டாஸ்மாக் சரக்கும் ஒரு பொட்டலம் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து மஹிந்திரா வேனில் ஒருவர் தொடைமேல் இருவர் உட்கார "ஹேய்..." என்று கூவி "வால்க..." கோஷம் போட்டு மாநாட்டுக்கு கூட்டம் கூட்டி பேசக் கேட்கும் கூட்டம் இல்லை இது. இது பாசத்தினால் கூட்டிய கூட்டம். அன்புமிக்கவர்களின் ஆதரவான கூட்டம். என்னடா இதுன்னு பார்க்கிறீர்களா.. ஒன்னும் இல்லை... எலக்ஷன் வருது.. திண்ணைக்கச்சேரிக்கு ஒரு ஸ்டார்டிங் வேணும். அதான். கச்சேரிக்கு போவோம்.
************ புத்தகத் திருவிழா **********
முப்பத்து நான்காவது புத்தகக் காட்சி சென்னையில் விமரிசையாக நடைபெறுகிறது. ஒரு கூரையின் கீழ் அனைத்துப் பதிப்பக புத்தகங்களையும் புது வாசனையோடு பார்க்கும் போது உள்ளம் உவகை கொள்கிறது. இதுவரையில் இரண்டு தடவை விஸிட் செய்தாகிவிட்டது. "இந்த வருஷம் எவ்ளோ ரூபா பட்ஜெட்" என்று கேட்ட தங்க்ஸிடம் எப்போது கஷ்டமான அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி கேட்டாலும் மத்திமமாக அசடு வழிய சிரிப்பது போல இதற்கும் சிரித்து வைத்தேன். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் முதல் விசிட்டில் உயிர்மையில் வாங்கிய நிறைய வாத்தியார் புத்தகங்களோடு திருமகளில் கம்ப ராமாயணம் - பள்ளத்தூர் பழ.பழனியப்பன் உரை எழுதிய கடின அட்டை பைண்டு செய்த புத்தகங்கள் வாங்கினேன். ரசீது புக்கில் பில் போட்டு கம்பரை ஒரு மூட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். நல்ல கனம். தோளில் போட்டுக்கொண்டேன். வாங்கியவுடன் பயம் தொற்றிக்கொண்டது. இவ்ளோ புக்ஸ் கொண்டு போனால் காரை வாசலில் நிறுத்தும் முன் இடுப்பில் பாண்டுரங்கர் மாதிரி இரண்டு கையையும் வைத்துக்கொண்டு "எவ்ளோ ரூபாய்க்கு வாங்கினீங்க.." என்று தர்மபத்தினி முறைத்து கேட்டு சண்டை பிடித்தால் என்ன பதில் சொல்வது என்று நினைவுகளில் அல்லாடினேன். வாயுள்ள பிள்ளை பிழைக்கும். பிழைத்தேன்.
இரண்டாவது முறை புள்ளைகுட்டிக்காரனாக குடும்ப சகிதம் போனேன். ஞாயிறு மாலை. தையா தக்கா என்று ஒரு குழுவினர் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். பத்திரிகை உலகில் ஜொலிக்கும் ஆசிரிய நண்பர் மை.பாரதிராஜா வி.ஐ.பி பாஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆகையால் நுழைவாயில் அருகில் இருந்த மூடிய கவுண்டர்களில் ஒருவர் நின்று கொண்டு கக்கூஸ் பக்கத்தில் இருக்கும் கடேசி கவுண்டரை காட்டி "அங்கே போங்க.." என்று டிக்கெட் வாங்க சொல்லிக் கொண்டிருந்ததிலிருந்து தப்பித்தேன். நுழைந்தவுடன் "எவ்ளோ புக்ஸ் பா.." என்ற பெரியவளின் ஆச்சர்ய விழிகளில் மனம் நிறைந்தேன். நாலு கடை பார்க்கும் முன்னரே "அப்பா..பசிக்குது" என்று காலை இழுத்தாள் இரட்டை ஜடை போட்ட சின்னவள். என்னவள் "போதும்ப்பா.. போலாம்பா..." என்றாள். இம்முறை இன்னும் ரெண்டு புத்தகங்களோடு "கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகள் - சீனி.விசுவநாதன்" பனிரெண்டு தொகுதிகளில் ஆறு தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. நல்லி செட்டியார் ஸ்டாலில் வாங்கினேன். காத்திருந்த மூவரின் முறைப்போடு அத்தோடு புத்தகக் காட்சியிலிருந்து ஆள் எஸ்கேப். மூடுவிழாவிர்க்கு முன் இன்னொரு முறை நிச்சயம் போகணும். இம்முறை நண்பர் எல்.கே பாச அழைப்பு விடுத்தும் போக முடியலை. லிஸ்ட்ல ரெண்டு மூனு புஸ்தகம் விட்டுப் போச்சு.
இந்த வருடம் நான் வாங்கிய சில வாத்தியார் புத்தகங்கள் கீழே..
*********** மூனு நிமிஷம் ************
இது ஒரு குறும்படம். உங்க பிஸி ஷேட்யூல்ல மூனு நிமிஷம் ஒதுக்க முடியும்ன்னா கொஞ்சம் ஒதுங்கி பாருங்களேன். தேவலாம்.
3 Minutes from Ross Ching on Vimeo.
கொலையை எப்படியெல்லாம் எடுக்கறாங்க. ஆனா இந்தப் குறும்படத்தில ஒரு லாஜிக் இடிக்குது.. என்னென்ன பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!...
************** ஆராய்ச்சி முடிவுகள் ************
பஸ் மற்றும் ஏரோப்லேன்களில் டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லும் அளவிற்கு தொப்பை போட்டு கணுக்கால் பார்க்க முடியாமல் பெருத்து விட்டால் மூளை சுருங்கி சிறுத்து விடுகிறதாம். அப்படி சுருங்கிய மூளையினால் ஒன்றும் பிரமாதமான விஷயங்கள் எதுவும் செய்யமுடியாதாம். குண்டா இருக்கிற அதிபுத்திசாலி யாரையாவது பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா. குண்டா இருக்குறவங்க கூட சொல்லிக்கலாம்.
http://www.newscientist.com/article/mg20927943.000-a-fat-tummy-shrivels-your-brain.html?DCMP=OTC-rss&nsref=online-news
************* முத்த அறிவியல் ************
முத்தங்கள் நாகரீகம் அடைந்த மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லையாம். போனபோ வகைக் குரங்குகள் வாய் எடுக்காமல் முகம் நகர்த்தாமல் பன்னிரண்டு நிமிடங்கள் "பச்" செய்கிறதாம். இந்த லிஸ்டில் மூக்கு துருத்தும் முள்ளம் பன்றியும், நாக்கு பழுத்த வவ்வாலும், கழுத்து நீண்டு வளையும் ஒட்டகச்சிவிங்களும் கூட அடங்கும். முத்தத்தின் அறிவியல் (The Science Of Kissing) என்ற புத்தகத்தில் மேற்கண்டவாறு எழுதியவர் Sheril Kirshenbaum. இந்த புத்தகத்தில் முத்தத்தை வரலாறு, கலாச்சாரம், உயிரியல், மனோவியல் என்று பல கோணத்தில் அலசி ஆராய்ந்திருக்கிறாராம். ஆயிரம் பக்ககளுக்கு மேல் நம்ம ஜெயமோகன் போல எழுதிய இந்த அம்மணிக்கு முத்தம்மா என்று பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க.
கிஸ் என்றால் உதடுகள் பிரியும்.....
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்....
தகராறு ஏது தமிழ் முத்தம் போடு.. என்று சரணத்தில் வரும் "பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு.."ன்னு கமல் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு சினேகாவுடன் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது...ஸ்ரேயா கோஷல் மற்றும் கே.கே பாடிய அந்தப் பாட்டையும் போட்ருவோம்...
**************தனியாவர்த்தனம்*************

- சிலப்பதிகாரம் ஒரு எளிய அறிமுகம் - சுஜாதா (சீவக சிந்தாமணி பற்றி அப்பாஜி எழுதியதன் பக்க விளைவு.)
- 401 காதல் கவிதைகள் - சுஜாதா
- கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா
- சுஜாதாவின் குறுநாவல்கள்- இரண்டாம் தொகுதி - சுஜாதா
- ஜே.கே - சுஜாதா
*********** மூனு நிமிஷம் ************
இது ஒரு குறும்படம். உங்க பிஸி ஷேட்யூல்ல மூனு நிமிஷம் ஒதுக்க முடியும்ன்னா கொஞ்சம் ஒதுங்கி பாருங்களேன். தேவலாம்.
3 Minutes from Ross Ching on Vimeo.
கொலையை எப்படியெல்லாம் எடுக்கறாங்க. ஆனா இந்தப் குறும்படத்தில ஒரு லாஜிக் இடிக்குது.. என்னென்ன பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!...
************** ஆராய்ச்சி முடிவுகள் ************
பஸ் மற்றும் ஏரோப்லேன்களில் டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லும் அளவிற்கு தொப்பை போட்டு கணுக்கால் பார்க்க முடியாமல் பெருத்து விட்டால் மூளை சுருங்கி சிறுத்து விடுகிறதாம். அப்படி சுருங்கிய மூளையினால் ஒன்றும் பிரமாதமான விஷயங்கள் எதுவும் செய்யமுடியாதாம். குண்டா இருக்கிற அதிபுத்திசாலி யாரையாவது பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா. குண்டா இருக்குறவங்க கூட சொல்லிக்கலாம்.
http://www.newscientist.com/article/mg20927943.000-a-fat-tummy-shrivels-your-brain.html?DCMP=OTC-rss&nsref=online-news
************* முத்த அறிவியல் ************
முத்தங்கள் நாகரீகம் அடைந்த மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லையாம். போனபோ வகைக் குரங்குகள் வாய் எடுக்காமல் முகம் நகர்த்தாமல் பன்னிரண்டு நிமிடங்கள் "பச்" செய்கிறதாம். இந்த லிஸ்டில் மூக்கு துருத்தும் முள்ளம் பன்றியும், நாக்கு பழுத்த வவ்வாலும், கழுத்து நீண்டு வளையும் ஒட்டகச்சிவிங்களும் கூட அடங்கும். முத்தத்தின் அறிவியல் (The Science Of Kissing) என்ற புத்தகத்தில் மேற்கண்டவாறு எழுதியவர் Sheril Kirshenbaum. இந்த புத்தகத்தில் முத்தத்தை வரலாறு, கலாச்சாரம், உயிரியல், மனோவியல் என்று பல கோணத்தில் அலசி ஆராய்ந்திருக்கிறாராம். ஆயிரம் பக்ககளுக்கு மேல் நம்ம ஜெயமோகன் போல எழுதிய இந்த அம்மணிக்கு முத்தம்மா என்று பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க.
கிஸ் என்றால் உதடுகள் பிரியும்.....
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்....
தகராறு ஏது தமிழ் முத்தம் போடு.. என்று சரணத்தில் வரும் "பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு.."ன்னு கமல் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு சினேகாவுடன் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது...ஸ்ரேயா கோஷல் மற்றும் கே.கே பாடிய அந்தப் பாட்டையும் போட்ருவோம்...
**************தனியாவர்த்தனம்*************
கோயில் மதில் போல இருக்கும் இடத்தில் கால் கடுக்க நின்று கொண்டு பிடில் வாசிக்கும் இந்த இளைய கிழவருக்கு யாராவது ஏதாவது ஒரு நல்ல சாப்பாடு போடும் கேண்டீன் இருக்கும் சபாவில் ஒரு சான்ஸ் வாங்கித் தரக்கூடாதா? யாருமே இல்லாத தெருவில யாருக்குப்பா பிடில் வாசிக்கற...
பின் குறிப்பு: ஆணியின் அடக்குமுறைகளையும் மீறி இந்த எடிஷன் திண்ணைக்கச்சேரி சுமாரா வந்திருக்குன்னு நினைக்கிறேன். இதைப் பற்றிய உங்கள் ஆலோசனைகள் மற்றும் ஆர்வத்தை தூண்டும் கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
பட உதவி: http://sowaskan.livejournal.com/
-

50 comments:
Back to form.... வடை கிடைக்குமா தெரியல.
அவங்க ரெண்டு பேரும் சண்டை போடற இடம் தான் உலகத்துலயே டெலிகேட்டான இடமா இருக்கும். என்னனா க்ரானைட் ஸ்லாப் ப்ராசஸ் பண்ணற இடம்! வீடு கட்டும் போது அங்க போய் தான் கிட்சன் கவுண்டர்டாப் தேடுவோம், சின்னதா ஏதானும் பட்டுட்டா கூட சர்னு விரிசல் விழுந்து உடைஞ்சுரும்! ஒரு ஸ்லாப் விலை 7000 டாலர்ல இருந்து துவங்கும், எங்களுக்கே தெரியாது எங்களால அவ்ளோ மெதுவா நடக்க முடியும்னு!
