Friday, December 17, 2010

என்னைக் கவர்ந்த பெண் குரல்கள்

கரும்பு தின்ன கூலியா? பிரபல பதிவர் எல்.கே பாடல் பதிவுன்னு சொன்னதும் விடிய விடிய கண் முழித்தாவது நெஞ்சை அள்ளும் பாடல் தொகுப்பு ஒன்று போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பெண்கள் குரலில் வரும் பாடல்கள் மட்டும் என்றதும் மண்டை முழுக்க ஜானகி, சித்ரா, வாணி, ஜென்சி, சுஜாதா, அனுராதா ஸ்ரீராம் என்று வந்து பாடிவிட்டு போனார்கள். மெதுவாக ஒவ்வொருவர் குரலாக என் காதுகளால் அசைபோட்டேன். 

ஏதோதோ எண்ணம் வளர்த்தேன் - சின்னக் குயில் சித்ரா. எண்ணங்களின் அலைகளில் கமலைக் காண்பிக்கும் பாலச்சந்தர். இசையராஜாவின் இளைய இசை. டாப் கிளாஸ்.



தூது செல்வதாரடி.. ஜானகி... புடவை கட்டத் தெரியுமா என்று குஷ்பூ என்ற பூஞ்சோலையை பார்த்து கமல் கேட்க...  விளைந்த ஒரு அற்புதமான பாடல்...



மல்லிகை என் மன்னன் மயங்கும்.. வாணி ஜெயராம்.. அடடா.. என்ன ஒரு வசீகரிக்கும் குரல். படுத்தும் ஒரே விஷயம் முத்துராமன் நடிப்பு... ஒன்று வேண்டும் என்றால் ஒன்றை இழக்க வேண்டும்.. ரைட்..ரைட்.. வழக்கம் போல் புன்னகை அரசி முப்பத்திரண்டு காட்டி அசத்துவார். (கருப்பு வெள்ளை போடவில்லை என்றால் என் வலையுலக வயோதிக நண்பர்கள் வைவார்கள்!!.)




தெய்வீக ராகம்...  ஜென்சி - ராஜா.. இதுவும் கமல்... பாட்டைப் பற்றிய வர்ணனை ஒன்றும் தேவை இல்லை என்று நினைக்கிறேன்... இந்த வேளைகளில் வந்தப் படங்களில் வரும் கமல் ரொம்ப பிடிக்கும். ரொம்ப பிடிக்கும்.. (இதில் நடித்த தீபாவையும் பிடிக்கும் என்று சொல்லவில்லை....)




தாலாட்டும் பூங்காற்று... கார்த்திக்கை மீசை எடுக்கச் சொல்லிப் பாடாய்ப் படுத்தும் நண்பர்களுடன் அவரைக் காதல் பாடு படுத்தும் பானுப்ப்ரியா... ஜானகி குயிலென்று கூவிய பாடல்..... 
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்...



இவள் ஒரு இளங்குருவி.. மற்றுமொரு ஜானகியம்மாவின் பாடல்.. ராஜாவின் இசையில் பிரம்மா படப் பாடல்.. குஷ்பூ துள்ளித்திரிந்து ஆடிப் பாடும் பொது மனது ஒரு இளம்பெண்ணின் கவலையற்ற வாழ்வு எத்தகையது என்று தெரிகிறது... 



மன்னன் கூரைச் சேலை. - ப்ரியதர்ஷன் இயக்கத்தில் காலாபானி என்று ஹிந்தியில் எடுத்து சிறைச்சாலை என்று தமிழில் வெளிவந்து வந்த சுவடே தெரியாமல் போட்டிக்குள் போன  படம். மலையாள மோகன்லால் மற்றும் தபு நடித்த இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் இன்னிசைத் தேன் சொட்டுபவை. சோலோ என்று சொன்னதால் சித்ராவின் குரலில்...




கண்ணாமூச்சி ஏனடா... ஐஸின் அட்டகாசம். எனக்கு இதில் வரும் கலர் காம்பிநேஷன்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். இரண்டாவது சரணத்திற்கு அப்புறம் நீல கலர் உடையில் வரும் ஐஸ் ஒரு அழகு மயில்.



இது ஒரு நிலாக்காலம்.. இந்தப் படத்தில் கமல் தேங்காய் சீனிவாசன் அடிக்கும் லூட்டிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். 
அர்ஜுனனுக்கு வில்லு
அரிச்சந்திரனுக்கு சொல்லு
திலீப்புக்கு தில்லு 
இந்த அட்ரஸ்ல போய் நில்லு
நான் சொன்னேன்னு சொல்லு..
என்று தேங்காய் ஒரு நகைச்சுவை சிதறல் விடுவார் பாருங்கள்... அற்புதம்.. ஜானகி இளையராஜாவின் சேர்ந்திசை கோலாகலம்.



சின்ன சின்ன வண்ணக் குயில் - மணிரத்னத்தின் மௌன ராகம் - நான் சொல்லத் தேவை இல்லை.. நீங்க தொட்டா கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு.. என்று சொல்லும் ரேவதி.. மைக் தொடாத மோகன் ...
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் பாயக் கண்டேன்... சித்ரா - ராஜா கூட்டணியின் இசை அற்புதம்.. பாடலின் ஆரம்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.




அன்பென்ற மழையிலே... ஆடியோ மட்டும் கேட்டாலே கண்களில் நீரை வரவழைக்கும் ஒரு அதி அற்புதமான பாடல். அனுராதா ஸ்ரீராம் உருப்படியாக பாடியது. ரஹ்மான் இசையில்.. அந்தப் பெரிய காந்தக் கண்ணழகி கஜோல் அரவிந்த்சாமியுடன் நடித்த மின்சாரக் கனவு படத்தில் இருந்து.... 



கண்ணன் வந்து பாடுகின்றான்..... பாலு மகேந்திரா படத்தில் ரெண்டு பொண்டாட்டி கட்டி அல்லல் படும் மோகன்... ராதிகா பாடும் இளையராஜா இசைப் பாடல்.



காற்றுக் குதிரையிலே.. ரஹ்மானின் அட்டகாசமான மெட்டுக்கு சுஜாதா பாடிய காதலின் வலியும் சோகமும் ததும்பிய பாடல்.. நல்ல உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார்.



சொல்லாயோ வாய் திறந்து... இசைப் பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டிய மற்றுமொரு ஜானகி இளையாராஜா கூட்டணியில் விளைந்த அற்புதப் பாடல். மேலும் அழகுக்கு அழகு தி.ஜாவின் மோகமுள் படப் பாடல்...


பின் குறிப்பு: பத்துப்பாட்டு போடுங்கள் என்று சொன்னாலும் பாட்டுக் கேட்டு பழகிய காது போதும் என்று மனதிற்கு சொல்லாமல் கை ஒத்துழைத்து ஒன்றிரண்டு மேலேயே போட்டிருப்பேன். இன்னும் குறைந்தது ஐந்து பதிவிற்கு இதுபோல தொகுப்பை போடலாம். இதோடு நிறுத்திக்கொள்கிறேன். நன்றி எல்.கே. எனக்கு பிடித்த வேலை கொடுத்ததற்கு. இவற்றையெல்லாம் விட எனக்கு மிகவும் பிடித்த குரல் என்னுடைய பாகம்பிரியாள், தர்மபத்தினி, அன்பு மனைவியின் சங்கீதக் குரல் என்று சொல்லி முடிக்கிறேன். (இந்தக் கடைசி வரியை எடுத்துக் கொண்டு கமென்ட் போட்டு தாக்குவதை தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். )

-


45 comments:

எல் கே said...

ஆமா அது என்ன பிரபலப் பதிவர் எல் கே ?? யார் அவரு ???

அருமையான தொகுப்பு ஆர்வீஎஸ். தூது செல்வதாரடி ,தெய்வீக ராகம் இரண்டும் என்னுடைய விருப்பப் பாடல்கள்

எல் கே said...

கடைசி வரி போடாமல் இருந்தால் இன்னிக்கு இரவு வெறும் பச்சை தண்ணிதான் .இது எங்களுக்கு தெரியும்

இளங்கோ said...

அனைத்துப் பாடல்களும் அருமை. ஒண்ணு ரெண்டு பாடல்கள் நான் இதுவரை கேட்டது இல்லீங்க.
அப்புறம், அந்த கடைசி வரி... (நீங்க சொல்லிட்டதால ஒண்ணும் எழுதவில்லை :) )

Anonymous said...

செம பாட்டுக்கள் தலைவரே!
எப்படி இவ்ளோ பாட்டு மைண்ட்ல வச்சிருக்கீங்க?
//கடைசி வரி //
நோ கமெண்ட்ஸ் :))

தமிழ் உதயம் said...

அற்புதமான பாடல்கள்.

Vidhya Chandrasekaran said...

அருமையான பாடல்கள் தேர்வு.

கடைசி வரி : வூட்ல ப்ளாக படிப்பாங்களா;))

பொன் மாலை பொழுது said...

சிறந்த பாடல் தொகுப்புக்கள்தான். எல்லோருக்கும் பிடிக்கும்.
அதுசரி, மின்சார கனவு படத்தின் 'அன்பென்ற மழையிலே " பாடலை பாடியுள்ளது சாதனா சர்கம் அல்லவா R V S ?

RVS said...

@LK
//ஆமா அது என்ன பிரபலப் பதிவர் எல் கே ?? யார் அவரு ???//
என்னா தன்னடக்கம்..;-)
தெய்வீக ராகம் நிறைய வாலிபர்களுக்கு விருப்பப் பாடல்.... எப்போதும்... ;-)

RVS said...

@LK
//கடைசி வரி போடாமல் இருந்தால் இன்னிக்கு இரவு வெறும் பச்சை தண்ணிதான் .இது எங்களுக்கு தெரியும்//
சேம் ப்ளட் !!! ;-)

RVS said...

@இளங்கோ
//அப்புறம், அந்த கடைசி வரி... (நீங்க சொல்லிட்டதால ஒண்ணும் எழுதவில்லை :) )//

நீங்க ஒன்னும் சொல்லாததால நானும் ஒன்னும் சொல்லலை.. ஹி ஹி... ;-)

RVS said...

@Balaji saravana
நான் காற்றை மட்டும் அல்ல பாட்டையும் சுவாசிக்கிறேன்.. (வைரமுத்து பாணியில் படித்து இன்புறவும்..) நன்றி ;-)

RVS said...

@தமிழ் உதயம்
நன்றி.. இன்னும் ஏதாவது சொல்லுங்க தமிழ்.. ;-)

RVS said...

@வித்யா
பாடல் தேர்வுக்கு பாராட்டியதற்கு நன்றி..
அதென்ன கடைசியில் நாரதி கலகம்.
வீட்டில் ப்ளாக் நன்றாக படிப்பார்கள். இதை வலையேற்றும் பொது பக்கத்தில் இருந்தார்கள். கடைசி வரி நான் சேர்த்ததை இதுவரை பார்க்கவில்லை.!!! ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
பாராட்டுக்கு நன்றி மாணிக்கம். அனுராதா ஸ்ரீராம் பாடியது தான் அது. உறுதியாகத் தெரியும். லாங் நோட்ஸ்ல தெரியும் பாருங்க.. நன்றி ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

எப்போதும் பாடல் தொகுப்பு சூப்பர்.

பத்மநாபன் said...

தேர்வுகள் பத்தும் பத்துக்கும் பிடிக்கும்.. பாட்டுபற்றிய வர்னனை ..நடிப்பவர்களை பற்றியும் சொன்னது எல்லாம் அருமை...

வயோதிகர்கள் வைவது இருக்கட்டும்..என் போன்ற இளைநர்கள் இடிப்பார்களே என கவலைப்படவில்லை
யூத் சங்கம் ஒதுக்கிவிடும் பாத்துக்கங்க...

ஸ்வர்ணலதா அவர்களை பட்டியலில் இருந்து விட்டுவிட்டது ( அதுவும் ஆர்.வி.எஸ் ) ஒரு குறைதான்

பொன் மாலை பொழுது said...

// அனுராதா ஸ்ரீராம் பாடியது தான் அது. உறுதியாகத் தெரியும். லாங் நோட்ஸ்ல தெரியும் பாருங்க //

சரிதான், அது அனுராதா ஸ்ரீராம் தான்.

ADHI VENKAT said...

அனைத்துப் பாடல்களுமே சிறந்த பாடல்கள். எனக்கு “மல்லிகை” “மன்னன் கூரை சேலை” ”சின்ன சின்ன” பாடல்கள் மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

எல்லாமே நல்ல பாடல்கள். நல்ல குரல்கள். கடைசி வரிகள் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன்.

வெங்கட் நாகராஜ் said...

எல்லா பாடல்களுமே மனதைத் தொட்ட பாடல்கள்தான். பகிர்வுக்கு நன்றி. கடைசி வரி நான் படிக்கவேயில்லை, என்ன எழுதி இருக்கீங்க? : )))))

மாதேவி said...

நல்ல பாடல்களின் தொகுப்பு.

"கமென்ட் போட்டு தாக்குவதை" :)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நம்ம ஏரியா.. சரளமா வருதுங்க.. நன்றி ;-)

RVS said...

@Chitra
Thank You :-) :-)

எம் அப்துல் காதர் said...

good collection, expecting another one collection boss pls!!

RVS said...

@பத்மநாபன்
பத்துஜிக்கு பிடித்த பாடல்களை போட்டதில் எனக்கு மகிழ்ச்சியே..
ஸ்வர்ணலதாவின் மறைவுக்கு அவர் பாடிய நிறைய பாடல்கள் போட்டதால் அவரை இதில் இணைக்கவில்லை.. ரிபீட் ஆகிவிடும்.. நன்றி ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
சரி அண்ணே.. ;-)

RVS said...

@கோவை2தில்லி
மல்லிகை என் மன்னன் மயங்கும் மிகவும் அற்புதமான பாடல். வாணி ஜெயராம் பின்னி பெடலெடுத்திருப்பார். புன்னகை அரசி சிரித்து மயக்கிருப்பார். முத்துராமன்....... சரி வேணாம். ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
கடைசி வரி பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று சொன்னது என் மனதுக்கு இனிக்கிறது. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி.. ;-) கடைசி வரி உங்கள் கண்ணுக்கு தெரியாதது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ;-)

RVS said...

@மாதேவி
நன்றி ;-) கமென்ட் போட்டு தாக்காததுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ;-)

RVS said...

@எம் அப்துல் காதர்
Thank you Boss! Will try to publish another good collection. ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல பாடல்கள்தான்.

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
நல்ல பாராட்டுதான்.. ;-)

சிவகுமாரன் said...

சத்ரியன்- மாலையில் யாரோ
16 வயதினிலே - செந்தூரப்பூவே
இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் . பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

ஒன்றுக்கொன்று போட்டி போடும் குரல்களும் பாடல் தெரிவுகளும்.
நீங்களும் என்னைப்போல பாட்டுப் பைத்தியம்போல.எல்லாப் பாட்டையும் வென்றுவிட்டது இறுதிப் பாட்டு "சொல்லாயோ.....!

RVS said...

@சிவகுமாரன்
மாலையில் யாரோ.. ஸ்வர்ணலதா மறைந்தவுடன் பதிந்து விட்டேன்.. செந்தூரப்பூவே போட்ருக்கலாம். கருத்துக்கு நன்றி ;-)

RVS said...

@ஹேமா
ஆமாங்க பாட்டுப் பித்தன் தான்.. சொல்யாயோ இளையராஜாவின் உச்சம்... நிறைய இதுபோல உன்னத இசை அளித்தது ராஜா-ஜானகி கூட்டணி. ;-)

suneel krishnan said...

ஒவ்வொன்றும் அருமை !!
பல நேரங்களில் -வாணி ஜெயராம் அவர்களின் குரலையும் ஜானகி அம்மா குரலையும் நான் குழப்பியது உண்டு ..
ஜானியில் வரும் -காற்றில் எந்தன் கீதம் ஜானகி அம்மா பாடியது என்றே எண்ணி வந்தேன் அது வாணி அவர்கள் பாடியது என்று சமீபத்தில் தான் அறிந்தேன் .
வருஷம் பதினாறில் வரும் -பூ பூக்கும் மாசம் -அருமையான பாடல் .
அதே மாறி குணா படத்தில் -உன்னை நான் அறிவேன் என்று ஒரு பாடல் வரும் -அதில் இறுதியில் கமலின் தாயாக வரும் வரலட்ச்சுமி அம்மா பாடும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது ,அந்த குரல் எனக்கு என்னமோ செய்யும்

RVS said...

@dr suneel krishnan
டாக்டர் போற போக்கில சில நல்ல பாடல்களை அள்ளித் தெளிச்சுட்டு போறீங்களே...அட்டகாசம் போங்க.. ;-0

Anonymous said...

நன்றாக இருந்தது.

ஜோடி குரல்கள் பற்றி ஒன்று போட்டால் நன்றாக இருக்கும் (சுசீலா - ஜானகி, சுசீலா - ஈஸ்வரி மாதிரி)

இப்போதெல்லாம் இந்த மாதிரி பாட்டுக்கள் வருவதில்லை.

ரகு.

RVS said...

@ரகு.
பண்றேன் சார்! உடனே போட்டால் ப்ளாக் தாங்காது. நன்றி ;-)

R. Gopi said...

pinnitteenga!

RVS said...

@Gopi Ramamoorthy

Thank You Gopi!!! ;-)

R.Gopi said...

ஆர்.வி.எஸ்...

பிரமாதமான லிஸ்ட் போட்டு பட்டையை கிளப்பிட்டேள் போங்கோ...

எஸ்.ஜானகி ரொம்ப பிடிக்குமோ!! பி.சுசீலா?

அனுராதா ஸ்ரீராம் குரல் அன்பென்ற மழையிலே பாட்டுல ரொம்ப நல்லா இருக்கும்...

மல்லிகை என் மன்னன் மயங்கும் பாட்டு போலவே மல்லிகை முல்லை பூப்பந்தல்னு ஒரு பாட்டும் இருக்கு.. அதுவும் வாணி பாடினது தான்... ரெண்டுமே தேன்...

RVS said...

@R.Gopi
ஜானகி சித்ரா - எஸ்.பி.பி ஜேசுதாஸ் இதில் எந்த பெர்முடேஷன் காம்பினேஷனும் எனக்கு ரொம்ப பிடிக்கும். மல்லிகை முல்லை மிக அருமையான பாடல். கருத்துக்கு நன்றி கோபி. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails