பழங்காலத்தில் ஒரு ஊரின் மிகப் பெரிய நூலகம் மொத்தமாக தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த அத்தனை அறிய புத்தகங்களும் பற்றி எரிந்து சாம்பலானது. ஒரே ஒரு புத்தகம் மட்டும் காப்பாற்றப்பட்டது. அது ஒன்றும் சுவாரஸ்யம் இல்லாத புத்தகம். கேட்பாரற்று அந்த சாம்பலில் கலந்து ஒன்றாக கிடந்தது. ஏதோ கொஞ்சம் எழுத்துக்கூட்டி படிக்கும் திறமை மட்டும் உள்ள ஒரு சாமானியன் அந்த புத்தகத்தை கையில் இருந்த சில்லறையை கொடுத்து வாங்கிச் சென்றான்.
அதைக் கொண்டுபோய் வீட்டில் உட்கார்ந்து பொறுமையாய் ஒவ்வொரு பக்கமாக திருப்பி தனக்கு தெரிந்த வரையில் படித்துப் பார்த்தான். சில பக்கங்கள் புரட்டிய பிறகு ஒரு சின்ன சிட்டில் "ரஸவாதம்" என்று எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்தது. ஆர்வம் தாங்காமல் அந்த சின்ன பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தான். அதில் அந்த ஊரின் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல்லின் அதிசயத்தக்க ஆற்றல் பற்றி குறிப்பிட்டிருந்தது. அந்த கல்லின் மகத்துவம் என்னவென்றால் அந்த குறிப்பிட்ட கூழாங்கல்லை கொண்டு எந்த உலோகத்தை தொட்டாலும் அது ஸ்வர்ணம் ஆகிவிடும். அந்த கூழாங்கல்லை கையில் எடுத்தால் கொஞ்சம் மிதமான சூட்டோடு வெதுவெதுப்பாக இருக்கும் என்பது தான் அந்தக் குறிப்பின் அதிமுக்கியமான கவனிக்கவேண்டிய விஷயம்.
அப்படியே புளகாங்கிதம் அடைந்து தன்னிடம் உள்ள சில தட்டுமுட்டு சாமான்களையும் இன்ன பிற சொத்துக்களையும் விற்றுவிட்டு கையோடு வேலைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு கடலோரத்தில் ஒரு பர்ணசாலை அமைத்துக்கொண்டான். தினமும் காலையில் இருந்து மாலை கதிரவன் மறையும் நேரம் வரை கூழாங்கல்லை கையில் எடுத்துப் பார்ப்பான். ஜில்லென்று இருந்தால் எடுத்து கடலில் வீசி எறிந்துவிடுவான். மீண்டும் மற்றொன்றை எடுப்பான். ஜில்லென்று இருந்தால் சமுத்திரத்தில் வீசிவிடுவான். இப்படியே நாட்கள் வாரங்களானது வாரங்கள் மாதங்களானது மாதங்கள் கரைந்து ஒரு வருடம் நெருங்கியது. காலை முதல் மாலை வரை பொறுக்கி எடுத்து கடலில் தூக்கி எறிவது என்பது அவனது அன்றாட வாடிக்கையானது. ஒரு நாள் கையில் எடுத்த கூழாங்கல் வெதுவெதுப்பாக இருந்தது. ரஸவாதக் கல்லின் அணைத்து குணங்களையும் அது பெற்றிருந்தது. மாதக்கணக்காக கூழாங்கல்லை கையில் எடுத்தால் கடலில் வீசி எரிவதையே தொழிலாக கொண்டிருந்தவன், இதையும் எடுத்து வீசி எறிந்துவிட்டான்.
இதனால் விளங்கும் நீதி என்னான்னா.. (இது ஒரு நீதிக்கதை. இதை முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் படிச்சிருக்க மாட்டோம்!! சை..)... வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது ஒரு முறை தான் வந்து நம்ம வீட்டு கதவை தட்டும். தட்டிய வாய்ப்பை நழுவ விடாமல் கதவைத் திறந்து இறுகப் பற்றிக் கொள்பவனே புத்திசாலி.
இந்த நீதிக்கதை எனக்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு உருப்படியான நண்பர் அனுப்பியது.
-
பட உதவி: http://picasaweb.google.com/superior.north.region
40 comments:
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ...தீ . வி . பி யிடம் மின்னஞ்சலும் சுவாரஸ்ய பதிவாகிறது .....என்பதுதான் நீதியாக கொள்ளவேண்டும்
நீதிக்கதை(யரசரு)க்கு நன்றி.
// உருப்படியான நண்பர் அனுப்பியது.//
அம்பி, இப்படிஎல்லாம் வேற இருக்கா? கூழாங்கற்களும் கடல் அலைகளும் படம் அழகாய் இருக்கு.
நல்ல கதை...
@பத்மநாபன்
நன்றி ;-) மழை (பார்க்க) விடாது போலிருக்கே... ;-)
@சைவகொத்துப்பரோட்டா
பரோட்டா ரொம்ப நல்லா இருக்கு.... ;-)
@கக்கு - மாணிக்கம்
நன்றி கக்கு. இதற்கும் வீணை காயத்திரியின் வலைப்பூ அறிமுகத்திற்கும்.. ;-)
@சங்கவி
நன்றி நண்பரே...
அடிக்கடி வாங்க.. ;-)
//இது ஒரு நீதிக்கதை. இதை முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் படிச்சிருக்க மாட்டோம்!!//
எங்களப் பத்தி தெளிவா புரிஞ்சு வச்சிருக்கீங்க அண்ணே ;)
@Balaji saravana
ஒரு ப்ளாக்னா நாலும் இருக்கணும் அப்டீங்கறத்துக்காக எழுதறது.. நீங்க ஒன்னும் சங்கடமா எடுத்துக்காதீங்க.. அடுத்தது "பக்தி" கலந்த பதிவு.. அசத்திடலாம்.. ஓ.கே ;-)
//வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது ஒரு முறை தான் வந்து நம்ம வீட்டு கதவை தட்டும். தட்டிய வாய்ப்பை நழுவ விடாமல் கதவைத் திறந்து இறுகப் பற்றிக் கொள்பவனே புத்திசாலி. //
அதை எப்படி நாம் கண்டுபிடிப்பதுங்க? அலையுடன் கூடிய கூழாங்கற்கள் படம் அருமை.
உள்ளேயும் வெளியேயும் கூர்ந்து கவனித்து வாழ்ந்தால் வாய்ப்பு கதவை தட்டும் சத்தம் காதுக்கு கேட்கும்.
கேள்விக்கு ஒரு நன்றி.. ரசித்ததற்கு ஒரு நன்றி.. நாகராஜசோழன் M.A, M.L.A ;-) ;-)
நல்லதோர் நீதிக்கதை. படமும் அருமை. பகிர்வுக்கு நன்றி RVS.
நல்லாதா இருக்கு.. ஓட்டும் போட்டுட்டேன்..
நீங்கதான் ரெண்டு மூணு நாளா எங்க வீட்டுப் பக்கம் வரலை.. ஓட்டும் போடலை..
(ச்சே.. ச்சே.. ஓட்டுக்கு எப்படிலாம் பிச்சை எடுக்க வேண்டி இருக்கு..)
@வெங்கட் நாகராஜ்
நன்றிக்கோர் நன்றி ;-)
@Madhavan
ஓட்டுப் பட்டியே தெரியலைப்பா... உங்களுக்கு குத்தாம யாருக்கு குத்தப் போறேன்.. ;-)
பாதியிலேயே நீதி வந்து விட்டதால் மீதி கூழாங்கல் யார் எடுத்து கிளீன் பண்ணுவது? அதுதான் சேதி என்று நினைத்தேன்.
@ஸ்ரீராம்.
கடைசி பாரா நான் எழுதியது. கல்லை வீசி எறிவதோடு கதை முற்றும். ;-)
நல்லா இருக்குங்க :)
நீதி கதை நல்லா இருக்கு.
படமும் கதையும் அருமை.
நல்லதொரு நீதிக்கதைதான் ஆர்.வி.எஸ்.என்றாலும் முயற்சியோடு அதிஸ்டமும் கை கூடினால்தான் எதுவுமே !
@dr suneel krishnan
நன்றி டாக்டர் ;-)
@கோமதி அரசு
வணக்கங்க.. நன்றி.. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் ;-)
@கோவை2தில்லி
நன்றி.. ;-)
@ஹேமா
அதிர்ஷ்டம் கைகூடினால் பலன் ஜாஸ்தி இருக்கும். இருந்தாலும் வாய்ப்பை தவறவிடாமல் இருப்பதே ஒரு அதிர்ஷ்டம் தானே ஹேமா.. கருத்துக்கு நன்றி.. ;-)
கல்லின் நீதி ...
@கே.ஆர்.பி.செந்தில்
ஆமாம் செந்தில் ;-)
அந்த ரசவாத பேப்பர் உங்க கிட்ட இருக்குன்னு சொன்னாங்க.. நெசமாவா ? :)
அப்புறம், ஒரே வேலைய செஞ்சா இப்படித்தான் எது கல், எது மாணிக்கம் அப்படின்னு தெரியாமப் போயிடும். :)
@இளங்கோ
//அப்புறம், ஒரே வேலைய செஞ்சா இப்படித்தான் எது கல், எது மாணிக்கம் அப்படின்னு தெரியாமப் போயிடும். :) //
சூப்பர் கமென்ட்!!!
இனிமே நாங்க சாப்பாட்டுல கல் வந்தா கூட தூக்கி (துப்ப) எறிய மாட்டோம்.. நல்ல நீதி. புடிச்சிகிட்டோம்.. நன்றி RVS
ஙே?
ஸ்ரீராம்: சமீபத்துல டி.ராஜேந்தர் படம் பாத்தீங்களா? :)
கல்... கலக்'கல்' ஆர்.வீ.எஸ்! கதையை நல்லா நீட்டி முழக்கியாறது.. சரளமான நடை.. நடக்கட்டும் ..
அவர் தூக்கிப் போட்டக் கல்லை தானே இன்னும் தேடிகிட்டிருக்கிறோம் ?
கதை நல்லா இருக்குங்க.
@ஆதிரா
பார்த்து.. பல் நொறுங்கிடப்போகுது...... ;-) ;-)
@அப்பாதுரை
ஹி... ஹி
@மோகன்ஜி
//அவர் தூக்கிப் போட்டக் கல்லை தானே இன்னும் தேடிகிட்டிருக்கிறோம் ?//
யாரும் கல்லைத் தூக்கி தலையில் போடாம இருந்தாலே சரி... ;-) ;-)
@ஜிஜி
நன்றி ;-)
Anna saval sirukathai pottiyila ungalukku parisu kidaichirukku..pls chech that.. http://www.parisalkaaran.com/2010/11/blog-post_17.html
en vaalthukkal.
romba santhosama irukku anna. :)
ithu pol niraiya parisukal vaanga ippove en vaalthukkal :)
@Balaji saravana
பார்த்துட்டேன். வாழ்த்துக்கு நன்றி தம்பி ;-)
Post a Comment