சேரி அந்த கதை எதுக்கு இப்போ, படத்துல லேசர் பீம் ரிஃப்ளெக்ஷன் ஸ்லாப் மேல வர்ற மாதிரி பண்ணி அசத்தி இருக்காங்க.. ஆனா என்ன லாஜிக் இடிக்குதுன்னு தெரியலை! ஒரு வேளை லாஜிக் இடிக்கவே இல்லைங்கறது தான் இடிக்குதோ? ;)
கடைசி தாத்தா பெயிண்டிங் மாதிரின்னா இருக்கு?!
தலைவர் புத்தகங்கள் படித்து அகமகிழவும். கச்சேரி சுவாரஸ்யம்.
அண்ணே எழுத்து பணியும் கூடே அலுவலக பணியும் என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை உங்கள் தளங்களை மன்னிக்கவும் ..........
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
குண்டா இருக்கற புத்திசாலிகள்: வின்ஸ்டன் சர்ச்சில்.குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் விஸ்வநாத்.
வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் என்கிற யு.எஸ் ப்ரெசிடென்ட் சீஃப் ஜஸ்டிஸ் ஆஃப் சுப்ரீம் கோர்ட்டாகவும் இருந்தார்.இவர்
வெள்ளை மாளிகையில் இருந்த போது இவருடைய எடை முன்னூத்தி முப்பது பவுண்ட்.
சயன்டிஸ்ட் பெஞ்சமின் ஃப்ராங்க்லின்
அந்த 3 மினிட்ஸ் வீடியோ ஓப்பன் ஆக மாட்டேங்கறதே சார்
வாத்தியார் புத்தகங்களை அள்ளி அள்ளி வயிற்றெரிச்சலை கொட்டி கொள்கிறிர்கள் .இந்த சமயத்தில் ஊரில் இல்லாமல் போய் விட்டோமே....
கம்பனை மூட்டை யாக கட்டி கொண்டு வந்து வீட்டீர்களா...இனி தீ.வி.பி யில் அடிக்கடி கம்பரசம் பொங்கும்...
பாரதியின் புத்தகம் 12 தொகுதிகளா....ரொம்ப விரிவாகவும் ,எல்லா பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்குமா...நேரம் கிடைக்கும் பொழுது சுருக்கமான ரிவியு போடவும்...
ஆக மொத்தம் ... உங்கள் வீட்டு நூலகத்துக்கு புது செல்ஃப்புக்கும் சேர்த்து பாட்டு கேட்டிருப்பீர்கள்....
மூணு நிமிஷ கொலைப் படம் – லேசர் கத்தி சண்டை ..படம் ஜோரு...நிறைய லாஜிக் ஒதைக்குது..அதனால ஒன்று மட்டும் சொல்ல முடியவில்லை...
முத்த சித்தரின் பத்து ப்பாட்டு போட்டு அசத்திட்டீங்க...
சாருவின் புத்தகம் எதுவும் வாங்கவில்லையா?
முத்தத்தை பற்றி தனி ஆவர்தனமா ?? நடக்கட்டும் நடக்கட்டும்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம் ஆர்வீஎஸ்
யாரங்கே, ஆணி எவ்வளவு இருந்தாலும் அனாயாசமாக பிடுங்கி எறிந்து விட்டு ரசமாய் ஒரு கச்சேரி நடத்திய ஆர்.வி.எஸ் அவர்களுக்கு ஒரு மூட்டை அன்பளிப்பு கொடுங்கப்பா.
நல்ல பகிர்வுக்கு நன்றி தல..
மூனு நிமிஷ வீடியோ சூப்பர். துரத்தப்படுபவரிடம் லேசர்கத்தி இல்லை, ஆரம்பித்தில் உபயோகிக்கவும் தெரியவில்லை, மற்ற இருவரிடமும் இருக்கு.
Book Fair: Its a great one. I have bought many during all past ones. Now I am into so much of e-books, I am reluctant to buy more and add them. maintaining them is not easy. My sony reader is chic to use from parthiban kanavu(project madurai) to cloud computing and social media.
Wish I can approach all publishers to act soon and get all books digital and that would be a great service to readers and the language as well. Today's digital natives, I am sure, are not going to go around in such traffic and pick their books for sure. Wish the trend setter Vathiyar was here to drive this point faster.
Look forward to such virtual book fairs.
அந்த 3 மினிட்ஸ் வீடியோல முதல் ஸீன்லயே பின் பாக்கெட்ல லேசர் கத்தி இருக்கறாப்ல காமிக்கும்போது எதுக்கு துப்பாக்கி வச்சுண்டு துரத்தணும்.முதல்லயே அத உபயோகிக்க முடியுமே
நல்லா இருக்குங்கோ...
இன்னும் ”நெடுநல் வாடை” காற்றே வீச ஆரம்பிக்கல, சரி இப்போ ”கம்பரோட கவி” யாவது பாடுவீங்களா அண்ணே! ;)
வீடியோ சூப்பர்! பதில் தான் தெரியல!
ஜே.கே ஆஹா ஒஹோ ரகம் கிடையாது. ஆனால் பைலட்டின் அத்தனை மூவ்களையும் சொல்லியிருப்பார் சுஜாதா. டிபிக்கல் கமர்சியல் சினிமா போலிருக்கும். ஹாப்பி ரீடிங்.
நல்ல கச்சேரி. முத்தத்தில் (நான் எதிர்பார்த்த) தகவல் இல்லாவிட்டாலும் மொத்தத்தில் சுவைதான். ஜேகே வை விட வானமெனும் வீதியிலே நல்லா இருக்கும்.
திண்ணை கச்சேரி நல்லா இருக்குதுங்க அண்ணா :)
எல்லா வூட்லயும் புக் வாங்குனா திட்டுறாங்க.. என்ன பண்ணலாம்.. :)
@பத்மநாபன்
தொடர்ந்து வடை பெற்று சாம்பியன் என்ற பட்டத்தை பெற வாழ்த்துக்கள். நன்றி பத்துஜி ;-)
@Porkodi(பொற்கொடி)
இந்த வீடியோ மொத்தம் மூன்று நிமிடங்கள் ஓடுகிறது. அவன் ஓடிப்போய் தலை கொண்டு வந்தவுடன் மூன்று நிமிடத்திற்கு மேலாக டயம் ஆகிறது என்று சொல்கிறார். சொல்ல வந்த விஷயத்திற்கு மூன்று நிமிடம் தான் படம் எடுப்பேன் என்று சொன்னது பெரிய தப்பு. பாக்கி எல்லாம் நீங்க சொன்னது தான். ஆனா கொடுமையா இல்லை.. பார்க்கலாம். ;-)
கடைசி தாத்தா ஆர்ட் வொர்க் கிடையாது.. படம் புடிச்சதுதான்.. ;-)
@தினேஷ்குமார்
பரவாயில்லை தினேஷ். உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)
@raji
சூப்பர் லிஸ்ட் மேடம். நம்மூரு ஆட்கள் யாரும் இல்லையோ? வீடியோ தொரந்திடுச்சுன்னு நினைக்கறேன்.. கருத்துக்கு நன்றி ;-)
@பத்மநாபன்
ஒன்னு சொன்னா இன்னும் ரொம்ப டென்ஷன் ஆயிடுவீங்க பத்துஜி. ஆபிசில் இன்று பர்மிஷன் வாங்கிக்கொண்டு பொய் இன்னும் ரெண்டு புத்தகங்கள் வாங்கினேன். வெறி இன்னும் அடங்கலை... ;-) ;-)
கம்பன் வந்தவுடனே எங்க வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் போலருக்கு.. இப்பதான் டீப்பா பார்க்கறேன்.. அசத்தல்... கம்பனை அசத்தல்ன்னு சொன்ன அசத்து நானாகத்தான் இருப்பேன். ;-)
பாரதியின் கையெழுத்து பிரதி உட்பட ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். பாரதியின் எல்லா ஆக்கங்களையும் கால வரிசைப் படி போட்டிருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறப்பு. நேரம் கிடைக்கும் பொது படித்ததில் பிடித்தது லேபிளை நிரப்புவேன்... நன்றி ;-)
@பத்மநாபன்
ஆமாம் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் பார்க்க முடியுது.. மூணு நிமிஷந்தானே.. :-) ;-)
@யோகன் பாரிஸ்(Johan-Paris)
உயிர்மை ஸ்டாலில் சாமியார் சரசம் சல்லாபம் பக்கம் என் கை திரும்பியது... பக்கத்தில் என் மனைவி கடைக்கண்ணால் பார்த்து முகத்தை சுளித்தார்கள். ஏற்கனவே ஜீரோ டிகிரி வீட்டில் இருக்கிறது. போன முறை நிறைய வாங்கினேன். இம்முறை புதுமைப்பித்தன், லா.ச.ரா, தி.ஜா, சுஜாதா என்று பட்டியல் நிரம்பி விட்டது. ;-) ;-)
@எல் கே
முத்தக் கலை ஒரு ஆதி கலை என்று இன்னும் நிறைய அந்த அம்மணி எழுதியிருக்கிறார். நெட்டில் கொஞ்சம் படித்தேன்.. நிறைய அபூர்வமான விஷயங்கள் இருக்கிறது. ;-)
@வெங்கட் நாகராஜ்
என்னது ஒரு மூட்டை ஆணியா? நல்ல..... நல்ல.. ஒன்னும் இல்லை ரொம்ப நல்லவர் நீங்கன்னு சொன்னேன்... பாராட்டுக்கு நன்றி ;-)
@புவனேஸ்வரி ராமநாதன்
பொற்கொடிக்கு அளித்த பதிலில் போட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் தான். நன்றி ;-)
@Varadh
Though I am supporting e-books, black letters printed on white paper attracts me more. By turning page by page you are traveling with the content. ;-)
@raji
இதுவும் நல்ல கேள்விதான் ;-)
@MANO நாஞ்சில் மனோ
முதல் வருகை நல்வரவாகுக... பாராட்டுக்கு நன்றிங்க.. ;-)
@Balaji saravana
நெடுநல்வாடை ரொம்ப தாத்பூட்டுன்னு இருந்தது.. எளிமையா எனக்கு புரியறா மாதிரி யாராவது போட்டா படிச்சுட்டு பதியறேன். கம்ப ராமாயணம் சூப்பர். நிச்சயம் நிறைய எழுதுவேன்.. ;-)
@வித்யா
ஒரு முன்னோட்டம் கொடுத்துடீங்க.. நன்றி. படிச்சுட்டு சொல்றேன்.. ;-)
@ஸ்ரீராம்.
உங்க எதிர்பார்ப்பு என்னான்னு சொல்லுங்கண்ணா... நிறைவேத்தி வச்சுருவோம்... ;-)
@இளங்கோ
அதானே.. ஏன் அப்படி... ;-)
காக்டெய்ல் பதிவு.. எல்லாவிஷத்தையும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க.. எல்லாமே கலக்கல்
@கவிதை காதலன்
முதல் வருகைக்கு நன்றி.
//எல்லாவிஷத்தையும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க//
பயமா இருக்கு.. எல்லா விஷயத்தையும் அப்படின்னு தானே சொல்ல வந்தீங்க...;-)
சிலப்பதிகாரம் எளிய அறிமுகம்.. என்னிடம் இருக்கு RVS. எங்கிட்டருந்து வாங்கிக்குங்க, புக்குக்கு மேலே பத்து ரூபா போட்டுக் குடுக்கறேன்.. வேண்டாம்னு சொல்லாதீங்க. ப்லீஸ்.
ம்னுன்பி ம்னுன்மு த்தைத்தத்மு னுகுக்கி தாத்டுகொ க்டிபப்எ கேங்எ திருப்பிப்போட்டிருக்கார் நம்ம ஊர் வா. படிச்சதில்லைனா படிச்சுப் பாருங்க. உள்ளூர் வெண்ணை.
@அப்பாதுரை
நான் படிச்சுட்டு சொல்றேன். என்னைப் போன்ற எல்.கே.ஜி மக்களுக்கு தகுந்தவாறு வாத்தியார் எழுதியிருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ;-) வேறு ஏதாவது ஆசிரியர் எழுதிய புத்தகம் சொல்ல முடியுமா? இளங்கோவடிகளை தவிர்த்து.. ;-) ;-) ;-)
@அப்பாதுரை
// உள்ளூர் வெண்ணை// அப்படின்னு வாத்தியார் எழுதிய கதையா? தெரியலையே.. ;-)
அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html
அதை எப்படி சார் ஓட்டைன்னு சொல்ல முடியும்? சினிமாவிலயோ சீரியல்லயோ கூட தான் 2 வருஷமா காதலிக்கறோம்னு 2 நிமிஷத்துல சொல்வாங்க, இல்ல கர்ப்பமா இருக்கேன்னு 1 வருஷமா காமிப்பாங்க.. அதுக்கு அர்த்தம் சுவாரசியமான விஷயங்களை மட்டும் காமிப்பாங்கங்கறது தானே.. அதே மாதிரி இங்கயும் அவங்க 2 சுத்து எக்ஸ்ட்ராவா சுத்திருப்பாங்க நமக்கு தான் காமிக்கலை! ;)
@Porkodi (பொற்கொடி)
சினிமாவும் குறும்படங்கள், கலைப்படங்கள் போன்றவைகளும் ஒன்னான்னு தெரியலை.. ஏன்னா அந்த ஒழுங்கிலிருந்து மாறுபட்டு வித்தியாசமா எடுக்கறோம் அப்படின்னு தானே சொல்றாங்க...
இல்ல... இந்த மூணு நிமிஷம் எப்படி இருக்குன்னா... டி.ஆர். பாட்டுல கர்ப்பம் அப்படின்னு வந்தா உடனே இடுப்பை பிடிச்சுகிட்டு ஒரு கர்ப்பஸ்த்ரி நடந்து வர மாதிரி காமிப்பார். அது மாதிரி மூனு நிமிஷம் அப்படின்னு டைட்டில் வச்சு கரெக்க்டா மூனு நிமிஷம் படம் எடுக்கணுமா? ...சுவாரஸ்யமா இருக்கணும்ன்னா இன்னும் கொஞ்சம் கூட டயம் எடுத்துக்கலாமே.. அதைச் சொன்னேன்..
நீங்க சொல்றா மாதிரி.. இப்பெல்லாம் மெகா சீரியல் ரெண்டு வருஷத்து நிகழ்ச்சிகளை ரெண்டு வருஷம் காமிக்கறாங்க....
ஒரு கொழந்தை பொறந்து அஞ்சு வயசு ஆகும்போது.. ஒரு வயசுல என்ன பண்ணிச்சுன்னு அதே சீரியல்லேர்ந்து காமிப்பாங்க... முடியலை... ;-)
@கக்கு - மாணிக்கம்
மாணிக்கம்...பார்த்தேன்.. பார்த்தேன்.. டுபாக்கூர்ஸ் யுனிவர்சிட்டி.... டாக்டர் பட்டம் வாங்குமளவுக்கு நான் இன்னும் முன்னேறவில்லை.. நன்றி அண்ணாத்தே.. ;-) ;-)
வெளியூர் நெய்யைப் பத்தி எழுதினீங்களே, உள்ளூர் வெண்ணை இருக்குதேனு சொன்னேன்.
வா=வாத்சாயனர்.
விடியோ நல்ல catchy tune!
என்ன இப்படி கேட்டீங்க? ஜவஹர் எழுதின சிலப்பதிகாரம் மர்ம நாவல் படிங்க. பிரமாதமா இருக்கு. பதிப்பகம் ஒழுங்கா மார்கெட் செஞ்சாங்கன்னா அவார்ட் கிடைக்கும்னு தோணுது. பழைய கதையை வித்தியாசமா எழுத முடியுமான்னு பாத்தா மனுசன் வித்தியாசத்துக்கு மேலே ரெண்டு எட்டு போயிருக்கார்.
@அப்பாதுரை
தகவலுக்கு நன்றி தலைவரே... படிக்கறேன்..
வா. மேட்டர் யார் நல்லா பப்ளிஷ் பண்றாங்க? ;-)
நீங்களும் அட்டெண்டன்ஸ் போட்டுடீங்களா?ரொம்ப பெரிய பெரிய
புத்தகங்களா வாங்கி இருக்கீங்க.சீக்கிரம் படிச்சுட்டு புத்தக விமர்சனப் பதிவு எழுதுங்க.
Post a Comment