Saturday, November 6, 2010

'ஊசி'ப் பட்டாசுகள்



சூடு
poorgirl
பலகாரம் சுட்டு
பட்டாசு சுட்டு
கழிந்தது தீபாவளி;
சீமான் மகளுக்கு
கையில் சூடு
வெறுமான் மகளுக்கு
நெஞ்சில் சூடு









ஒளி
dark hut
அமாவாசையிலும்
பௌர்ணமியாய்
ஜொலித்தது ஆகாயம் -
தீபாவளியாம்!  
என் வாழ்வில்
ஒளி வருமா என்று
ஏங்கியது
ஏழை வீட்டு அகல் விளக்கு









பட உதவி: வேலி கடித்து ஏங்கிப் பார்க்கும் அந்த சிறுமி கிடைத்த இடம் djiin.wordpress.com. விளக்கில்லா வீட்டிற்கு இருட்டில் தடுமாறிக்கொண்டே நடக்கும் அந்த குழந்தையை கண்டெடுத்த இடம் memsaabstory.wordpress.com

36 comments:

Madhavan Srinivasagopalan said...

super..

RVS said...

நன்றுக்கு ஒரு நன்றி ;-)

RVS said...

@Madhavan
Thanks ;-)

மோகன்ஜி said...

nalla irukku aar.vee.es gangaasnaanam aachchaa?

Philosophy Prabhakaran said...

ரெண்டே ரெண்டு தானா :(

சிவராம்குமார் said...

\\சீமான் மகளுக்கு
கையில் சூடு
வெறுமான் மகளுக்கு
நெஞ்சில் சூடு\\

அந்த படத்தையும் இந்த வாரத்தைகளையும் கண்டவுடன் என் நெஞ்சிலும் வலி!!!!

RVS said...

@மோகன்ஜி
ஆச்சுண்ணா...
ரெண்டு ரெண்டு வீதியில் வந்த எல்லோருக்கும் கொடுத்துட்டு வெடிக்கும் போது தோணினது.... இங்கே.. கவிதை மாதிரி.... ;-) ;-)

RVS said...

@philosophy prabhakaran
அப்பப்போ இதுபோல் எழுதலாம் என்று விருப்பம். பார்க்கலாம். நன்றி.

RVS said...

@சிவா
வலித்து ரசித்தமைக்கு நன்றி சிவா.. ;-)

வெங்கட் நாகராஜ் said...

கவிதை மாதிரி அல்ல கவிதையே தான். முதலாம் கவிதை மனதைப் பிழிந்தது..

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி வெனா நானா ;-) ;-)

Unknown said...

மனது சங்கடமானது...

இளங்கோ said...

படத்தில் குத்திக் கிழிப்பது கம்பியா.. இந்தச் சமூகமா ?
நன்று அண்ணா.

சைவகொத்துப்பரோட்டா said...

சுடுகிறது.

இரண்டுமே அருமை RVS.

RVS said...

@இளங்கோ
கமெண்டே கவி பாடுது....

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
நன்றி ;-)

பொன் மாலை பொழுது said...

ஆஜர் R V S , I wanted to tell something but not now.

RVS said...

@கக்கு - மாணிக்கம்
What?

எஸ்.கே said...

சிறப்பான கவிதைகள்!

RVS said...

நன்றி எஸ். கே ;-)

பத்மநாபன் said...

சிறுமியும் ஏக்கமும், குழந்தையின் இருட்டில் தனிப்பயணமும் ..பென்சில் பட்டாஸின் கடைசி சூடு போல சுருக் சூடாக சூடுகிறது...
கவியான வார்த்தைகள் பொருத்தம்..

நெஞ்சுச்சூடு ஆறவும்..அகல்விளக்குகளை சற்று எண்ணை விட்டு தூண்டவும் பிரார்த்தனையோடு முயற்சி செய்வோம்

RVS said...

ஆமாம். பத்மநாபன். பிரார்த்திப்போம். ;-(

சாய்ராம் கோபாலன் said...

கவியான வார்த்தைகள் - Apt for photos.

Wow, RVS

Aathira mullai said...

ஏங்கும் விழிகளின் சூடு எம் மனதையும் சுட்டது.

RVS said...

@சாய்
நன்றி ;-)

RVS said...

@ஆதிரா
நன்றி ;-) தவறிய அழைப்புகள் படிக்கலையா?

தக்குடு said...

Hmm... manasukku varuthamaathan irukku RVS anna!!..:(

R.Gopi said...

RVS....

படங்களும், படங்களுக்கான உங்களின் வரிகளும் ரொம்பவே “சூடு”..........

RVS said...

@தக்குடுபாண்டி
ஆமாம் வலிக்குது ;-(

RVS said...

@R.Gopi
எனக்கும் சுட்டது கோபி..

அப்பாதுரை said...

சூட்டில் ஒளி அதிகம்.

'பரிவை' சே.குமார் said...

MMM... Romba nalla irukku kavithai valikaludan...

RVS said...

@சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

RVS said...

@அப்பாதுரை
நன்றி அப்பாஜி ;-)

நீச்சல்காரன் said...

இந்தக் கவிதை நன்றாக உள்ளது. படித்த அன்று விட்டு இன்றும் மனதில் நிற்கிறது.

RVS said...

@நீச்சல்காரன்
நன்றி நீச்சல்காரரே..
இது போன்ற மக்கள் வாழ்க்கையில் எவ்வளவு எதிர்நீச்சல் போட வேண்டி வரும்.. வருடாவருடம் என்னால் முடிந்த பட்டாசு சிறுவர்களுக்கு கொடுப்பேன். இந்த வருடம் கொடுத்த போது தோன்றியது இது..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails