Friday, February 3, 2012

எண்பது

எண்பதுக்கு முன்:
இந்தக் கதையில் மூன்று ப்ரேக் பாய்ண்ட் உள்ளது. எந்த ஒன்றிலும் நீங்கள் வெளியே வந்து விடலாம். தொடரும்படி இருந்தால் முழுவதுமாகவும் படிக்கலாம். உங்கள் விருப்பம்!


வாழ்க்கை ஒரு அரை சைன் வேவ்னு சொல்றேன். மொதோ முப்பது வருஷம் ஏறினா அடுத்த முப்பது வருஷம் இறங்குது. வயசாக வயசாக ஆண்டவன் ஒன்னொன்னா கழட்டிவிட்டுக்கிட்டே வரான். அத அப்படியே மனசார ஏத்துக்கனும். ச்சும்மா அதுகூடப் போராடாக்கூடாது. என்ன நா சொல்றது?

கண்ணு தெரியலையா? வயசானப்புறம் கண்டதையும் பார்க்காதே கைக்குக் கிடைச்சதெல்லாம் படிக்காதேன்னு அர்த்தம். பேசாம மூடிக்கிட்டு ”ராமா..ராமா”ன்னு ராமஜெபம் பண்ணு. போறவழிக்கு புண்ணியம் உண்டு. என்ன நா சொல்றது?

காது கேட்கலையா? அப்பாடி! ரொம்ப நல்லது. “இந்த மாமனார் கிழத்துக்கு வேற என்ன வேலை?”ன்னு நறநறன்னுப் பல்லைக் கடிக்கறது காதுல விழாது. ஆனந்தமா ம்யூட் மோட்ல சொச்ச வாழ்நாள கழிச்சுடவேண்டியதுதானே? என்ன நா சொல்றது?

பல்லு விழுந்துடுச்சா? சுத்தம். பேரப் பசங்க சீடை முறுக்கு சாப்பிடட்டும்னு விட்டுடனும். எனக்கும் ரெண்டுன்னு இளிச்சுக்கிட்டே அல்பமா போய் கைய நீட்டக்கூடாது. பொடிச்சது இடிச்சத சாப்டுக்கவேண்டியதுதான். என்ன நா சொல்றது?

கை கால் முட்டி வலிக்குதா? சூடுபரக்க மூவ் தடவி தேச்சுவிட்டுக்கிட்டு பம்பரமா சுத்தனும்னு யார் கேட்டா? ஹாயா ஹால் சோஃபால உட்கார்ந்து ஃபோன் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு வீட்டைப் பார்த்துக்க வேண்டியதுதானே. என்ன நா சொல்றது?

ஷுகர், பீ.பின்னா வாயக்கட்டுப் படுத்தனும். அரைக்கிலோ ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பா வாங்கி ஸ்வீட்பாக்ஸோட மொக்கக்கூடாது.  வாய்க்கு மானசீகமா ஒரு கட்டுப் போட்டுக்கனும் சார்! சாப்படறது பேசறது எல்லாத்துக்கும் சேர்த்துதான் சொல்றேன்.

*************ப்ரேக்பாய்ண்ட் 1 (விளக்கம் கடைசியில் பார்க்க)

பக்கத்தில் இருந்தவரின் தொடையை சிவக்கத் தட்டி தட்டிப் பெரிய பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் திரு.மகுடேஸ்வரன்(80), 18, சோலையப்பன் ஸ்ட்ரீட், மயிலாப்பூர், சென்னை-4லிருந்து.

”சார்! நீங்க உள்ள போகலாம்” என்றான் அந்தப் பையன். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.

“டாக்டர் சார்! நடந்தா இறைக்குது.தெம்புக்கு மருத்தே தரமாட்டேங்கிறீங்க. பேட்டரி ஃபுல்லா இருந்தாலும் ரொம்ப சன்னமா கேட்குது. போன மாசமே இந்த பைஃபோக்கல எந்த கண்ணாஸ்பத்திரியில மாத்தலாம்னு கேட்டேன். நீங்க எதுவும் சொல்லவே இல்லை. மேல் செட்டு பரவாயில்லை. கீழ் செட்டு அங்கங்க குத்தி ஈறெல்லாம் புண்ணாகுது. எவ்ளோ நாள் தான் முட்டிக்கு மூவ் தடவறது? நல்ல ஆர்த்தோ யாரையும் சஜ்ஜஸ்ட் பண்ண மாட்டீங்களா? பேசாம இன்சுலின் ரெண்டு ஷாட்டா போட்டுக்கிட்டா? ” பெரிய யானை லிஸ்ட் போட்டார் மகுடு.

டாக்டர் புருவம் உயர்த்தினார். 

*************ப்ரேக்பாய்ண்ட் 2 (விளக்கம் கடைசியில் பார்க்க)

டாக்டர் சிக்குக்கோலம் வரைந்த ப்ரிஸ்கிரிப்ஷனை பார்த்துக்கொண்டே வந்தவரிடம் வரவேற்பறை பெண்மணி கிண்டலாகக் கேட்டாள்.

“சார்! எல்லோருக்கும் இது தேவையா அது தேவையான்னு இலவசமாப் பெரிய அட்வைஸ் கொடுத்தீங்க.. நீங்களும் ஒன்னுவிடாம எல்லாத்துக்கும் பார்த்துக்கிட்டுதானே வந்தீங்க”

“அம்மா!”. நீங்கள் இந்த வாக்கியம் படித்துமுடிக்கும் இடைவெளி கொடுத்தார். “வீட்ல எல்லாரும் ஆபீஸ் போனதுக்கபுறம் நாந்தானே எல்லாவேலையும் செய்யனும். தெம்பா இருக்கவேண்டாமா?”

ஸ்நேகமாய் சிரித்தாள் அந்தப் பெண்.

**************ப்ரேக்பாய்ண்ட் 3 (கடைசி ப்ளீஸ்)

”பேத்திக்கு ஹோம் வொர்க் சொல்லித்தர கண்ணு நல்லாத் தெரியுனும். ரோட்ல ட்யூஷனுக்கு கொண்டு போய் விட்டுட்டு வர்றதுக்கு காது கேட்கணும். ரேஷனுக்கும் இல்ல சூப்பர் மார்க்கெட் போய் சாமான் வாங்கிட்டு வர்றதுக்கு கை கால் தெம்பா இருக்கனும். பல்லு போனா சொல்லு போச்சு. யாராவது ஃபோன்ல பேசுனா நா பதில் சொல்றது புரியலைங்கறாங்க. அதான் புதுசா பல்லு கட்டிக்கலாம்னு இருக்கேன். பேரன் காட்பரீஸைப் புட்டு ஒரு வாய் ஆசையா “தாத்தா இந்தா”ன்னு சொல்லும்போது வேண்டாம்னு சொல்ல முடியுமா. அந்த சந்தோஷத்துக்காக ரெண்டு ஷாட் இன்சுலின் போட்டுக்கிட்டாலும் பரவாயில்லை.”

வாயடைத்துப் போனாள் வரவேற்பு பெண். ஃபீஸை கொடுத்துவிட்டு ஸ்கூட்டியேறிப் பறந்தார் மகுடு.
-சுபம்

ப்ரேக்பாய்ண்ட் 1-ல் இந்தக் கதையை முடித்தால் வயதில் பெரியவர்களை அபவாதம் செய்த பாவம் வந்து சேரும்.

ப்ரேக்பாய்ண்ட் 2-ல் இந்தக் கதையை முடித்தால் ”ஊருக்கு உபதேசம் செய்யும் மகுடு” என்றாகிவிடும்.

ப்ரேக்பாய்ண்ட் 3-ல்  இந்தக் கதையை முடித்தால் “வீட்டுக்கு உழைக்கும் நல்லவர் மகுடு”

-சுபத்தில் இந்தக் கதையை முடித்தால் ஒருவருக்கும் பங்கம் இல்லாமல் சுபம் என்று அர்த்தம்.

பின் குறிப்பு: ஒரு கதை நாலு முடிவு. எனக்கு புது ட்ரை! ஒரு வீடு இரு வாசல் மாதிரி ஒரு வீடு நாலு கொல்லைப்புறம்.

படம் நன்றி: http://grantdeb.com/
-

22 comments:

வெங்கட் நாகராஜ் said...

புதுசு புதுசா யோசனை பண்றீங்க மைனரே.....

எல்லாமே நல்லா இருந்தது என்றாலும் நாலாவது கொல்லைப்புறம் தான் எனக்குப் பிடித்தது....

Madhavan Srinivasagopalan said...

நல்லாவே மாத்தி யோசிக்கற நண்பா...

இருந்தாலும் sine wavela, கொஞ்சம் n*pi to m*pi (n is odd number, m is even number) ரேஞ்சுக்கு போனீங்கன்னா.... நல்லா இருக்குமே.. அதான்.. ஆரம்ப வாழ்க்கையில சொகுசா சகல வசதியோட இல்லாம.. கஷ்டப் பட்டு உலக நிலவரம் கத்துக்கிட்டா.. ரெண்டாவது பாதில ஏறு முகமா இருக்குமே..

நாலு வாசல்/exit இருந்தா அது மண்டபம்.. அல்லது தியேட்டர்..

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல! :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
அரை சைன் வேவ்ன்னு சொல்லியிருக்கேன். மொத பாதி வேவ்.

இது ஒரு வீடு இரு வாசல் என்ற தலைப்புக்கு பொருத்தி சொல்லப்பட்ட வாசகம் அது. :-)

சாந்தி மாரியப்பன் said...

சுபத்தில் முடியும் வாசல்தான் ரொம்ப அழகாருக்கு. வயசாயிட்டா எல்லாம் போச்சுன்னு அர்த்தமில்லியே, அப்பவும் ரசனையான வாழ்க்கை இருக்கத்தான் செய்யுது
:-)

PVR said...

அற்புதமா வந்திருக்கு. Easy flow. Explanations could have been avoided. They actually intrude. :)

அப்பாதுரை said...

smart

ஸ்ரீராம். said...

புது மாதிரியா இருக்கு....

RAMA RAVI (RAMVI) said...

மூன்று முகங்கள். வித்யாசமாக இருக்கு.நல்ல முயற்சி.

மோகன்ஜி said...

இப்போ நான் எங்கேருக்கேன்? நீங்கல்லாம் யாரு?

தக்குடு said...

ஐடியா எல்லாம் புதுசு புதுசா தான் வருது. ஆனா 'ஒரே வாசல் மூனு வீடு!' அப்பிடினு எதுவும் எசகு பிசகா முயற்சி பண்ணி மாட்டிண்டு முழிக்காம இருந்தா சரிதான். :P

குறிப்பு - கள்ளச் சிரிப்பு சிரிக்க வேண்டாம்! நான் கதைல உள்ளதை பத்திதான் பேசிண்டு இருக்கேன்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

ADHI VENKAT said...

வித்தியாசமான முயற்சி....நல்லா வந்திருக்கு சகோ.... பாராட்டுக்கள்.

RVS said...

@அமைதிச்சாரல்
சரியாச் சொன்னீங்க. இப்பெல்லாம் வயசாயிட்டாதன் ரொம்ப தெம்பா இருக்கனும். கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@PVR
கருத்துக்கு நன்றி சார்! நான் கொஞ்சம் லொடலொடா... அதான் நடுநடுவுல என்னோட வெளக்கம். சரி பண்ணிக்கிறேன். மிக்க நன்றி. :-)

RVS said...

@அப்பாதுரை
நன்றி. வ.வா.பி. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்! :-)

RVS said...

@RAMVI
தொடர் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி மேடம். :-)

RVS said...

@மோகன்ஜி
இந்தக் கேள்வி நாங்க கேட்கனும் ஜி! :-)
எப்படியிருக்கீங்க? சுகமா? :-)

RVS said...

@தக்குடு
கள்ளா!!!!! :-)))

RVS said...

@Rathnavel Natarajan
நன்றி சார்! :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ! நிறைய வலைப்பூக்கள் பக்கம் வரமுடிவதில்லை... :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails