இத்தாலி நாட்டின் (ஆமாங்க அன்னை சோனியா காந்தி ஊருதான்) ரிசோர்ஸ் பர்னிச்சர்ஸ் (அறைகலன்கள்) என்ற நிறுவனம் இரண்டு படுக்கை குடியிருப்பில் இருபது பேர் வசிப்பதற்கான வழிமுறைகளை டேபிள், கட்டில், சேர் முதலியவற்றை நீட்டி, மடக்கி நிமிர்த்தி, சாய்த்து உபயோகிக்க வடிவமைத்துள்ளது. ஒரே இடத்தில் கால் நீட்டி படுக்க, மடக்கி உட்கார்ந்து படிக்க, சாப்பிட என்று சர்வ காரியங்களையும் செய்வதற்கு ஏதுவாக அறைகலன் வடிவமைப்பு செய்துள்ளது. கீழ்காணும் வீடியோ காட்சியில் அந்த நிறுவனத்தின் ப்ரிசிடென்ட் ரோன் பார்த் வீட்டின் அறைகள் முழுவதும் சுவரோரத்தில் இருக்கும் எததையோ சாய்த்து, மடக்கி கட்டில் போட்டுக் காண்பிக்கிறார். எல்லா அறைகளையும் படுக்கையறை ஆக்குகிறார். அவர் கூட டெமோ காண்பிக்கும் அந்த பாண்டியராஜன் பட ஏலம் விடும் அம்மணி கட்டில் சேர்களை அலுங்காமல் குலுங்காமல் உட்கார்ந்து எழுந்து அசால்ட்டாக மடக்கி நிமிர்த்தி போடுகிறார். வசிக்கும் குடியிருப்பில் இரண்டாவது படுக்கையறை சிறியதாக இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொண்டவர்கள் இப்போது தங்களது இரு பிள்ளைகளையும் மிகச் சௌகரியமாக கட்டிலில் போட்டு "ஆராரோ.. ஆரிராரோ" பாடுகிறார்கள் என்கிறார் பார்த். ஒவ்வொன்றின் வடிவமைப்பும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பாருங்கள்...
இந்த மாதிரி செட்டப்பை பார்க்கும்போது இன்கம்டாக்ஸை ஏமாற்றி சொத்து சேர்த்திருக்கும் அனைவரும் இதை வாங்கி கீழே சி.டி, ஆவணங்கள் போன்ற அனைத்தையும் அடுக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. இந்தியா மாதிரி நாடுகளில் ஏக கிராக்கி இருக்கும் விற்பனை பொருளாக பிரகாசமான வாய்ப்புள்ள பொருள் இது.
அதுசரி நம்மூர்களில் வீடுதோறும் பரண்களில் வண்டிவண்டியாக லோடு ஏற்றி வைத்திருக்கிறார்களே அதையெல்லாம் என்ன செய்வது?
அதுசரி நம்மூர்களில் வீடுதோறும் பரண்களில் வண்டிவண்டியாக லோடு ஏற்றி வைத்திருக்கிறார்களே அதையெல்லாம் என்ன செய்வது?
0 comments:
Post a Comment