குப்பை அள்ளும் ஹைடெக் வால்வோ கோச்சுகள் வரிசையாக வாசனையுடன் வாசலில் நின்றிருந்தன. ஐந்தடுக்கு மாடியுடன் கண்ணாடி பளபளக்க பளீரென்று இருக்கும் திருவல்லிக்கேணி மாநகராட்சி அலுவலக வாசலில் காரை நிறுத்தினான் நாராயணன். வெள்ளை உடை சிப்பந்தி ஓடோடி வந்து ஒரு எலெக்ட்ரானிக் அட்டையை கையில் திணித்து வேலேட் பார்க்கிங் செய்வதற்கு காரை ஓட்டிச் சென்றான். அதல பாதாள பார்க்கிங். சாலை ஓரங்களில் ஒரு சின்னூண்டு குழந்தை சைக்கிள் கூட நிறுத்த தடை. ஒரு நிமிடத்திற்கு இந்த சாலையை என்பது வண்டிகள் கடந்து சென்றதாக அந்த மாநகராட்சி மாடி எல்.சி.டி டிஸ்ப்ளே அணைந்து அணைந்து தெரிவித்தது. அத்துமீறி வாகனங்களை நிறுத்தினால் ரோடோர Anti-Parking சென்சார்கள் போக்குவரத்து போலிசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடும். அடுத்த ஐந்து நிமிடத்தில் லிஃப்ட் வேன் வந்து வண்டியை கபளீகரம் செய்து கொண்டு போய்விடும்.
முழு ஸ்கேன் நிலைவாசலில் முடிந்து "பீம்..பீம்..பீம்..." என்று அலறியது அலாரம். உட்கார்ந்திருந்த கேபினிலிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான் செக்யூரிட்டி. "எத்தனை தடவை சார் சொல்றது எல்லாருக்கும். ப்ளுடூத் டிவைஸ் ஏதாவது வச்சுருக்கீங்களா. எடுத்து கொடுங்க." என்றான். நானு கையில் பையில் என்று தன் மேனியெங்கும் வியாபித்திருந்த நீலப்பல் சாதனங்களை கழற்றிக் கொடுத்துவிட்டு நிராயுதபாணியாக உள்ளே சென்றான். ஒவ்வொரு துறை வாசலில் ஒரு கண்ணாடி கதவு. கதவின் நடுவே சென்சார் பூட்டு நீலமும் சிகப்புமாய் சிரித்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்ன காரியத்திற்காக எவ்வளவு நிமிடம் என்ற முழு விவர சமர்பித்தலுக்கு பிறகு வெளியே கிடைத்த அந்த அனுமதி அட்டை போகவேண்டிய இடத்திற்கு மட்டும் அசைந்து கொடுக்கும். அலுவலகம் எங்கும் கண்காணிப்பு கமெராக்கள். கார்டில் உள்ள ஆர்.எஃப். ஐடிக்கள் காரிடாரில் செல்ல வேண்டிய துறையின் வழியை சுவற்றில் அம்பிட்டு காட்டியபடியே கூட வந்தது. பிறப்பு சான்றிதழும் ஆயுசு ஊசியும் என்ற துறை நோக்கி சென்றுகொண்டிருந்தான் நானு.
கதவில் கார்டை காட்ட உள்ளே அனுமதித்தது இயந்திரக் கதவு. உள்ளே நுழைந்ததும் வழுக்கிக்கொண்டு சார்த்திக்கொண்டது.
"ஐ அம் நாராயணன்"
"உங்க ஐ.டி?"
கோடுபோட்ட முழுக்கை சட்டையின் மணிக்கட்டு பட்டன்களை தளர்த்தி மெல்லிய சில்லில் ப்ரோக்ராம் செய்யப்பட்டு கையில் டாக்டர் நாடி பிடித்து பார்க்கும் பகுதியில் பதித்து வைக்கப்பட்டிருந்த இடத்தை அந்த ஸ்கேனருக்கு நேரே காண்பித்தான்.
"92537456190" என்று படித்துக்கொண்டது அந்த நீல நிற மானிட்டரில் ஒவ்வொரு எழுத்தாக ஓடியது.
"உங்க பார்ட்னர் பெயர்?"
"சரஸ்வதி"
"அவங்க ஐ.டி?"
"டிஜிடல் சிக்னேச்சருடன் உங்கள் இ மெயிலுக்கு நேற்றே அனுப்பியாயிற்று"
"இரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும்"
கூச்சலற்ற, கையூட்டு அற்ற, ஏஜெண்டுகள் அற்ற அரசுத்துறை அலுவலகங்கள். மனதையும் இருப்பிடத்தையும் குளிர வைக்கும் ஏ.சி. ஆங்காங்கே கவனித்தால் வேலையாகும் என்ற நிலை மாறி ஐடியை காட்டினாலே அரசாங்க வேலைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய மணித்துளிகளில் நிறைவேறிக்கொண்டிருந்தன. சரியாக இரண்டு நிமிட இடைவெளியில்
"இந்தாருங்கள்... சான்றிதழும் ஆயுசு ஊசியும்" என்று சா. ழைக் கவரிலும், ஊசியை ஒரு காகித டப்பாவிலும் போட்டு நீட்டினாள்.
"எவ்வளவு வருஷம்?"
"உங்கள் கேள்வி புதிதாக உள்ளதே! எவ்வளவு என்று தெரியாதா?"
"தெரியும் இருந்தாலும்..."
"45"
"ஒரு ஐம்பத்தைந்தாவது... "
"மிஸ்டர் என்ன கேள்வி இது. தலைமைக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா?"
"1020 செக்டாரில் ஏர்வே 45 ல் போன வாரத்தில் ஒரு 55 போடப்பட்டிருக்கிறது"
"நிரூபிக்க முடியுமா?"
கடிகாரக் காமெராவில் படம்பிடித்து வைத்திருந்ததை அந்த ஓய்யாரிக்கு ஒட்டிக்காண்பித்தான் நானா. வியர்வை கொஞ்சம் முத்துமுத்தாக நெற்றியில் தோன்ற..
"இதெப்படி..."
"எனக்கு தெரியும்.. வேண்டுமானால் அவர்கள் தந்தது போல் நானும் என்னுடைய ஆயுள் கேளிக்கை முழுவதும் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்."
பணமாகவோ, பொருளாகவோ எதையுமே லஞ்சமாக வாங்கமுடியாதவாறு அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டிருந்தது. ஒவ்வொரு அசையும், அசையா சொத்துக்களும் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. பிரஜைகளுக்கு அவர்களின் தொழிலைப் பொறுத்து ஆங்காங்கே வீடுகளும் குடும்பம் நடத்த தேவையான பொருட்களையும் அரசே அளிக்குமாறு பார்த்துக்கொண்டார் கண்டத் தலைவர். ஆம். நாட்டுக்கொரு தலைவர் போய், கண்டத்திற்கு ஒரு தலைவர் இப்போது. ஒவ்வொரு பிரஜைக்கும் மொத்த ஆயுள் 45 என்று வரையறுக்கப்பட்டது. அதற்க்கான பிரத்யேக ஊசி நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த ஊசியால் 45 வயது வரை எந்த வைரஸ் தாக்கினாலும் ஒன்றும் நேராது. நிர்ணயிக்கப்பட்ட வயது வரை அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருப்பர். அரசாங்க அலுவலில் உயர்த்தட்டு வேலையில் இருப்போருக்கு மட்டும் "ஆயுஷ்-55" ஊசி. தன்னுடைய பிள்ளைக்கு இன்னொரு பத்து வருடங்கள் கூட்டி ஆ.55 வாங்குவதற்கு தன்னுடைய ஆயுளில் கேளிக்கை என்று அரசாங்கம் விதித்திருந்த அத்துணை சலுகைகளையும் லஞ்சமாக அந்த ஊழியரிடம் தத்துக் கொடுத்துவிட்டு நின்றது அந்த தியாக உள்ளம் படைத்த தகப்பன்.
எவ்வளவு விதிமுறைகள் இருந்தாலும் லஞ்சம் வாங்கத் தெரியாதா நமக்கு என்ற அந்த அரசுத்துறை ஊழியரும், என்ன கொடுத்தேனும் தன் வாரிசுக்கு நன்மை செய்வோம் என்ற பெற்றோரும் காலாகாலத்திர்க்கும் நிற்கும் மனிதர்களின் இலக்கணங்கள்.
பின் குறிப்பு: இந்த சிறுகதை சமீபத்திய ஆண்டிபயாடிக் தந்த போதையில் எழுதியது.
பட உதவி: http://picasaweb.google.com/democracyphotochallenge
-

40 comments:
ஆஹா அடுத்த சுஜாதா ??
@LK
அண்ணா.. மலை எங்கே மடு எங்கே... வாத்தியார் Uncomparable... பாராட்டுக்கு நன்றி ;-)
அருமை.
@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றி ;-)
இது எந்த வருஷத்துல நடக்கும் என்று நீங்க சொல்லவே இல்லையே? ஒருவேளை கிபி 3000க்கு அப்புறமா?
சூப்பர்.
ஆயுஷ்-55 ஊசி இருக்கட்டும்.
உங்க காய்ச்சலுக்கு டாக்டர் போட்ட ஊசியப் பார்த்து கதை எழுதறிங்களே, எப்படி ? :)
@நாகராஜசோழன் MA
வருஷம் சொன்ன சுவாரஸ்யம் இருக்காது எம்.எல்.ஏ. எதிர்காலத்தில நடக்கும். ஓ. கே வா. தீம் எப்படி? அதச் சொல்லுங்க...
@கோவை2தில்லி
நன்றி ;-)
@இளங்கோ
//ஆயுஷ்-55 ஊசி இருக்கட்டும்.
உங்க காய்ச்சலுக்கு டாக்டர் போட்ட ஊசியப் பார்த்து கதை எழுதறிங்களே, எப்படி ? :) //
உண்மையச் சொல்லனும்ன்னா இன்னும் ரெண்டு பக்கம் எழுதியிருப்பேன். போனாப்போகட்டும்ன்னு இத்தோட நிறுத்திக்கிட்டேன். ;-)
ஐயையோ.. ரெண்டு பக்கமா ??
இந்த ஒரு கதையைப் படிச்சதுக்கே, லைட்டா காய்ச்சல் வர்ற மாதிரி பீலிங் தெரியுதுங்க அண்ணா.. :)
@இளங்கோ
ம்.... அந்த பயம் இருக்கட்டும். ;-)
story super;romba romba nallarukku RVS.
@padhu
Thank you very much!!
நல்ல புனைவு. எங்கேயோ போயிட்டீங்க [கி.பி. 3000-த்திற்கு அல்ல] :)))))
@வெங்கட் நாகராஜ்
நன்றி... இங்கேயிருந்தே சொல்லிக்கறேன்.. ;-) ;-)
short 'n sweet! அருமை.
ஜுரம் இன்னும் விடலையோ ? பாதிப்பு தெரிது :)
நல்ல புனைவு :)
@அப்பாதுரை
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி. நன்றி ;-)
@dr suneel krishnan
டாக்டர் இல்ல.. கரீட்டா கண்டு பிடிச்சிட்டீங்க.. நன்றி ;-)
//RVS said... @இளங்கோ
உண்மையச் சொல்லனும்ன்னா இன்னும் ரெண்டு பக்கம் எழுதியிருப்பேன். போனாப்போகட்டும்ன்னு இத்தோட நிறுத்திக்கிட்டேன். ;-)//
என்னே, உந்தன் பெருந்தன்மை..
மாத்திரையின் மப்பில் கனவுகள் தான் கன்னா பின்னாவென வரும் எனச்சொல்வார்கள்..உங்களிடம் இருந்து அருமை காலக்கற்பனை கதை வந்திருக்கிறதே....இன்று ரெண்டு மாத்திரை கூட போட்டுக்கோங்க.....
மாணவருக்கு வாத்தியாரின் ஆசி நிறையவே உண்டு.......
@பத்மநாபன்
பாராட்டுக்கு நன்றி பத்துஜி ;-)
பரிட்சார்த்த முயற்சி மட்டுமே. அறிவியல் புனைவு எப்படி எழுதலாம் என்ற முனைப்பின் விளைவே இது. உங்களைப் போன்றோர் கொடுக்கும் தெம்பு இன்னும் நிறைய எழுதவைக்கும் என்று நினைக்கிறேன். நன்றி ;-)
@Madhavan Srinivasagopalan
எழுதலாங்க்றீங்க்லா.. வேண்டாங்க்றீங்க்லா... ;-)
உங்க போட்டோவ மட்டும் பார்கல்லென்ன இட்ஹு சுஜாதா எழுதினதுதான்னு சாதிச்சிருப்பேன். nice.. very nice, உடம்பு தேவலையா?
அண்ணே செம சரியான தீம்!
அப்பப்போ இந்த மாதிரி அறிவியல் புனைவு எழுதுங்க!
கடைசிப் பாரா பஞ்ச் சூப்பர் :)
அருமை.
//பின் குறிப்பு: இந்த சிறுகதை சமீபத்திய ஆண்டிபயாடிக் தந்த போதையில் எழுதியது.//
போதையில் வந்த கதை நல்லா இருக்கு RVS.
@மோகன்ஜி
உடம்பு தேவலாம் ;-) மனதார பாராட்டியதற்கு நன்றி ;-)
@Balaji saravana
நன்றி தம்பி ;-)
@ஸ்ரீராம்.
நன்றி ;-)
@சைவகொத்துப்பரோட்டா
நன்றி பரோட்டா ;-)
அருமை.
@சே.குமார்
நன்றி ;-)
அண்ணா, ஊசி போட்டது எதோ ஓமணக் குட்டி நர்ஸ் மாதிரினா இருக்கு!! டாக்டர் போட்டுருந்தா இப்படி எல்லாம் கற்பனை வராது...:)
என்னோட ப்ளாக்ல எல்லாரும் RVS இன்னும் வரலையா?னு கேக்கறா!..:)
@தக்குடுபாண்டி
நான் ஊசியே போட்டுக்கலை.. மூஞ்சியப் பார்த்தாச்சு.. ;-)
DEAR RVS
NAAN MUNBE DUBUKKUVIRKU AMBAI SUJATHA ENRA PATTAM VAZHANGIYULLEN.
THANGALUKKU MANNAI SUJATHA ENRA PATTAM VAZHANGUVADIL PERUMAI KOLKIREN
BALU VELLORE
பிந்தினாலும் தவறவிடாமல் வாசிச்சிட்டேன்.அருமையான
கதை ஆர்.வி.எஸ்.
@balutanjore
Thanks a Ton Sir!!
@ஹேமா
நன்றி ;-)
Post a Comment