இது திண்ணைக் கச்சேரியின் மூன்றாவது எடிஷன். இணைய நண்பர்களின் ஏற்றமிகு பார்வைக்கு...
********** பத்து பேர் **********
"பணக்காரன் பின்னாடி பத்து பேர் பைத்தாரன் பின்னாடி பத்து பேர்" அப்படின்னு நான் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் என் பாட்டி என்னை தோளில் தட்டி பாராட்டியதாக ஞாபகம். இப்போது என்னுடைய ப்ளாக்ஐ தொடர்ந்து நூறு பேர். 10x10=100. பாட்டி சொன்ன சொல்லில் நிச்சயம் நான் முதலாவது இல்லை. இரண்டாவது என்று நிரூபணம் செய்வதற்கு பத்து பத்தாக பத்து முறை செய்துவிட்டார்கள். அனைவருக்கும் அனேக கோடி நன்றி.
மேலே இருப்பது என்னுடைய நூறு. சொரூபமாகவும் அரூபமாகவும் என்னை பின்தொடர்பவர்களுக்கு நன்றி.
********* சாக்லேட் வாங்கி கொடுத்தார்களா? ********
சாச்சா நேரு போல சட்டையில் ரோஜா குத்தி ஊரில் இருக்கும் மழலைகளை கொஞ்சி மகிழாவிட்டாலும் இந்த குழந்தைகள் தினத்தில் நான் பெற்ற செல்வங்களுக்கு மட்டுமாவது சாக்லேட் வாங்கி கொடுத்து குஷிப் படுத்தினேன். "எப்ப பார்த்தாலும் இத வாங்கி கொடுத்து கெடுங்க.." என்று மக்களை பெற்ற மகராசியிடம் செல்ல(?) குட்டுப்பட்டேன். குழந்தைகள் தினத்தில் நம் அன்பை குழந்தைகளுக்கு புரியும் படி வேறு எப்படி காட்டுவது? யோசித்தேன். பதில் கிடைக்கவில்லை. இப்படி ஸ்வீட் எடு கொண்டாடு செய்து விட்டு காலார நடந்து வரும்போது சாயந்திரம் கடைத்தெருவில் காய்கறி விற்கும் அம்மாவுக்கு ஒத்தாசையாக ஒரு கிலோ எடைக்கல்லை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். நான்காவது ஐந்தாவது படிப்பான். அவனுக்கு இன்றைக்கு குழந்தைகள் தினம் என்று தெரியுமா? யாராவது அவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்களா? தெரியவில்லை.
************** ஸம்ஸார ஸாகரம்***********
ரொம்ப நாள் கழித்து கையிலும் இடுப்பிலும் தூக்கிக் கொண்டு குடும்ப பாரம் மொத்தத்தையும் சுமந்து வந்த என் நண்பன் ஒருவனை வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஈஷிக்கொண்டு போகும் பிசியான கடைத்தெரு சந்திப்பில் பார்த்தேன். "டேய்... எப்படி இருக்கே.." என்று கேட்டதற்கு "பார்த்தா தெரியலை.. ரொம்ப நல்லா இருக்கேன்" என்றான். அந்த "ரொம்ப" அவன் அழுத்தியதில் நொறுங்கி போயிருக்கும். காலேஜ் படிக்கும் போது ரெண்டு புஸ்த்தகமே ஜாஸ்தி என்று தூக்கிக் கொண்டு வரமாட்டான். இடுப்பிலும் கையிலும் பார்க்கும் போது சடாரென்று அது நினைவுக்கு வந்துபோனது. "அப்புறம்... எப்படி போயிகிட்டு இருக்கு வேலைலாம்" என்ற சம்ப்ரதாய கேள்விக்கு "வீட்ல ஆபிஸ்ல ரெண்டுத்துலயும் நான் தான் சிட்டி" என்றான்! சுட்டித்தனமாக பேசியதில் சம்சாரத்தின் ஒரு அனல் பார்வைக்கு அடங்கிப்போனான். "அப்புறம்.. உனக்கு எப்படி" என்று சாதுர்யமாக பேச்சை திசை திருப்பினான். அமைதியான கொஞ்ச நேர அளவலாவலுக்கு பிறகு விடை பெற்றான். ஒரு மணி கழித்து வீட்டில் புத்தக அலமாரியில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து "அண்ணா" உரை எழுதிய "உபநிஷத்ஸாரம்" புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டும் போது கிடைத்த ஒரு உரையின் சாரம் கீழே..
********** பழைய பேப்பர் *********
ஞாயிறு மதியம் ஒரு அரை மணி தூங்கி எழுந்ததும் "பழைய பேப்பர்லாம் கொண்டு போய் போடணும்.. அவன்ட சொல்லிட்டு வாங்க.." என்று பின்னால் தார்குச்சி போட்டார்கள். சிரமத்துடன் எழுந்து மூஞ்சி துடைத்துக்கொண்டு போய் ஒரு தடவை அவன் கடைக்கு போய் அழைப்பு வைத்துவிட்டு வந்தேன். "பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை" அப்படின்னு ஷண்முகி கமல் படத்துல பாடினாலும் ஆம்பளையா இருக்கும் ஆம்பளைக்கும் வேலை ஜாஸ்த்திதான். ஒரு மணி நேரம் கையை பல விதங்களில் ஆட்டி, தலையை சுளுக்கு வரும் வரை அசைத்து, வாய் சுழித்து பேசும் தொகுப்பாளினிகளின் பேச்சுக்கிடையில் சயனித்துக் கொண்டே பாட்டு கேட்டேன். மீண்டும் "இன்னும் வரலையே...எப்ப வருவான்..." என்று இன்னும் அழுத்தி தார்குச்சி போடப்பட்டவுடன் "ஐயா தயவு செய்து கொஞ்சம் வாருங்கள்.." என்று சகல மரியாதையுடன் அழைத்து வந்தேன். மேளம் நாதஸ்வரம் வைக்காததுதான் பாக்கி. பின்னாலேயே போய் எடை பார்க்கும் சமயத்தில் பழைய புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த ஷெல்ஃப் கண்ணை ஈர்த்தது. அங்கே க.நா.சுவும் கு.பா.ராவும் உட்கார்ந்திருந்தார்கள். எஸ்.ராவின் பழைய பேப்பர்காரரின் சிநேகிதம் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லாம் ஏன் இப்படி பொக்கிஷமான புத்தகங்களை வாங்குகிறார்கள்? கற்பூரமும் கழுதையும் நியாபகத்திற்கு வந்தது.
******** எழுத்துக் கவிதை ********
இணைய தைரியசாலிகள் பட்டியலில் ஏற்க்கனவே இருக்கும் கக்கு-மாணிக்கம், கே.ஆர்.பி செந்தில் போன்றோருடன் சமீபத்திய சேர்க்கை R.Gopi. தன்னுடைய எடக்கு மடக்குவில் உ.பி களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அண்ணனை எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லும் பொருட்டு பின்னோட்டம் எழுதப் போய் அது ஒரு கவிதை மாதிரியில் முடிந்தது. அவரது கவிதை அங்கே. அந்தப் பின்னூட்டக் கவிதை மாதிரி இங்கே.
"ஆ" என்று வாய் பிளக்க வைத்த ஊழல் தொடர்பாக ராஜினாமா செய்திருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். சமீப காலத்தில் தேர்தல் நெருங்குவதால் அரசியலில் கொள்ளை அடித்தவர்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். ஒரு கேனத்தனமான கேள்வி. வேண்டியவரை முடிந்தவரை பங்கு போட்டு சுருட்டியபிறகு இப்படி ராஜினாமா செய்யச் சொல்கிறார்களே, இவர்கள் கொள்ளை அடித்ததையும் கொண்டு வந்து திரும்ப கொடுக்கச் சொல்வார்களா?
******* கருப்பு வெள்ளையில் சுசீலா ********
சுசீலா அம்மாவுக்கு பிறந்தநாள் சொன்ன பதிவில் கருப்பு வெள்ளை சேர்க்கவில்லை என்று பல 'பெரிய' மனிதர்களுக்கு கோபம். ஆகையால் அவர்கள் ஆசையை பூர்த்தி செய்யும் பொருட்டு... இங்கே...
அப்பாதுரை சார் பதிவில் குச்சி தட்டி ஒருவர் ஆடும் நடனம் போட்டிருந்தார். இங்கே ஷு கால் தட்டி கம்பு சுழற்றி(?!!) புரட்சித் தலைவர் கன்னடத்து பைங்கிளியோடு ஆடும். அன்று வந்ததும் அதே நிலா...
இப்போது திருப்திதானே?
கேள்விக் கணைகள் என்று இல்லாமல் ஒவ்வொரு உபதலைப்பின் கீழேயும் சில கேள்விகள். விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம். சிறந்த பதிலுக்கு பரிசெல்லாம் கிடையாது. நன்றி.
குழந்தைகள் பட உதவி: http://www.amitbhawani.com/
-
********** பத்து பேர் **********
"பணக்காரன் பின்னாடி பத்து பேர் பைத்தாரன் பின்னாடி பத்து பேர்" அப்படின்னு நான் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் என் பாட்டி என்னை தோளில் தட்டி பாராட்டியதாக ஞாபகம். இப்போது என்னுடைய ப்ளாக்ஐ தொடர்ந்து நூறு பேர். 10x10=100. பாட்டி சொன்ன சொல்லில் நிச்சயம் நான் முதலாவது இல்லை. இரண்டாவது என்று நிரூபணம் செய்வதற்கு பத்து பத்தாக பத்து முறை செய்துவிட்டார்கள். அனைவருக்கும் அனேக கோடி நன்றி.
மேலே இருப்பது என்னுடைய நூறு. சொரூபமாகவும் அரூபமாகவும் என்னை பின்தொடர்பவர்களுக்கு நன்றி.
********* சாக்லேட் வாங்கி கொடுத்தார்களா? ********
மேலே சொடுக்கி பெரிதாய் பார்க்கவும் |
************** ஸம்ஸார ஸாகரம்***********
ரொம்ப நாள் கழித்து கையிலும் இடுப்பிலும் தூக்கிக் கொண்டு குடும்ப பாரம் மொத்தத்தையும் சுமந்து வந்த என் நண்பன் ஒருவனை வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஈஷிக்கொண்டு போகும் பிசியான கடைத்தெரு சந்திப்பில் பார்த்தேன். "டேய்... எப்படி இருக்கே.." என்று கேட்டதற்கு "பார்த்தா தெரியலை.. ரொம்ப நல்லா இருக்கேன்" என்றான். அந்த "ரொம்ப" அவன் அழுத்தியதில் நொறுங்கி போயிருக்கும். காலேஜ் படிக்கும் போது ரெண்டு புஸ்த்தகமே ஜாஸ்தி என்று தூக்கிக் கொண்டு வரமாட்டான். இடுப்பிலும் கையிலும் பார்க்கும் போது சடாரென்று அது நினைவுக்கு வந்துபோனது. "அப்புறம்... எப்படி போயிகிட்டு இருக்கு வேலைலாம்" என்ற சம்ப்ரதாய கேள்விக்கு "வீட்ல ஆபிஸ்ல ரெண்டுத்துலயும் நான் தான் சிட்டி" என்றான்! சுட்டித்தனமாக பேசியதில் சம்சாரத்தின் ஒரு அனல் பார்வைக்கு அடங்கிப்போனான். "அப்புறம்.. உனக்கு எப்படி" என்று சாதுர்யமாக பேச்சை திசை திருப்பினான். அமைதியான கொஞ்ச நேர அளவலாவலுக்கு பிறகு விடை பெற்றான். ஒரு மணி கழித்து வீட்டில் புத்தக அலமாரியில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து "அண்ணா" உரை எழுதிய "உபநிஷத்ஸாரம்" புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டும் போது கிடைத்த ஒரு உரையின் சாரம் கீழே..
