கும்பகோணம் வெற்றிலையை காம்பு கிள்ளி புரட்டிப் போட்டு ஈரத்தை வேஷ்டியில் தடவி ஆள்காட்டி விரலால் நேர்த்தியாக வாசனை சுண்ணாம்பு பூசி நாலு விரல் கொள்ளளவு கை சீவல் மற்றும் கொஞ்சூண்டு பாக்கு போட்டு (எக்ஸ்ட்ரா ஊக்கம் தேவைப்படுவோர் தேவையான அளவு பன்னீர் புகையிலையை சேர்த்துக்கொண்டு) மணக்க மணக்க வாயில் அதக்கிக்கொண்டு ஒரு சீரான இடைவெளிகளில் வெளியே தலை நீட்டி "புளிச்.. புளிச்.." என்று துப்பிக்கொண்டு சதஸில் நாலைந்து பெருசுகளோடு முகத்தில் பேயடி அடிக்காமல் தென்றலென வருடும் காற்று வீசும் திண்ணையில் உட்கார்ந்திருப்பது ஒரு அலாதியான சுகம். அப்போது அது ஒரு சொர்க்கத் திண்ணை. அரை லிட்டர் வெற்றிலைச்சாறு வாய் முழுக்க நிரம்பி உதடு பிரிக்க முடியா வேளையில் கேட்கப்படும் தடாலடி கேள்விகளுக்கு மோவாய் தூக்கி "உம்.உம்.உ...ம்ம்..ஊ.." என்று பல ஸ்வரங்களில் ராகம் பாடி தலை ஆட்டி துப்பிவிட்டு "அதாவதுடா...அம்பி" என்று வாயில் சிகப்பு ஜொள் ஒழுக பதில் சொல்லும் மாமாக்களின் அழகே தனி. அப்பப்போ தொடையில் தட்டி ஒரு சபாஷ் வேறு இருக்கும். அரையில் ஒரு வேட்டியும் மேலே ஒரு துண்டும் தான் மொத்த காஸ்ட்யூம். டூ பீஸ்.
பரவை முனியம்மாவிலிருந்து ஐஸ்வர்யா ராய் வரையும், லோகல் சந்தையின் உப்பு புளி மொளகா விலையிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் ஷேர் மற்றும் ஒபாமாவின் வேலையில்லா அமெரிக்க பொருளாதாரம் வரையும், ஜில்லாக் கலெக்டர் முதல் சீஃப் செக்ரட்டரி வரையும், குலேபகாவலியில் இருந்து எந்திரன் வரையும், நமக்கு தண்ணிக்காட்டும் கர்நாடகா, கேரளாவிலிருந்து நேற்று தெரு குழாயில் தண்ணீர் வராதது வரையும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நடக்கும், ஓடும், விளையாடும், ஆடும், பாடும், ரசிக்கும், படிக்கும், பார்க்கும், கேட்கும் எதைப்பற்றியும் ஆராயும் திண்ணைக் கச்சேரி இது. ஊரில் விடிய விடிய மதில் கச்சேரி நடத்துவோம், இப்போது இணையத்தில் 24x7x365 முழுக்க திண்ணை கச்சேரி... அவ்வளவுதான்.. இத்தோடு இந்தப் புதிய பகுதியின் முன்னுரை முடிவுற்றது.
பரவை முனியம்மாவிலிருந்து ஐஸ்வர்யா ராய் வரையும், லோகல் சந்தையின் உப்பு புளி மொளகா விலையிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் ஷேர் மற்றும் ஒபாமாவின் வேலையில்லா அமெரிக்க பொருளாதாரம் வரையும், ஜில்லாக் கலெக்டர் முதல் சீஃப் செக்ரட்டரி வரையும், குலேபகாவலியில் இருந்து எந்திரன் வரையும், நமக்கு தண்ணிக்காட்டும் கர்நாடகா, கேரளாவிலிருந்து நேற்று தெரு குழாயில் தண்ணீர் வராதது வரையும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நடக்கும், ஓடும், விளையாடும், ஆடும், பாடும், ரசிக்கும், படிக்கும், பார்க்கும், கேட்கும் எதைப்பற்றியும் ஆராயும் திண்ணைக் கச்சேரி இது. ஊரில் விடிய விடிய மதில் கச்சேரி நடத்துவோம், இப்போது இணையத்தில் 24x7x365 முழுக்க திண்ணை கச்சேரி... அவ்வளவுதான்.. இத்தோடு இந்தப் புதிய பகுதியின் முன்னுரை முடிவுற்றது.
கல்லடி பட்டாலும் இந்தக் கண்ணடி படக்கூடாது சாமி. மேலே இருக்கும் கண்ணைப்(கண்ணுக்குட்டி இல்லை!!) பற்றிய சங்கதி உள்ளே இருக்கு...
************** கேள்விக் கணை **********
பொதுவாகவே சில கேள்விகள் மனதில் அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, காயாகி, பழமாக மனதில் தொங்கும். அது போன்று கிளைத்தெழுந்த சில கேள்விகள் கீழே...
1. ஒரு பைசா, ரெண்டு பைசா, அஞ்சு பைசா,பத்து பைசா என்று கமர்கட்டு மிட்டாய் வாங்கித் தின்ற காசு வகையறாக்கள் இப்போது எங்கே?
2. ஊருக்கு ஊர் மூலைக்கு மூலை இருந்த KP, NR, MPS என்ற வாடகை சைக்கிள் கடை முதலாளிகள் இப்போது என்ன தொழில் செய்கிறார்கள்?
3. கிராமப்புறங்களில் இன்னமும் பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு கொடுக்கிறார்களா? ஆல் இன் ஆல் அழகுராஜக் கடைகள் உள்ளனவா?
மற்ற கேள்விகள் அடுத்த கச்சேரியில்...
*************** கரன்ஸி மழை **********
சென்னையில் ரெண்டு நாள் முன்பு ஆவடி பாலத்தில் இருந்து கரன்ஸி மழை கொட்டியதாம். பாலத்தின் கீழே சென்றுகொண்டிருந்தவர்கள் துண்டு போட்டு பிடித்திருக்கிறார்கள். கிடைத்த வரைக்கும் ஆதாயமாக சுருட்டியிருக்கிரார்கள். கொஞ்ச நேரத்தில் எல்லோரையும் விரட்டிவிட்டு மற்றதை சுருட்ட வந்த மாநகர போலீஸ் ஆயிரம் ரூபா நோட்டாக மட்டும் 33,000 ரூபாய் தேற்றியதாம். நல்ல வசூல். ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பக்தைக்கு தங்க மழை பொழிய வைத்தாராம். பாலம் கீழே நடந்து போனவர்கள் வீட்டில் கனகதாரா ஸ்தோத்ரம் பாராயணம் பண்ணியவர்களோ என்னமோ. யார் கண்டார்? பணம் பாலத்தை பிய்த்துக் கொண்டு கொட்டியது.
*************** துக்கம் ****************
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா பாக்டரியில் வேலை செய்த அம்பிகா என்ற பெண் தொழிற்சாலையில் நடைபெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்திருக்கிறார். விபத்து நடந்த விதம் ரொம்பவும் வருத்தத்துக்குரியது. சென்சார் வேலை செய்யாமல் இருந்த ஒரு யூனிட்ல் கைவேலையாக உள்ளே வெளியே வைத்து எலெக்ட்ரானிக் பொருட்களை எடுத்திருக்கிறார். சென்சார் பழுது பற்றி பல முறை புகாரிட்டும் அது பற்றி நிர்வாகம் கவலை கொள்ளவில்லை. கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இப்படியிருக்கையில் திடீரென்று சென்சார் வேலை செய்து ஆளை உள்ளே இழுத்துவிட்டது. கழுத்து மாட்டிக்கொண்ட நிலையில் அரைமணி நேரம் உயிருக்கு போராடும் போது கூட நிர்வாகம் உற்பத்தியை நிறுத்தவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம். அடுத்த அடிமுட்டாள் தனமாக ரத்தம் நிறைய சேதமாகிப் போனவரை ஆம்புலேன்ஸில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஐம்பது கிலோமீட்டர் தாண்டி சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அடிபட்ட அம்பிகா இறந்து விட்டார். அப்பா அம்மா உட்பட ஐந்து ஜீவன்கள் இவருடைய 8,500 ரூபாய் சம்பளத்தை நம்பி இருக்கிறார்கள். மனித உயிருக்கு மதிப்பே இல்லையா? - இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் செய்தி.
********** தாவணி தீபாவளி பாட்டு ***************
தீபாவளி பக்ஷணம், தீபாவளி டிரஸ், தீபாவளி பட்டாசு மாதிரி தீபாவளி என்றவுடன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் யேசுதாஸ் அருமையாக பாடிய "தாவணி போட்ட தீபாவளி" என்ற பாடல் தீபாவளி சலுகையாக இளமை பொங்கும் காதலுடன் இங்கே..... இந்தப் பதிவின் ஆரம்பத்தில் கண் திருஷ்டி படும்படி பார்த்த பொண்ணு இந்தப் பாட்டுல பண்ற அமளியைப் பாருங்களேன். சாமுத்ரிகா பட்டு விளம்பரத்தில் இன்னும் நல்லா இருக்கும். எனக்கு எப்பவுமே இந்த 'பசி' ஷோபா மாதிரி பெருசா வட்டமா பொட்டு வச்சவங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா குன்னக்குடி மாதிரி ஒரு ரூபா சைஸ் பொட்டெல்லாம் பிடிக்காது. கண்ணுக்கே தெரியாமல் 0.05mmக்கு மச்சம் மாதிரி நெற்றியில் ஓட்டிக்கொண்டு சிலர் 'பளிச்'சென்று துடைத்த முகமாய் வருகிறார்கள். "தல நெரிய பூ வச்சி நெத்தி நெரிய பொட்டு வச்சி.."ன்னு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் திலீப் சொல்வது மாதிரி...பொட்டு ஆராய்ச்சிக்கு இதோடு ஒரு முற்றுப் புள்ளி வைப்போம். டாட்.
**************** நிழல் பறவைகள் **************
கேமராவும் கையுமா திரிஞ்ச ஒரு ஆளு எடுத்த வித்தியாசமான படம். இது ஒன்னும் ஃபோட்டோஷாப்பிய படம் இல்லை. டைட்டில் நல்லா இருக்கு. அப்புறமா ஒரு கதைக்கு நானே யூஸ் பண்ணிக்கிறேன்.
படமெடுத்தவரின் வலை: http://bednij.livejournal.com/
பின் குறிப்பு: இந்தக் கச்சேரி எப்போல்லாம் வரும் என்று ஆர்வமாக(?) கேட்பவர்களுக்கு... எப்ப வேணா வரும்.. நன்றி...
-
43 comments:
முன்னுரையையே பதிவு மாதிரி போடுறிங்களே அண்ணா ;)
//பணம் பாலத்தை பிய்த்துக் கொண்டு கொட்டியது.// ஆஆ?!...
அந்த போடோ அருமை.. :)
தங்களின் முதல் தீபாவளி வாழ்த்துக்கு (என் வலைப்பூவில்) மிக்க நன்றி RVS.
தங்களுக்கும் தங்களின் த்ங்களின் இல்லத்திருமகளுக்கும், மற்றும் லவி, குசி அனைவருக்கும் இனிய, பாதுகாப்பான தீபத் திருநாள் வாழ்த்துக்கள் RVS.
இந்தக் கம்பூட்டர் கன்றாவி வந்ததுல இருந்து உலகமே கெட்டு போச்சு. என்னன்னமோ செய்யறாங்க.. கலி முத்திப்போச்சு, இது எதுல போயி முடியுமோ” என்றெல்லாம் அங்கலாய்த்துக்கொள்ளும் பெரிசுகள் பார்க்க வேண்டிய இடம் RVSன் இந்த தளம்.
பழமை நெடி மாறாத புதிய சிந்தனைகள். சமுதாயத்தின் மீது அக்கறை... தொடருங்கள் RVS.
அந்த வெத்திலைப்பாக்கு சமாச்சாரம் தூள்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள் .
சைக்கிள் பழகிய காலத்தில் சிறிய சைக்கிள் வாங்கி ஒட்டி பழகியது நினைவுக்கு வருகிறது .கொஞ்சம் பைசாக்களை நான் சேர்த்து வைத்துள்ளேன் .ரோஸ் மிட்டாய் , தேன் மிட்டாய் எல்லாம் வாங்கியது போக மிச்சம் :)
கோவில் திருவிழாக்களில் இன்னமும் பெட்ரோமாக்ஸ் விளக்கு பயன் படுத்துகிறார்கள் என்று எண்ணுகிறேன் .
இந்த அம்பிகா விஷயம் மனதை வருத்துகிரது
பெரிசுகள் பக்கத்தில் எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும் அந்த "வெற்றிலை செல்லத்தை " பற்றி ஒரு பதிவே போடலாம்.
கேள்விக்கணைகள் :
பதில்கள்: கமர்கட் வாங்கித்தின்ற அந்த பழங்காசுகள் எல்லாம் மிண்டில் உருக்கி வேறு காசு பண்ணி இருப்பார்கள்.எஞ்சியவைகள் யார் வீட்டு டப்பாக்களில் செல்லாகாசாக கிடகிறேதோ.
இப்போதும் வாடகை சைக்கில் கடைகள் ஊரில் இருகிறதே!
கிராமங்களில் இனமும் ஆல் இன் ஆல் அழகு ராஜா கடைகளில் டியுப் லைட் வாடகைக்கு விடுகிறார்கள். பெட்ரோமாக்ஸ் லைட்டும் இருக்கிறது.
Wish u Happy Diwali sir....................have nice day........ and the picture was amazing
@Balaji saravana
நன்றி ;-) ரெண்டு மூணு பதிவா வடை உங்களுக்குத்தான். ;-) ;-)
@ஆதிரா
வாழ்த்துக்கு நன்றி ஆதிரா. ;-) ;-)
@கக்கு
சொல்வது போல "செல்லப் பெட்டிகளை" பற்றி ஒரு பதிவாகப் போட விருப்பம் தான். பார்க்கலாம்.
கேள்விக்கணைகளுக்கு தக்கவாறு பதிலடிகள் கொடுத்ததற்கு நன்றி கக்கு ;-) ;-) ;-)
தீபாவளி ஊரிலா அல்லது வெளியூரிலா? ;-) ;-)
@hari
Thank you Hari. Wish you the same.
நிழல் பறவைகள் அருமை.
தீபாவளி வாழ்த்துகள்.
@தமிழ் உதயம்
நன்றி. தங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஸ்டார்ட் மியூசிக்...
@புவனேஸ்வரி ராமநாதன்
ஆரமிச்சாச்சு.. ;-)
கச்சேரி களைகட்டிருச்சு.
தீபாவளி வாழ்த்துக்கள்.
நன்றி இளங்கோ. உங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்
@எம் அப்துல் காதர்
மனமார்ந்த நன்றி ;-)
கச்சேரி களை கட்டுது! மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள் RVS.
திண்ணைக் கச்சேரி களை கட்ட ஆரம்பிச்சாச்சு! ரொம்ப நல்லா இருக்கு RVS. பழைய நினைவுகளை கிளறி விட்டது...
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வெங்கட்.
கமர்கட்டு எனக்கு ரொம்ப பிடித்தது. இப்போ எங்கே கிடைக்கிறது!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
@சைவகொத்துப்பரோட்டா
நன்றி சை.கொ.ப ;-) நானும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கறேன் என் தீபாவளி வாழ்த்தை.. ;-)
@வெங்கட் நாகராஜ்
பாராட்டுக்கு நன்றி. விஷ் யு தி சேம்.
@எஸ்.கே
கமேர்கட்டு போன இடம் தெரியலை. சிறுவயதில் விரும்பி சாப்பிட்டது. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ;-)
ஒரு மருத்துவ வசதி கூட சரியாக இல்லாமல் எப்படித்தான் இவ்வளவு பெரிய கம்பெனி நடத்துகிறார்களோ? அம்பிகா விற்கு நடந்த்து மிக சோகம்.பாதுகாப்பு விஷயத்தில் இது மாதிரி கம்பெனிகள் திருந்தவேண்டும்.
திண்ணை கச்சேரி நன்றாக களை கட்டியுள்ளது .. வெ.பாக்கு காவி திரவத்தோடு மோவாயை மேல் தூக்கி பேச எத்தனிப்பது சரியான ரகளை..சுற்றியுள்ளவர்கள் ரெயின் கோட் மாட்டிக்கொள்ளவேண்டும்..
செய்திகள் ...பலவிதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்.. காகங்கள் புகைப்படம் அருமை ..
மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்...
@பத்மநாபன்
நன்றி! மீண்டும் மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்.
dear rvs
sorry aani romba jaasthi
wishing you and your family avery HAPPY DEEPAVALI
BALU VELLORE
@balutanjore
Thank You! Wish you a very Happy Deepavali.
மீரா ஜாஸ்மினின் கண்ணும்! அந்த பாட்டும் ஆஹா ராகம்!!! கச்சேரி அடிக்கடி நடத்துங்கள்!
நான் பாலத்தடியில நடந்தா மேலே காக்கா எச்சம் தான் விழுது... மச்சம் பாருங்க.
நோகியா மேலே கேஸ் போட்டாங்களா அந்தக் குடும்பத்துல? very sad. ப்ரோ போனோ சட்ட ஆலோசனை கிடைக்காதா அவங்களுக்கு?
(ஆமா.. எப்படி தெனம் ஏதாவது பிளாகறீங்க?)
இஞ்சி மொரப்பா என்று கிடைக்கும்...
பெண்கள் வெற்றிலை பாக்கு புகையிலை போட்டு கச்சேரி நடத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? அக்கம்பக்க அரசல்புரசல் விவரமெல்லாம் வெளிவரும் உன்னதத் திண்ணை.. நிறைய பகல்களில் நானும் பம்மல் விடலை நண்பர்களும் வாசனைப் பாக்கு சுண்ணாம்பு லஞ்சம் கொடுத்து திண்ணையில் இடம் பிடித்திருக்கிறோம். (ஐரே.. கும்மோணம் வெத்தில ரெண்டு எட்தா)
happy diwali
புகைப் படம் அருமை.
@சிவா
எந்த சபால இடம் கிடைக்கலைன்னாலும் இந்த கச்சேரி அடிக்கடி நடக்கும். ;-) ;-)
@அப்பாதுரை
//(ஆமா.. எப்படி தெனம் ஏதாவது பிளாகறீங்க?) //
நா எப்பவுமே ராக்கோழிங்க... பன்னெண்டாவது படிச்சதிலேர்ந்து நான் ஆந்தையா அவதாரம் எடுத்துட்டேன். (பொண்டாட்டி கிட்டேர்ந்து இந்த ராக்கூத்துக்காக இடி உழுது... இருந்தாலும் எளக்கிய ஆர்வம்... எழுது எழுதுங்குது ;-) ;-) ;-)
@அப்பாதுரை
//(ஐரே.. கும்மோணம் வெத்தில ரெண்டு எட்தா)//
கொளுந்து வெத்தலையா எடுத்தாறேன்.. ;-)
@Gopi Ramamoorthy
Thank You! Wish you Happy Deepavali
@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம் ;-)
RVS
Wish you a very Happy Deepavali.
SESHA
பழைய நினைவுகள அப்படியே கிளறிப் போட்டுட்டீங்க..
சூப்பர். குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!
@SESHA
Thank You Sesha! Wish you the same. எப்போ உனக்கு தலை தீபாவளி? ;-) ;-)
@ஆர்.ராமமூர்த்தி
நன்றி சார். உங்களுக்கும் என்னோட தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment