண்ணிய ஊரில் எங்கள் தெருவில் எந்த எந்த ஒரு வார்த்தைக்கும் 'லு' சேர்த்து மட்டும் தெலுங்கு பேசத்தெரிந்த பட்டு&சொர்ணம் என்ற ஐம்பது வயது நிரம்பிய முதிர்கன்னிகளான கொல்டி சிஸ்டேர்ஸ் ரெண்டு பேர் வருஷாவருஷம் ரெண்டு பஸ் மாறி ஆராதனைக்கு திருவையாறு சென்று வருவார்கள். "அவாளுக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் தெரியுமா"ன்னு இந்தப் புண்ணியவானை ஈன்ற புண்ணியவதியிடம் கேட்ட போது "ஆராதனையில நேரா போய் சமாதியில் உட்கார்ந்துண்டு எல்லோரும் பாடறதை கேக்கறதுக்கே நாம புண்ணியம் பண்ணியிருக்கணும். கீர்த்தனை தெரிஞ்சா என்ன தெரியலைன்னா என்ன. நீ இங்க உட்கார்ந்து வெட்டிப் பொழுது போக்கிண்டு வாயரட்டை அடிச்சுண்டு இருக்கரதுக்கு அது எவ்வளவோ தேவலாம்." என்று ஒரே போடாய் போட்டாள். சில மாதங்களுக்கு முன்னால் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை பொழுது போகாத போது நினைத்த பக்கத்தை புக் கிரிக்கெட் விளையாடுவது போல புரட்டிப் பிரித்து படித்த The Devadasi and the Saint  என்ற வி.ஸ்ரீராம் புத்தகத்தில் இருந்த சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அவற்றிலிருந்து சில துளிகள்...
thyagarajar

ஜனவரி ஆறாம் தேதி 1847- ம் வருடம் தியாகராஜர் சமாதியடைந்தார். அப்போதைய காலகட்டத்தில் அவரின் சிஷ்யர்களால் தோற்றுவிக்கப்பட்ட இசைப் பள்ளிகள் மூன்று. வாலாஜாபேட், தில்லைஸ்தானம் மற்றும் உமையாள்புரம். தியாகராஜர் சமாதியடைந்ததை நேரில் பார்த்த வாலாஜாபேட் கிருஷ்ணஸ்வாமி பாகவதர் "தை மாசம், அமாவாசைக்கு அஞ்சு நாள் முன்னாடி அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பிரபவ வருஷம். கார்த்தால காவேரி போய் குளிச்சுட்டு பூஜை புனஸ்காரங்களை செஞ்சார். ஏழைகளுக்கும் ப்ராம்மனர்களுக்கும் தன்னால ஆனதை கொடுத்துட்டு, எல்லோரும் பஜனை பாட அப்படியே அந்த நாத கோஷத்துக்கு இடையே அப்படியே பிரம்மத்தோடு கலந்துட்டார்" என்று அதிசயத்திருக்கிறார்.

தியாகப்ரம்மம் சமாதியான தினத்தில் ஸ்ரார்த்தம் செய்து அவரின் சில கீர்த்தனைகள் பாடி ஆராதனையாக கொண்டாடிவந்தனர் அவரின் பேரன்கள். ஆனால் இந்த ஆராதனை திருமஞ்சன வீதியில் இருந்த அவருடைய மூதாதையர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தியாகராஜரின் நேரடி சிஷ்யர்களான உமையாள்புரம் சகோதரர்கள் 1903 -ம் வருஷம் சமாதிக்கு வந்தபோது செடி கொடிகளாலும் முட்புதர்களாய் மூடி இருந்த இடத்தை பார்த்து மிகவும் வருத்தமடைந்தனர். தில்லைஸ்தானம் பள்ளியின் ராமா அய்யங்கார் மற்றும் சில இசைக்கலைஞர்களின் துணை கொண்டு கடப்பா கற்களை கொண்டு சமாதியை புனருத்தாரணம் செய்தனர்.

அந்தக் காலத்தில் பெண்கள் தியாகராஜர் சமாதியில் பாடி அஞ்சலி செலுத்த அனுமதி இல்லாமல் இருந்தது. இந்த கால இ.காங்கிரஸ் போல ஆராதனை கொண்டாடுவதிலும் அந்த காலத்தில் உட்கட்சி பூசல் இருந்தது. பெரிய கட்சி(நரசிம்ம பாகவதர்) மற்றும் சின்ன கட்சி(பஞ்சு பாகவதர்) என்று இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கீர்த்தனாஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இக்கால மார்கழி சங்கீத சீசன் போல பாட்டோடு சேர்த்து போஜனமும் பிரியமாக எல்லோருக்கும் திருவையாற்றில் பரிமாறப்பட்டது. 

இதுபோன்ற இன்னும் நிறைய நுணுக்கமான செய்திகள் இருந்தன. 

தியாகராஜர் ஸ்பெஷல் ஆக பாடல் போடலாம் என்று தோன்றியபோது, ஒரு பெரிய கீற்றுக் கொட்டகையின் கீழ் ஆண் பால் பெண் பாலாய் டீம் பிரித்து எதிர் எதிரே அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் வீடியோ காட்சிகள் நிறைய கிடைத்தன. எல்லாவற்றிலும் சுதா ரகுனாதன் நடு நாயகம். மேக்கப் போட்ட இசை அரசிகள் எதிரே கொஞ்சூண்டு கூச்சத்தோடு மேலுக்கு பட்டு அங்கவஸ்திரம் போர்த்தி சங்கீத விற்பன்னர்கள் தாளம் தட்டி பாடுவதை சாதா டி.வியில் (தூர்தர்ஷன்) லைவாக நாளை பார்க்கலாம் என்பதற்காக எனது வலைப்பூவிற்கு பிரத்யேகமாக நான் அழைத்து வந்த சில கீர்த்தனைகள் கீழே...

காதாநாயகியின் அன்புக்குகந்த அப்பாவாக எல்லாப் படத்திலும் அமைதியாக நடித்த நாகையா இந்தத் தெலுங்கு படத்தில் தியாகப் பிரம்மமாக நடித்துப் பாடிய "எந்தரோ மஹானுபாவுலு". இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1946. படத்தின் பெயர் தியாகய்யா. பழயமுது விரும்பும் நம் இணைய கூட்டாளிகளுக்காக அவர்களே பார்த்திராத பாடல்.  "என்னம்மா.." என்று பெண்ணிடம் ஆதரவாக பேசி மட்டும் கேட்ட நாகையா நன்றாக பாடுவார் என்பது  இன்று தெரிந்து கொண்ட ஒரு பொதுஅறிவு. நாகையாவிர்க்கு அருமையான குரல்வளம். செவிக்கின்பம்.




இதே படத்தில் புரந்தரதாசர் கிருதியான ராம மந்த்ரவ ஜபிசோ பாடிக்கொண்டு உஞ்சவ்ருத்திக்கு வரும் தியாகராஜர். சிறுவயதில் பர்வதம்மாவை பால்ய விவாஹம் புரிந்த தியாகராஜர் இளம் வயதிலேயே அவரை இழந்தார். முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் தாரமாக கமலாம்பாவை மணம் புரிந்தார். இந்தக் காட்சியில் அவரது துணைவியார்தான்!



ஜெய ஜானகி ப்ராண நாயக... ஜெகதானந்தாகாரகா. M(asters in).S(inging) அம்மாவின் தெய்வீக இசை வெள்ளத்தில்.



ராமன் கேட்ட காதுகள் கொஞ்சம் கிருஷ்ணன் கேட்கட்டும். ராமரை புகழ்ந்த வாயால் தியாகப்ரம்மம் பாடிய கிருஷ்ணன் பாடல். பஞ்ச ரத்னங்களில் ஒன்றாக.. பால முரளி கிருஷ்ணா பாடிய சாதிஞ்சனே.. வீடியோ முழுக்க வரும் மனமயக்கும் கண்ணன் படங்களை காணத் தவறாதீர்கள். 



இந்த வரிசையின் கடைசியில்... சகலலோக நாயகி... ஸ்ரீ வித்யா ரூபினி.. வருங்கால நித்யஷ்ரி.. இந்த ப்ளாக் எழுதும் ஆர்.வி.எஸ்ஸின் குலக்கொழுந்து ஆர்.வி.வினயா. (ஒரு வருடத்திற்கு முன் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் ஒரு மேடையில் பாடியது....)



பின் குறிப்பு: இத்தோடு இந்த சங்கீத சீசனுக்கும் எண்டு கார்டு போட்டாச்சு. இதுபோன்ற தொடர் தொந்தரவை ரசித்த எல்லோருக்கும் இருகரம் தூக்கி ஒரு பெரிய அரசியல்வாதி கும்பிடு. அடுத்ததா ஒரு காதல் கதை எழுதுவோம். காமன் கையை பிடிச்சி கம்பெல் பண்றார்!!

பட உதவி: ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் படத்தை கொடுத்தருளிய கல்லிடை கிருஷ்ணர்... தக்குடு.. தக்குடு....தக்குடு... அவர்கள்.

-

58 comments:

MANO நாஞ்சில் மனோ said...

appaadaa thappichom....

தக்குடு said...

அரிதான பாடல்களை தேடித் தந்த மன்னார்குடி மைனருக்கு முதல்ல ஒரு நன்னி. சகலலோக நாயகியின் பாடலையும் ரசித்து மகிழ்ந்தேன்.

சின்னப் பையன் said...

ஆஹா.. அந்தரிகு வந்தனமுலு..

கடைசி பாட்டைத்தான் முதலில் கேட்டேன்.. :-))
வாழ்த்துகள் RVV மற்றும் RVS.

இன்னொரு சீசனுக்கு காத்திருக்காமே ஆஃப்-சீசனுக்கும் இசைப் பதிவுகளை போடலாம்..

நன்றி..

Porkodi (பொற்கொடி) said...

//அடுத்ததா ஒரு காதல் கதை எழுதுவோம்.//

rightu! unga damager address konjam kudunga! :)

raji said...

சூப்பர் தகவல் போஸ்ட் ஆர் வி எஸ் சார்
மிக்க நன்றி

அந்த சாதிஞ்சனே வீடியோவும் எம்.எஸ் அம்மாவின் குரலில்
ஜகதானந்தகாரகாவும் சிலிர்க்க வைக்கின்றது
மீண்டும் நன்றி

'வருங்கால நித்யஸ்ரீ' யின் பாட்டு சூப்பர்.
கங்ராட்ஸ் சொன்னதாகவும் ஆல் தி பெஸ்ட் கூறியதாகவும்
கூறுங்கள்.குழந்தையை மோடிவேட் செய்து வளர்ச்சிக்கு வழி செய்து தரவும்

raji said...

ஆர் வி எஸ் சார், என் பதிவுல காமெடி போட்டி
அறிவிச்சிருக்கேன்.
இப்ப் பாத்து காதல் கதை எழுதறதா சொல்றீங்களே.
அத அப்புறம் எழுதலாம், இதை முதல்ல பாருங்க

ஸ்ரீராம். said...

தியாகராஜருக்கு தீராத விளையாட்டுப் பிள்ளையின் இசையஞ்சலி நன்றாக இருந்தது. நாகையா குரல் அற்புதம்.
வருங்கால நித்யஸ்ரீக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

தியாகராஜரைப் பற்றி நிறைய தகவல்கள் கொடுத்திருக்கீங்க. யூ ட்யூப் சேகரிக்க நிறைய மெனக்கெட்டிருகீங்க அண்ணே! வினயாவிற்கு என் வாழ்த்துக்களும்!

எல் கே said...

//ஜெகதானந்தாகாரகா. M(asters in).S(inging) அம்மாவின் தெய்வீக இசை வெள்ளத்தில்.///
மிக மிக அருமை..

ஜூனியர் குரல் நன்றாக உள்ளது. அம்மாவைப் போல் என்று எண்ணுகிறேன் :)


காதல் கதை... நீங்களும் களத்திலா?? அடிச்சு ஆடுங்க

R. Gopi said...

பகிர்விற்கு நன்றி

Madhavan Srinivasagopalan said...

வெரி குட்..
எனக்கு வேலை மிச்சம்..
திருவையாறு பஞ்ச ரத்னா கீர்த்தனை -- பற்றி நா இன்னிக்கு எழுதலாம்னு நெனைச்சேன்.. இப்ப, இந்த போஸ்ட லிங்க் பண்ணிட்டப் போச்சு.. தான்ஸ், ஆர்.வி.எஸ்.

Vidhya Chandrasekaran said...

அழகிய தொகுப்பு. பகிர்விற்கு நன்றி.

பத்மநாபன் said...

முதலில் வளரும் இசை கலைஞருக்கு பாராட்டும் வாழ்த்தும்.தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரவும்.

தியாகராயர் ஆராதனை குறிப்புகள் -அருமை..

பாட்டு தேர்வு செய்து போடுவதற்கு ஆர்.வி.எஸ்ஸுக்கு சொல்லியா கொடுக்கனும்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. வருங்கால நித்யஸ்ரீக்கு வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. பாடல் தேர்வுகளும் அருமை. வருங்கால நித்யஸ்ரீயின் குரல் பிரமாதம். எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும். வினயா. இந்த பெயரில் பின்னணி பாடகி இருக்கிறாரே தெரியுமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நடிகர்கள் நாகையா; ரங்கராவ் போன்றோர் அன்பான அப்பா பாத்திரத்துக்கெனப் படைக்கப்பட்டோர்.
இவர் பாடுவார் தெரியாது. அவர் பாடி நடித்த தெலுங்குப் படமான தியாகராஜருடைய சரித்திரம்; யூருயூப்பில் பல தடவை கேட்டு ரசித்துள்ளேன். இனிய குரல் வளம்; இந்த துண்டில் அமைந்துள்ள கீர்த்தனை அத்தனையும் எனக்குக் கேட்கப்பிடிக்கும்.
என் இளமைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் , திருச்சிராப்பள்ளி; சென்னை வானொலி நிலையத்தால் ஒலிபரப்பப்பட்ட " ஆல் இந்தியா ரேடியோ , திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்; திருவையாற்றிலிருந்து சற்குரு தியாராஜரின் ஆராதனை விழா இசைநிகழ்ச்சியிலிருந்து சில பகுதிகளை ஒலிபரப்பப் கேட்கலாம். எனும் அறிவித்தலுடன் இரவு 9.30 லிருந்து நள்ளிரவு 12.00 மணிவரை பிரபல வித்துவான்களின் கச்சேரிகளில் இருந்து ஒலிபரப்பக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.
அப்போ வானொலி எல்லா வீட்டிலும் இல்லை. வானொலியுள்ள வீடுகளில் இசைப்பிரியர்கள் சென்று
கேட்டு ரசிப்பார்கள்.
அப்போது எப்போதாவது இதை நேரடியாக ரசிக்கக் கிட்டுமா? என ஏங்குவேன். இது வரை கைகூடவில்லை.
ஆனால் யூருபில் இப்போ ஓரளவு உடனுக்குடன் கிடைக்கிறது.
இனிய இசைப்பதிவு

Unknown said...

I have seen nagaiah's Thyagayya when
Doordarshan used to telecast other languages on saturdays.How I love to
watch the movie.It is really a classic.Thanks for the clips

இளங்கோ said...

பாடல் பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.
வருங்கால சகலகலா வல்லிக்கு எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

அப்பாதுரை said...

வினயாவுக்கு வாழ்த்துக்கள். அச்சமில்லாத குரல்.

'தமிழ்த் தியாகைய்யர்' விழா என்று எழுதியிருக்கிறதே? இது வருடா வருடம் நடக்கிறதா?

அப்பாதுரை said...

நாகைய்யா படம் சமீபத்தில் இன்னொரு பதிவில்** பார்த்தேன். 'நிதி சால சுகமா?' என்ற பாடல் - தெலுங்கு தெரிந்தவர் இன்னும் ரசிக்கக் கூடிய அளவுக்கு, பாடலைப் பிரித்து ஹகூக்களாகப் படமாக்கியிருந்த விதம் பிரமாதம்.

**சுப்புத்தாத்தா கானசபா என்ற மனதையள்ளும் பெயரோடு ஒரு வலைப்பூ. கல்யாணி ராகம் பற்றிய தொகுப்பில் நிதிசால பாட்டைப் போட்டிருந்தார்கள். என்ன படம் என்று குழம்பிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவில் தியாகையர் விடியோக்களைப் பார்த்ததும் புரிந்தது.

சாய்ராம் கோபாலன் said...

ஏங்காணும், ஐயப்ப சீசன் எனக்கு முடிஞ்சா மாதிரி - உம்ம சங்கீத சீசன் இன்னுமா முடியலை ?

அப்பாதுரை said...

தாத்தாவின் வலைப்பூப் புதையலில் இன்னொரு வைரம். பாலமுரளி ரசிப்பவர்களுக்கு தேன்பாகு. ஹிந்தோளத்தில் தில்லானா - பங்க்ளா தேஷில் ஒரு கச்சேரியின் ஒளிப்படமாம். பங்க்ளா தேஷில் பாலமுரளியை ரசிப்பது புதுமையென்றால் ஹிந்தோளத்தில் தில்லானாவையும் இப்போது தான் முதலாகக் கேட்கிறேன்.

சங்கீத சீசனில் சென்னையிலிருப்பவர்களைப் பார்த்துப் பொறாமையாக இருக்கிறது. அதுவும் பிரபல உளவுத்துறைக்கு நாலெழுத்து தள்ளிய இனிஷியல்காரர்கள் செய்யும் கூத்து இருக்கிறதே..:)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
சங்கீத வெறி கொஞ்சம் கொஞ்சமா செட்டில் ஆகுது.. கொஞ்ச நாளைக்கு ப்ராப்ளம் இல்லை. ;-) ;-)

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

அருமையான பதிவு. நான் எழுத நினைத்து இருந்தது .
உங்கள் அனுமதியுடன் எனது ப்ளாக்ல் லிங்க் கொடுக்கிறேன் .

RVS said...

@தக்குடு
கல்லிடை கண்மணிக்கு நன்றி ;-)

RVS said...

@ச்சின்னப் பையன்
ச்சின்னப் பையனின் பெத்த வாழ்த்துக்கு நன்றி. ஆர்.வி.விக்கு சொன்ன வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது பாஸ். நன்றி ;-)

RVS said...

@Porkodi (பொற்கொடி)
டேமேஜர் ரொம்..................ப நல்லவர். பொல்யுட் பண்ணிடாதீங்க.. ;-) ;-)

RVS said...

@Chitra
Thanks!!! ;-)

RVS said...

@raji
வருங்கால ஸ்ரீக்கு சொன்ன வாழ்த்துக்களுக்கு நன்றி. அவளிடம் தெரிவித்து விட்டேன். காமடி எழுதச் சொல்றீங்களா? காமன் விடுவாரா தெரியலை.. ட்ரை பண்றேன். எழுதறேன்.. ;-) ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நாகையா இப்படி பாடுவார்ந்னு எனக்கு இப்பத்தான் தெரியும். நல்லா இருந்தது இல்ல. வாழ்த்துக்கு நன்றி. ;-)

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி. வினயாவிற்கு பாலாஜி அங்கிளின் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன். ;-)

RVS said...

@எல் கே
அவங்க அம்மா குரல் பிரமாதமா இருக்கும். நிறைய பின்னணி பாடகிகள் பின்னாடி போய்டுவாங்க அவங்க பாட வரலை. வாழ்த்துக்கு நன்றி ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
நன்றி கோபி ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
ஓ.கே மாதவா.. தீஸுக்கோ... ;-)

RVS said...

@வித்யா
நன்றிக்கோர் நன்றி வித்யா. ;-) ;-)

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! அரேபிய மாமாவின் வாழ்த்தை வினயாவிற்கு சொல்லிவிட்டேன். நன்றி. ;-) :)))))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே!! நித்துக்கு சொல்லிட்டேன். ;-)

RVS said...

@கோவை2தில்லி
தெரியுமே.. பல சின்னத் திரை இசை நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி ;-)

RVS said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris)
ஒரு அமர்க்களமான நினைவோடையை பகிர்ந்துள்ளீர்கள். ட்ரான்சிஸ்டர் பொட்டியை தலைமாட்டில் வைத்துக்கொண்டு கேட்கும் சங்கீதப் பிரியர்களை நானும் பார்த்திருக்கிறேன். ஒரு பதிவு அளவிற்கு விஷயம் இருக்கிறது. அடிக்கடி எழுதினால் நாஞ்சில் மனோ போன்றோர் என்னை அடிக்க வருவார்கள். கொஞ்ச நாள் பொறு தலைவா.. எழுதறேன்.. ராத்திரி பூரா மியூஜிக் கேட்ட மாமாக்களை பற்றி.. ;-) ;-)

RVS said...

@JOE2005
Welcome to my site. thanks for your comments. It is really a nice video. I am seeing this for first time. Just thought of sharing.. ;-) ;-)

RVS said...

@இளங்கோ
கொங்குநாட்டு இளவரசரின் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன். நன்றி இளங்கோ ;-)

RVS said...

@அப்பாதுரை
நன்றி அப்பாஜி! தமிழ்த் தியாகய்யர் பாபநாசம் சிவன் பெயர் கொண்ட எங்கப் பேட்டை சபாவில் வருஷம் தவறாமல் இதை நடத்துகிறார்கள். இந்த வருஷம் எம்பொண்ணு கலந்துக்கலை . :-(

RVS said...

@அப்பாதுரை
சுப்புத் தாத்தாவை பார்த்தேன்.. அமர்க்களமான சைட். அறிமுகத்திற்கு நன்றி. ;-)

raji said...

ம்யூஜிக் கேட்ட மாமாக்கள் பதிவெல்லாம் இருக்கட்டும் மெல்ல பாத்துக்கலாம்
என் பதிவுல பொற்கிழி வேணுமா இல்லையா
வெங்கட் நாகராஜ் சார் பதிவுலயே பாதி பொற்கிழிதான் கிடைச்சுது
அதனால முதல்ல கௌரவ பதிவு போட்டு முடிங்க

RVS said...

@சாய்
இல்லை ஓய்!! பிசாசாட்டம் படுத்தறது... பூசாரி வேப்பிலை அடிக்காம இறங்காதோ? சரி..சரி.. முடிச்சுடறேன்.. :-)))))))

RVS said...

@அப்பாதுரை
//நாலெழுத்து தள்ளிய இனிஷியல்காரர்கள் செய்யும் கூத்து இருக்கிறதே..//
யார் சார் அது.. அப்படி கூத்து அடிக்கறது.. சொல்லுங்க.. புடிச்சு வெளுத்துடறேன்.. ;-) ;-) ;-)

RVS said...

