இசைப் புயலுக்கு இன்று பிறந்த நாள். அலுவலக ஆணிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக விஸ்தாரமாக எழுத முடியவில்லை.. ஆகையால் வழக்கம் போல நம்மால் முடிந்த இசைக் கைங்கர்யம். எனக்கு பிடித்த காதை அறுக்காத, கிழிக்காத அம்சமான, சட்டென்று நினைவுக்கு வந்த பாடல்கள் சில.. ஆஸ்கார் தமிழன் ரஹ்மான் பாடல்கள் ஐம்பது பதிவுகள் தாங்கும்.. இப்போதைக்கு வாழ்த்துக்காக கொஞ்சம் இங்கே..
உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக.. கிழவிகள் கும்மி அடித்து பாட மணி எடுத்த ரோஜாவில் இருந்து.. ருக்குமணி..ருக்குமணி... அந்த லைட்டிங்கும், அருவியும் அடாடா.. எஸ்.பி.பியின் அசத்தல் அழைப்பு குரலில்....
இந்திரா.. தொட தொட மலர்ந்ததென்ன.. பூவே தொட்டவனை மறந்ததென்ன...
கிழக்கு சீமையிலே... ஆத்தங்கர மரமே..,
புதிய முகம்..... பக்தி பாடல் பாடட்டுமா.. நித்தி இங்கே ஆடட்டுமா..போடலாம் என்று இருந்தேன்... பரவாயில்லை.. ஜூலை மாதம் வந்தால் கேளுங்கள்...
ஜென்டில்மன்... உசிலம்பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி... குழல் ஊதி சுளுக்கு எடுக்கும் பாட்டு...
திருடா..திருடா.. சாகுல் ஹமீது குரலை முதலாகக் கொண்டு போட்ட பாடல். இசைக்கருவிகளின் ஆதிக்கமே இல்லாத பாடல்.. வைரமுத்து... ராசாத்தி என் உசுரு என்னுதில்லை..
உழவன்.. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ... பாடலும்.. அனுபவித்து பாடிய எஸ்.பி.பியும் என்றென்றும் வாழ்க..
வண்டிச்சோலை சின்னராசு... இது சுகம் சுகம் இது.. மீண்டும் மீண்டும்.. சின்ன குஷ்பூ என்று பேசப்பட்ட சிவரஞ்சனி.. நடித்த.. பாடல்.. நல்ல மெலடி..
பாம்பே.. பூவுக்கேன்னா பூட்டு கற்றேக்ன்ன ரூட்டு.. ஹல்லா குல்லா.. மனிசா.. அரவிந்த்... மணி.. வேறன்ன..
டூயட்.... அஞ்சலி..அஞ்சலி.. புஷ்பாஞ்சலி... சாக்ஸ்.... அற்புதம்..
பின் குறிப்பு: இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ப்ளாக் பக்கம் தலை வைத்து படுக்க முடியாது போலிருக்கிறது. இது பதினைந்து நிமிடத்தில் பதியப்பட்டது. பத்துஜி என் கடமையுணர்ச்சியை பாராட்டலாம். இரவு நேரங்களில் புதியதாக பதியலாம் என்றால் லேட்டாக செல்வதால் அதற்க்கும் அங்கே தடா. கஞ்சா அபின் அடித்தவன் போல திரும்ப திரும்ப எண்ணம் எல்லாம் வர்ணமயமாக வலைப்பூக்கள் இருந்தாலும்..... நாம் சம்சாரி.. உழைக்கணும்.. நாலு காசு சம்பாதிக்கணும்.. வேறுதுவும் சொல்வதற்கில்லை. இன்னும் புக் ஃபேர் வேற போகணும்.. ஹும்.. ஹும்.. பார்க்கலாம்... பை.
51 comments:
நானும் ஆணியும் என்று ஒரு பதிவு போடவும்
@எல் கே
நல்ல ஐடியா எல்.கே. நிச்சயம் செய்யறேன்.. ;-) ;-)
nalla selection! :)
இசைப்புயல் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.
பிரமாதமான தேர்வுகள். பாடல்களும் அவற்றின் படம்களும் என்றும் பேச, ரசிக்கபடுபவை இல்லையா?
ஆணி அதிகமிருந்தாலும் இங்கு வராமல் இருக்க முடியுமா R V S ?
ஒரே சமயத்தில் இத்தனை வீடியோக்களை போட்டதால் உங்கள் பக்கம் திறக்க அதிக நேரம் எடுக்கிறது கண்ணா.
அதுசரி, ஆசை யாரை விட்டது. :)))
Good selection.
// ஆணிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக விஸ்தாரமாக எழுத முடியவில்லை.. //
இப்போ மட்டும் என்ன வாழுதாம்..
சுருக்கமா எழுதினதா நெனைப்பா..
இருந்தாலும்.. பின்குறிப்பு ரொம்ப பிராக்டிகலா இருக்கு..
எப்போதும் போல் தேர்வுகள் அருமை.
எல்லா பாட்டுமே செம தான்! LK கருத்தை ரிப்பீட்டிக் கொள்கிறேன்! :)
ரஹ்மானுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உங்களுக்கு.. இந்த வரிகள்...
ஆணிகள் இல்லா உலகம் கேட்டேன்.. !! :)
HAPPY NEW YEAR!!!
:-))
கஞ்சா அபின் அடித்தவன் போல திரும்ப திரும்ப எண்ணம் எல்லாம் வர்ணமயமாக வலைப்பூக்கள் இருந்தாலும்..... நாம் சம்சாரி.. உழைக்கணும்.. நாலு காசு சம்பாதிக்கணும்.. வேறுதுவும் சொல்வதற்கில்லை.
ஓகே நீங்க வாங்க ஆமாம் அண்ணே நாளு காசு மட்டும் போதுமா
புயல் வேகத்தில் செலக்ட் செய்த புயல் பாட்டுக்கள் அனைத்தும் சூறாவளி....
ஆணிகள் கூடினாலும் கடைமை தவறாத ஆர்.வி.ஸ் ..
புயல் தமிழிலும் ஆஸ்கார் வாங்க வாழ்த்துக்கள்..
இசைப்புயலுக்கு இசையாய் ஒரு பிறந்த நாள் வாழ்த்து!. நன்று
ஆணிகளை சீக்கிரமே களைந்து விட்டு அடுத்த பதிவு போட வாழ்த்துகள்...
பாடல்களின் தேர்வு அருமை. பதினைந்து நிமிடத்தில் இட்ட பதிவா!!!!
பாஸ் நானுமொரு பதிவு போட்டிருக்கேன் வந்து பாருங்க...http://ragariz.blogspot.com/2011/01/arrahman-birthday-special.html
பெண்ணல்ல பெண்ணல்ல ....அருமையான பாடல்.
நல்ல செலக்ஷன்...
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...
@Porkodi(பொற்கொடி)
நல்ல நன்றி. ;-)
@கக்கு - மாணிக்கம்
ஆணியோ ஆனியனோ எது எப்படி இருந்தாலும் ப்ளாக் வராமல் இருக்க முடியவில்லை மாணிக்கம். ;-)
@VISA
Thanks ;-)
@Madhavan Srinivasagopalan
மாதவா.. இதுவே... அதிகமா.. என்னப்பா... எழுதறதே அதிகம் அப்படிங்கிறியா.. .. ஹிஹி .. சும்மா வெளையாட்டுக்கு.. நன்றி ;-)
@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றிங்க.. நீங்களும் பிசியோ.. நிறைய பதிவுகள் காணோம்.. ;-)
@Balaji saravana
சரி தம்பி.. உங்களோட தொடர் பதிவு வேற வெய்டிங்... நேத்திக்கு நடந்தது இன்னிக்கி மறந்துடும் நமக்கு.. நீங்க ஒரு வருஷம் நடந்தது கேக்குறீங்க.. பார்க்கலாம். ;-)
@இளங்கோ
ஆணிகள் இருந்தும் அடிபடாத உலகம் கேட்டேன். ;-)
நன்றி இளங்கோ. ;-)
@Chitra
Thank you! Wish you the same!! ;-)
@dineshkumar
நாலு காசு மட்டும் போதாது.. நாலு பேரும் வேணும்.. ஓ.கேவா தினேஷ்.. ;-) ;-)
@பத்மநாபன்
பின்னூட்டப் புயலின் வாழ்த்துக்கள் ரஹ்மானை சென்றடைந்திருக்கும்... நன்றி பத்துஜி! ;-)
@வெங்கட் நாகராஜ்
முயன்று பார்க்கிறேன்.. இப்போ உட்கார்ந்தால் முடிக்கும் பொது அகாலம் ஆகிவிடுகிறது.. வேலைப் பளுவினால் கண்ணை வேறு கட்டுகிறது.. பார்க்கலாம். ;-)
@கோவை2தில்லி
நம்ப முடியலையா.. நெசமாத்தான்.. இல்லைனா ஒவ்வொரு பட்டுக்கும் ஒரு பாரா எழுதி அறுத்துருக்க மாட்டேன்.. ;-) ;-)
@ரஹீம் கஸாலி
வந்து பார்த்தேன்.. நிறைய பாட்டு ஒத்துப் போகுது பாஸ்.. ;-) ;-)
@ஸ்ரீராம்.
மத்த பாட்டெல்லாம்... ;-)
@வித்யா
ஓ.கே நன்றி வித்யா.. ;-)
@அன்பரசன்
வாழ்த்திய அன்புக்கு வாழ்த்துக்கள்.. ;-)
//ஒரு பாரா எழுதி அறுத்துருக்க மாட்டேன்.//
இப்படி ஒரு நியாயஸ்தனை பார்க்கமுடியுமா..
என்னமோ சொன்னே தக்குடு...
(புரிஞ்சுட்டு லீடு கொடு தக்குடு... காலை வாரிறாதே )
பத்துஜி! என்ன ஆள் சேக்குறீங்களா? நியாஸ்தனை... ரொம்ப நல்லவன்னு.. ஆக்கிடாதீங்கப்பு.. ;-)
//நாம் சம்சாரி.. உழைக்கணும்.. நாலு காசு சம்பாதிக்கணும்..//
ஆர்.வி.எஸ் அண்ணே
இந்தியாவில் ஐ.டி மக்களுக்கு சொர்ணபிஷகம் செய்து வேலை கொடுப்பதை கேள்விப்பட்டேன். இன்று இங்கே ஒரு நியூஸ் வலைப்பதிவில் - இந்தியாவில் இருக்கும் கம்பெனிகளுக்கு ஐ.டி. செர்விசெஸ் பொருளாதார பெருக்கத்தால் இன்னும் அதிகம் தேவை. அமெரிக்கர்கள் நம் மென் பொருள் செர்விசெஸ் வாங்க விட்டாலும் ஜம்மென்று நடக்கும். அதை பராமரிக்க நல்ல குளோபல் experience கொண்ட அதிகாரிகள் தேவை என்று போட்டிருந்தது ? நானே இந்தியாவுக்கு யாராவது ஐம்பது லட்சமோ / ஒரு கோடியோ கொடுத்தால் பெட்டியை கட்டிக்கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகலாமா என்று பார்த்துகொண்டு இருக்கின்றேன் ?
அது சரி நீங்கள் எந்த கம்பெனிக்கு இப்படி உழைத்து கொட்டுக்கின்றீர்கள் ?
//"@ஸ்ரீராம்.
மத்த பாட்டெல்லாம்... ;-)
"//
உசிலம்பட்டி போன்ற பாட்டெல்லாம் பிடிக்காது. அஞ்சலி அஞ்சலி நல்ல பாடல் நான் குறிப்பிட்ட பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு!!
super collection sir!! :D
"Rahman Sir" is the greatest!
Jai ho!! :)
என் பெரியவன் "ரஹ்மானியாக்" !!
அவனை உங்கள் ப்ளாகை பார்க்க சொல்லறேன்.
ரஹ்மான் பாடல்களில் வார்த்தைகள் புரியும் மெலடிகளை தேடிப் பிடித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி ராகமணி. ( யப்பா.... ரசிகமணி ரேஞ்சுக்கு ஒரு பேரு கெடைச்சிருச்சு.).
ஆர்.வி.எஸ்...சார்...
அலுவலக ஆணிகளை தாண்டி இப்படி ஒரு அருமையான பதிவிட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
1) விருதகிரி
2) மன்மதன் அம்பு
இவ்ளோ ஆணிகளுக்கிடையே இந்த படங்களுக்கும் விமர்சனம் எழுதினா சந்தோஷப்படுவேன்...
@சாய்
என்னது அண்ணே! உழைக்கும் கரங்கள் அப்படின்னு புதுசா ஒரு படம் எடுத்தா நிச்சயம் என்னைத் தான் ஹீரோவாப் போடுவாங்க... அப்படி ஒரு கடின உழைப்பு.. என்னத்த சொல்றது.. ஹி ஹி... ;-)
@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்! ;-)
@Matangi Mawley
Thank you Matangi. ;-)
@சாய்
பாக்க சொல்லுங்க.. சபரிமலை சாமி ஐயப்பா மாதிரி இருக்குற உங்க ப்ரோபைல் ஃபோட்டோ சூப்பர்.. ;-)
@சிவகுமாரன்
ராகமணியா... அப்டி போடுங்க.. அவ்ளோல்லாம் தாங்காதுங்க.. மிக்க நன்றி கவிமணி சிவா குமரன். ;-)
தேசிய விநாயகம் பிள்ளைக்கு அப்புறம் நீங்கதான்.. ;-)
@R.Gopi
என்னது விருத்தகிரி விமர்சனமா.. ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா.. ;-) ;-) அம்பு கூட குறி தவறி போச்சுன்னு நிறைய பேர் சொன்னாங்க... எங்க வீட்ல போக வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க... பார்க்கலாம்.. நன்றி கோபி.. ;-) ;-)
உங்களோட கடமை உணர்ச்சியை பாக்கும் போது பெருமையா இருக்கு அண்ணா! எல்லாமே மணியான பாடல்கள் & உசிலம்பட்டி பாட்டுக்கு உங்க விளக்கம் சூப்ப்ப்பர்..:)
@ பத்பனாபன் அண்ணா - நீங்க சொல்லி தக்குடு எப்ப மாத்தி சொல்லிருக்கு!!..;)
@எல் கே கலக்குங்க கமெண்ட் போட்டு..
ஏஆர்ஆருக்கு பிறந்தநாள் விழாவெல்லாம் இல்லையா?
Post a Comment