மேற்கண்ட சம்ஸார ஸாகர மேட்டர் இருப்பது பிருஹதாரண்யக உபநிஷத்து. இப்போது ஸம்ஸாரம் என்றால் என்ன என்று புரிந்ததா? கடலலை அடிப்பது போலாம்.அனவரதமும் ஏதோ ஒன்றை மற்றொன்று போல் எண்ணி மயங்குதலும், பசி, தாகம், சோகம், மோஹம், மூப்பு, மரணம் என்ற இவை எல்லா பிராணிகள் இடத்தும் பற்றி கடலலைகள் போல் இரவு பகல் பாராது மாறி மாறி வந்து அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவே ஸம்ஸாரம் எனப்படுவது.
********** பழைய பேப்பர் *********
ஞாயிறு மதியம் ஒரு அரை மணி தூங்கி எழுந்ததும் "பழைய பேப்பர்லாம் கொண்டு போய் போடணும்.. அவன்ட சொல்லிட்டு வாங்க.." என்று பின்னால் தார்குச்சி போட்டார்கள். சிரமத்துடன் எழுந்து மூஞ்சி துடைத்துக்கொண்டு போய் ஒரு தடவை அவன் கடைக்கு போய் அழைப்பு வைத்துவிட்டு வந்தேன். "பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை" அப்படின்னு ஷண்முகி கமல் படத்துல பாடினாலும் ஆம்பளையா இருக்கும் ஆம்பளைக்கும் வேலை ஜாஸ்த்திதான். ஒரு மணி நேரம் கையை பல விதங்களில் ஆட்டி, தலையை சுளுக்கு வரும் வரை அசைத்து, வாய் சுழித்து பேசும் தொகுப்பாளினிகளின் பேச்சுக்கிடையில் சயனித்துக் கொண்டே பாட்டு கேட்டேன். மீண்டும் "இன்னும் வரலையே...எப்ப வருவான்..." என்று இன்னும் அழுத்தி தார்குச்சி போடப்பட்டவுடன் "ஐயா தயவு செய்து கொஞ்சம் வாருங்கள்.." என்று சகல மரியாதையுடன் அழைத்து வந்தேன். மேளம் நாதஸ்வரம் வைக்காததுதான் பாக்கி. பின்னாலேயே போய் எடை பார்க்கும் சமயத்தில் பழைய புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த ஷெல்ஃப் கண்ணை ஈர்த்தது. அங்கே க.நா.சுவும் கு.பா.ராவும் உட்கார்ந்திருந்தார்கள். எஸ்.ராவின் பழைய பேப்பர்காரரின் சிநேகிதம் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லாம் ஏன் இப்படி பொக்கிஷமான புத்தகங்களை வாங்குகிறார்கள்? கற்பூரமும் கழுதையும் நியாபகத்திற்கு வந்தது.
******** எழுத்துக் கவிதை ********
இணைய தைரியசாலிகள் பட்டியலில் ஏற்க்கனவே இருக்கும் கக்கு-மாணிக்கம், கே.ஆர்.பி செந்தில் போன்றோருடன் சமீபத்திய சேர்க்கை R.Gopi. தன்னுடைய எடக்கு மடக்குவில் உ.பி களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அண்ணனை எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லும் பொருட்டு பின்னோட்டம் எழுதப் போய் அது ஒரு கவிதை மாதிரியில் முடிந்தது. அவரது கவிதை அங்கே. அந்தப் பின்னூட்டக் கவிதை மாதிரி இங்கே.
அடி உதை என்ற இரண்டெழுத்துக்கும்
குத்து வெட்டு என்ற மூன்று எழுத்திருக்கும்
சாக்கடை என்ற நான்கெழுத்திர்க்கும்
அரசியல் என்ற ஐந்தெழுத்திர்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால்
ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்
குத்து வெட்டு என்ற மூன்று எழுத்திருக்கும்
சாக்கடை என்ற நான்கெழுத்திர்க்கும்
அரசியல் என்ற ஐந்தெழுத்திர்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால்
ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்
******* கருப்பு வெள்ளையில் சுசீலா ********
சுசீலா அம்மாவுக்கு பிறந்தநாள் சொன்ன பதிவில் கருப்பு வெள்ளை சேர்க்கவில்லை என்று பல 'பெரிய' மனிதர்களுக்கு கோபம். ஆகையால் அவர்கள் ஆசையை பூர்த்தி செய்யும் பொருட்டு... இங்கே...
அப்பாதுரை சார் பதிவில் குச்சி தட்டி ஒருவர் ஆடும் நடனம் போட்டிருந்தார். இங்கே ஷு கால் தட்டி கம்பு சுழற்றி(?!!) புரட்சித் தலைவர் கன்னடத்து பைங்கிளியோடு ஆடும். அன்று வந்ததும் அதே நிலா...
இப்போது திருப்திதானே?
கேள்விக் கணைகள் என்று இல்லாமல் ஒவ்வொரு உபதலைப்பின் கீழேயும் சில கேள்விகள். விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம். சிறந்த பதிலுக்கு பரிசெல்லாம் கிடையாது. நன்றி.
குழந்தைகள் பட உதவி: http://www.amitbhawani.com/
-
33 comments:
சதத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணே!...
@Balaji saravana
நன்றி தம்பி!
ஊழல் விசயத்துல அந்த முன்னாள் மந்திரி ஒரு சாதனையே செஞ்சிட்டாராம் அண்ணா..
கேக்கவே எவ்வளவு நல்லா இருக்குல்ல :(
//கடலலை //
சூப்பர்.. நான் இப்போதான் தூரத்துல இருந்து கடல் பாக்குறேன்.. ;)
@Balaji saravana
//ஊழல் விசயத்துல அந்த முன்னாள் மந்திரி ஒரு சாதனையே செஞ்சிட்டாராம் அண்ணா..
கேக்கவே எவ்வளவு நல்லா இருக்குல்ல :(//
மூச். இங்கே அரசியல் பேசக்கூடாது! ;-) ;-)
பின்னூட்டக்கவிதை நல்லா இருக்கே!
@சைவகொத்துப்பரோட்டா
நன்றி ;-) ஒன்னும் உசுப்பேத்தலையே! ஆட்டோ வந்துரப்போவுது..
இந்த வீடியோ ஜெர்க் ஆயி ஜெர்க் ஆயி ........கடுப்ப கெளப்புது. :(((
@கக்கு - மாணிக்கம்
நான் என்ன பண்ணட்டும். புண்ணியம் பண்ணியவர்களுக்கு ஜெர்க் ஆகாமல் ஓடுது!! ;-) ;-)
கலக்கல். வாழ்த்துக்கள்.
//அவனுக்கு இன்றைக்கு குழந்தைகள் தினம் என்று தெரியுமா? யாராவது அவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்களா? தெரியவில்லை.//
அட அத நீங்களே சொல்லிப் புட்டு , சாக்குலேட்டு வாங்கித் தந்திருக்கலாமே.. அவனை பெற்ற மகராசியும் அதேபோல 'பாடிடுவாங்கனு' நெனைச்சு மிஸ் மிஸ் பண்ணிட்டீங்களே..
@புவனேஸ்வரி ராமநாதன்
வாழ்த்துக்கு நன்றி ;-)
@Madhavan
கரெக்ட்டுதான் நீங்க சொல்றது. அன்னிக்கி பாருங்க நான் வேட்டியோட சுத்திகிட்டு இருந்தேன். பொதுவா தெரியாத ஒருத்தர் மிட்டாய் வாங்கி கொடுத்தா அவங்க புள்ளை புடிக்கரவங்க அப்படின்னு நினைச்சுப்பாங்க.. அன்னிக்கு நான் தனியா கடைத்தெருவில் இருந்து அப்படித்தான் வந்துகிட்டு இருந்தேன். ஆனா.. முடிஞ்ச வரை வேற மாதிரி என் சக்திக்கு ஏற்ப பண்ணிக்கிட்டு இருக்கேன்.. கமெண்ட்டுக்கு நன்றி. ;-)
சம்சார ஸாஹரம் விளக்கம் அருமை. பி.சுசீலாவின் அற்புதமான பாடல் தந்ததற்கு நன்றி. சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.
//முடிஞ்ச வரை வேற மாதிரி என் சக்திக்கு ஏற்ப பண்ணிக்கிட்டு இருக்கேன்.//
Nice to hear.. I also do my best.. (feelings..)
@Madhavan
OK. Good ;-)
@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ;-)
கச்சேரி நல்லா இருக்குங்க. 100 - க்கு வாழ்த்துக்கள்.
@இளங்கோ
நன்றி இளங்கோ. ;-)
வாழ்த்துக்கள். பாடல் மிகவும் இனிமை.
வாழ்த்துகள் ஆர்.வி.எஸ்.
ஸம்ஸாரம்...மனதில் பதிய ஒற்றியெடுத்தும்கொண்டேன்.
வறுமை சிறுவர்களைத்தான் நிரம்பவும் பாதிக்கிறது.உங்கள் சந்தோஷத்துக்குள்ளும் அக்கறை மனதில் நின்றது.
அருமையான பாட்டோடு மற்றைய குறுஞ்செய்திகளும் ரசித்தேன் !
@கோவை2தில்லி
நன்றி ;-)
@ஹேமா
நன்றி ஹேமா ரசித்தமைக்கு ;-)
//அடி உதை என்ற இரண்டெழுத்துக்கும்
குத்து வெட்டு என்ற மூன்று எழுத்திருக்கும்
சாக்கடை என்ற நான்கெழுத்திர்க்கும்
அரசியல் என்ற ஐந்தெழுத்திர்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால்
ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன்..//
"நல்லாருக்கு" என்று ஆறு எழுத்தில் பாராட்டுகிறேன்.
நூறு உள்ளங்களை, இதமாகவும் பதமாகவும் இனிமையாகவும் பதிவிட்டு கவர்ந்த தீ .வி .பிள்ளைக்கு மீண்டும் வாழ்த்துக்கள் ..
சம்சார சாகரத்தை பற்றி கவியோடு பதிந்தது அழகு ...
சிறுவனை பற்றியது நெஞ்சை தொட்டது ...
சச்சச்சா பாட்டு நாகேஷ் முன்னுரையோடு போட்டது அருமை
பின்னூட்டக் கவிதை மூலம் நீங்களும் தைரியசாலி என்று நிரூபித்து விட்டீர்கள்!
@ஸ்ரீராம்.
நன்றி என்று மூன்றெழுத்தில் சொல்கிறேன். ;-)
@பத்மநாபன்
நன்றி பத்துஜி ;-)
இந்த மோகன்ஜி எங்கே காணோம்? எதாவது விஷயம் தெரிந்ததா?
@சிவா
நன்றி.. ஆனா ஆளைக் கூப்பிடறா மாதிரி இருக்கே.. ;-)
ரீடரில் படிப்பவர்களுக்கு(16 பேர்) ஒதிக்கீடு வழங்காததால் பதிவு நடப்பு செய்கிறோம்.
ம் சதத்திற்கு வாழ்த்துக்கள்.
@நீச்சல்காரன்
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஒரு நன்றி..
பதினாறு பேரை இனிமேல் விடமாட்டேன்.. அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ;-)
அன்பு ஆர்.வீ.எஸ்! வந்துட்டேன்யா வந்தூட்டேன்! என் ப்ளோகுல எழுதின கவிதைக்கும், தேடலுக்கும் நன்றி நன்றி!
ஸதமானம் பவதி! நூறுக்கு வாழ்த்துக்கள் ஆர்.வீ.எஸ்!நூறு பதிவர்களுமே முத்தான பதிவர்கள்! (நானுமில்லே இருக்கேன்?)குழந்தைகள் தினம் நல்லா இருந்தது ஆர்.வீ.எஸ்!
பி.சுசீலா பற்றிய பதிவும் ரசிச்சேன்!
பல வருஷமா சுசீலாம்மா பாட்டின் தாலாட்டில் தானே தூங்கிகிட்டிருக்கேன்?
பத்து நாள் தான் ஆச்சு நான் அபீட் ஆகி! ரொம்ப நாள் போல் தோணுது ஆர்.வீ.எஸ்!
@மோகன்ஜி
//ஸதமானம் பவதி//
ஆசீர்வாதத்துக்கு மிக்க நன்றி. ;-)
Post a Comment