Tuesday, August 17, 2010

முனைவர் எனப்படுவது யாதெனின்

ஒரு டாக்டர்  பட்டம் பெறுவது எப்படி என்று தெரியுமா? நான் சொல்வது பாடம் படித்து, அதாவது ஒரு காலேஜில் ஸ்டுடென்ட் ஆக சேர்ந்து ஒரு க்ளாஸ் ரூமில் முதல் பெஞ்சிலோ அல்லது மாப்பிள்ளை பெஞ்சிலோ உட்கார்ந்து பல பீரியட்களில் பல ப்ரோஃபசர்களின் சித்ரவதை அனுபவித்து, கஷ்டப்பட்டு தூங்காமல் வகுப்பறையில் கண் முழித்து, கட் அடிக்காமல், சினிமா போகாமல், இம்மண்ணுலக இன்பங்கள் அனைத்தையும் தவித்து ஒரு முனிபுங்கவர் தவஸ்ரேஷ்ட்டர் போல வாழ்க்கை வாழ்ந்து, Ph.D  என்றொரு டாக்டர் பட்டம் பெறுவது பற்றிய பேச்சு இது. இல்லையென்றால், கலையுலக சாதனை, எழுத்துலக சாதனை, அரசியல் உலக சாதனை, என்று படிப்புலக சாதனை மட்டும் இல்லாமல் ரசிகக் குஞ்சுகளை கூட்டி, ஏதோ ஒரு பல்கலைக் கழக ப்ரமொஷனல் நிகழ்ச்சியில் வைத்துக் கொடுத்து வாங்குவது அல்ல நான் சொல்ல வந்தது. 

அமெரிக்க பல்கலைக்கழகமான உடா யூனிவர்ஸிடி கணினித்துறை பேராசிரியர் மாட் மைட் என்பவர், தன்னிடம் டாக்டர் பட்டம் பெறுவதற்கு பயில வரும் மாணவச் செல்வங்களிடம், Ph.D என்றால் என்ன என்பதை ஒரு படம் போட்டு விளக்குகிறாராம். அந்தப் படத்தை ஊராருக்கும் போட்டுக் காண்பித்திருக்கிறேன். மறுக்க இயலாத அட்டகாசம். அவர் பாஷையிலேயே அந்தப் பட வரிசை.

1. இந்த மனித குலத்தின் இந்த அண்டத்தின் ஒட்டுமொத்த அறிவை இந்த வட்டம் எனக் கொள்வோம்.

1

2. நடுநிலைப் பள்ளி முடித்து வெளிவரும் வேளையில் நம்முடைய அறிவின் ஆழம் இது.
2

3. மேல்நிலைப் பள்ளியில் இருந்து வெளிவரும்போது நம் மூளையில் ஏறிய பங்கு.
3

4. இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவுடன் அந்த விசேஷ தனித் தேர்ச்சி பெற்ற பாடத்தில் நாம் கண்ட அறிவுத் தேர்ச்சி.
4

5. முதிநிலைப் பட்டயம் அந்த வி.த.தே.பாடத்தின் தேர்ச்சியை ஆழப்படுத்துகிறது.
5

6. முன்பு ஆய்வு செய்த கட்டுரைகளை உருப் போடும் போது ஒட்டுமொத்த மனிதகுல அறிவின் எல்லையைத் தொடுகிறோம்.
6

7. இந்த எல்லையில் இப்போது ஒரே நோக்கோடு அடைந்தால் டாக்டர் இல்லையேல் பேஷன்ட் என்று இலக்கு வைத்து சுவற்றில் முட்டி மோதி படிக்கிறோம்.
7

8. இந்த இலக்கினால், அந்த எல்லையை சில வருடங்கள் படித்தும் கிழித்தும் முழு பலம் கொண்டு தள்ளிப் பார்க்கிறோம்.
8

9. ஒரு நாள், அந்த எல்லை மனதிறங்கி கொஞ்சம் அசைந்து, கொஞ்சூண்டு இடம் தருகிறது.
9

10. அந்த எல்லையிலிருந்து அது கொடுத்த, அங்கு எட்டிப் பார்த்த அந்த தக்கினோண்டு சின்ன உப்பல் தான் Ph.D எனப்படுவது.
10

11. இந்த நிலையில் இந்த உலகமே உங்களுக்கு புதியதாய் வித்தியாசமாய் தோன்றும்.
11

12. இந்நேரத்தில், தயவு செய்து யாரும் இந்தப் பெரும் படத்தை மறந்துவிடாதீர்!.
12

ஆகையால் இன்னும் படித்துக்கொண்டே இருங்கள். கல்விக்கடலை நீந்தி கடப்பது அவ்வளவு சுலபமில்லை. என்கிறார் ப்ரொஃபசர். இந்த அறிவுக்கண் திறக்கும் படங்கள் கிடைத்த இடம்  http://gizmodo.com/5613794/what-is-exactly-a-doctorate

4 comments:

பத்மநாபன் said...

அருமையான விளக்கம். முனவர் பட்டமளவுக்கு படித்தால் தான் , மனிதனுக்குண்டான அறிவை நெருங்கமுடியுமா? அப்ப புஸ்தகத்தை மறுபடியும் எடுக்கனுமா? நோ,நோ நான் அரசியல் கட்சி எதிலாவது சேர்ந்த்துக்குறேன். படிச்சு மாளாது.

பொன் மாலை பொழுது said...

என் உறவினர்கள் சிலர், சில மூத்த நண்பர்கள் இந்த முனைவர் பட்டம் பெற்றவர்கள். ஆனால் நான் ஒரு தடவை கூட அவர்களின் இந்த "தனித்தகுதியை " கண்டதில்லை, உணர்ந்ததில்லை நான். மிக சாதாரணமாகவே இருகின்றனர். என் பிள்ளைகளைப்போல கேள்விகள் கொண்டு. என் அப்படி? ஒருவேளை எனக்கு புத்தி பத்தாதோ/இல்லையோ அவர்களை புரிந்து கொள்ள.

RVS said...

பத்மநாபன், ஒன்னு அரசியல்ல சேருங்க.. இல்லைனா ஒரு மோசமான நடிகரா ஆயிடுங்க. நிச்சயம் உங்களை புடிச்சு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்துடுவாங்க.

;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வியாதிக்கு மருத்துவம் பார்க்கிற டாக்டரே சிலசமயம் அதுமாதிரி நடந்துக்கிறதில்லை.. நிச்சயம் நம்ம பி.ஈ படிப்பு மாதிரி வருசத்துக்கு ஒரு கும்பலா பாஸ் பண்ணிக்கிட்டு இருப்போம். விடுங்க கக்கு. ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails