Tuesday, November 30, 2010

அமர்க்களமான ஐந்து பாடல்கள்

எம்.எஸ்.வி ஒரு நேர்காணலில் "பாதர் இன் லா சன் இன் லா டாட்டர் இன் லா தவிர்த்து எல்லா லாவும் வைத்து கண்ணதாசன் எழுதிய பாடல் இது" என்றார். எவ்ளோ லா. அந்த வயலின் நம்மை படுத்தும் பாடு இருக்கிறேதே. அப்பப்பா...



பஸ் கழுவுவது போல ஸ்ரீப்ரியாவை முதலில் முதுகில் தண்ணீர்த் தடவி ஆரம்பிக்கும் இந்தப் பாடல் ஒரு வேங்குழலின் இசையில் முடிந்து பல்லவி ஆரம்பிக்கும். ராஜா ராஜாதான். இடைதானோ நூல்தானோ என்று ஸ்ரீப்ரியாவை பார்த்து பாடுவது ஒன்றுதான் இந்தப்ப்பாடலின் குறை.


அந்த ஆரம்ப வயலின் பிட் அப்படியே நம்மையும் இந்த நடிகர்களுடன் கையை பிடித்து ஆட வைக்கிறது. சில பாடல்கள் கேட்க மட்டும் தான் பிடிக்கும். கீழே இவர்கள் ஆடுவதை பார்த்த பிறகு உங்களுக்கும் இனிமேல் இதைப் பார்க்க பிடிக்குமா என்று தெரியவில்லை.


மன்மதன் வந்தானா சங்கதி சொன்னானா என்று எஸ்.பி.பி குரலை அசைத்து அசைத்து பாடுவது என்ன ஒரு அற்புதம். ஊரு விட்டு ஊரு வந்து நீ இன்றி போவேனோ சம்போ..


இந்த நாகம் மாதிரி நடுவில் படம் எடுத்து படுத்துவதை தவிர இந்தப் பாடல் கொஞ்சம் பார்க்கும் ரகம் தான். ஆனால் கேட்பதற்கு நல்ல இனிமையான பாடல். மீண்டும் எஸ்.பி.பி. அட. இப்பத்தான் பார்க்கிறேன். போட்ட எல்லா பாடலும் அண்ணன் எஸ்.பி.பியோடது.


அம்புட்டும் அருமையான பாடல்கள். மீண்டும் இன்னொருமுறை வேறு கலக்ஷனோடு வந்து பதிகிறேன்.

-

37 comments:

தமிழ் உதயம் said...

நீயா...
சங்கர்-கணேஷின் அற்புதமான பாடல் அல்லவா,

அப்பாதுரை said...

//பஸ் கழுவுவது போல ஸ்ரீப்ரியாவை முதலில் முதுகில் தண்ணீர்த் தடவி ...// ஆபாசம்! ஆபாசம்! கேட்பார் இல்லையா? (ஆமாம், க்ளிக்கினா சீனே காணோமே?)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தேர்வு. வான் நிலா …. பாட்டு தான் எனக்கு மிகவும் பிடித்தது – இந்த ஐந்தில்… பகிர்வுக்கு நன்றி.

எல் கே said...

அதனையும் அருமை.. உங்கள் வலைப்பூவின் கீழே வரும் டூல் பாரை நீக்க முடியுமா ?? ப்ரவ்சர் பிரச்சனை பண்ணுகிறது

ADHI VENKAT said...

அனைத்து பாடல்களும் அருமை. எனக்கு பிடித்தது ”நதியோரம்” ”சிங்கப்பூரு சிங்காரியும்” தான். என் மகளுக்கு சிங்கப்பூரு பாட்டு மிகவும் பிடித்த பாடல். ”அன்பரே அன்பரே ” என்று டேப் ரெக்காடர் வைத்துக் கொண்டு ரஜினி அலைவது நகைச்சுவையாக இருக்கும்.

என்னுடைய அடுத்த பதிவைப் முடிந்தால் பாருங்கள்.

balutanjore said...

dear rvs

nichayam vadai enakkuthane?

balu vellore

பத்மநாபன் said...

லா...லா....வயலினோடு வான் நிலா ,,, சூப்பர்லா......

பஸ் கழுவினா மாதிரி ....நல்ல ஜெர்க் அடிச்சிங்க.... அந்த காலத்தவர்களுக்கு அது தமனா ....

குறிஞ்சிமலரில்.....எஸ்.பி.பி யின் இளைமைக்குரல் ...

சிங்காரி பாட்டு ...எஸ்.பி.பியின் அசால்ட்டான அசத்தல்....

ஆமாங்க அவரின் குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை....

Sesha said...

RVS

No body in the Tea Shop!!!!

have a look on mannai's one more pearl.

http://writersamas.blogspot.com/2010/11/blog-post_30.html

he is the one responsible for the fire story about enthiran.

bye

Sesha

RVS said...

@தமிழ் உதயம்
ஓசைப்படாமல் ச-க ஜோடி நிறைய ஹிட் கொடுத்திருக்கிறது ;-)

RVS said...

@அப்பாதுரை
'ஆ' பாசம் என்றுதானே சொல்கிறீர்கள் அப்பாஜி!!! ;-)

RVS said...

@அப்பாதுரை
'ஆ' பாசம் என்றுதானே சொல்கிறீர்கள் அப்பாஜி!!! ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
எனக்கு எல்லாமே பிடிக்கும் ;-)

RVS said...

@LK
டூல்பாரை எடுத்துவிடுகிறேன். விருதுக்கு நன்றி எல்.கே. ;-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி. கோயில் ட்ரிப் எழுத ஆரம்பித்துவிட்டீர்களா? ;-)

RVS said...

@balutanjore
சாரி சார்! வடை உங்களுக்கு இந்தமுறையும் இல்லை ;-)

RVS said...

@பத்மநாபன்
இது மாதிரி ஜேசுவோட கலெக்ஷனும் இருக்கு. அப்பாஜியை நினைச்சா போடறத்துக்கு பயமா இருக்கு பத்துஜி ;-)

RVS said...

@Sesha
பார்த்தேன். ரசித்தேன். நன்றி ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்ல தொகுப்பு. வான் நிலா மிகவும் பிடித்த பாடல்.

தக்குடு said...

நம்ம ஊரு சிங்காரி பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்!..:)

சிவராம்குமார் said...

அருமையான பாடல்கள் RVS

ஹேமா said...

ஒன்றைவிட ஒன்று திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல்கள்.இந்தக் காலகட்டத்தில் வந்த அத்தனை பாடல்களுமே கிட்டத்தட்ட ரசிக்கக்கூடியவயே என்று நினைக்கிறேன் !

ஸ்ரீராம். said...

"இடைதானோ நூல்தானோ"

எனக்கும் தோன்றும் நூலிடை என்னிடம் சொல்ல என்ற வரியும் கூட! எல்லாமே டாப் செலெக்ஷன். ஆனால் இந்த வரிசையில் நம்ம ஊரு சிங்காரி உறுத்துகிறது. அது வேற ....தனி வரிசை..

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நிறைய பேருக்கு. அந்த வயலின் தான் நம்மைப் பிடித்து பாடாய்ப் படுத்தும். ;-)

RVS said...

@தக்குடுபாண்டி
நாம் ரெண்டு பேரு ரசனையும் ஒண்ணா இருக்கு. ;-) ;-)

RVS said...

@சிவா என்கிற சிவராம்குமார்
ரசித்தமைக்கு நன்றி ;-)

RVS said...

@ஹேமா
ஆமாம் ஹேமா. அதியற்புதமான பாடல்கள் ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
இப்போதுமே இப்படியும் அப்படியும் மனசு ஆடிக்கொண்டே இருக்கிறதா.. அதனால் தான். நமக்கு எப்பவுமே குரங்கு மனசு ஸ்ரீராம் சார்! இப்படி ஒன்னு கேட்டா அப்படி ஒன்னு கேட்பேன். நீங்க சொல்றது புரியுது.. ;-)

Anonymous said...

எஸ்பிபியின் அமுத கானங்கள்.. :)

RVS said...

@Balaji saravana
ஆமாம். இதுபோல ஜேசுக்கும் வைத்திருக்கேன். பலது நெட்டில் இல்லை. வலையேற்றித்தான் பதியனும் போலருக்கு. பார்க்கலாம். ;-)

Chitra said...

சில பாடல்கள் கேட்க மட்டும் தான் பிடிக்கும். கீழே இவர்கள் ஆடுவதை பார்த்த பிறகு உங்களுக்கும் இனிமேல் இதைப் பார்க்க பிடிக்குமா என்று தெரியவில்லை.


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... அந்த பாடலுக்கு உரிய நடனத்தை பார்த்து விட்டு நல்லா சிரிச்சேன். அதுவும் அந்த slow motion டான்ஸ் மூவ்ஸ் சான்சே இல்லை. ஹா,ஹா,ஹா.... நடிக நடிகை பெயர்கள் தெரியுமா?

Vidhya Chandrasekaran said...

1 & 4 என்னோட பேவரைட்:)

பகிர்வுக்கு நன்றி.

CS. Mohan Kumar said...

Nice collection of songs.

நீங்களும் நம்ம ஊரா ? மகிழ்ச்சி

balutanjore said...

dear rvs

naan yesivin parama rasigan.

summa bayam illamal valai etrungal.

(vadai illavittal paravayillai)

balu vellore

RVS said...

@Chitra
நடிகை பெயர் ஜெயசுதான்னு நினைக்கறேன். அந்த ஆட்டத்தை பார்த்ததுக்கப்புறமும் நடிகர் பெயர் தெரிந்து கொள்ள ஆர்வப்படும் உங்களை கண்டு வியக்கிறேன். ;-) ;-)

RVS said...

@வித்யா
நிஜமாவே.. எஸ்.பி.பி யோட சிங்காரி கேட்டு ரொம்ப நாள் புல்லரிச்சு போயிருக்கேன். என்ன கமகம்... தொண்டைக்குள்ள ஒரு ஒரு ரூபா காயினைப் போட்டு லொடலொடன்னு ஆட்டுற மாதிரி... அதுவும் அழகா ஆட்டுற மாதிரி..

RVS said...

@balutanjore
உங்கள் ஸ்பெஷல் ஆக ஒன்று போட்டுவிட்டால் போகிறது... நிச்சயம்... ;-)

RVS said...

@மோகன் குமார்
ஆமாம் மோகன். பாட்டு கேட்பதுதான் இந்த ஜென்மம் எடுத்ததன் பயன் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails