நம்மூரில் பாலம் கட்டுவோர் கவனத்திற்கு:-
ஹாங்காங்கில் உள்ள காரோட்டிகள் இந்தியா போல சாலையின் இடது புறம் பயணிப்பார்கள், சைனாவின் சப்பை மூக்கு சாரதிகள் வலது புறம் ஓட்டுவார்கள். ஹாங்காங் மக்களும் சீனர்களும் புறம் மாறாமல் இங்குமங்கும் செல்வதற்கு ஏதுவாக பேர்ல் நதியின் மீது கட்டுவதற்கு ஒரு நெக்லஸ் போன்ற பாலத்தை என்.எல் ஆர்கிடெக்ட்ஸ் என்ற டச்சு கம்பனி வடிவமைத்துள்ளார்கள்.
நம்மூர் மக்களுக்கு இப்படி ஏதும் தேவைப்படும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் எல்லோருமே வலமும் இடமும் நுழைந்து நுழைந்து ஓட்டி நடு ரோடில் வாகனத்தால் நெக்லஸ் டிசைன் போடுகிறார்கள். நேற்று கூட பல்சரில் சென்ற வாலிபன் சோழாவரத்தில் போவது போல டயரின் கால் பாகம் தரையில் பட சுழன்று சுழன்று சென்றுகொண்டிருந்தான்.
கூவத்துல போட் விடுவதற்கு பதிலா பாதி டிராபிக்கை மேற்கண்ட பாலம் போட்டு திருப்பி விட்டா எப்படி இருக்கும்? பாலம் கட்டி பஸ் விட்டுடலாம் ஆனா கூவத்து மேல ஸ்டாப்பிங் வச்சா மக்கள் எப்படி ஏறுவாங்க? மூக்கப் பொத்திக்கிட்டுதான்!!! :)
பாலம் கட்டிய பரமாத்மாவே வருக வருக!! அப்படின்னு பாலம் தொறந்துவைக்க அந்த நாட்டு அமைச்சரை ஆளுயர கட் அவுட் வச்சு கூப்பிடுவாங்களோ. பார்ப்போம்.
பட உதவி: http://www.nlarchitects.nl
1 comments:
Ni(ecla)ce information..
Post a Comment