கொஞ்சம் இடது முன்னங்காலை தூக்கி நொண்டி அடிக்கும் தெருநாய் அது. யாராவது கல்லெடுத்து அடிக்க துரத்தினால் கூட அதனால் பாய்ந்து தப்பித்து ஓடமுடியாது. ஜாக் செய்வதற்கே சிரமப்படும். அனுதினமும் கற்பகம் ஸ்டோர் வாசலில் தன்னை மொய்க்கும் ஈக்களை வாயால் கடித்து தலையை அவ்வப்போது ஓய்யாரமாக ஆட்டி படுத்திருக்கும். இரவு பத்து மணிக்கு மேல் தெருவில் "தோ... தோ... தோ.." என்று ராகம் பாடி மீந்த சோறுக்கு கூப்பிடும் மகளிர் குரலுக்கு செவி சாய்க்காது. கட்டாயம் வராது. ராத்திரி எட்டு மணிக்கு மேல் எப்போதும் வாலை சுருட்டிக்கொண்டு உடம்பை 'C'யாக்கி புழுதி மணலில் சுகமாக படுத்திருக்கும். அந்த நாய் மேல் இரக்கப்பட்டு தினமும் தவறாமல் வறுக்கியும் ரொட்டித்துண்டும் வாங்கிப் போடுவார் ஒரு வயோதிகர். நாளாக நாளாக அந்த கழுத்துச் சங்கிலி இல்லாத தெருநாயும் குடும்ப சங்கிலியில் பிணைந்து இருக்கும் அந்த கிழவரும் நட்பு சங்கிலியால் இறுக்க இணைக்கப்பட்டனர். கடைசியில் ஒரு வாரம் நோய்வாய்ப்பட்டு அந்தப் பெரியவர் எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் படுத்ததும் இந்த நாயும் அவர்கள் வீட்டு திண்ணையிலேயே போய் அடைக்கலமானது.
அந்த முதியவர் இறந்த அன்றைக்கு சுடுகாடு வரை கொள்ளி தூக்கிய அவர் பையன் பின்னாலேயே நொண்டியபடி சென்றது. எல்லோரும் ஆற்றோரத்தில் ஈமக்கிரியைகள் முடித்து வீடு திரும்பும் வரை அங்கேயே அசையாமல் நின்று பார்த்தது. பிறகு எல்லோரோடும் அமைதியாக வீடு திரும்பியது. மஹாபாரதத்தில் ஸ்வர்காரோஹன பர்வத்தில் தருமருடன் ஒரு நாயும் உயிரோடு மேலோகம் சென்றதாம். துவாபரயுகத்தில் கம்பனியாக மேலே சென்றது கலியுகத்தில் சுடுகாடு வரை வந்து வழி அனுப்பி வைத்திருக்கிறது.
கீழே இருக்கும் வீடியோவை கண்டவுடன் மேலே சொன்ன நெகிழ்ச்சியான சம்பவம் என் நினைவுக்கு வந்தது. 1969-ல் இரு நண்பர்கள் ஓர் இடத்தில் சிங்கத்தை விலைக்கு வாங்கி அதனுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து விளையாடி கொண்டாட்டமாக இருந்தனர். இருவரும் அந்த சிங்கத்தின் மேல் சொல்லனா பாசம் வைத்தனர். சில மாதங்கள் கழித்து வீட்டில் வைத்து வளர்க்க முடியாமல் அதை ஆப்பிரிக்க காடுகளில் கொண்டு விடலாம் என்று முடிவு செய்து பத்திரமாக அங்கே இறக்கி விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு திரும்பி விட்டனர். வளர்த்த பாசம் கட்டி இழுக்க ஒரு வருடம் கழித்து காட்டில் இருக்கும் தாங்கள் வளர்த்த காட்டு ராஜா எப்படி இருக்கிறது என்று நலம் அறிய சென்ற இரண்டு பேரையும் கட்டிப் பிடித்து உச்சி மோந்து பாச மழையில் நனைத்துவிட்டது அந்த ஐந்தறிவு அரிமா. அந்த ஆறறிவு இரண்டும் இந்த அளவுகடந்த அன்பினால் திக்குமுக்காடி போய்விட்டனர். கடைசி ஒரு நிமிடத்தில் கிறிஸ்டியன் என்ற அந்த சிங்கம் அவர்களை ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சி கண்களில் ஏனோ நீரை வரவழைக்கிறது.

நன்பேன்டா!!! |

அந்த பாசக்கார சிங்கம் வீடியோ.
இந்தக் காட்சிக்கு வள்ளுவரின் அன்புடைமை அதிகாரம் முழுவதும் மொத்தமாக எடுத்து இங்கே போட்டுவிடலாம். இருந்தாலும் கீழ் கண்ட இந்த குறள் முற்றிலும் மேற்கண்ட நேசத்திற்கு அப்படியே ஒத்துப்போகிறது.
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு புற உறுப்புகள் இருந்து என்ன பயன் என்று அன்பை நமக்குள் இருக்கும் ஒரு உள் உறுப்பாக உருவகப்படுத்துகிறார் தாடி. புறத்துறுப்பு சிங்கமாக இருந்தாலும் அகத்துறுப்பு என்கிற அன்பு தன் நண்பர்களை ஒரு வருடம் கழித்து கண்டதும் ஓடி வந்து இறுகத் தழுவி உச்சி மோந்து நாக்கால் நக்கச் சொல்கிறது. ஐந்தறிவிக்கும் ஆறறிவிர்க்கும் பொதுவான அன்பை பார்த்து பல மணி நேரம் ஆன பின்பும் இன்னமும் உடம்பு சிலிர்க்கிறது.
எனக்கு கண்கள் பனித்தன இதயம் இனித்தது. உங்களுக்கு?
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு புற உறுப்புகள் இருந்து என்ன பயன் என்று அன்பை நமக்குள் இருக்கும் ஒரு உள் உறுப்பாக உருவகப்படுத்துகிறார் தாடி. புறத்துறுப்பு சிங்கமாக இருந்தாலும் அகத்துறுப்பு என்கிற அன்பு தன் நண்பர்களை ஒரு வருடம் கழித்து கண்டதும் ஓடி வந்து இறுகத் தழுவி உச்சி மோந்து நாக்கால் நக்கச் சொல்கிறது. ஐந்தறிவிக்கும் ஆறறிவிர்க்கும் பொதுவான அன்பை பார்த்து பல மணி நேரம் ஆன பின்பும் இன்னமும் உடம்பு சிலிர்க்கிறது.
எனக்கு கண்கள் பனித்தன இதயம் இனித்தது. உங்களுக்கு?
-
50 comments:
அய்யனின் குறளுக்கு இனிய விளக்கமாக அமைந்திருந்தது...
அன்போடு இயைந்த நட்பென்ப -ஆருயிர்க்கு என்போடியந்த தொடர்பு..
எலும்பொடிய அனைப்பதிலேயே அரிமாவின் அன்பு தெரிகிறது..
ஐந்து அறிவுகளை காட்டி , ஆறறிவுகளுக்கு அன்பென்பதை காட்டிய பதிவு....
ஐந்தறிவு ஜீவனுக்கு
அகத்துள் அன்பை
படைத்தவன் நம்மில்
ஆறாவதாக ஆசையின்
ஆதிக்கத்தை படைத்தானோ
நிராசையாய் போனது
நம்மில் பாசம்
பணத்தாசையில்
பிணம் கூட காத்திருக்கும்
இ(சு)டுகாட்டில் இன்று .........
சூப்பர்.
திருக்குறள் டாப் கிளாஸ்
@பத்மநாபன்
அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி பத்துஜி. ;-)
நிஜமாகவே என்னை ஈர்த்த வீடியோ இது. இதைவிட ஒரு வாயில்லா ஜீவனால் எப்படி அன்பை வெளிப்படுத்த முடியும். திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது.
சர்க்கஸில் மனிதர்களோடு இருக்கும் சிங்கத்தின் நடையும் பாவனைகளும் இங்கே இவர்களுடன் கட்டி கட்டிப் பிடித்து விளையாடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம். இது அன்பின் சின்னம். அன்புச் சிங்கம். ;-)
@dineshkumar
அற்புதமான கவிதை. மிக்க நன்றி தினேஷ். ;-)
@Gopi Ramamoorthy
நன்றி கோபி! ;-)
Amazing.. video.
thanks.. RVS for sharing..
Be ready.. you are being introduced one of the days of my valaicharam editorship, this week.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்?
நட்பிற்கு உண்டோ இனம்?
உண்மையிலேயே கண் கலங்க வைத்த வீடியோ...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...
அருமையான காட்சிகள். ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
unbelievable videao. clearly shows the power of love and affection.
நல்லதொரு காணொளி.. முன்பே பார்த்திருக்கிறேன். இருந்தும் உங்கள் அறிமுக உரையில் படிக்கும் போது இன்னும் இனிக்கிறது....
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அக்தே துணை.
வீரசெயல்களுக்கும் அன்பே துணையாக திகழ்கிறது என்பதை அறியாதவர்களே , அறசெயல்களுக்கு
மட்டுமே அன்பு துணையாக இருப்பதாக கூறுவார்கள்.
அன்பின் அளப்பரிய சக்தியை இந்த மனித குலம் மட்டும் முழுமையாக புரிந்து கொண்டால் .............
Hats off RVS.
நானும் பார்த்தேன், அந்த சிங்கம் அதோட ஆத்துகாரியையும் அறிமுகப் படுத்தி வெச்ச காட்சி க்ளாஸ் தெரியுமோ!!
மனதை நெகிழ வைத்த காட்சிகள். ஐந்தறிவு ஜீவனுக்கு தெரிந்தது ஆறறிவு ஜீவன்களுக்கு தெரிவதில்லை. பகிர்வுக்கு நன்றி.
நெஜமாவே கண் கலந்கிடுத்து, சூப்பர்
எவ்ளோ ஆசைய இருக்கு இதுல அது தன்னோட wife அ வேற அறிமுக படுத்தி வச்சது சுப்பர்
@Madhavan Srinivasagopalan
Thanks Madhava!!! ;-)
@ஸ்ரீராம்.
எவ்ளோ பாசம் இருக்கணும். அப்பப்பா.. திரும்ப திரும்ப பல தடவை பார்த்துட்டேன்.. ;-)
@வித்யா
நன்றிங்க வித்யா. இதை என் வாமபாகம் கிட்ட காண்பிச்சேன். அசந்துட்டாங்க. ;-)
@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றிங்க... அன்பு அகத்தில் இருக்கும் அழகு இல்லீங்களா... ;-)
@geetha santhanam
Thanks Madam. ;-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரக்காரரே. ;-)
@கக்கு - மாணிக்கம்
அறத்தையும் மறத்தையும் தழைக்க செய்வது அன்பு.. சரியா மாணிக்கம். நல்ல எடுத்துக்காட்டான குறள். நன்றி ;-)
@தக்குடுபாண்டி
ம்... சரி... புரியறது.. பப்ளிக்..பப்ளிக்.. ;-)
@கோவை2தில்லி
அன்புக்கும் அறிவிற்கும் தொடர்பில்லை போல.. கருத்துக்கு நன்றி.. ;-)
@Gayathri
சிங்கத்தோல் போர்த்திய நாய்க்குட்டி போலருக்கு. அவ்ளோ நன்றி..அன்பு.. கொஞ்சம் உத்துப் பார்த்தா வாலை ஆட்றா மாதிரியே இருக்குல்ல. கருத்துக்கு நன்றி G3 ;-)
அடைக்குந் தாழ் இல்லாமல் அனைவருக்கும் கொடுக்க முடிவது அன்பு மட்டும் தானே.
அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரத் தூண்டிய இந்தப் பதிவுக்கு நன்றிகள் அண்ணா.
உருப்படியா ஏதோ சொல்ல வந்த தக்குடுவை இப்படி அடக்கிட்டீங்களே!
அந்த பாசக்கார பயபுள்ளைய பாத்து மன்சு பேஜாராப் பூட்சி நைனா!
"ஏன்'தெ' அய்வுரே கொயந்தயாட்டம்"னு
ஊட்டம்மா என்கைல கேட்டுட்சிபா !
நல்லாரு நைனா!
எந்த ஒரு உயிரும் அன்புக்குக் கட்டுப்பட்டு,அன்புக்காக ஏங்கும் ஜென்மங்களாகவே இருக்கிறது.கண் கலங்கியே விட்டது ஆர்.வி.எஸ் !
@இளங்கோ
அதோட கண்கள் காட்டுது பாருங்க அந்த அன்பை.. பாசத்தை இளங்கோ.. ;-)
@அப்பாதுரை
ஹிஹி... தக்குடுவை கிளப்பி விடறீங்களா.. தக்குடு கண்ணா... அப்பா அண்ணா கேட்கறார்.. சொல்லுப்பா.. ;-)
(எசகா ஏதாவது சொல்லி நாம் ரெண்டு பேருமே மாட்டிக்கப் போறோம். ஜாக்கிரதை.. )
@மோகன்ஜி
ஆசிர்வாதத்துக்கு நன்றி. ;-)
மெய்யாலுமே ஐதீங்களா... வோண்டாம்...... ராசா..
(இதயத்ல இடி கண்ணுல மழை.. அப்படின்னு காலஞ்சென்ற முரளி கதிர் படத்தில் ("இதயம்" ) சொல்லுவார்... )
@ஹேமா
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ;-)
அருமையான வீடியோ ;
@அப்பாதுரை
உருப்படிக்கும் தக்குடுவுக்கும் என்ன சம்பந்தம் ??
@LK
நன்றி எல்.கே. ;-)
என்ன அப்டி சொல்லிட்டீங்க.. உருப்படிக்கும் தக்குடுக்கும் ரத்த சம்பந்தம்.. ரொம்ப சமர்த்து கோந்தே அது.. ;-)
//ரொம்ப சமர்த்து கோந்தே அது.. //
இதற்குப் பெயர் முரண் நகை
//LK said...
//ரொம்ப சமர்த்து கோந்தே அது.. //
இதற்குப் பெயர் முரண் நகை
//
தக்குடு கண்ணு என்னால இனிமே சமாளிக்கமுடியாது... நீயே வாப்பா.. ;-)
@ அப்பாஜி - யதார்த்தமா எதாவது சொன்னாலே நம்ப RVS அண்ணா பப்ளிக் பப்ளிக் நு சொல்லறார்....:)என்னவோ அக்காவுக்கு நெஜமாவே பயப்படுறமாதிரி பில்டப்பு குடுக்கறார்...:)
@ LK - சபைல இல்லாத ஒரு சாது குழந்தையை பத்தி என்ன ஆவலாதி வேண்டி இருக்கு!..:PP
//சபைல இல்லாத ஒரு சாது குழந்தையை பத்தி என்ன ஆவலாதி வேண்டி இருக்கு!//
அது என்ன சபைல இல்லாத. இப்ப எங்க இருந்து ஓடி வந்த பாரு
வாத்யாரே வர வர பின்றீங்க.... உண்மையிலேய கண்கள் பணிந்தது.
நன்றி வாத்யாரே..
குருகண்ணன், துபாய்.
அருமையான பதிவுங்க பாஸ்
//எனக்கு கண்கள் பனித்தன இதயம் இனித்தது. உங்களுக்கு?//
அதே! அதே!
@Kannan
பாராட்டுதலுக்கு நன்றி குருவே.. கண்ணன். ;-)
@VELU.G
ரொம்ப நன்றிங்க பாஸ். ;-)
@சைவகொத்துப்பரோட்டா
அதே அதே பதே பதே... நன்றி பரோட்டா. ;-)
என்ன அடிக்கடி காணாம போய்டறீங்க.. ;-)
you made me cry,
stray dog and elderly person is a true incident.
andha video supero super.
நேற்றுப் பதிவைப் படித்தேன்.காணொளி தெரியவில்லை. இன்று காலை ஐந்து மணித்துளி அந்தக் காணொளியைப் பார்த்துச் சென்றேன். இப்போது கருத்துச் சொல்லும் நேரம்.
சொல்ல முடியாமல்.. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!!!
இதில் ஐந்தென்ன? ஆறென்ன?
@angelin
Thank you for the comments and regular vist. ;-)
@ஆதிரா
ரொம்பச் சரியாத் தான் சொன்னீங்க.. ஐந்தென்ன ஆறென்ன... ;-)
Post a Comment