நின்ற பொருள் அசையவும்; அசையும் பொருள் நிற்கவும் ஒரு கலந்துரையாடல்
சத்தியம் டி.வியில் இனிதே நடந்து முடிந்தது. இளையராஜாவுக்கு முதல்
கம்போஸிங் போது சுபசகுனமாகக் கரண்ட் போனது போல டி.வி ஸ்டேஷன்
ஸ்டூடியோவிற்கு மூன்று கிலோ மீட்டர் முன்னதாக அவர்கள் அனுப்பிய கார்
பஞ்சர்.
எப்பாடுபட்டேனும் இவ்வுலக மக்களுக்கு சகல சம்பத்துக்களையும் தரும் இந்த அரிய நிகழ்ச்சியை வழங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் கட்டுக்கடங்காமல் பொத்துக்கொண்டு ஊற்ற ஒரு ஆட்டோ பிடித்து டி.வி ஸ்டேஷனை முற்றுகையிட்டோம்.
Extempore ஆகத்தான் பேசினோம். ரூம் போட்ட யோசனைகள் மற்றும் புத்தகப் பக்கங்களை கிழியும் வரை திருப்புதல் என்கிற பெரிய தயாரிப்பு எதுவும் இல்லை. நிறையக் கால் வந்ததாகச் சொன்னார்கள். முகப்புஸ்தக வட்டாரத்திலிருந்து நண்பர் Roaming Raman கால் செய்து கேள்விகேட்டு அசத்தினார். கேமரா முன்பு உட்கார்ந்திருக்கும்போது தெரிந்த அன்பர்கள் கிரஹாம்பெல் டெக்னாலஜி வழியாக நம் செவியில் நுழைவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய ஆர்வலர்கள் தொடர்பு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள். (காதைக் கொடுங்கள் ஒரு ரகசியம் சொல்கிறேன். இரண்டு பேர் அப்படிச் சொன்னார்கள். இன்னும் இரண்டு பேருக்கு நான் ஃபோன் செய்து ”ஒரு கால் பண்ணக்கூடாது?” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டேன்.)
ஃபோனில் கேட்பது போலவே நிறைய புத்தகக் குறிப்புகளை அள்ளி வீசினார் Chandramowleeswaran Viswanthan. நான் பக்கத்திலிருந்து அடக்கமாக கேட்டுக்கொண்டேன். இரண்டு மூன்று பேர் ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான புத்தக பரிந்துரையை எதிர்பார்த்தார்கள்.
மெத்தப் படித்தவர்களுக்கு இந்தப் ப்ரோகிராம் இனித்திருக்குமா என்று தெரியவில்லை. மண் பயனுற பேசினோமா என்றும் தெரியாது. எதாவது படிக்கலாம் என்று தோன்றும் அநாமதேய அன்பர் எவரேனும் இதனால் பயனடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே!
#நண்பர் ஒருவர் “U LOOK SMART RVS" என்று SMS அனுப்பியிருந்தார். கோடம்பாக்கம் இயக்குனர்களின் கவனத்திற்காக இதை இங்கே சேர்த்தேன்!
##மூன்று நாட்கள் கழித்து காணொளி தருவார்கள். யூட்யூபில் ஏற்றிவிட்டு சுட்டி தருகிறேன்.

###நேரலையாகப் பார்த்த அல்லது நான் யூட்யூபில் ஏற்றிய பிறகு பார்க்க ஆவலாக
காத்திருக்கும் அனைவருக்கும் நன்றியும் அன்பும் கலந்த வணக்கம்!!
17 comments:
நான் நெட்டில் பார்த்தேன். ஆனால் ஒன்பது முப்பது முதல், ஒன்பது ஐம்பது வரை நெட் ஒளிபரப்பில் ஏதோ தடங்கல் ஏற்பட்டது. ஆடியோவை மட்டும் கிடைத்தவரை ரிக்கார்ட் பண்ணி வைத்திருக்கின்றேன்.
ஒருமணி நேரம் என்ன பேசினீர்கள் என்று பார்த்தால் மிகச் சில குறிப்புகளே கிடைக்கின்றன. புள்ளி விவரங்களை நீட்டி முழக்காமல் சில வரிகளில் சுருக்கமாக முடித்திருக்கலாம் என்று தோன்றியது. 'உள்ளே உட்கார்ந்திருந்தவர்களுக்கல்லவா தெரியும் எது நிதர்சனம்' என்று கேட்கிறீர்களா.... அதுவும் சரிதான்!எல்லாமே வெளியில் இருந்து சொல்வது எளிதுதானே....
ஆர் வி எஸ் நீண்ட நேரம் அமைதியாக இருந்ததுவும், பேச ஆரம்பிக்கும் போது காலர் இன்டரப்ஷன் வந்து நிறுத்தியதுவும் காண முடிந்தது!
ஸ்மார்ட் sms... அனுப்பியது யார்னு பேர் சொல்ல மாட்டீங்களா.... பொய் சொல்றீங்களா நிஜம் சொல்றீங்களான்னு எப்படி நம்பறது?!
எந்த நம்பருக்கு போன் செஞ்சு கேள்வி கேக்கணும்னு உங்க முந்தைய பதிவுல போட்டிருக்க வேணாமோ?
"கேள்விகளையும் கருத்துக்களையும் முன்னாலயே அனுப்பிச்சிருங்கப்பா" என்ற மோகன்குமாரின் உத்தி பிடித்திருந்தது.
டிவி நிகழ்ச்சியோட டேப் ப்ரிந்ட் தரமாட்டாங்களா?
இதானே வேணாங்கறது... நீங்க சத்தியம் செய்யாமலேயே தெரிஞ்சுடுமே இந்த உண்மை?
எங்க ஊர்ல தெரியுதான்னு தெரியல..சுட்டி இணையுங்கள் பார்க்கிறோம்...
8-10 am power cut on that day. God is double great as you said :)))
வாழ்த்துக்கள்!
காணொளினா videoவா? ok!
எங்கருந்து யாரு பிடிக்கறாங்களோ இந்த மாதிரி தமிழ் சொற்களை? audioவுக்கு கேளொலியா?
@kg gouthaman
நன்றி சார்! முடிந்தால் எனக்கு அந்த ஆடியோவைப் பகிரவும். :-)
@ஸ்ரீராம்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
அந்த எஸ்.எம்.எஸ் விவகாரம்..... ஆஞ்சநேயரு நெஞ்சைக் கிழிச்சு காமிச்சாரே... அவருதான்...
@அப்பாதுரை said...
எனக்கு நம்பர் தெரியாது சார்! அப்படியே தெரிஞ்சிருந்தாலும் சொன்னா ரொம்ப கலாய்ச்சுட்டாங்கன்னா என்ன பண்றது. நான் பாவம் சார்!
மூன்று நாட்கள்ல தரேன்னு சொல்லியிருக்காங்க.. பார்க்கலாம்.... :-) யூட்யூப்ல சுட்டியை ஏற்றியபின் உங்களுக்கு இந்த டைட்டிலின் மகிமை தெரியும்!!! :-)
@கோவை நேரம்
நன்றி! சுட்டி இணைக்கிறேன்.
@சிவகுமார் !
கடவுளின் கருணை உங்களின் மேல் தீர்க்கமாக இருக்கிறது!! :-)
@கே. பி. ஜனா...
நன்றி சார்!
வாழ்த்துகள் சார்.
@Rathnavel Natarajan
நன்றி சார்! :-)
Post a Comment