Wednesday, February 8, 2012

தவளைப் பாடம்

ஒரு குரூப்பாக பாழுங்கிணற்றைத் தாண்டி தவ்விச் சென்ற தவக்களைகளில் இரண்டு கால்தவறி அதற்குள் தொபகடீரென்று விழுந்துவிட்டது.

இரண்டு தவளைகளும் முழுத் தெம்பையும் உபயோகித்து குதித்து எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தன.

இதை மேலேயிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சக தவக்களைகள் “உஹும்.. இது ரெண்டும் பூட்ட கேஸு. இனிமே இவன்களால நிச்சயமா எந்திரிச்சு வெளியே வரமுடியாது.” என்று தலையாட்டி பெட் கட்டி விவாதித்துக்கொண்டிருந்தன.

கரைத் தவக்களைகளின் இந்தக் கேலி சம்பாஷனையைக் கேட்ட கிணற்றில் விழுந்த ஒரு தவக்களை திராணியற்று ஸ்தம்பித்துப்போய்விட்டது. சிறிது நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து அந்த இடத்திலேயே உயிரைவிட்டது.

இன்னொரு தவளை விடாமல் எம்பியது. அந்தத் தவளை அண்ணாந்து பார்த்து தப்பிக்க மூச்சுமுட்டக் குதிக்கும்போதெல்லாம் கிணற்றுக்கட்டையில் குழுமியிருந்த தவளைகள் கைகொட்டிச் சிரித்து அதன் முயற்சியை பழித்தன.

விடாக்கொண்டனாக தொடர்ந்து எழும்பி கடைசியாக ஒரு க்ளைமாக்ஸ் ஜாக்கிசான் துள்ளலில் வெளியே வந்து குதித்துவிட்டது அந்த தவக்களை. 


ஹீரோயிஸம் காட்டிய அந்தத் தவளையை எல்லாத் தவளையும் சூழ்ந்துகொண்டு “டேய்! ஹீரோ. எப்படிடா அவ்ளோ ஆழத்திலிருந்து தப்பிச்சே” என்று தோளைத்தட்டி விசாரித்தபோது திருதிருவென்று விழித்த தப்பித்த தவக்களை “என்ன?” என்று ஜாடையாக கையை ஆட்டியது.

ஐந்தாறு முறை எல்லாத்தவளையும் கூக்குரலிட்டு கேட்டபோதும் பதிலலிக்காததால் ஒரு மோட்டா தவக்களை வாயருகில் கையை கொண்டு வந்து “பேசமாட்டியா?” என்று அபிநயத்தது.

”பஹ்..”என்று சிரித்த அந்தத் த.தவளை, “ச்சே..ச்சே... நல்லா பேசுவேன். ஆனா காதுதான் சுத்தமாக் கேட்காது”ன்னுது.

நீதி: வாழ்க்கையில முன்னேறனும்னு நினைச்சா அதற்கு தடையா அனாவசிய டயலாக்ஸ் வரும்போது காதுக்கு “கே” இனிஷியல் மாட்டிக்கோங்க. உருப்படலாம்.

23 comments:

விஸ்வநாத் said...

தவளை தந்த பாடம்
தலைவர் மூலம்;
வாழ்வில் உயர
வேறென்ன வேணும்;

பத்மநாபன் said...

காது...... கேக்காதா........ ஒக்கே .....ஒக்கே

Sridhar said...

//..காதுக்கு “கே” இனிஷியல் மாட்டிக்கோங்க..//

:-))))))))))) Humourous

மாதேவி said...

:)) கற்றுக்கொண்டோம்.

ADHI VENKAT said...

தவளை தந்த நல்ல பாடம் தான்.....

காதுக்கு ”கே” இனிஷியல் சமயத்துல மாட்டிக்க வேண்டியது அவசியம் தான்....

RAMA RAVI (RAMVI) said...

அருமையான நீதி.முன்னேற வேண்டும் என்றால் கே இன்ஷியலை மாட்டிக்கொள்ளதான் வேண்டும்.

ஹாலிவுட்ரசிகன் said...

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பாஸ் ... தீயா வேலை செய்யணும்.

பொன் மாலை பொழுது said...

இன்னா ..நம்ம மைனருக்கு பிரமோஷனு கெடசிடுச்சா.... நீயி கெளிசுடுவே தலீவா.

சாந்தி மாரியப்பன் said...

முயற்சி திருவினையாக்கும். சமயத்தில் இன்ஷியல் மாட்டாவிட்டால் அதுவே துர்வினையுமாகும்..

தவளைக்கு ஜே :-))

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... இனிஷியல் மாட்டிக்கணுமா சரி மைனரே.....

raji said...

எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

raji said...

நான் நிறைய சமயத்துல அந்த இனிஷியல் மாட்டிக்கறது உண்டு.
ஆனாலும் தவளை தத்துவம் அருமைதான்

RVS said...

@விஸ்வநாத்
ஒன்னொன்னா படிச்சு சொல்றேன் விசு! தலைவரா? :-)

RVS said...

@பத்மநாபன்
கொஞ்சம் டைம் கிடைக்குது போலருக்கு... கருத்துக்கு நன்றி ரசிகமணி! :-)

RVS said...

@Sridhar

Thank you! :-)

RVS said...

@மாதேவி
நானும் கத்துக்கிட்டேன். :-)

RVS said...

@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றி சகோ! :-)

RVS said...

@RAMVI
தொடர் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி மேடம். :-)

RVS said...

@ஹாலிவுட்ரசிகன்
விஸ்வரூப வெற்றி.. விடா முயற்சி... நல்ல கருத்து பாஸ்! :-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
என்ன ப்ரோமோஷன் சாரே! நம்ம கதையில்லாம சுயமுன்னேற்றக் கதைகளும் அப்பப்ப சொல்லனும்ல.. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
திருவினை... துர்வினை... பயங்கரமா யோசிக்கிறீங்க மேடம்.. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஆமா! கருத்துக்கு நன்றி தலைநகர தல!! :-)

RVS said...

@raji
விருதுக்கு நன்றி! தவளைத் தத்துவம்.. நிறைய சொல்லித்தருது... :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails