Sunday, January 22, 2012

நண்பன்: யாரு மச்சான்?


காலகாலமாக சத்தியத்திற்கே சென்று பழக்கப்பட்ட கார் டயர்கள் நேற்று ஐனாக்ஸை மிதித்தது. அம்பட்டன் வாராவதி என்று சென்னைச் செந்தமிழில் அழைக்கப்படும் ஹாமில்டன் ப்ரிட்ஜ் ஓரத்தில் கூவம் நதிக்கரையோரமாக சிக்கனமாக கட்டியிருந்த சிட்டி செண்டர் ப்ளாஸாவில் எங்களைப் போன்ற பெத்த க’ஷ்’டமர்களுக்காக பிரத்தியேக காட்சி என்று டாடா கம்பெனியினர் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருந்தார்கள். “இந்தக் கடிதத்தை கொண்டு வரும் பையனிடம் --- டிக்கெட் கொடுக்கவும்” என்று அனுப்பியிருந்த இமெயில் கடிதாசை ஐனாக்ஸ் வாசலில் கொடுத்தால் மறுகையில் டிக்கெட் கொடுப்பார்கள் என்றும் ஒரு மின் லிகிதம் வந்தது. ”முந்துபவருக்கே அமர்வதில் முன்னுரிமை” என்று ஒரு கடைசி வரியை 20 பாயிண்ட்டில் போல்ட் செய்து அடிக்கோடிட்டிருந்தது அந்த இமெயிலின் சிறப்பம்சம்.

வெள்ளிக்கிழமை லன்ச்சிலிருந்தே வார விடுமுறை ஆரம்பிக்கும் குதூகலமான நிறுவனங்களுக்கு இடையே; 24x7x365 ”குற்றேவலே எங்கள் உயிர் மூச்சு” என்று உழைக்கும் வர்க்கத்திற்கு இச்சினிமாவிற்கு முதலில் முந்துவது எப்படி? நண்பன் விமர்சனம் எங்கே என்று புருவம் சுருக்குபவர்கள் இந்தப் பாராவைத் தாண்டும்படி கோரப்படுகிறார்கள். ரேஸில் தியேட்டரை அடைந்து முதலில் சீட்டுக்குத் துண்டு போடுவது எப்படி என்று ஆராய்ந்ததில் என்னுடைய மருமானின் நண்பன் ஆபத்பாந்தவனாய் ஒத்தாசைக்கு வந்தான். ஐனாக்ஸின் கொல்லைப்புறத்தில் வசிக்கும் அந்தப் பையன் நண்பனுக்காக மூனரைக்கே முகாமடித்து வாங்கிக்கொடுத்து அந்தச் சரித்திரப் படத்தை பார்ப்பதற்கு உதவி புரிந்தது பாதி படத்தில் என் கண்களில் நீர்க் கோர்த்தது. ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்!! திரையில் சில விநாடிகளே நீடிக்கும் படச் சான்றிதழிலிருந்து கண்கொட்டாமல் பார்க்கும் எனக்கு பார்க்கிங்கில் என்னுடைய ட்ரைவிங்கின் சகல திறமைகளையும் காட்டிக் காரை நிறுத்துவதற்குள் டைட்டில் முடிந்துவிட்டது.

த்ரீ இடியட்ஸ் பார்க்காத ஒரு இடியட் நான். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என்ற நண்பர்களுடைய கல்லூரி வாழ்வில் நடக்கும் பொது நிகழ்வுகள்தான் கதை. கல்லூரிக்கதைகளில் காதல் இருந்தால் அந்தப் பெண்ணின் அப்பன்காரன் நிச்சயம் வில்லனாக இருப்பான். இங்கே ப்ரின்ஸிபால் சத்யராஜ் வில்லன் மாதிரி. அவருடைய ஸ்ட்ரிக்ட்னெஸ் குணாதிசயம்தான் வில்லன். சத்யராஜ் மதிய இடைவேளையில் கல்லூரி வளாகத்தினுள் சவரம் செய்து கொள்வதை படத்தில் புகுத்தியது இந்நூற்றாண்டின் சினிமாப் புரட்சி.

”Life is a Race. நீங்க ஓடிக்கிட்டே இல்லைன்னா பின்னாடி வர்றவன் உங்களை மிதிச்சிக்கிட்டுப் போய்டுவான்” என்று கையில் ஒரு பொம்மை மைனாக் குஞ்சை வைத்துக்கொண்டு புது மாணவர்களுக்கு புத்தி புகட்டுகிறார் வைரஸ் என்கிற விருமாண்டி(VIRU) சந்தானம்(S). வருடாவருடம் அந்த வாந்தியை அவர் எடுக்கிறார் என்பதை அந்த ஹாஸ்டல் கேம்பஸில் பொட்டிபோடும் இஸ்திரி சிறுவன் எம்.எம் (மில்லி மீட்டர் (எ) மணிமாறன்) அவரை இமிடேட் செய்வதிலிருந்து தெரிகிறது. சத்யராஜ் புஸ்புஸ்ஸென்று பேசுவது அவருடைய மானரிஸமாகக் காட்டப்படுகிறது. அந்த புஸ்புஸ்ஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வசனங்கள் கொஞ்சம் மிஸ்மிஸ்ஸிங்.

வித்தியாசமாக மாத்தி யோசியாக வரும் விஜய் முதல் காட்சியிலேயே சீனியருக்கு கரண்ட் ஷாக் கொடுக்கிறார். அந்த சீனியருக்கு எங்கே கரண்ட் ஷாக் கொடுத்தார் என்று எழுதினால் இங்கே நாறிவிடும். ஹாஸ்டல் ரூமுக்கு முன்னால் ஒன்றுக்கு அடிப்பது எந்தக் கல்லூரியின் ரேக்கிங் கலாச்சாரம் என்று தெரியவில்லை. இவர்களின் கற்பனைத் திறன் மூக்கின் மேல் கைவைக்கத் தூண்டுகிறது. படத்தில் பஞ்சவன் பாரிவேந்தன் என்ற தமிழொழுகும் பெயர் விஜய்க்கு. இண்டெர்வெல்லுக்கு முன்னால் டைரக்டர் சூர்யாவை நான் தான் பஞ்சவன் என்று பஞ்ச் வைக்கச்சொல்லி இடைவேளை விடுகிறார்கள். ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை.

ஜீவாவின் பி.ஈயை நம்பி அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாழ்வியல் அடங்கி இருக்கிறது. காசநோயுடன் கட்டிலில் படுத்தபடுக்கையான சீக்கான தந்தை, சொற்ப வருமானத்தில் குடும்பத்தை ஓட்டும் அன்னை, இன்னும் வரப்போகும் 500 வருஷ தமிழ்த் திரைப்படங்களுக்கு முடிச்சு சங்கதியாக வரப்போகும் கல்யாணம் ஆகாத அசிங்கமான அக்காவென்று எல்லாமும் அவருக்கும் இப்படத்தில் இருக்கிறது. ஜீவாவுக்கு அவரது நிலைமையப் புரியவைக்க 25000000 என்ற இலக்கத்தை போர்டில் எழுதி “இது பாரி அப்பாவோட மாத வருமானம்” என்றும் கடைசி மூன்று சைபரை அழித்து “இது வெங்கட் அப்பாவோட மாத சம்பளம்”, இன்னும் கடைசி ஒரு சைபரை அழித்து “இது தான் உங்க குடும்பத்தோட வருமானம்” என்று விளக்குவது நல்ல சீன். சத்யராஜின் கண்டிப்பிற்கு ஒரு மாணவனை பலிவாங்குவது அக்கிரமம்.

வெங்கட்டாக வரும் ஸ்ரீகாந்த் தன் பங்கிற்கு சுமாராகச் செய்திருக்கிறார். மிருகங்களை படமெடுக்கும் ஆர்வலராக இருக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக தகப்பனாரின் ஆசைக்காக பி.ஈ படிக்க விழைகிறார். மீசையை சுத்தமாக மழித்தால் கல்லூரி மாணவன் வயதை எட்டிப்பிடிக்கலாம் என்று பளபளா சவரம் செய்து கொண்டிருக்கிறார். யாராவது கொடுவா மீசைக்காரர்கள் இந்த உத்தியை முயற்சித்துப் பார்த்து கமெண்ட்டவும். இப் படத்தின் கதையே ஆரம்பத்தில் அவரது நேரேஷனில் தான் விரிகிறது. வைரஸின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மாடியிலிருந்து விழுந்த ஜீவாவை சொஸ்தப்படுத்தும் பணியில் இருக்கும் விஜய் அவனுடைய அவலட்சணமான அக்காவை ஸ்ரீகாந்த் கல்யாணம் செய்துகொள்வான் என்கிற ஃபால்ஸ் ப்ராமிஸ் கொடுக்கும் போது ஏதோ நடித்தமாதிரி இருக்கிறது. நிறைய இடங்களில் ரெண்டோடு மூன்றாக ஃப்ரேமுக்குள் வந்துபோகிறார். தந்தை தனது விருப்பத்தை பூர்த்தி செய்கிறார் என்று தெரிந்ததும் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சியில் நடிப்பு பரவாயில்லை.

இலியானா என்ற ஒல்லிக் குச்சி உடம்புக்காரி தான் ஹீரோயின். வைரஸின் பெண்ணாக பஞ்சத்தில் அடிபட்டது போல இருந்தார். தெற்கத்திக்காரர்கள் இப்படி ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டிய ஈர்க்குச்சியை எப்படி ஜொல்லொழுக விரும்புகிறார்கள் என்பது ”ஒல்லி பெல்லி” என்ற பாடலில் தெளிவாக விளங்குகிறது. அங்கே அவர் இடுப்பைச் சுழற்றி ஆடியது இங்கே நமக்கு கயண்டுவிட்டது. டாக்டர் படிக்கும் முனியம்மா என்றுதான் நெஞ்சில் நிற்கிறார். ”வைரஸ் இல்லாக் கணினி” என்று சத்யராஜை வம்பிக்கிழுத்து அவரது மகளாக வரும் இலியானாவிற்கு பாட்டெழுதியிருக்கும் மதன் கார்க்கியின் புலவர்க்குசும்பு நன்றாக தெரிகிறது. படத்திற்கு வசனமும் அவரே.

படத்தின் ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் இலியானாவை கலியாணம் செய்துகொள்ள ஒரு கேரக்டர் வருகிறது. எல்லாவற்றையும் ப்ராண்ட் பார்த்து தெரிவு செய்யும் திருவாளர். விஜய் செய்யும் சில சட்னி சேஷ்டைகள் இலியானாவை அவர் பக்கம் ஈர்த்துவிடுகிறது. ஷூக்காலில் சட்னி கொட்டியதும் “இடியட் இது 400 டாலர்ஸ். தெரியுமா?” என்று மூச்சிரைக்க இரைகிறது அந்த பாத்திரம். மோதலில் ஆரம்பித்தது கடைசியில் ”முத்தம் கொடுக்கும் போது மூக்கோடு மூக்கு இடிக்குமாப்பா” என்ற கேள்வி வரை வந்து நிற்கிறது.

ஒரு முக்கியமான விஷயம். படமெங்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் உள் ஜட்டித் தெரியக் கால்சராயை அவிழ்த்து திரைக்குப் பிருஷ்டத்தைக் காண்பித்து சீனியர்களுக்கு நமஸ்காரம் செய்வது இளைஞர்களின் மரியாதை மொழி. ’குசு’ம்பன் கதாப்பாத்திரத்தில் ஸைலன்ஸர் என்று கல்லூரியில் டீஸ் செய்யப்படும் சத்யன் ”டீச்சர்ஸ் டே” கொண்டாட்டங்களை காம்பியர் செய்கிறார். அவரது விழாப் பேச்சில் கற்பித்தலை கற்பழித்தலாகவும், கல்வி அமைச்சரை கலவி அமைச்சராகவும், அவரின் கொள்கைகளை கொங்கைகளாகவும் Find and Replace செய்கிறார் விஜய். தமிழ் தெரியாத சத்யன் மேடையில் அதை சத்யராஜையும், கல்வி அமைச்சரையும் பார்த்து அபிநயத்துப் பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஒன்றும் பிரமாதமாய் இல்லை.

புதுச்சேலைக் கட்டக் கூட தன் அம்மாவிடம் பணம் இல்லாததை ஜீவா துக்கம் தொண்டையடைக்கச் சொல்லும் சீரியஸான காட்சிகளில் கூட ”உங்கம்மா தெரசாவாடா” என்று கிண்டல் செய்வதும், உயிருக்கு போராடும் அவன் தந்தையை “உங்கப்பா புட்டுக்கிட்டாரா”ன்னும் விளையாடும் வசனங்கள் கொஞ்சம் நெருடுகிறது. வசனங்கள் பளிச்சென்று ஷார்ப்பாகவும் இல்லை. படத்தில் பெரிய ஆறுதல் விஜய்யை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். க்ளைமாக்ஸில் காதலி இலியானாவின் அக்காளுக்கு பிரசவம் பார்க்கிறார் விஜய். மின்சாரம் தடைபட்ட நேரத்தில் தான் தயாரித்த இன்வெர்ட்டரின் கரண்ட் உதவியில் இலியானா வெப்கேமராவில் விவரிக்க ஹாஸ்டல் பசங்களின் சேர்ந்துதவில் தாதியாகிறார். ஆல் இஸ் வெல் என்கிற தனது தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்து அழாது பிறந்த பிள்ளையை அழ வைக்கிறார். தாங்க முடியவில்லை. ஆல் இஸ் பேட்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அஸ்கு லஸ்கு என்று எல்லா பாஷையிலிருந்தும் வார்த்தைகளைப் பொறுக்கி போட்டு எழுதியது பரவாயில்லையாக இருக்கிறது. ஒல்லிபெல்லி பாடல் க்ளப் டான்ஸ் வகையறாவில் போட்டிருக்கிறார். இதுவும் எங்கிருந்தோ உருவியது போலத்தான் இருக்கிறாது. ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைப்புப் பாடல். பின்னணியில் பிரமாதமாய் ஒன்றும் இல்லை. படத்தில் காமிராதான் டாப். க்ளோஸ் அப் மற்றும் கல்லூரியை தூரத்திலிருந்து மற்றும் ஹாஸ்டல் அறை இரவுக் காட்சிகள், நீலநிற கோவா கடற்கரை, வைரஸ்ஸின் கல்லூரி கேபின் என்று இண்டோரும் அவுட்டோருமாய் அமர்க்களப்படுத்துகிறது மனோஜ் பரமஹம்சாவின் காமிரா. புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன். விண்ணைத் தாண்டி வருவாயா, ஈரம் போன்ற படங்களில் முத்திரை பதித்தவர் இவர்.

ஸ்பேஸ்ல பேனாவுக்கு பதில் பென்ஸில் உபயோகித்திருக்கலாமே, மெஷின் என்பதற்கான விளக்கம் என்று வித்தியாசமாக சிந்திப்பவராக வரும் விஜய் கடைசியில் கொஸாக்ஸி பசப்புகழ் என்ற அகில உலகம் போற்றும் விஞ்ஞானி என்கிற போது தியேட்டரில் நமக்கு மெய்சிலிர்க்கிறது. அவர் வழிநடத்தும் பள்ளியில் எல்லாம் மெஷின் மயம். பசங்கள் இளவயதிலேயே விஞ்ஞானப் பாதையில் பயணிக்கிறார்கள். நினைத்தாலே நெக்குருகுகிறது. படத்தின் பாதியில் விஜய் அண்ட் கோவிற்கு சவால் விடும் சத்யன் கடைசியில் அவர் கொடுக்கும் ஆர்டரில் தான் பிஸினெஸ் நடத்துகிறார் என்கிற தொழில் ரகசியத்தையும் வெளியிடுகிறார்கள். மரியாதையாக கடைசி அரை மணி நேரத்திற்கு முன்னால் எழுந்து வந்திருந்தால் மயிலாப்பூர் சரவணபவனில் இடம் கிடைத்து திருப்தியாக பசியாறியிருக்கலாம். ச்சே! க்ளைமாக்ஸ் பார்ப்பது அவ்வளவு பெரிய குற்றமாப்பா?

மொத்ததில், ஷங்கர் படமா இது? என்று அதிசயமே அசந்து போகும் படம் இது!!

பட உதவி: http://www.apden.com/

35 comments:

ராஜி said...

மொத்ததில், ஷங்கர் படமா இது? என்று அதிசயமே அசந்து போகும் படம் இது!!
>>
படத்தை பத்தி அருமையா ஒரே வரியில நச்சுன்னு சொல்லிட்டீங்க சகோ

Anonymous said...

//அந்த சீனியருக்கு எங்கே கரண்ட் ஷாக் கொடுத்தார் என்று எழுதினால் இங்கே நாறிவிடும். //

தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தை பேசும்போது Beep சவுண்ட் போட்டு அதை கட் செய்வார்கள். ஆனால் அந்த கேரக்டர் வாய் அசைப்பதை வைத்தே அவர் என்ன சொல்கிறார் என்று தியேட்டரில் சிலர் சொல்லிக்காட்டுவார்கள். அது போல..நீங்கள் சொன்னது.. ஹா..ஹா.....

Anonymous said...

த்ரீ இடியட்ஸ் பார்க்க.

Kri said...

RVSM,

You should watch 3 idiots just for the sheer screen presence of Aamir Khan. He brought a restless brilliant mind on screen with a simple mannerism of running his hand up and down on his bag's strap (that Vijay also carried). And his curious eye expressions in multiple places. That was completely missing in Vijay and played a complete spoilsport.

What were your thoughts on the theme that is targeted towards the parents on the importance of right education. (If Sachin was asked to play music or ARR was asked to play cricket, imagine what would have happened)

Years ago, I listened to a Pink Floyd song called "Another brick in the wall" about school education. This one is a good movie in that direction except the director lost it with the lead actor!

Sekar

ரிஷபன் said...

3 idiots அவசியம் பார்க்கவும்

Rathnavel Natarajan said...

அருமையான விமர்சனம்.
நன்றி.

Yaathoramani.blogspot.com said...

பிரமாண்ட மிரட்டலிலேயே காலத்தை ஓட்டிவிடலாம என்கிற
இயக்கு நர் கொஞ்சம் கதையம்சமுள்ள படத்தையும் பண்ணிப் பார்க்க
முயன்றிருப்பது தமிழர்களுக்கு தாமதமாகக் கிடைத்த
வரப்பிரசாதம் என நினைக்கிறேன்
தங்கள் விமர்சனம் மிகச் சரி
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

As usual, a review with typical RVS style.

ஹாலிவுட்ரசிகன் said...

மிகவும் நல்ல ஒரு விமர்சனம்.

// மொத்ததில், ஷங்கர் படமா இது? என்று அதிசயமே அசந்து போகும் படம் இது!! //
இது போதும் படம் பார்க்க.

Madhavan Srinivasagopalan said...

It seems that you entered the theatre with lot of expectations as it is Shankar-directed movie. So, you are disappointed which is expressed in ur review.

BTW I also could not enjoy tamil version, as I have already seen the hindi version.

Amir, Madhavan, Bomi Irani, Kareena..... -- all did much much better than their 'Nanban' counterparts.

தக்குடு said...

சட்னீல ஒரு மிளகாய் குறைச்சு வச்சு அரைச்ச மாதிரி மைனர்வாளோட 'ப்ளேவர்' எங்கையோ மிஸ் ஆகர்து! in btwn,இலியானாவோட உடம்பு எலிவால் மாதிரி இருக்காமே அப்பிடியா? :)

RAMA RAVI (RAMVI) said...

3 idiots பாருங்க சார்.
தமிழ் படம் இவ்வளவு நாள் ஓடுவதற்கு காரணமே படத்தின் casting மற்றும் விஜயின் அடக்கமான நடிப்பும்தான் நான் நினைக்கிறேன்.

ADHI VENKAT said...

நல்ல விமர்சனம்.
3 இடியட்ஸ் ஏற்கனவே பார்த்து விட்டதால், அதை அப்படியே காப்பி அடித்து கொஞ்சம் சங்கரின் பிரமாண்டத்தை சேர்த்து செய்த இந்த படத்தை பார்க்கத் தோன்றவில்லை.

அமீர்கானுக்கு சரியாக விஜய் நடித்திருக்கிறாரா தெரியவில்லை....

R.SOLAIYAPPAN said...

a good cine review. Thanks to E-friend Mr.RVS

pudugaithendral said...

3 idiots பாத்தாச்சு. உங்க விமர்சனத்தைப் பார்த்தா காட்சிக்கு காட்சி ரிமேக்குதான் போல இருக்கு.

prasanth s said...

u r a idiot

வெங்கட் நாகராஜ் said...

3-Idiots பார்த்ததால் அதை தமிழில் ஏனோ பார்க்கத் தோன்றவில்லை - அதுவும் விஜய் இருப்பதால் நிச்சயம் தோன்றவில்லை :)

சாந்தி மாரியப்பன் said...

நண்பனைப்பார்த்து ரொம்பவே நொந்து போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். மாத்து மருந்தா த்ரீ இடியட்ஸ் பாருங்க :-))

RVS said...

@ராஜி
நன்றிங்க.. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும். :-)

RVS said...

@! சிவகுமார் !
த்ரீ இடியட்ஸ் பார்க்கறேன். :-)

RVS said...

@Krish Jayaraman
Whatever be the messages built-in in the cinema could not be enjoyed because of mediocre action from Vijay. Also, Shankar failed miserably in remaking this stupendous hit film. The same was happend to Deiva Thirumagal. I liked the original version I am Sam. It was awesome.

Thanks Sekar. :-)

RVS said...

@ரிஷபன்
பார்க்கிறேன் சார்! :-)

RVS said...

@Rathnavel
நன்றி சார்! :-)

RVS said...

@Ramani
ஆமாம் சார்! ஆனால் ஷங்கர் படம்மாதிரியே இல்லை. :-)

RVS said...

@மோகன் குமார்
Thanks Mohan. :-)

RVS said...

@ஹாலிவுட்ரசிகன்
பாராட்டுக்கு நன்றிங்க.. :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
yes madhava! I should see the original. Thanks for your comments. :-)

RVS said...

@தக்குடு
அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும். அடுத்த பதிவு கண்ல தண்ணி வர காரமா எழுதிடுவோம். இலி..எலி... உம்ம்.. :-)

RVS said...

@RAMVI
பார்க்கிறேன் மேடம். :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி.
விஜய் சொதப்பல். ஷங்கரும் தான்.. இந்த ரீமேக்கெல்லாம் அவருக்கு ஒத்துவரலை.. :-)

RVS said...

@R.SOLAIYAPPAN
Thank you! :-)

RVS said...

@புதுகைத் தென்றல்
ஈயடிச்சான் காப்பிங்க... ஜாக்கிரதையா போங்க.. :-))

RVS said...

@prasanth s

Thank you prasanth! quoting me idiot from this post. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நல்ல முடிவெடுத்தீங்க தல.. தப்பிச்சீங்க.. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
சரிங்க மேடம். பார்க்கிறேன். :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails