Friday, September 17, 2010

செவிக்கின்பம்

sevikinbamஇதை விட சிறந்த பேர் இந்த பதிவுக்கு சூட்ட முடியாது. பொதுவாகவே மலையாள பாடல்களில் கர்நாடிக் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். என்னுடைய சீதா கல்யாண வைபோகமே பதிவு எழுதும் போதே இதைத் தேடினேன். கிடைக்கவில்லை. படத்தின் பெயர் எண்டே மோகங்கள் பூவினிங்கு. கர்நாடக சங்கீதம் தெரிந்தாலும், இல்லாவிட்டாலும் இதை கேட்கலாம். அத்தனை அருமை. இயற்க்கை கொஞ்சும் மலையாள தேசத்தில் திண்ணையில் உட்கார்ந்து பக்க வாத்தியங்களோடு நடிகர்கள் மூலமாக மேலே குறிப்பிட்ட படத்தில் பால முரளி கிருஷ்ணா, கே.ஜே. யேசுதாஸ் மற்றும் ஜானகி பாடியது. கேட்க கேட்க செவிக்கின்பம்.

ரகுவர...
1:24 மணித்துளிகளில் இருந்து ஜேசு பாட ஆரம்பித்து அப்புறம் இறுதியில் ஜானகியும் சேர்ந்துகொள்வார். முதலில் ஜேசுவும், பாலமுரளியும் போட்டி போட்டுக்கொண்டு மாறி மாறி பாடி நம் காதுகளை சங்கீத தேன் கொண்டு குளிப்பாட்டுகிறார்கள். பின்னால் ஜானகி அவர் பங்குக்கு வந்து ரகளை செய்வார். ரொம்ப நாள் கழித்து கேட்டதால், இதுவரை பத்து முறை கேட்டாகிவிட்டது. இன்னமும் அலுக்கவில்லை.



மனசுலோனி..... யேசுதாஸ், ஜானகி.  பாடல் முழுவதும் தண்ணீருக்குள் நின்று சாதகம் செய்யும் காட்சி.  சாதகம் முடியும் போது இருவரும் கண்ணோடு கண் கலந்து காதல் மலரும் காட்சி. அசாத்ய சாதகம்.

3:40  நிமிடத்தில்.. யேசுதாஸ் சிரித்துவிட்டு பாட ஆரம்பிக்கும் கட்டம் சூப்பர்.



ரசிக்கும்படியாக இருந்ததா உங்களுக்கு?

8 comments:

தமிழ் உதயம் said...

உங்களை மாதிரியே நானும் பாடல்களை ரசித்தேன்.

RVS said...

இசையின்பத்தில் லயித்ததர்க்கு நன்றி தமிழ் உதயம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

மலையாளக் கரையோரம் மனசை நானும் பறிகொடுத்துட்டேன் ஆர்.வீ.எஸ் .

பத்மா said...

ஆஹா அருமை
ரசித்தேன் ரசித்தேன் r v s sir
அந்த படத்தை பார்க்கும் ஆசை வந்துவிட்டது ..
பாலமுரளி கிருஷ்ணா ஆரம்பிக்கும் போது அங்கு பொங்கும் ப்ருஹாகளுக்கு ஈடு எது?நன்றி நன்றி பகிர்ந்தமைக்கு

RVS said...

மனசை திரும்ப எடுத்துக்கோங்க மோகன்ஜி. இதுபோல இன்னும் கைவசம் நிறைய இருக்கு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

மூன்று இசை மேதைகளும் ரவுண்டு கட்டி பாடும் போது மனசு ரெக்கை கட்டி பறக்குது பத்மா. சரிதானே...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

seems that U like carnatic songs very much..

I also had once.. somehow not listening to these days.. but, it's sure, I am missing the music.. I should start it again.. (not singing.. but listining to)

RVS said...

if you tune yourself to Carnatic, It is a great listening pleasure. Even though you dont know the Ragas/Talas..

anbudan RVS

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails