Wednesday, June 23, 2010

அப்பாக்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்

சென்ற ஞாயிற்றுக்கிழமை நிறைய நாடுகளில் கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்திற்கு டியுரெக்ஸ் என்ற ஆணுறை நிறுவனம் வெளியிட்ட "எங்களது போட்டியாளர்களின் உற்பத்தியை உபயோகப்படுத்தும் அனைவருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்" என்ற விளம்பரம் ஒன்று உலகெங்கிலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்த ஒரு விளம்பரத்தில் சர்வலோக அப்பாக்களுக்கு இருவரிகளில் அன்பு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறது. மாங்காய் ஊறுகாயிலிருந்து உயரே பறக்கும் வானூர்திகள் வரை எங்கும் எதிலும் அரையாடை அணிந்த பெண்டிரை அங்குமிங்கும் ஓடவைத்து, உறிஞ்சவைத்து, உடுத்தவைத்து, படுக்கவைத்து, அவிழ்க்கவைத்து, குதிக்கவைத்து, ஆடவைத்து, பாடவைத்து, பார்க்கவைத்து, படிக்கவைத்து, இன்னும் பல வைத்து விளம்பரம் தயாரிப்போர் கவனத்திற்கு...
 
fathers day



சில தந்தையர் தின சிந்தனைகள்

வீட்டிலிருக்கும் பணி ஓய்வு பெற்ற தந்தையை போற்றி மதித்தால் அதுவே அவருக்கு அவருடைய நாள், அதாவது FATHER'S DAY!!!! 

ஒரு படத்தில் கவுண்டர் தனக்கு செந்தில் அப்பாவாக நடித்தும் கூட "அப்பா... அப்பா டா...அப்பா டேய்..." என்று திட்டும் காட்சி ஏனோ அனாவசியமாக அழுக்காக நினைவுகளில் வந்து சென்றது. 

"அம்மா என்றழைக்காத" என்ற மன்னன் படப்பாடல் போல  "அப்பா என்றழைக்காத" என்று ஏதாவது படத்தில் பாடல் எழுதினால் அனைத்து "தமிள்" பேசும் தொலைக்காட்சிகளிலும், ரேடியோ பொட்டிகளிலும் "இப்ப உங்களுக்காக ஒரு அப்பா பாட்டு வந்துகிட்டேயிருக்கு.. கேளுங்க..." என்று அரைமணிக்கு ஒருமுறை போட்டு அப்பா பக்தியை அதிகரிக்கலாம்.

பிள்ளைகளுக்கு பிடித்தது அப்பாவா? அம்மாவா? என்று ஏன் எந்த தொலைகாட்சியிலும் பாப்பையாவோ, லியோனியோ பட்டிமன்றம் போடவில்லை?

"அப்பா நீ சரியான லூசுப்பா!!" என்று நான் சென்ற ஞாயிற்றுக்கிழமை என்  குட்டிப் பெண்ணிடம் வாங்கிய செல்லத் திட்டுதான் எனக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

8 comments:

Anonymous said...

I think you missed the whole point of the advertisement.

RVS said...

Can you please tell where I failed?

Anonymous said...

its supposed to be humorous .. the durex company is saying that those men who use durex's competitors' condom product will become fathers soon because of (perceived) bad quality of the competitors' product.

Joe said...

"நீங்க வேலைக்குப் போயிட்டு தினமும் லேட்-ஆ தானே வர்றீங்க, அதுனால உங்கள எனக்குப் புடிக்கல." என்று ஆரம்பித்தது தந்தையர் தினம்.

கடைசியா தூங்கப் போகும் முன்னால சொன்னான் "I love you, daddy. Happy Father's Day!"

Madhavan Srinivasagopalan said...

//its supposed to be humorous .. the durex company is saying that those men who use durex's competitors' condom product will become fathers soon because of (perceived) bad quality of the competitors' product.//

It is obvious from the two lines... I believe RVS made this post on considering that point in particular.

//"அப்பா நீ சரியான லூசுப்பா!!" என்று நான் சென்ற ஞாயிற்றுக்கிழமை என் குட்டிப் பெண்ணிடம் வாங்கிய செல்லத் திட்டுதான் எனக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.//

Your daughter must be very clever.. (ரொம்ப வெவரந்தான்.)

Joe said...

//"அப்பா நீ சரியான லூசுப்பா!!" என்று நான் சென்ற ஞாயிற்றுக்கிழமை என் குட்டிப் பெண்ணிடம் வாங்கிய செல்லத் திட்டுதான் எனக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.//

குழந்தைகள் அறிவாளிகள், முதலில் கொஞ்சம் ஏமாந்தாலும், சீக்கிரம் உண்மையைக் கண்டுபுடிச்சிருவாங்க! ;-)

RVS said...

எம்பொண்ணு ஒரு தடவை சொன்னா, நீங்க நிறைய தடவை சொல்லி கீழ்ப்பாக்த்துல சேர்த்துடுவீங்க போலிருக்கு!! விடுங்க சார்! அறியாப் பொண்ணு தெரியாம சொல்லிடுச்சு... :) :) :)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Joe said...

RVS,
குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதால் எதற்கும் நீங்களொரு முறை மன நல மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டுகிறேன் ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails