எண்பதுகளின் இறுதியில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் என நினைக்கிறேன். என் இல்லத்தில் அனுதினம் ஒலித்த அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் தொகுப்பில் இருந்த ஒரு பாடல். ஆரஞ்சு வண்ண அட்டைப் படத்தில் தரங்கிணி கேசட் வெளியீட்டாளர்களால் கான கந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் பாடிய "அறுபடை திருப்புகழ் வரிசை.. கர்னாட இசை பாணி" என்ற பாடல் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொன்றும் கேட்க கேட்க தெவிட்டாத இசை அமுதம். பக்தி பரவசமூட்டும் பாடல்கள். இதைக் மனமுருகி கேட்டாலே வேலுடன் முருகன் மயிலேறி நேரே வந்து உங்கள் வீட்டு கூடத்தில் இறங்கிவிடுவான். இந்தக் காளானுக்கு முருக பக்தியும் கிடையாது காலன் பற்றிய பயமும் கிடையாது. கேசட்டை பாழ் படுத்தி விட்டது. திரும்பவும் தேடிக்கண்டு பிடித்து இன்னொன்று வாங்கினேன். அதற்க்கும் அதே நிலை. அப்புறம் அப்பாடல்கள் சி.டியாக கிடைக்க என்னுடைய இசைப் பெட்டகத்தில் பத்திரமாக ஏற்றி வைத்துள்ளேன். மகா கந்த சஷ்டி ஸ்பெஷலாக இன்று ஜேசுதாசின் குரலில் பத்தியால் யான் வுனைப் பலகாலம் பற்றியே... இங்கே வெளியிடுகிறேன்.
யேசுதாஸ் பாடும் போது, "உத்தமா.... கான..." என்ற வரிகளும்.... "ஒப்பிலா மாமணி" என்ற இடமும் நம் செவி புகும்போது நாமே இறைவனிடம் நின்று திருப்புகழ் பாடுவது போன்ற ஒரு உணர்வு. "வெற்றிவேலாயுதப் பெருமாளே..." என்று உச்சஸ்தாயியில் தீர்க்கமாக உள்ளே போகும்போது வேலுண்டு வினையில்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது.
பாடல்
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பத்தியால் யானுனை ... அன்பினால் உன்னை உறுதியாக
பலகாலும் பற்றியே ... பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு
மாதிருப்புகழ் பாடி ... உயர்ந்த திருப்புகழைப் பாடி
முத்தனாம் ஆறெனை ... ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை
பெருவாழ்வின் முத்தியே ... இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை
சேர்வதற்கு அருள்வாயே ... சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக
உத்தம அதான ... உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள
சற் குணர்நேயா ... நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே
ஒப்பிலா மா ... சமானம் இல்லாத பெருமை பொருந்திய
மணிக்கிரிவாசா ... ரத்னகிரியில் வாழ்பவனே*
வித்தகா ... பேரறிவாளனே
ஞானசத்தி நிபாதா ... திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே
வெற்றிவே லாயுதப் பெருமாளே. ... வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே
எல்லாம் வல்ல முருகப்பெருமான் எல்லோருக்கும் நல்லது நல்கி தீயவைகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி அருள் புரிவாராக...
பின் குறிப்பு: பாடலை விளக்கத்துடன் பதித்து அருள் புரிந்த http://www.kaumaram.com/ க்கு ஒரு உளமார்ந்த நன்றி.
படக் குறிப்பு: 2008 ம் வருடம் திருமுறைத் தலங்கள் யாத்திரையின் போது கும்பகோணம்-பட்டீஸ்வரத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆவூர் என்ற ஊரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் அடியேனால் எடுத்த படம். யானை ஏறா மாடக் கோயில்களாக கோச்செங்கட் சோழன் கட்டிய கோயில்களுள் இதுவும் ஒன்று. இந்த சுப்பிரமணியர் அபய ஹஸ்தங்களோடு வேலுக்கு பதில் வில் வைத்திருக்கும் தனிச் சிறப்பு கொண்ட தனுஷ் சுப்பிரமணியர். சாயவனத்தில் கூட வில்லேந்திய வேலவர் இருக்கிறார். அவர் உற்சவர். இவர் மூலவர். வள்ளி தெய்வானையோடு இங்கே பக்தர்களுக்காக கந்தசஷ்டியில் சிறப்பு காட்சி தருகிறார்.
-
52 comments:
கானத்தில் மனம் பறிகொடுத்தேன்...
பாடலின் அழகான விழக்கங்கள் நல்லா இருக்கு. கந்த ஷஸ்டி விரதத்திற்கு ஏற்ற பதிவு.
யேசுதாஸின் குரலில் அற்புதமான பாடலை கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி. பாடல் விளக்கமும் அருமை.
@தமிழ் உதயம்
நன்றி ;-)
@nis
ரசித்தமைக்கு நன்றி..;-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி முருகன் அருள் முன்னிற்கும். ;-)
ஆஹா.. அற்புதம்.
பாடல், ரசிப்பு, பாடல் விளக்கங்கள், படம், பட விளக்கம்..
ம்.. அண்ணே சஷ்டி பதிவு அருமை..
@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றி... ;-)
@Balaji saravana
நன்றி தம்பி.. ;-)
இந்தக் கடையில வெரைடி நெறையா இருக்கு.. சூப்பரு..
பல மேட்டரும் கெடைக்குது.. தொடருங்க ஆர்.வி.எஸ்..
மாதவன் இது பலசரக்கு கடை... ;-) ;-)
இது மட்டுமல்ல இந்த வரிசையில் உள்ள அத்தனை பாடல்களுமே நானும் ரசித்திருக்கிறேன். தரங்கிணி இன்னும் பல நல்ல பாடல் வரிசைகளைத் தந்திருந்தது.
ஜேசுதாஸின் குரலில் அமுதமாயிருந்தது. கந்த சஷ்டிக்கேற்ற பதிவு.
@ஸ்ரீராம்.
இன்னும் நிறைய கைவசம் உள்ளது.. ;-)
@கோவை2தில்லி
நன்றி... ;-)
முருகா.. முருகா.. :)
@இளங்கோ
வா முருகா.. ;-)
அருமையான பதிவு!
நன்றி எஸ்.கே. ;-) ;-)
என்ன ஆர்.வி.எஸ் கந்தசஷ்டி விரதமா.கானத்தில் மனசு மறந்தது.கடவுள் !
@ஹேமா
கடவுளுக்கே ஆச்சர்ய குறியா? ;-) ;-)
ஆகாகா!
அப்பாஜி... பாடல் நல்லா இருந்துச்சா.... ;-) எசுடாசுக்கு வாய் மணந்தது... உங்களுக்கு... ;-)
பாடல் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.
சூப்பர் கேசட்... உங்க இடுகைக்கு வருவதற்கு முன்... தலைப்பை என்னோட டேஷ் போர்டில் பார்த்த போது, இந்த பாடலைத்தான் முணுமுணுத்துக் கொண்டு இருந்தேன். ஆஹா... இந்த பாடல் மட்டுமல்ல அந்த காசட்டில் எல்லா பாடல்களும் தெவிட்டாதவைகள்.
நன்றி நண்பரே.
dear rvs
kanda sashti naalil arumaiyana yesudasin padal. aha
mikka nandri
thodarungal
balu vellore
@V.Radhakrishnan
நன்றி ;-) இதுபோல் இன்னும் நிறைய இருக்கு அடிக்கடி வாங்க ;-)
@இராகவன் நைஜிரியா
ஆமாம். ஒரு உன்னதமான படைப்பு அது. ;-) ;-)
@balutanjore
நன்றி.. ;-)
பதிவிட்ட திருப்புகளைக் கேட்க் மறுப்புகள் உண்டோ? நல்லிசை விருந்தைப் படைத்த RVSக்கு பெரும்புகழ் கிட்ட வாழ்த்துக்கள்..
மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். இதேபாடலின் சில வரிகள் பெங்களூர் ரமணியம்மாள் அவர்கள் பாடக் கேட்டிருக்கிறேன்
சூப்பர்.
மோகமுள் படத்தில் வரும் 'சங்கீத ஞானமு' ஒரு முறை கேட்டுவிட்டு சொல்லுங்கள்
கமென்ட் படத்துக்குப் போட்டதுங்க..
என்னோட குறுகிய மனப்பான்மையா இருக்கலாம் - மாத்திக்கணும் - ஜேசுதாசையும் திருப்புகழையும் ஒரே வரியில சேர்க்க முடியலை. பாடலைக் கேட்க முயற்சி செய்றேன். (கருணாகரி சிவகாம சுந்தரினு ஒரு பாட்டு - இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னால் பாடியிருந்தாரு - அதைக் கேட்ட அதிர்ச்சியில இன்னும் கூட சிலசமயம் ராத்திரில முழிப்பு வந்து வியர்க்குது..) மொழிப் பிசகுகளை ரசிக்கும் பரந்த மனப்பான்மை இன்னும் வரவில்லை எனக்கு.
எந்த ப்ளாகென்று நினைவு வரவில்லை - உலாவிக்கிட்டிருந்தப்ப ஒரு பிளாக்குல 'குறை ஒன்றுமில்லை' பாட்டு - எம்.எஸ் பாடினது - விடியோ சேர்த்திருந்தார்கள். எதற்குச் சொல்கிறேனென்றால் தமிழின் இனிமையும் அழகு - கம்பீரமும் அழகு. திருப்புகழின் சந்தமும் சத்தமும் கேட்டு ரசிக்க கம்பீரக் குரலில் பாட வேண்டும். ஜேசண்ணே குரல் கம்பீரத்தின் மறுபுறம். எம்.எஸ் பாடியிருக்காங்க - தள்ளாத வயசுல பாடியிருக்காங்க - என்னா கம்பீரம்! தமிழும் குரலும் தொக்கி நிக்குது.
என்னோட குறுகிய மனப்பான்மையாக இருக்கலாம் - சில பாடல்களை சிலர் பாடினால் தான் நன்றாக இருக்கும் என்பது எனக்கு நானே வளர்த்துக் கொண்ட கெட்ட எண்ணம். (அதுவும் அதுல பாருங்க.. டிஎம்எஸ்னு ஒரு டப்பா பாடகரு, என்ன டப்பானு பிறகு சொல்றேன், 'அடிபேண' என்று இறங்குமுகத்தில் பாடும் பொழுது கூட பின் கழுத்து சிலிர்த்து நிற்கும்.. அதான்.)
@ஆதிரா
வாழ்த்திய ஆதிராவுக்கு ஒரு நன்றி ;-)
@பிரகாசம்
முதல் வருகைக்கு ஒரு வணக்கம். பெங்களூர் ரமணியம்மா சுட்டி எங்காவது கிடைக்குமா.. நன்றி ;-)
@Gopi Ramamoorthy
பலமுறை கேட்டிருக்கிறேன் கோபி. அதிலும் ஜானகி பாடிய "சொல்லாயோ வாய்திறந்து.. " எக்சலேன்ட்!!!!
@அப்பாதுரை
தமிழ் உச்சரிப்புல எனக்கும் ஜேசு அண்ணே அங்கங்கே கொஞ்சம் வழுக்கரா மாதிரி இருக்கும். ஆனாலும் கமகங்களும் ம்ருகாக்களும் நல்லா வர மாதிரி படுது எனக்கு. நீங்க சொன்ன எம்.எஸ். உச்சரிப்பு ஒத்துக்கறேன். யாரும் அடிச்சுக்க முடியாது. நேற்றைக்கு கூட அவங்க பாடின மீரா பஜன் கேட்டுக்கிட்டு இருந்தேன். வாவ். அதே மாதிரி "நெஞ்சுக்கு நீதியும்...." அப்புறம்..."காற்றினிலே வரும் கீதம்...."
நெஞ்சுக்கு நீதியும்....சக்தி ஓம் சக்தி ஓம் பாடல்.....
ஆஹா...
நல்லா பாடியிருக்கார் யேசுதாஸ் (கான கந்தர்வன் - நல்ல பட்டப் பேரா இருக்குதே? நீங்க வச்சதா, இல்ல அவரை அந்த மாதிரி தான் அழைக்கிறாங்களா?)
@அப்பாதுரை
அவரை அந்த மாதிரியும் அழைக்கறாங்க.. ;-)
@ஸ்ரீராம்.
தனியா ஒரு பதிவு போடணும். ;-)
என் அப்பன் மருதமலையானுக்கு அரோகரா போடவந்தால் ...இங்க கூட்டம் குறையொன்றுமில்லையிலும் நெஞ்சுக்கு நீதியிலும் சரியான கும்மியா இருக்கு....அந்த தேன் பாடல்களை பேச ஆரம்பித்து விட்டால் பின்னூட்ட எண்ணிக்கையை கட்டுபடுத்த முடியாது... மாம்பலம் ஸிஸ்டர்ஸ் பாடிய நெஞ்சுக்கு நீதியும் என்னோட பாரதி பதிவில் போட்டிருந்தேனே...
சூரசம்ஹாரத்தை சமிப என்கவுண்டரோடு நல்ல லின்க் பண்ணியிருந்தீங்க... அந்த ஆறுமுகசாமீயே போலிஸ் ருபத்தில் வந்து கயவனை கொன்றதாக த்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்....
@பத்மநாபன்
அரூபமா கமென்ட் மட்டும் போடறீங்களே... நேர்ல காட்சி கொடுக்க முடியாதா... ;-) ;-)
திங்கள் செவ்வாயில் பைபாஸில் பாடி வர முயற்சி செய்கிறேன் ... அடுத்த வெள்ளி பயணம்...
@பத்மநாபன்
நன்றி... ;-)
முருகா.. அருமையான பாடல். அப்பாஜி சொன்ன மாதிரி ஒரு சில பாடல்கள் ஒரு சிலர் பாடக் கேட்டால்தான் அருமையாக இருக்கும்.
ஆமாம் ஒத்துக்கறேன். அதிலும் முதல் தடவை யார் பாடிக் ரசிச்சு கேட்கரமோ அது தான் பச்சுன்னு மனசுல ஒட்டிக்கும்... சரியா?
பைபாசுல பாடி வரீங்களோ பாடாம வரீங்களோ.. எஞ்சாய் பண்ணுங்க பாலை பாபா... (படாகாண்டாகுதுங்க)
மெல்லினம் மலிந்த பாடலை எடுத்துக் கொண்டிருக்கிறார் யேசு. பெருமாளே என்பது ஒரே சொல். அதை பெரு மாளே என்று ஆலாபனை/பாட்டு நயம் கருதி பிரிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.. பெரு மாளே என்பதற்கு அர்த்தமே வேறே. யேசு என்ன செய்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
dear rvs
the title GANA GANDARVAN was given by malayali brethern to dasettan.
though die hard tamil lovers may not like his tamil pronunciation there is no denying the fact that dasettan is reigning supreme in the field of karnatic music.
many pucca (tanjore)tamilians like me are his great fans.
in fact we should rather be proud that we have this great musician among us in tamilnadu.
balu vellore
Post a Comment