Monday, October 10, 2011

மை சீர்திருத்தம்

”டியர் ஐயா, தாங்கள் தங்களுக்கு இட்ட பணியைச் செய்து முடித்து வீட்டீர்களா என்று தயை கூர்ந்து எங்களுக்குத் தெரிவிக்கவும்” என்று பணிவுடன் அடியில் ரிகார்ட்ஸ் போட்டு அனுப்பும் மெயில்களுக்கு, பதில் ரிகார்ட்ஸ் கூட போடாமல், நீங்கள் அந்த வேலையை செய்தால் நன்றாக இருக்கும், இந்த வேலையைச் செய்தால் நன்றாக் இருக்கும் என்று  கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பழிக்குப் பழியாக மெயிலுக்கு மெயில் அனுப்பும் டெரர் சமூகம் இன்னமும் இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தினமும் இவ்வகையான தொழில் முன்னேற்ற ஆக்கப்பூர்வமான மின்கடிதாசிகளுக்கு முன்விரல்கள் ஒடிய பதிலளித்தே சிலருக்கு அலுவலக வாழ்க்கை அலுத்துவிடும். இதில் ஒடிந்துபோய் நொடித்துப்போன ஆபீசர்கள் கணக்கிலடங்கா. எந்த முக்கியமான தலை போகிற விஷயத்திற்கு ஒரு கால் கடிதாசி போட்டாலும் பதிலுக்கு முழம் நீளத்திற்கு ”அத்த செஞ்சியா? இத்த செஞ்சியா?” என்று வரும் நொட்டை சொல் மிகும் மெயில்கள் ஏராளம். அலுவலகங்களில் இவையனைத்திற்கும் மூலகாரணம் நாம் “பலி கடா” வாக ஆகிவிடுவோமோ என்கிற ஆதார பயம்.

வேலை நிறைய செய்பவர்கள் நிறைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவர்கள் என்பது எல்லோருக்கும் தெள்ளெனத் தெரிந்த ஒன்று. தனியார் அலுவலகங்களில் மெயில் என்கிற மின்கடிதாசி என்றால் அறநெறியோடு(?!) ஒத்து ஒழுகும் அரசாங்க அலுவலகங்களுக்கு பச்சை சிகப்பு என்று வண்ணமயமான நாடாக்கள் கட்டிய கோப்புகள். அரசாங்க இயந்திரம் மக்கர் செய்யாமல் ஓடுவதற்கு துறைகளின் துரைகளுக்கிடையே உத்யோகப்பூர்வ கடிதப் போக்குவரத்து மிகவும் அவசியமான அத்தியாவசியமான ஒன்று.


***

என்னுடைய பால்ய நண்பர் அருண் ஷோரி. அவர் நிர்வாக சீர்திருத்த அமைச்சராக ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு ’பென்’ மைச் சம்பவம் நம்முடைய அரசுத் துறை எவ்வளவு திறமையாகவும் செம்மையாகவும் ஒவ்வொரு திட்டங்களையும் ஆழ்ந்து உற்று நோக்கி நிதானமாக குற்றங் குறையில்லாமல் செயல்படுத்துகிறது என்பதற்கான சான்று.

1999-ம் வருடம் உலக முட்டாள்கள் தினத்திலிருந்து 13-ம் நாள் இரும்புத் துறையிலிருந்து வந்த ஒரு சேதி நிர்வாக சீர்திருத்த அமைச்சக மூளையை எக்கச்சக்கமாக சூடு பண்ணியது. விஷயம் இது தான். “பொதுத்துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் நீலம் மற்றும் கருப்பு மசிப் பேனாக்களைத் தவிர்த்து வேறு மைப் பேனாக்களையும் கையொப்பமிடவும் திருத்தவும் உபயோகிக்கலாமா?”. இந்தக் கேள்வி கிளப்பிய வாதம் உடனே நிர்வாக சீர்திருத்த உயர் மட்ட அதிகாரிகள் அனைவரையும் டீ,காபி, மசால் வடை அடங்கிய கூட்டத்திற்கு வடைக்குக் கட்டுண்ட எலி போல இழுத்துவந்தது.

இந்தக் கேள்வி மை சம்பந்தப்பட்டதனால் அச்சகத் துறையின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று ஆபீஸர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சக அலுவலக உத்தரவுக் கடிதம் ஒன்று மே 3ம் தேதி அச்சகத் துறைக்கு அனுப்பப்பட்டது. மே 21-ம் தேதி அதுபோல பிரத்தியேக விதிகள் எதுவும் கிடையாது என்று ஒரு பதில் கிடைத்தது. இருந்தாலும் தலைமை அதிகாரிகள் பிற வண்ணப் பேனாக்களும் உதவியாளர் நிலையில் இருக்கும் பெருமக்கள் நீலம் மற்றும் கருப்பு மசிப் பேனாக்களும் உபயோகிக்கலாம் என்று அறிவுரை வழங்கிவிட்டு கடைசியாக இவ்விவகாரத்தில் அலுவலர்கள் மற்றும் உள் விவகாரத்துறை அமைச்சகத்தின் மேலான ஆலோசனைகளையும் பெறுவது சாலச் சிறந்தது என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஜுலை 6-ம் தேதி அலுவலர்கள் துறை, இந்த விஷயமானது தனி அலுவலக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டது. ஆகையால் நிர்வாக சீர்திருத்த அமைச்சகமே இதற்கு தக்க முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் என்று பந்தை அதே வேகத்தில் ந்யூட்டனின் மூன்றாம் விதிப்படி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

மீண்டும் உயர்மட்ட அதிகாரிகளின் டீ,கா,ம.வடை மீட்டிங் போடப்பட்டது. பல்லாண்டு வருடங்களாக கிடங்குகளில் போற்றிப் பாதுகாக்கப்படும் அலுவலகக் கோப்புகளில் ”மசியின் வாழ்நாள்” ரொம்ப முக்கியமாதலால் ஆகஸ்ட் 12-ம் தேதி நிர்வாக சீர்திருத்தத்தின் பொது நிர்வாக இயக்குனர், ஆவணப் பாதுகாப்பகத்திற்கு அவர்களது எண்ணத்தையும் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டறிவதற்காக ஒரு ஓலை அனுப்பப்பட்டது.

ஆகஸ்ட் 27-ம் தேதி ஆவணப் பாதுகாப்பகத் துறை, உபயோகிப்பது ஊற்றுப் பேனாவாக இருப்பின் நீலமும், கருப்பும் பயன்படுத்தலாம் என்றும், பந்துமுனைப் பேனா என்றால் கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை மசிப் பேனாக்கள் அனுமதிக்கப்படும். பயன்படுத்தும் இங்க்கின் தரம் இந்தியத் தரக் கட்டுப்பாடு மையம் சான்றிதழ் வழங்கியதாக இருப்பின் நன்று என்று ஒரு ஷொட்டு வைத்து காபி குடித்துவிட்டு மீட்டிங்கிலிருந்து கரையேறினார்கள்.

அடுத்ததாக நடைபெற்ற ஆபீசர்கள் சந்திப்பில், நிர்வாக சீர்திருத்தத் துறைத் தலைவர், இந்த அதிமுக்கியமான விஷயத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றும் முன் ஆயுதப்படை கையேடுகளை, குறிப்பாக இராணுவக் கைநூலைப் பார்த்துதான் முடிவெடுக்கவேண்டும் என்று அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுசம்பந்தமாக இராணுவக் கூடுதல் செயலாளருக்கு அக்டோபர் திங்கள் 4-ம் நாள் எழுதிய கடிதத்திற்கு டிசம்பர் மாதம் 22-ம் தேதி அவர் பதிலளித்தார். ஆகாயம், கப்பல் மற்றும் தரைப்படை தலைவர்கள் சிகப்பு மையினால் கையெழுத்திடுவதாகவும், தலைமை அதிகாரிகள் பச்சை மையினாலும், இன்ன பிற அதிகாரிகள் நீல நிற மையை கையில் கறையாக்கிக் கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள் என்று விலாவாரியாக பதிலெழுதினார்.

நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, தர்க்க விவாதங்களில் ஈடுபட்டு, நிறைய காபி, டீ, பிஸ்கெட், மசால் வடை, பாவ் பாஜி என்று ருசித்துச் சாப்பிட்டு மார்ச் மாதம் 28-ம் தேதி கீழ்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தது.

”ஆரம்ப வரைவு கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கலாம். அந்த வரைவில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யும் அதிகாரிகள், அது தெளிவாகவும் தனிச்சையாகவும் தெரிவதற்காக, அந்தந்த அதிகாரத் தகுதிகளுக்கு ஏற்ப, பச்சை மற்றும் சிவப்பு வண்ண மசிப் பேனாக்கள் உபயோகப்படுத்தலாம்.”

கூடுதல் செயலாளர் (Joint Secretary) அந்தஸ்தில் இருப்போர் மட்டுமே பச்சை மைப் பேனாக்கள் உபயோகிக்கலாம், சில அபூர்வ கோப்புகளுக்கு சிவப்பு மையிலும் எழுதலாம். என்று எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உத்தரவு பிறப்பித்தார்கள்.

கடைசியில் அருண் ஷோரி அளித்த துடுக்குத்தனமான பதில். “ அரசாங்கத் துறைகளுக்குச் சுதந்திரம் அல்லது சுயாட்சி பரிபூரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அவை ஒரு வட்டத்துக்குள் வரையறுக்கப்பட்டது”

பின் குறிப்பு: இந்தப் பதிவில் மூன்று ஸ்டார்களுக்கு முன்வரை உள்ள முதல் மூன்று பாராக்கள் என்னுடைய முன்னுரை. மீதமுள்ள பத்திகள் The Difficulty of Being Good By Gurcharan Das புத்தகத்திலிருந்து சரக்கெடுத்து தமிழில் மூலத்தை சிதைக்காமல் சொந்தச் சரக்கைச் சேர்த்து எழுத முயற்சித்தது உங்கள் ஆர்.வி.எஸ். குருசரண் தாஸின் பால்ய கால நண்பர் அருண் ஷோரி. என்னுடைய ஃப்ரண்டு இல்லை.

எந்தக் கலர் பேனாவில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கே அரசாங்கத்தில் டன் டன்னாக இவ்வளவுக் கடிதப் போக்குவரத்து இருக்கும் போது உங்களுடைய குறை தீர்ப்பு மனுவில் எப்படி நீங்கள் கொடுத்தவுடன் கையெழுத்துப்போட்டுவிட்டுதான் சீட்டை விட்டு எழுந்து மறுகாரியம் பார்ப்பர். :-)

அரசு அலுவலகப் பட உதவி: http://southasia.oneworld.net
-

31 comments:

Madhavan Srinivasagopalan said...

// எந்தக் கலர் பேனாவில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கே அரசாங்கத்தில் டன் டன்னாக இவ்வளவுக் கடிதப் போக்குவரத்து இருக்கும் //

நமக்குலாம் அவ்ளோ டீடெயில் தெரியாது..
என்னைய மாதிரி கெஜடட் ஆபீர்சர்லாம் பச்சை இங்க யூஸ் பண்ணுவாங்க..

இராஜராஜேஸ்வரி said...

வேலை நிறைய செய்பவர்கள் நிறைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவர்கள் என்பது எல்லோருக்கும் தெள்ளெனத் தெரிந்த ஒன்று.;


சுதந்திர இந்தியாவில் அருமையான சுதந்திரம்!

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொன்றுக்கும் ஏகப்பட்ட விதிமுறைகள்... ஒன்றை செயல்படுத்தினால் இன்னொன்றை மீறிவிடுவோமோ என்பது இன்றளவும் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்து விட்டுப் போனதையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.... என்ன செய்வது...

Ponchandar said...

உங்களின் இந்த பதிவு, ரொம்ப நாள் முன்னால் குமுதத்திலோ, விகடனிலோ வெளி வந்த அரசாங்க அலுவலகத்தில் பாம்பு புடிச்ச கதையை நினைவு படுத்தியது. பாம்பு புடிக்க டெண்டர் விடுவாங்க அந்த கதையில்.....

RAMA RAVI (RAMVI) said...

// The Difficulty of Being Good By Gurcharan Das//
மிக அருமையான புத்தகம்,நான் தற்போதுதான் படிக்க துவங்கியுள்ளேன்.
அருமையாக தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளீர்கள்.
நல்ல பகிர்வு.

விஸ்வநாத் said...

தலை சரியில்லேன்ன
எது சரி பண்ணியு
எந்த பிரயோஜனுமு இருக்குன்னு
எனக்குத் தோணலே.
எல்லா நம்ம
தலைஎழுத்து;

சக்தி கல்வி மையம் said...

இதுல(மை) இவ்ளோ இருக்கா?

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.
ஏகப்பட்ட விதிமுறைகள்.....:(

ரிஷபன் said...

பதிவுக்கு மை அழகு

அப்பாதுரை said...

ரிஷபன் comment அழகு.

அப்பாதுரை said...

மெயிலுக்கு மெயில் அனுப்பும் டெரர் சமூகம் - சிரித்து ரசித்தேன். அனியாயத்துக்கு ரிப்லை ஆல் செய்யும் சமூகம். உண்மை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹ்ம்ம்...பேப்பர்லெஸ் உலகம் என்றேனும் வருமோனு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயே போச்சு போயிந்தே இட்ஸ் கான்... same way, redtapism'less country is a dream forever I guess...

Aathira mullai said...

மையில் வாய்மை முழுமையாய் இருந்தமையை அறிகிறோம். சீர்மையும் பெருமையும் பெருமா நம் அரசியல்? நேர்மையான பதிவு..

சிவகுமாரன் said...

பொய்மை கயமை நிறைந்த சமூகமல்லவா அது ... மைக்கு முக்கியத்துவம் இல்லாமலா இருக்கும் ?

RVS said...

@Madhavan Srinivasagopalan
ஒத்துக்குறேன்.. நீங்க ஆபீசர்னு.. :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
இதுதான் பணி சுதந்திரம் மேடம்.. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
தலைவரே... உங்களுக்கு தெரியாததில்ல... :-)

RVS said...

@Ponchandar
சந்தர்... அது கிடைக்குமா? அரசல்புரசலா ஞாபகம் இருக்கு... :-)

RVS said...

@RAMVI
மேடம்.. படிக்க படிக்க இன்பம் அந்த புஸ்தகம். :-)

RVS said...

@ViswanathV
யதா ராஜா ததா ப்ரஜா.. சரியா விசு? :-)

RVS said...

@Sridhar

:-)))))))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
எவருக்கும் வேற்றுமையில்லாமல் இல்லாமல் இருப்பது இது. :-)

RVS said...

@கோவை2தில்லி
ஹாக்காங் சகோ! :-)

RVS said...

@ரிஷபன்
கமெண்ட்டிற்கு நீங்க அழகு!! :-)

RVS said...

@அப்பாதுரை
ரிப்ளை ஆல் சமூகத்தையும் ஃபார்வெர்டு ஆல் சமூகத்தையும் மிஸ் பண்ணிட்டேன் சார்! :-)

RVS said...

@அப்பாவி தங்கமணி
பேப்பர்லெஸ் ஆபீஸ்ங்கிறது இந்தியாவுல ரொம்.....ப கஷ்டம் சகோ. :-)

RVS said...

@ஆதிரா
திறமையான கருத்துங்க. நன்றி. :-)

RVS said...

@சிவகுமாரன்
எந்த மைக்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும் பெண்மைக்கு மகிமை உண்டல்லோ கவிஞரே? :-)

பத்மநாபன் said...

மை யை மை கணினி மிஸ் செய்து விட்டது...

மைக்கூடு ஜமாபந்தியிலிருந்து இண்ட்ரா நெட் வரை எவ்வளோ தூரம் வந்துவிட்டோம் ...தலைமுறை மாற மாற மை ஒழியும் ...கூடவே கயமையும் கூடுகிறது...

தக்குடு said...

அரசாங்க விதிமுறைகள் பத்தி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் மைனர்வாள்!! சிலபேர் கையெழுத்து போடும்போதே ஒரு குறிப்பையும் அதுல சேர்த்து லாவகமா தப்பிச்சுடுவா.

Sivakumar said...

அது என்ன சார் டீ,காம வடை? கமா விளக்கம் வேண்டாம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails