திண்ணைக் கச்சேரிகளுக்காக பிரத்யேகமாக எழுதுவதை விட்டுவிட்டேன். பல தரப்பட்ட விஷயங்களை முகப்புஸ்தகத்தில் சல்லடையாக அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதால், நிற்க. (வம்பு பேசிக்கொண்டிருப்பதால் என்று திருத்தி வாசிக்கவும்) அங்கிருந்து திரட்டி இங்கே தருகிறேன்.
*********ராஜராஜனின் புதுவருஷ உரை**********
”நாட்டைச் சுற்றிக் கரும்புகையாய் சூழ்ந்திருந்த போர்மேகங்கள் விலகிவிட்டன.
அதோ! கதிரவன் சுடரொளி வீசிப் புறப்பட்டுவிட்டான். இந்தத் தைத்திங்கள்
முதல் எல்லோருக்கும் நல்லது பிறக்கட்டும். சத்தியம் ஜெயிக்கட்டும். பயிர்
செழிக்கும் தஞ்சைத் தரணியிலிருந்து முப்போகமும் விளைந்த நெற்கதிர்கள் நமது
தேசத்தை வளப்படுத்தட்டும். மக்கள் பூரண மகிழ்ச்சியுடன் எப்போதும்
களித்திருக்கட்டும். யாரங்கே... ஏன் பதுங்குகிறாய்..”
“ஒன்றுமில்லை மன்னா”
”ஏய்.. என்னது இது கையில்... வட்டமாக அட்டைப்பெட்டியில் வைத்திருக்கிறாய்”
“இது பிட்சா மன்னா.”
“அப்படியென்றால்”
“சீஸ் பீஸா.. தக்காளி போட்டு ரொட்டித் துண்டு போல ஒரு ஐட்டம்...”
“அடேய்.... இப்போதுதான் நெல்மணிகளைப் பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.. யாரது அங்கே... உன் கையில் என்ன? ஏதோ வாளி போல வைத்திருக்கிறாய்”
“கே.எஃப்.ஸி பக்கெட் சிக்கன் மன்னவா...”
“கே...எஃப்..... என்னதுதிது புரியாத பரங்கியர் பாஷை பேசுகிறாய்..”
“கென்டக்கிஸ் ஃப்ரைட் சிக்கன்...”
“வீட்டில் உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் சோறாக்கிப் போடவில்லையா... ஐயகோ!.....”
”விஷ் யூ ஆல் ஹாப்பி பொங்கல்!!”
“யாரப்பா நீ.. சிறுவனாய் இருக்கிறாய்... என்னென்னவோ தஸ்புஸ்ஸென்று பேசுகிறாயே”
“எம்பரர் ராஜராஜ்... திஸ் இஸ் பொங்கல் விஷஸ் ஃப்ரம் மீ தி பப்லூ”
“என்னப்பா...புரியாமல் பேசுகிறாய்...”
“லீவ் இட். ஐ ஹாவ் அனதர் இம்பார்ட்டண்ட் வொர்க். நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம். வொய் திஸ் கொலவெறி கொலவெறி டீ.....”
“அடப்பாவி.. ஏதோ அந்தப் பெண்ணைப் பார்த்து கண்டபடிப் பாடிக்கொண்டு போகிறானே... எல்லோரையும் இந்தப் பெரு ஆவுடையார் காக்கட்டும்...”
தஞ்சைப் பெரியகோயில் வாசலிலிருந்து மாமன்னன் ராஜராஜசோழன் நாட்டு மக்களுக்கு புது வருஷ உரையாற்றிக்கொண்டிருக்கும்போது இரு வீரர்கள் பீஸாவும் கே.எஃப்.ஸி சிக்கனும் கொண்டுவந்து மன்னனிடம் வசமாக மாட்டிக்கொண்டபோது நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்.
#இதை இன்னும் பெரிதாக எழுத விருப்பம். நேரமின்மையால் முடிக்கிறேன்.

***********குடும்ப கொரி************
FAMILY SQL QUERY
-----------------------
SELECT (AFFECTION,KNOWLEDGE,LOVE,HAPPINESS,WEALTH) AS "PEACE" FROM FAMILY_TREE WHERE AFFECTION = (SELECT UNCONDITIONAL_AFFECTION FROM MOTHER) AND KNOWLEDGE = (SELECT LIFE_EXPERIENCE FROM FATHER) AND LOVE = (SELECT BOUNDLESS_LOVE FROM WIFE) AND HAPPINESS = (SELECT ALL_ACHIEVEMENTS FROM OUR_CHILDREN) HAVING WEALTH IN (SELECT ESTATE FROM GRAND_FATHER) ;
If you execute this Query in our life database.....
#நிமிஷத்தில் தோன்றிய கரு இது. தேவைக்கேற்றபடி இன்னும் இதில் கொஞ்சம் கூட்டலாம், கழிக்கலாம், மாற்றலாம்.
## IT சிங்கங்களுக்கு இக் கொரி சமர்ப்பணம்.

************** என் Friendஅப் போல யாரு மச்சான்*************
வாக்கிங் போகும்போது தூரத்தில் சின்னதும் பெருசுமாக ஒரே கூட்டம். இவ்வளவு
அதிகாலைப் பொழுதை இதுவரை பார்த்திராத ஒரு இளைஞர் படை. பஜனைக் கூட்டம்
மாதிரியும் தெரியவில்லை. அவர்களை நெருங்குவதற்குள் ஆவல் பிடிங்கித்
தின்றது.
பக்கத்தில் சென்று பார்த்தால் அது தியேட்டர் வாசலில் கூடிய கும்பல். ”என் friendஅப் போல யாரு மச்சான்” என்று தலை கலைந்து பல் விளக்காத ஒரு பையனின் மொபைலிலிருந்து பாட்டு ஒலித்தது. தியேட்டர் வாசலில் போஸ்டரில் சத்யராஜும் விஜய்யும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
#என் ரசிகரைப் போல யாரு மச்சான் என்று விஜய் பெருமைப்பட்டுக்கொள்வாரோ?

************** சாம்பார் வடா**************
ப்ளேட்டில் அழுத்தினால் நாணப்பட்டு வில் போல வளையும் மெல்லிய ப்ளாஸ்டிக்
ஸ்பூனால் சாம்பார் வடை சாப்பிடும் திறன் போட்டி வைத்தால் அதற்கு நான்
தயார். நிச்சயம் பரிசு எனக்குதான். கிண்ணத்தினுள் ஸ்பூனுக்குப்
பிடிகொடுக்காமல் தப்பித்த அவ்வடையோடு வளைந்து நெளிந்து விரலொடிய அரை மணி
நேரம் போராடி ஒரு வடை சாப்பிட்டேன்.
சாம்பார் வடை கேட்டதற்கு சட்னி போல கொஞ்சூண்டு சாம்பாரை வடை மேல் தெளித்து எடுத்து வந்த அந்தச் சப்ளையரைத் தூக்கி யாராவது ஜெயில்ல போடுங்க சார்!
பாடம்: ப்ளாஸ்டிக் ஸ்பூனால் சாம்பார் வடை சாப்பிடுவது ஒன்றும் எளிதல்ல.
#அபூர்வ பாடங்கள்

இந்த உபதலைப்பை சாம்பார் வாடா என்று யாராவது படித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..
***************** மடத்தனம் ****************
ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க போறோம்னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே!
நாமெல்லாம் கிரிக்கெட் விளையாடப் போயிருக்காங்க நினைச்சுக்கிட்டிருக்கோம்.
#சே! என்ன ஒரு மடத்தனம்.
#சே! என்ன ஒரு மடத்தனம்.
**************ரசிகர்களின் ராஜா***************
ஜெயாவில் ”என்றென்றும் ராஜா” பார்த்தேன். தாஸேட்டன், பாடும் நிலா பாலு,
சின்னக்குயில் சித்ரா மேடம் என்று இசைக் கடல்கள் இளையராஜா என்ற சங்கீத
சாகரத்தில் ஒன்றாய் இணைந்த நிகழ்ச்சி. மனதுக்கு நிறைவாய் இருந்தது.
இயந்திரங்கள் இல்லாத மெல்லிசை. பல தசாப்தங்கள் கடந்து திரும்ப வாசிக்க அப்படியே அன்று கேட்டது போல தத்ரூபமாக இருக்கிறது. துளிக்கூட ஸ்ருதியும் தாளமும் பிசகாமல். பருவமே பாடலுக்கு தொடை தட்டி ரன்னிங் ஸ்டெப் போட்டதை ராஜா சொன்னபோது நெக்குருகிப்போனேன். என்ன ஒரு டெடிகேஷன்.
பார்வையாளர்கள் வரிசையில் அசலாரிடமிருந்து உருவிப் போடும் நிறைய இசையமைப்பாளர்கள் கைகட்டி உட்கார்ந்திருந்தார்கள்.
கேட்போர் காதுகளில் இசை கசிய கண்களில் நீர் கசிய மேடையில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்தான் ஒரு ஜிப்பா போட்ட ராஜா!! இந்த யுகக்கலைஞன்.
என்றென்றும் ராஜா!
#இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நான் தயாரித்த “சுகமான காதல் ராகங்கள்” என்ற தலைப்பிட்ட சிடியில் வைத்திருக்கிறேன்.
##ஒரே ஒரு வருத்தம். எஸ்.பி.பி ஒல்லியாக... அந்த பற்றிக்கொள்ளும் சிரிப்பு இல்லாமல்.. பிள்ளைச் சோகமோ.. என்னவோ.. மனசுக்கு சங்கடமாய் இருந்தது. இருந்தாலும் ”பாட்டுத் தலைவன்... பாடினால்... பாடல்தான்.....”

*************புகைப்படக்கலைஞரின் க்ளிக்**************
வளரும் என்று மேலே இருக்கும் சப் டைட்டில் முன்னால் சேர்த்துக்கொள்ளவும். கேமிராவினால் சுட்டவர் ஆர்.வி.எஸ்.
-
24 comments:
// FAMILY SQL QUERY //
நான் SQL படித்ததில்லை. ஆனா இது புரியுது. அதனால எனக்கு SQL தெரியுமா?
இளையராஜா நிகழ்ச்சியில் பாடல்கள் கேட்பது சுகம் என்றால், அதற்குமுன் அவர்கள் அந்தப் பாடல் பற்றி பேசுவது ரொம்ப சுவாரஸ்யம். உதாரணமாக கண்ணன் ஒரு கைக் குழந்தைப் பாடல்!
கூல் கேப்டன் நொந்த நூல் கேப்டன் ஆகிட்டார் போல.
கடைசிப் புகைப் படம் பிரமாதம்...எங்கு எடுத்தது?
SQL Query syntax error வருகிறது.= பதிலாக IN போடவேண்டுமோ? (= வரும் எல்லா இடத்திலும்!)
பாலு இன்னும் இளைக்க திட்டமாம். அவரது மகன் இளைத்ததே ஏதோ மாதிரி இருக்கிறது. பாலுவின் சிரிப்பு அன்று மைனஸாக இருந்ததே என்று எனக்கும் தோணியது.
போட்டோ சூப்பர்
நவரச நாயகனின் நவரச படைப்பு, அருமை
இளையராஜா இசை நிகழ்ச்சி விமரிசனம் அருமை!
ராஜராஜ சோழனுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்க வேண்டாம்.
எல்லா விஷயங்களுமே அருமை.
// ராஜராஜ சோழனுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்க வேண்டாம். //
ஆர்.வி.எஸ் கனவுல வந்ததைச் சொல்லுறீங்களா ?
ராஜராஜ சோழன் பாவம். நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்.....
இளையராஜா நிகழ்ச்சி இரண்டு நாட்கள் பார்த்து ரசித்தேன். எஸ்.பி.பி ஏன் அப்படியிருந்தார் என்று தெரியவில்லை. சரணும் இளைத்து அசிங்கமாகி விட்டார்.
புகைப்படம் அழகு. மாடியில் எடுத்ததா...
RVS. 'என்றென்றும் ராஜா' ஷோவில் 'இதயம் போகுதே' பாட்டை பத்தி பேசும்போது அந்த நோட்ஸ் எப்படி எடுத்தார் என்று சொல்லி அத்தனை ஆர்கெஸ்ட்ரா குழுவினரும் சேர்ந்து ஒரு மியூசிக் நோட்ஸ் வாசிச்சதை பாத்தீங்களா! amazing! அதே மாதிரி 'சந்தத்தில் பாடாத கவிதை' பாடலின் மெட்டும் இசையாகவே கேட்டது. beautiful!
கண்ணதாசனை பற்றி இளையராஜா சொன்னது, பிரமாதம். கவியரசர் என்றால் சும்மாவா என்ன! :) SPB. அவர்களின் குரல் இன்றும் தேன்தான். 'விழியிலே மலர்ந்தது' அன்று பாடியது போன்று அதே குரல் இன்றும். சான்ஸே இல்லை. நிஜமாகவே அதிசயம்தான். அருமையான ஷோ!
மடத்தனம் :)
விசிறிக்கும் சூரியன் அழகோ அழகு.
@ஹாலிவுட்ரசிகன்
புரியற எதுவுமே புரிஞ்சது இல்லை.. புரியாதது எதுவுமே புரியாதது இல்லை.. இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். :-))
@ஸ்ரீராம்.
கிருஷ்ண ஜெயந்தியன்று நடந்த படப்பிடிப்பாம். நன்றாக இருந்தது. :-)
@bandhu
இன்னைவிட ஈக்குவல் தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. :-))
@புதுகைத் தென்றல்
ஆமாங்க... போட்டோவை ரசித்ததற்கு நன்றி. :-)
@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி!:-)
@கே. பி. ஜனா...
நன்றி சார்! :-)
@RAMVI
ஆமாங்க.. பாவம். எங்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டார்... :-)))
@Madhavan Srinivasagopalan
ஆமாம்பா மாதவா... :-)
@கோவை2தில்லி
நன்றிங்க.. புகைப்படம் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றபோது எடுத்தது சகோ! :-)
@மீனாக்ஷி
பார்ட் பார்ட்டா ராஜா ப்ரோக்ராம் ரசிச்சிருக்கீங்க.. ரொம்ப அருமையான நிகழ்ச்சி. பாடல் பிறந்த கதையோடு சொன்னால் இன்னும் புல்லரிக்கிறது. கருத்துக்கு நன்றி. :-)
@அப்பாதுரை
தல... எதச் சொல்றீங்க.. :-)
@அமைதிச்சாரல்
நன்றிங்க மேடம். :-)
Post a Comment