@அருள் சேனாபதி
நன்றி சேனாதிபதி! இந்தச் சுட்டியை உங்கள் தளத்தில் கொடுத்ததற்கு நன்றி . முதல் வருகை.. நன்றி மீண்டும் வருக.. ;-)

RVS said...

@raji
கடைசி கமெண்ட்டை ரசித்தேன். காதலுக்கு முன்னாடி காமடி எழுதச் சொல்றீங்க.. நேயர் விருப்பத்தை விட வேற திருப்தி தர விஷயம் உண்டோ? மரியாதையா செஞ்சுடறேன்.. நன்றி ;-)

பொன் மாலை பொழுது said...

அட இன்னா வாஜாரே? கொஞ்ச நால்லாவே ரொம்பதா சங்கீதம் சபா கச்சேரி இன்னு போரடுசிகினுகீர?
சும்மா ஜாலியா குஷாலா எதுனாச்சும் காமெடி எடுத்து உடுபா ?? இன்னா?? ஆகாங் !

சிவகுமாரன் said...

எனக்கும் சங்கீதத்துக்கும் ரொம்.......ப்ப்பப்ப்ப்.ப தூரம் RVS .
உங்கள் குலக்கொழுந்து வினயாவுக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.

சமுத்ரா said...

nice

Matangi Mawley said...

okay.. namma varungaala nithyashree-ku first of all, all my best wishes! :D nannaa paadaraa...

devadasi n the saint book-lernthu ezhuthina antha piece of information was one of the part of the text that i had enjoyed reading while reading the book... inga padichchathila santhosham...

trichy-la irukkarechcha naan oru 2-3 thadava thiruvaiyyaaru ponathundu... namma anga stage glamour-oda ottaatha thoorakka AIR telecast panna mike set pannara edaththula ukkaandu keppom... 70-80 vayasu paatti-laam mathukondu kanna moodindu 'varaali' pancharathna kriti-ya paaduvaa... 'glamour' kumbal-la paathi per lip sync pannarathum nalla interesting-aa irukkum.

aanaa enna thaan irukkattum- all the way, antha edathukku vanthu, appadi oru great person-ku shradhdhaanjali koduththuttu pora aththana peroda belief and fine taste thaan is keeping the soul of carnatic music bound to earth!

my personal fav. thyagaraja kriti:
entha nechina (shudhdha danyasi)
raghuveera rana dheera (thodi)
o rangasayee (kamboji)
theliyaleru rama (denuka)

innum pala...

very nice write-up, sir!

RVS said...

@கக்கு - மாணிக்கம்
சாரிப்பா.. உட்டுடு... ஒரு காதல் கதை எழுதியிருக்கேன்.. மாணிக்கம்.. ;-)

RVS said...

@சிவகுமாரன்
வாழ்த்துக்கு நன்றி;-) எனக்கு மட்டும் என்ன மடியிலயா இருக்கு சங்கீதம்? ஏதோ தெரியும்.. அவ்வளவுதான்.. ;-) ;-)

RVS said...

@Samudra

Thanks. ;-)

RVS said...

@Matangi Mawley
இன்னும் நிறைய இருக்கு அந்த புக்ல மாதங்கி. ரசித்ததற்கு நன்றி. பொண்ணு பாடறா.. ஆனா தொடர்ந்து போக மாட்டேங்கறா.. வாழ்த்துக்கும் நன்றி..
தியாகராஜர் பாட்டு என்னோடது பெரிய லிஸ்ட்... வேறோருசமயம் போடறேன்.. மக்கள்லாம் அடிக்க வந்துடுவாங்க.. :-))))))))))

Matangi Mawley said...

@ rvs...

paattu class regular-aa pogaatha kozhanthaikal thaan pir kaalaththula periiiiya aalaa varuvaa... :) music paththu-laam ezhuthuvaa... personal experience-aakkum!

my best wishes to her... :)

RVS said...

@Matangi Mawley
பதிவின் ரகசியங்களா மாதங்கி!! குட். ;-) ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails