Tuesday, November 9, 2010

அறுபதில் இருபது

பொதுவாகவே லோகாயதாய விஷயங்கள் கேட்பதிலும் பேசுவதிலும் ஸுகம் அதிகம். அப்படிப்பட்ட சில காதில் விழுந்தவைகளும், கண்ணில் பட்டவைகளையும் திண்ணைக் கச்சேரியாக தொகுத்து தர ஆரம்பித்திருக்கிறேன். முதல் அத்தியாயம் முடிந்து இது இப்போது இரண்டாவது எபிசோட்.

cow happy
இப்படி புல் பற்களை காட்டி பளீரென்று சிரிக்கும் பசுமாடு உங்களுக்கு உணர்த்தும் பாடம் என்ன?  கீழே அறுபதில் இருபதை படிக்கவும்.

*********** தொடர் உரை *************
என்னுடைய பாகம்பிரியாளுக்கு மேலுக்கு சுகம் இல்லை. அலுவலகத்தில் நிறைய வேலை, சோர்வில் ஜுரம் போல் இருந்தது. நேற்றிரவு டாக்டர் கிளினிக் சென்றிருந்தோம். வாசலில் ரெண்டு பெஞ்ச் போட்டு பேனைத் தட்டிவிட்டிருந்தார்கள். டி.வி. மிஸ்ஸிங். அந்தக் கொசுக்கடியிலும் கூட்டம் அம்மியது.  இரண்டு இல்லத்தரசிகள் கொசு கடிக்காமல் இருப்பதற்காக கையை விசிறி பேசிக்கொண்ட சீரியசான டாக்.

"இன்னிக்கி ஆறுலேர்ந்தே ஒரே கூட்டம்."
" திருமதி செல்வம் பார்த்துட்டு ஒருதடவை வந்து எட்டிப் பார்த்தேன்..அப்பவும் கூட்டம் தான்"
"அப்ப்லேர்ந்தேவா...."
"ஆமா ஆமா.. அப்பறம் ஒரு நடை போய் தங்கம் பார்த்துட்டு வந்தேன்..."
"உம்.. இப்ப எப்படி இருக்கு...உங்க உடம்புக்கு"
"பரவாயில்லை... அதான் இப்பத்தான் நினைச்சேன் தென்றல் கூட பார்த்துட்டு வந்திருக்கலாம்னு.."
"இப்ப சில கிளினிக்ல அதனாலத்தான் டி.வி வச்சுடறாங்க..எதையும் மிஸ் பண்ண வேண்டாம்."
"அப்படி வச்சாலும் எல்லாரும் சன்னா போடறாங்க... வாசன் ஐ கேர்ல எப்பவும் டிஸ்கவரி நேஷனல் ஜாகரபி தான் போடறாங்க... எப்பப் பார்த்தாலும் யானையும், பூனையும், புலியும், எலியும்..."
"இப்ப உடம்பு எப்படி இருக்கு....?"
"அது கிடக்கு... நான் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் தான் காட்ட வந்தேன்.."
சீரியல் டாக் டாக்டருக்கு கேட்டதோ என்னவோ அடுத்த ஆளாக அந்த திருமதியை உள்ளே அழைத்து அவரின் "தொடர்" உரையை முடித்து வைத்தார்கள். இந்த மெகா சீரியல் பார்க்கும் மக்களுக்கு எப்போது விடிமோட்சம்? எல்லா தமிழ் சீரியலிலும் ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷன் வேறு. நல்ல சீரியல் கலாச்சாரம். கலாச்சார காவலர்கள் கவனிப்பார்களா? வாழ்க தமிழகம்.
****************** லக்ஷ்மி வெடி  *******************

என் நண்பர் ஒருவர் மகனுக்கு இந்த நரகாசுரன் டெத் ஆனிவர்சரிக்கு நிறைய வெடி வாங்கி கொடுத்திருக்கிறார். அவருடைய மகன் அகமகிழ்ந்து வெடித்து தள்ளியிருக்கிறான். தீடீரென்று ஒரு ஞானம் தோன்றி நண்பர் மகனிடம் "லெக்ஷ்மி வெடி வாங்கி வெடிக்கிறியே... அதுல லெக்ஷ்மி படம் போட்ருக்கு.. இன்னிக்கி தீபாவளி.. நாம லக்ஷ்மியை கும்பிடுவோம்...இது தப்பில்ல.. " என்று மரியாதையாக இழுத்திருக்கிறார். ஏன்னா பையன் கொஞ்சம் தோளுக்கு மேலே வளர்ந்தவன்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று ஒவ்வொரு லெக்ஷ்மி வெடியாக எடுத்து கத்தரி கொண்டு கர்மஸ்ரத்தையாக லெக்ஷ்மி படத்தை மட்டும் நறுக்கி பிரித்து எடுத்துவிட்டான்.
நண்பருக்கு அளவில்லா மகிழ்ச்சி. அவன் பிரித்து எடுத்ததை விட சொன்ன சொல் கேட்டதற்கு. அவன் பக்கத்தில் பாராட்டலாம் என்று அணுகிய போது சொன்னானாம்..
"அப்பா.. லெக்ஷ்மியை பிரிச்சுட்டேன். வெடியை பேப்பரால சுத்தியிருக்காங்க. பேப்பர் சரஸ்வதிக்கு சமானம் அதனால வெடிக்காதடான்னு மட்டும் சொல்லிடாதீங்க..." என்றானாம். நண்பர் அதிர்ந்து அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிட்டார்.

************* அறுபதில் இருபது ****************
ஒரு சமுதாய விழிப்புணர்வுக்காக இந்த பத்தி. உங்கள் தோற்றம் பத்து வருடம் இளைமையாக தெரியவேண்டுமா? காயகல்பம், சிட்டுக்குருவி லேகியம், தங்கபஸ்பம், லாட்ஜ் மருத்துவர்கள் போன்ற எந்தத் துணையும் இல்லாமல் இளமை பெறலாம். கேள்வியே எடக்கு மடக்கு. இன்றிலிருந்து இனிவரும் பத்து வருடங்கள் இளைமையாக தெரியவேண்டுமா இல்லையென்றால் உங்களுக்கு 50 என்றால் 50-10=40 போல் தெரியவேண்டுமா என்று இரண்டு வகையாக மேற்கண்ட கேள்வியை காரணகாரியமாக பிரிக்கலாம். எல்லோருக்கும் இந்த இரண்டாம் கேள்வி மேல் தான் கண். அதற்க்கு ஓரிடத்தில் அருமருந்தாக ஆறு உபாயங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவையாவன..

1. ஒவ்வொரு நாளும் நான்கு லிட்டர் குடிதண்ணீர் குடி. தெளிவாக போட்டிருக்கிறார்கள். தண்ணீர் குடி என்றால், சத்யராஜ் கவுண்டமணியிடம் கேட்பது போல "எந்தத் தண்ணீ ன்னு சொல்லலைமா..."ங்கக் கூடாது என்பதற்காக குடிதண்ணீர் என்று. அதற்க்கு குடி என்று சொல்லாமல் தண்ணீ அடி என்போமா.

2. ஒரு தேக்கரண்டி ஆளி விதை பவுடர் தினமும் சாப்பிடவேண்டுமாம். Flax seeds என்று ஆங்கிலத்தில் இருந்ததை அழகு தமிழில் மேல்கண்ட சுட்டியில் வெளியிட்டிருந்தார்கள்.  இந்த செடி கயிறு திரிக்க பயன்படும் நார் தருமாம். அரளி விதை எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜனிடம் கோபித்துக்கொண்டு ரேகா சாப்பிடுவது. இது ஆளி விதை. கவனத்தில் கொள்க.

3. வாரத்திற்கு மூன்று முறை முறைப்படி கட்டியவளிடம் கட்டாயம் ஸரஸ ஸல்லாபம் வைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். இதெல்லாம் மூன்று முடிச்சு போட்டவர்களுக்கு மட்டும் என்று நினைத்துதான் எழுதியிருக்கிறார்கள். படிக்கும் பிரம்மச்சாரிகள் மற்றும் அரை நிஜார் பையன்கள் இதை வேதவாக்காக எடுத்துக்கொள்ளாமல் இந்த கெட்ட  பாயிண்டை  ஸ்கிப் செய்து அடுத்த பாயின்ட் படிக்கவும்.

4. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து ஆட்டி வாரத்திற்கு மூன்று நாட்களாவது குனிந்து நிமிர்ந்து உடல் உழைப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். தேகப் பயிற்சி என்று சொல்லவில்லை. வேலைக்கு வேலையும் ஆச்சு உடம்புக்கு உழைப்பும் ஆச்சு என்கிற ஃபார்முலா போலிருக்கிறது.

5. குழந்தை மனதோடு பொறாமை பொச்சரிப்பு போன்றவை இல்லாமல் இருக்கச் சொல்கிறார்கள். அப்புறம் மண்டைக்குள் இருக்கும் அந்த ஆயிரத்து முன்னூறுலிருந்து நானூறு கிராம் இருப்பதை அகஸ்மாத்தாவாவது உபயோகிக்க சொல்கிறார்கள். படைப்பாற்றல் புத்துணர்வு தருவதோடு இளமையையும் மீட்டு தருகிறதாம்.

6. குப்பைக்காக பக்கத்து வீட்டுக்காரனுடன் பழி சண்டை போட்டது, பாஸ் காரணமே இல்லாமல் எரிந்து விழுந்தது, ஆட்டோகாரன் உரசியது, திருப்பத்தில் டூ வீலர் கை ஆட்டி கெட்ட வார்த்தையால் திட்டியது, பொண்டாட்டி உப்பு போடாமல் ரசம் வைத்தபோது வந்த கோபம் போன்றவற்றையெல்லாம் மறந்து எப்போதும் ஆனந்தம் பரமானந்தமாக  இருக்க சொல்கிறார்கள். கோபம் பாபம் சண்டாளம்.

********* வீரபாண்டி கோட்டையிலே.. ********

veerapaandikottaiyile

மேற்கண்ட படத்தை பார்த்ததும் சட்டென்று நினைவுக்கு வந்த திருடா திருடா பாடல் ஒன்று கீழே...

Photo Credit: http://picasaweb.google.com/alidelvento,freewebs.com
-

25 comments:

பெசொவி said...

nice!

Madhavan Srinivasagopalan said...

1-தண்ணியடிச்சிட்டு,
2 பவுடர் பூசிகிட்ட,
3 பெண்ணோட வாரத்துக்கு மூணு நாள் இருந்துட்டு,
4 குழந்தை பொறந்துடிச்சின்னா
5 குப்பைல போடச் சொல்லுறீங்களா..?

oh! is this 'reading between lines (words)' ?


வழக்கம்போல சூப்பர் நண்பா..

RVS said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை
யாருப்பா அது.. அத்தி பூத்தார்ப்போல.. இந்த பக்கம் காத்தடிக்குது... அப்பப்ப வாங்கப்பா.. ;-)

RVS said...

@Madhavan
வழக்கம் போல தேங்க்ஸ் மாதவா!!!

வெங்கட் நாகராஜ் said...

லக்ஷ்மி வெடி - சரவெடியான பையனின் பதில். முதல் பகுதியை போலவே இதுவும் விறுவிறு....

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி... அப்ப தொடர்ந்து இந்த பிட்டை போடலாம்ங்கிறீங்க.. ஓ.கே

Anonymous said...

இந்த வார திண்ணை காக்டெயில் (கச்சேரி ) சூப்பர்..
//அறுபதில் இருபது //
யாரெல்லாம் சீனியரோ அவங்கெல்லாம் வாங்க..எனக்கு இப்போ தான் இருபதே ஆகுது சோ, நான் எஸ்கேப் ஆயிக்கிறேன்.. ;)

ஸ்ரீராம். said...

திண்ணை அரட்டை சுவாரஸ்யம்.

RVS said...

@Balaji saravana
அந்த ஒரு பாய்ண்டை விட்டுட்டு பாக்கி எல்லாத்தையும் கடைபிடிச்சா பத்து வயசுப் பையனைப் போல் திரியலாம். எங்கப்பா எஸ் ஆவுற?

RVS said...

நன்றி ஸ்ரீராம். ;-)

அப்பாதுரை said...

சிட்டுக்குருவிங்களே காணோம்னு எங்கள் பிளாக்ல போட்டிருந்தாங்க.. நீங்க சிட்டுக்குருவி லேகியம்ன்றீங்க..இதான் விசயமா?

RVS said...

@அப்பாதுரை
அந்த லேகியம் சாப்பிடும் வயது இன்னும் எனக்கு வரவில்லையாதலால் இந்தக் குசும்பு கேள்வியிலிருந்து நான் என்னை விடுவித்துக் கொள்கிறேன். யாராவது மோகன்ஜி, பத்துஜி போன்ற வல்லுனர்கள் இதற்க்கு தக்க பதில் கூறுவார்கள்.. நன்றி ;-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்து வயசு குறைக்கறத்துக்கு இவ்வளவு
கஷ்டப் படணுமா? தேவுடா!
அதுக்கு இப்படியே இருந்துடலாம்.
இதுவும் ஒரு விதத்துல செளகர்யம் தான்!
OLD AGE IS THE PASSPORT FOR BAD EVILS!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Chitra said...

Good ones. :-))

RVS said...

@ஆர்.ராமமூர்த்தி
//OLD AGE IS THE PASSPORT FOR BAD EVILS!!//
நல்லா இருக்கு சார்!

RVS said...

@Chitra
Thanks ;-) ;-)

மோகன்ஜி said...

அப்பாஜி!சிட்டுக் குருவியை ஞாபகப் படுத்திட்டீங்க..
ஆர்.வீ.எஸ்! உமக்கு தீபாவளி லேகியமே போதும்..
சிவசிவா ! நாராயணா! எல்லாரும்
திருத்தக்க தேவர் மாதிரி
ஆய்ட்டாங்களே!
உடனே நாலு சிட்டுக் குருவி பாட்டைப் போட்டி பரிகாரம் பண்ணுங்கோ!பாட்டு எடுத்துத் தரவா??

1.சிட்டுக் குருவி..முத்தம் கொடுத்து...
2.சிட்டுக் குருவிகென்ன கட்டுப்பாடு?

3.ஏ குருவி... சிட்டுக் குருவி.. எங்க விட்டத்துல வண்டு கூடுகட்டு..

4.சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
தெரியுமா?

5.ஏய்.. பறந்து செல்லும் சிட்டுக் குருவி உன் பார்வையைத் திருப்பு..

சிவராம்குமார் said...

நல்ல தொகுப்பு RVS!

RVS said...

கேட்டுக்கொண்டதற்க்கிணங்க சிட்டுக்குருவி பற்றி ஒரு பின்னூட்ட பதிவு போட்டதற்கு நன்றி மோகன் அண்ணா..

RVS said...

நன்றி சிவா..;-)

ஸ்ரீராம். said...

"சிட்டுக் குருவி வெக்கப் படுது..."

எனக்கு ஞாபகம் வந்த சிட்டுக் குருவி பாடல்!!

பத்மநாபன் said...

கச்சேரியில சிட்டுக்குருவிக்கு தான் மவுசு ஜாஸ்தி ..கூட்டம் மொய்க்குது ..
‘’மோகன்ஜி, பத்துஜி போன்ற வல்லுனர்கள் இதற்க்கு தக்க பதில் கூறுவார்கள்.// எங்கள வல்லுனர்கள் சொல்லிட்டு தப்பிச்சுக்காதிங்க...வைரமுத்து சொன்ன மாதிரி மாணவனும் பண்டிதனே..நாங்க மாணவனாகவே இருக்கோம்..

மோகன்ஜி ..சும்மா வே ஆர்.வி.எஸ்க்கு யு-டுயுப் பாட்டு போட கை பரபரக்கும் ..நிங்க வேற சிட்டுக்குருவி தொகுப்பு எடுத்துக்கொடுத்திட்டிங்க ...சிட்டான சிட்டுக்குருவிகள் ஒரு கலெக்‌ஷன் போட்டுருவாரு....
’’சிட்டுச்சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு’’ ரம்பா பாட்டையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க....

RVS said...

திருவாளர் ஸ்ரீராம் சொன்ன சிட்டுக் குருவி வெக்கப் படுது... தொட்டுத் தழுவத் தழுவத் சொர்க்கம் வருது....
எஸ்.பி.பியின் அசத்தல் ரகம்.

பத்துஜிக்கு தொடை அழகி ரம்பா பாட்டு கேட்குது. என்ன பண்றது... பாட்டு போட்டு ரொம்ப நாளாவுது.. ஏதாவது போடுவோம்... ;-)

Jerry Eshananda said...

Nice Blogging.

RVS said...

@ஜெரி ஈசானந்தன்.
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி... அடிக்கடி வந்து போங்க... ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails