சென்ற வருஷத்திய உங்களுடைய முக்கிய நிகழ்வுகளை நீங்கள் உங்கள் திருக்கரங்களால் எழுதி இந்த மண் பயனுறச் செய்க என்று ஒரு தொடர் பதிவு எழுத அன்புத் தம்பி பாலாஜி சரவணா மிகவும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டார். இருக்கும் மூளையை கசக்கி பிழிஞ்சு ரொம்பவும் யோசிச்சு பார்த்தா ஒன்னும் தோணலை. எங்கப்பா எப்ப அர்ச்சனையை ஆரம்பித்தாலும் அரைத்துணி மறந்த பய என்று தான் தொடங்குவார். நமக்கு இது ஒன்றே ஞான பீட விருதுக்கு சமானம். வாழ்க்கையில் மறப்பதும் மன்னிப்பதும் தேவ காரியங்கள் என்று சொல்வார்கள் என்று அடாவடியாக பேசி என் கட்சியை பலப்படுத்துவேன். அதனால இன்னின்னிது இன்னின்னிக்கி இன்னார் இன்னாரால் இப்பிடிப்பிடி நடந்தது என்று கால அகர வரிசைக்கிரமமாக எழுதுவது மிகச் சிரமம். தம்பி அழைத்து எந்தத் தொடர் பதிவும் எழுதாததால் அவர் அன்பால் சிக்குண்டு முடிந்தவரை ந்யூரான்களை பிச்சு பிராண்டி எதெது நினைவுகளின் மேல் அடுக்குகளில் இருக்கிறதோ அதை இங்கே தருகிறேன்.
பழங்கதைகள் பேசி திரிந்ததை கொஞ்சமும் நிறுத்தாமல் நான் எழுதியும் துன்புறத்த ஆரம்பித்தது இரண்டாயிரத்து பத்தில் தான். இப்படி எழுதிய சொத்தாக பத்து போல நூறு நூறு நண்பர்களை பெற்றதும் இந்த இரண்டாயிரத்து பத்தில்தான். இலக்கின்றி போக்கேற்று எது தோணுகிறதோ அதை எழுதுகிறேன். ரசித்து கருத்துரைத்தால் மிகவும் நிறைவாக உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாம் போக அப்பாஜி சொன்னது போல இது ஒரு வடிகால். டென்ஷன் நிறைந்த சமயங்களில் நண்பர்களின் வலை வீட்டிற்கு சென்று மேய்ந்து விட்டு வந்தால் கொஞ்சம் மனசு ஆறுகிறது. அயர்ச்சி நீங்குகிறது. பின்னூட்டத்தில் கும்மி வலுக்கிறது.
ஆபிஸில் நிறைய புது ப்ராஜெக்ட்கள். தொடர்ந்து டைரியை கையில் தூக்கிக்கொண்டு ரூம் ரூமாக விரைந்த/விரையும் கூட்டங்கள் நிறைந்ததாக அமைகிறது ஆபிஸ் வாழ்க்கை. புது திட்டங்களுக்கான அலவலாவல்கள், திட்ட மாதிரிகள் என்று இந்த பத்து ஜிக்சா புதிர் போல என்னை பிய்த்து எறிந்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் லேசான தூறல் போல போட ஆரம்பித்த வேலைகள் முழு வேகம் பிடித்து இப்போது சூறாவளியாய் வீசுகிறது. அதிகாலையில் எழுந்து பல் தேய்ப்பது தெரிகிறது அப்புறம் நாள் எப்படி நகர்கிறது என்று தெரியாமல் படுக்கையில் தொப்பென்று விழும் வேளை வந்து விடுகிறது. இதற்க்கு நடுநடுவே புது கமிட்மென்ட்டான பிளாக் வேறு. வலையுலக சொந்த பந்தங்களும் நம்மளை நன்றாக உசுப்பி விட்டதால் முடிந்தவரை இரவு பொழுதுகள் ப்லோகும் கையுமாக நகர்ந்தன. நல்ல பல நண்பர்கள், எழுத்தாளர்கள், ரசிக அன்பர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் என்று பல நல்ல சேர்க்கை ஏற்ப்பட்டது எனக்கு வாய்த்த புண்ணியமே.
போன வருடம் முழுக்க சென்னைக்குள் எழுச்சி மாநாடு எதுவும் எவரும் நடத்தவில்லை. அதனால் ரோடிலேயே குடியிருக்கும் வாய்ப்பும் அவ்வளவாக அமையவில்லை. மாநாட்டிற்கு பதிலாக பெருமழை பெய்து கொஞ்சம் விளையாட்டு காட்டியது. எதிர் நீச்சலடித்து தப்பித்தோம்.
மற்றபடி, சென்றவருடம் முழுக்க
(தம்பி திருப்தியா?)
கடேசியா பார்த்தா கிச்சன் குயீன் புவனேஸ்வரி ராமநாதனும் இந்தப் பதிவு எழுத அழைத்திருக்கிறார்கள். எழுதியாச்சு. ஓ.கே.
-
போன வருடம் முழுக்க சென்னைக்குள் எழுச்சி மாநாடு எதுவும் எவரும் நடத்தவில்லை. அதனால் ரோடிலேயே குடியிருக்கும் வாய்ப்பும் அவ்வளவாக அமையவில்லை. மாநாட்டிற்கு பதிலாக பெருமழை பெய்து கொஞ்சம் விளையாட்டு காட்டியது. எதிர் நீச்சலடித்து தப்பித்தோம்.
மற்றபடி, சென்றவருடம் முழுக்க
- ஆட்டோக்காரர்கள் அதேபோல் கட் அடித்து தங்கள் 'முளு தெறமையை' காட்டி மற்றவர்களை அந்தர்பல்டி அடிக்க வைத்தார்கள்.
- சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல் மாநகர ஏ.ஸி பஸ்கள் பிரவாகமாக ஓடின.
- நடைபாதை வரிக்குதிரை கிராஸிங்கில் பாதசாரிகளை கடக்க விடாமல் எல்லா வாகன ஓட்டுனர்களும் தெனாவெட்டாக திரும்பினார்கள்.
- ஹெல்மெட் அணிந்து சாலைத் தீவிரவாதிகள் போல் வண்டிகளுக்கு இடையே புகுந்து பைக்கோடு ஸ்ட்ரீட் டான்ஸ் ஆடினார்கள். ஒழுங்காக ஒட்டியவர்களை சற்றே ஆட்டினார்கள்.
- பஸ்களில் ஐம்பது பைசா சில்லரை பாக்கி தராமலும், "முன்னாடி டிக்கெட் வாங்கு..மேல ஏறு... சீக்கிரம் இறங்கு.. பின்னால வா..." என்று ஒருமையில் பேசி வயதுக்கு மரியாதை தரமாலும் தங்கள் அதிகாரத்தை கண்டக்டர்கள் காண்பித்தார்கள்.
- ரேஷனில் வழக்கம் போல ஒரு கிலோ கல் தராசில் போட்டு துல்லியமாக முக்கால் கிலோ ஜீனி அளந்தார்கள்.
- மக்கள் துன்பம் போக்க எல்லோருக்கும் இன்புற்றிருக்க வீடு வீடாக கலர் டீ.வி கொடுத்தார்கள், வாங்கிய டீ.வியில் மனதைப் பிழியும் சீரியல் பார்த்து எல்லோரும் கோரஸாக அழுதார்கள்.
- காந்தி ஜெயந்தி அன்று கள்ளத்தனமாக சாராயம் விற்றார்கள்.
- ஆட்சிக்கு வரும் முன் ஒன்றாக சேர்ந்து ஓட்டு கேட்டவர்கள் அதிகாரப் பங்கில் குழப்பம் வந்து ஒருவரை ஒருவர் புழுதிவாரி தூற்றிக் கொண்டார்கள்.
- விற்பனை பிரதிநிதிகள் பஞ்சபூதங்களையும் சாட்சியாக வைத்து சத்தியம் செய்து தங்கள் பொருட்களை தரமானது என்று விற்றார்கள்.
- ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் என்ற இந்திய விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கிடைத்து தமிழனின் பெருமை உலகறிந்தது.
- லட்ச ரூபாய் கார் ஒன்றை அறிமுகப்படுத்தி பம்பாய் பிச்சைக்காரர்கள் கூட கார் வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்தார் ரத்தன் டாடா. சில கார்களில் பின் சீட் பற்றிக்கொள்கிறதாம். அதனடியில் தான் எஞ்சின் வைத்திருக்கிறார்கள். சூடு தாங்கவில்லை. நானோ நோ நோ என்கிறார்கள்.
- அரசியல்வாதிகள் குடும்ப சகிதமாக வாழ்க்கையில் பொருளாதார பொலிவு பெற்று மேன்மேலும் உயர்ந்தார்கள். பணப் பட்டுவாடா சண்டையில் வீதியில் அடித்துக் கொண்டார்கள்.
- காயமே இது பொய்யாடா என்று சொன்னாலும் வெங்காயம் விறுவிறு என்று விலையேறி இது மெய்யடா என்று எல்லோர் பி.பியையும் ஏற்றியது.
- கூகிளில் சென்ற வருடம் முழுவதும் இந்தியாவிலிருந்து கீழ் கண்டவற்றை பிரதானமாக தேடினார்கள்...
Most popular search term of the yearஇனி வரும் வருடங்களும் இப்படியே தான் போகும் என்பதில் உங்களுக்கு துளிக்கூட சந்தேகம் வேண்டாம். மீண்டும் 2012 ஜனவரியில் இதே போன்ற ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் வணக்கம் கூறி இந்தப் பதிவில் இருந்து விடை பெறுவது உங்கள் ஆர்.வி.எஸ். நன்றி.
“Songs”
Most frequently searched brand name
“Nokia”
Fastest-rising search term
“IRCTC login”
Top “how to” search
“Get pregnant”
Most popular movie
“Kites”
Fastest-rising person
“Aruna Shields”
(தம்பி திருப்தியா?)
கடேசியா பார்த்தா கிச்சன் குயீன் புவனேஸ்வரி ராமநாதனும் இந்தப் பதிவு எழுத அழைத்திருக்கிறார்கள். எழுதியாச்சு. ஓ.கே.
-
29 comments:
ஹா ஹா.. பரம திருப்தி அண்ணா!
உங்களின் ஆணிகளுக்கு நடுவில் பதிவு போட செய்ததற்கு எனக்கும் ஒரு பங்குண்டு என நினைக்கும் போதே சந்தோசம் கிளம்புகிறதே ;) ஏதோ என்னால முடிஞ்சது ;)
உங்களோட நினைவு முழுவதும் தமிழ் நாட்டு மக்கள் மேலயும் சென்னை வாழ் மக்களின் பிரச்னைகளின் மீதுமே இருந்திருக்கிறதே அண்ணே!
மற்றபடி இந்தவருடமும் உங்கள் எழுத்துப் பிரவாகத்தில நாங்க நீந்த, நீங்க ஆவன செய்ய வேண்டும் ;)
ஒங்க திறமைக்கு இன்னும் சிறப்பா திரும்பி பாத்திருக்கலாம்..
நகைச்சுவை மிஸ்ஸிங்.. படங்கள், வீடியோக்கள் மிஸ்ஸிங்..
ஒகே அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..
நன்றி.
மாறாத வழக்கங்களைக் கொண்ட நாட்களில் மாறிய விஷயங்கள் மட்டும் மனதில் நிற்கின்றன. (தத்துவம் நம்பர் 1350)
ம்ம்ம்ம்.
ரொம்ப விரக்தியோ ., எல்லாமே 'நெகடிவ்'ஆ இருக்கு.
கவலை வேண்டாம். எல்லாம் சரியாயிடும்.
ரகு.
அது எப்போவுமே ஆணி பலமா இருக்கும் போது தான் புலோக் ஆசை நெட்டித் தள்ளும்.. :))
உங்க பதிவுகளோட ஸ்பெஷலே படிக்கிறவங்கள சந்தோஷப்படுத்துறது தான். அது எப்போதும் தொடர வாழ்த்துக்கள்.
இந்த வருடத்து இசை பத்தி ஒன்னும் எழுதலையே.. இது நியாயமா ? ராகமணிக்கு இது அழகா ?
இன்னின்னிது என்றில்லாமல் என்னின்னதையும் எடுத்து ,விரைவில் விரைவில் வார்த்தைகளை கோர்த்து வலை பின்னி பதிவிடும் ஆர்.வி.எஸ் க்கு
ஆணி ஆதிக்கம் எனும் பெயரில் சிறு சோதனை ... அதை வென்று தினம் ஒரு பதிவு எனும் சூர்ய பதிவு நிலையை 2011 லும் விரைவில் பெறுவார்..
@Balaji saravana
ஞாயிற்றுக்கிழமை தான் பதிவுக்கு வரணும்ன்னு நினச்சேன்.. அதுக்குள்ள வந்து அரைகுறையா ஏத்திட்டேன்.. ;-)
@Madhavan Srinivasagopalan
மாதவா.. ரொம்ப வொர்க் ப்ரெஷர்.. பரவாயில்லை அடுத்த பதிவுல அட்ஜெஸ்ட் பண்ணிடுவோம்.. நன்றி ;-)
@ஸ்ரீராம்.
வேலையே இல்லாமல் வேலை வந்துடுச்சோ... ஹி...ஹி.. தத்துவத்துக்கான அர்த்தம் தேடித் பார்த்தேன்... நன்றி ;-) ;-)
@ரகு.
நெகடிவ்லாம் ஒன்னும் இல்லை ரகு சார்! நாம எப்பவுமே ஃப்ரீ பர்ட் ;-) ;-) கருத்துக்கு நன்றி ;-)
@Porkodi(பொற்கொடி)
ரொம்ப ரொம்ப ரொம்ப உண்மை.. என்ன பண்றது.... ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்.. ;-) ;-)
@புவனேஸ்வரி ராமநாதன்
ரொம்ப நன்றிங்க.. ;-)
@சிவகுமாரன்
நேரம் இல்லை சிவா குமரன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு போட்டா ஆறிப் போய்டும்ன்னு அவசர அவசரமா போட்டேன்.. இனிமே கொஞ்சம் கேர் எடுத்து செய்வேன். நன்றி ;-)
@பத்மநாபன்
வாழ்த்துக்கு நன்றி பத்துஜி! ட்ரை பண்றேன்.. ஒரு நாளுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கிடைக்குமான்னு பார்க்கணும்... ;-);-)
#10 யுகக்கணக்குல மாறாது.
போன வருட நினைவுகள் அருமை !!
('ஏன் இளங்கோ டெம்ப்ளேட் கமெண்ட்' அப்படின்னு நீங்க கேட்பீங்க, எனக்கும் என்ன எழுதறதுன்னு தெரியலை.. :)
//#10 யுகக்கணக்குல மாறாது// அரசல் புரசலா புரியுதுங்க அப்பாதுரை..
நான் வானியல் ஆர்வம் கொண்டவன் நட்சத்திரங்களை ரசிப்பவன்...
(ஆர்.வி.எஸ்..ஆணியோட ஆணியா இந்த மண்டகாச்சலையும் பொறுத்துக்கோங்க...)
rombave nalla compilation! :)
happy new year!!
2011 nalla enjoy pannikonga... 2012-la ulagam azhinjidumaame!!???
2011-ல் 2010-ன் நினைவுகள் வைத்திருப்பது தவறு என்று நினைத்தாலும், பதிவுலகத்திற்காய் அதைத் தோண்டி எடுத்து ஒரு பதிவு போட்டதற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஆர்.வி.எஸ்..
இனிதாய் கழிந்த 2010ன் நினைவுகளோடு வரவேற்போம் புதிதாய் பிறக்க இருக்கும் 2011 ஆங்கில புத்தாண்டை...
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு 2011 நல்வாழ்த்துக்கள்...
HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html
கோலிவுட் - டாப்-20 நடிகர்கள் http://edakumadaku.blogspot.com/2010/12/20.html
@அப்பாதுரை
ஆமாங்க தலைவரே!! பத்துல உங்கள் தொடர்பு ஏற்பட்டது ரொம்ப சந்தோஷம். ;-)
@இளங்கோ
ஹி ஹி..என்ன ஒரு சமாளிப்பு.. நன்றி ;-)
@பத்மநாபன்
நீங்க வானவில்லையும் ரசிக்கிற ஆசாமி தானே!!! ;-)
@Matangi Mawley
Thank you ma!!
என்னது பன்னெண்டுல உலகம் அழிஞ்சுடுமா.. இப்படி முன்னாடி ஒரு தடவை சொல்லி வீடு வாசெல்லாம் வித்துட்டு வீதிக்கு நிறைய பேர் வந்துட்டாங்க... ஹி ஹி ;-) ;-)
@வெங்கட் நாகராஜ்
அந்த தொடர் பதிவின் விதி தான் வெ.நா. மற்றபடி நான் எழுதிய கடைசி பட்டியல் தொடரும் எல்லா வருஷங்களுக்கும் பொருந்தும்.. சரியா? ;-)
@R.Gopi
நன்றிங்க கோபி. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். அந்த ரெண்டு பதிவையும் ரசித்து படித்தேன்.. நன்றி ;-)
likewise, RVS. உங்க இமெயிலை எனக்கு அனுப்புங்களேன்?
Post a Comment