இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. அரை செஞ்சுரி அடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு விளையாட்டாக இந்த தீ.வி.பி ஆரம்பிக்கப்பட்டது. என்னுடைய அறுவை தாங்க முடியாமல் நண்பர் ரவியின் தூண்டுதலால் எழுத ஆரம்பித்த இந்த ப்ளாக் இன்று ஐம்பதை தொட்டிருக்கிறது. பால்ய காலங்களில் கிரிக்கெட் விளையாடும் போது ஐம்பது எடுத்தால் அன்று இரவு முழுவதும் உட்கார்ந்து எல்லோரையும் சொறி சொறி என்று சொறிவது போல இப்போது நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. இவ்வளவு நேரம் செய்தது அதுதான் என்று நீங்கள் சொல்வது புரிகிறது எனக்கு. சரி விஷயத்திற்கு வருகிறேன். இந்த ஐம்பதாவது பதிவை பாராட்டி திரி லோக சக்ரவர்த்தி இம்சை அரசன் 23-ம் புலிகேசி அறிவித்திருக்கும் சில பரிசில்களை வெல்வதற்கு கீழே அவருடைய அரசாணையை பதிப்பித்திருக்கிறேன். வாசியுங்கள்.
இம்சைபுரி
6/5/2010
ப்ளாக் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி. இதுவரை நேருக்குநேர் எல்லோரையும் பேசியே இம்சித்து வந்த ஆர்.வி.எஸ் என்னும் இந்த அன்பர் ஒரு நண்பரின் தூண்டுதலால் வலை உலகத்தில் நுழைந்து அவரது வீடு கடந்து, அலுவலகம் கடந்து, ஏரியா கடந்து, ஊர் கடந்து, மாநிலம் கடந்து, தேசம் கடந்து ஒரு தீவிரவாத செயலாக எல்லோரையும் எழுதியே துன்புறத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்வக் கோளாறினால் ஐம்பது முறை இந்த செயலை செய்து மகிழ்ந்திருக்கிறார். நமது தேசத்தின் தலை சிறந்த பத்திரிக்கையாளரான ஒண்டிப் புலிக்கு அவர் அளித்த சிறப்பு பிரத்யேக பேட்டியில், நிற்கும் போதும், நடக்கும் போதும், மற்றவர் வாய் பார்க்கும் போதும், காலை நடையின் போதும், கடன்களை கழிக்கும் போதும், மூச்சு விடும் போதும், ப்ளாக் ப்ளாக் என்ற ஒரே சிந்தனையோடு ஒரு வித 'வெறிச்' செயலாக இதில் ஈடுபட்டதாகவும், பலபேர் இதை படித்து துன்புறுகையில் ஒரு விதமான உளமார்ந்த மகிழ்ச்சி தனக்கு ஏற்ப்பட்டதாகவும் தெரிவித்தார். அவரின் இந்நற்ச்செயலை பாராட்டி இந்த கீழ் கண்ட நிகழ்ச்சிகளையும் /திட்டங்களையும்/ பரிசில்களையும் அறிவித்து ஆணையிடுகிறேன்.
1: ஆர்.வி.எஸ்ஸை பாராட்டும் விதமாக எல்லா ஊரிலும் பால் காவடி மற்றும் பன்னீர் காவடி போன்றவற்றை எடுத்து அவரின் இந்த மனித குல மேம்பாட்டு சேவை தொடர பூரண ஆயுளுக்கு முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
2: எல்லா கள்ளுக் கடைகளிலும் ஐம்பது சத விலைக் கழிவுடன் சாராயத்துடன், 'அக்கா மாலா' மற்றும் 'கப்சி' போன்ற பானங்கள் இலவசமாக வழங்கப்படும்.
3: ஐம்பதில் ஆசை வரும் அனைவர்க்கும் அவரவர்கள் விருப்பத்திற்க்கேற்ப அந்த ஆசைகளை ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்கள் தீர்த்து வைப்பார்கள். அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தி முடிக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு "மாமா" பஞ்சாயத்து தலைவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். (மா மா என்றால் பெரிய பெரிய என்று அறியுமாறு அரசவைப் புலவர் பானபத்ர ஓணாண்டி தெரிவித்துள்ளார்)
4: ஆணிலும் பெண்ணிலும் ஐம்பது சதவீதமாக இருக்கும் அனைவருக்கும் மாதம் தலா ஐம்பது பொற்காசுகள் பரிசாக பெறுவார்கள். கஜானா காலியானால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
5: ஊருக்கு வெளியே எச்சரிக்கை கொடியுடன் தீ.வி.பியில் இருக்கும் சிறுகதைகளை நாடகமாக நடித்துக் காட்டி கலைச் சேவை புரிய அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். நடிகர், நடிகைகளின் கலை விழாக்களுக்கு அவருக்கு நேரமில்லாததால் இந்த ஏற்பாடு என்று மங்குனி மந்திரி தெரிவித்தார்.
6: சிறைக்காவலில் இருக்கும் ஆயுள் கைதிகள், தீ.வி.பி ப்ளாக்-ஐ படித்து அதில் உள்ள சில நுணுக்கமான பதிவுகளை ( உதா: நம்பர் ப்ளாக்) படித்து புரிந்து கொண்டால் அவர்களுக்கு விடுதலை வழங்குமாறு உத்தரவிடுகிறேன்.
7: இருபத்து ஐந்து வயதே நிரம்பியிருக்கும் ஆர்.வி.எஸ் என்ற இளைஞன், ஐம்பதை அடையும் போது அவருக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் உதவித் தொகையாக அவரது இந்த கலைச் சேவையை பாராட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்.
நன்றி.
ஒப்பம் ( 23-ம் புலிகேசி)
இதைப் படிக்கும் வாசகர்களும் இதே போல சிலபல பரிசுகளை அறிவித்து ஆர்.வி.எஸ்ஸை பாராட்டலாம், பின்னூட்டமாக...
8 comments:
itho auto varuthu paaratta...
valthukkal nanabre. satham adika valthukkal
ஆட்டோவுக்கு நன்றி. பாராட்டுக்கு மிக மிக நன்றி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
50 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய சாதனைகளும், பரிசுகளும் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஸ்ரீ....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
அண்ணா வணக்கம்னா,
தங்கள் 50 ஆவது பதிவுக்கு 1000 ஆவது பதிவை காணப்போகும் கவிதை07 வாழ்த்துக்கள்
நன்றிங்கண்ணா .... இம்சை கிட்ட சொல்லி ஆயிரம் பொற்காசுகள் வழங்கச் சொல்றேன்.. நம்ம ஆளுதான் மங்குனி மந்திரி... வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் நன்றி திரு. சித்தூர்.எஸ்.முருகேசன்
//இருபத்து ஐந்து வயதே நிரம்பியிருக்கும் ஆர்.வி.எஸ் என்ற இளைஞன், //
ஸ்வப்பா.. தாங்கலையே
உங்கள் அழகான இம்சைகள் மேலும் தொட வழ்த்துகள் நண்பரே
Post a Comment