Tuesday, June 15, 2010

எதிர்காலம் எழுது

கை கால் முன்னும் பின்னும் சுற்றத் தெரிந்த வயது முதலே வளைந்து நெளிந்த மூன்று கருவக் குச்சி, இரண்டு ருபாய் பச்சைக் கலர் ரப்பர் பந்து, ஒரு பாதியை கைப்பிடியாக செதுக்கிய மரப்பலகை (கிட்டத்தட்ட கசாப்புக்கடை கத்தி போல) போன்ற முக்கிய உபகரணங்கள் மற்றும் மட்டை பிடிக்க பேட்ஸ்மேன் ஒருவன், பந்து வீச பௌலர் ஒருவன், பின்னால் பாதுகாக்க கீப்பர் ஒருவன் இருந்தால் போதும், கூட்ட நெரிசல் இருக்கும் ரோட்டோரம், வயசான வேப்பமர அடிவாரம், வாசல் திண்ணை பெரியதாக உள்ள வீடு, அரைகுறை ஆங்கில வழி கல்விப் பள்ளியின் அரை கிரௌண்ட் விளையாட்டு மைதானம், ஆற்றங்கரை செல்லும் ஒத்தயடிப் பாதை, சிவன் கோவில் நந்தவனம் (பூ பூக்காத) என்று எங்கு வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடலாம். ஜன நெருக்கடி உள்ள இந்த நாட்டில் கிரிக்கெட் பிரபலம் ஆனதற்கு மேற்கண்ட காட்சிகள் ஒரு எடுத்துக்காட்டு. கிரிக்கெட்டுக்கு எல்லோரும் விளையாடி பயிற்சி பெறுவதற்கு மைதானம் அவசியமில்லை. ஆனால் ஹாக்கி, புஃட்பால் போன்ற பிற திறந்த வெளி விளையாட்டுகளுக்கு ஏதாவது ஒரு வறண்ட குட்டையாவது வேண்டும், பந்தை உதைக்க, மற்றும் இழுத்துச் செல்ல.


சர்வலோகத்திற்கும் ரைட்டு போட்டு காண்பிக்கும் நைக்கி ஷு கம்பெனியார் தயாரித்த எதிர்காலம் எழுது (Write the Future) உலகக் கோப்பை 2010 -இன் விளம்பரம் இப்போது பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்தப் பதிவை எழுதும் வரையில் இந்த படக்காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களினால் 15,402,388 முறை யூட்யூபில் பார்க்கப்பட்டிருக்கிறது. ரொனால்டோ, டென்னிஸ் கிங் ரோஜர் பெஃடரர் போன்றோர் தோன்றி சிறப்பித்திருக்கும் இந்த மூன்று நிமிட விளம்பர படத்தில் கடைசி சில நொடிகளில் "உஃப்" என்று ஒரு பெருமூச்சு விட்டு சிலை திறப்பு விழா நடத்துவது மிகவும் அருமை.

என் இனிய கால்பந்து ரசிகர்களுக்காக...  (பாரதிராஜா ஸ்டைல்)

1 comments:

அமைதி அப்பா said...

கிரிக்கெட் வளர்ந்தது குறித்த தங்களின் கருத்து சரியே...
நன்றி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails