இந்த கொலுப் படிக்கு நிச்சயம் ஒரு எழுபது வயது இருக்கும். ஒன்பது படி. மேலேர்ந்து முதல் படியில் வலது ஓரத்தில் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் லக்ஷ்மிக்கு ஒரு அறுபது வயது இருக்கும். என்னுடைய அம்மாவின் சிறுவயதில் வாங்கிய லக்ஷ்மியாம். ஐந்தாவது படியில் இடது கோடியில் ஸ்டைலாக நிற்கும் நளனுக்கும் நிச்சயம் ஐம்பது வயது தாண்டியிருக்கும். அப்புறம் செட்டியார், தசாவதாரம், மரப்பாச்சி போன்றவர்களும் இந்தக் கொலுவில் வயதானவர்கள் தான். ஆனால் பொலிவுடன் இருக்கிறார்கள். சரியா?
மேற்கண்ட படத்திலிருப்பவை புதிது. புதிதென்றால் ஒரு ஐந்து வருடத்திற்குள் வாங்கியது. மன்னார்குடி ராஜகோபாலன் கருட சேர்வை. பக்கத்தில் ரிஷபாரூடராக சிவபெருமான் அருள்பாலிக்கும் ப்ரதோஷ அபிஷேகக் காட்சி. வலதுபுறத்தில் ராதேகிருஷ்ணர் காதல் ஊஞ்சல் ஆடுகிறார். அவருக்கு முன்னால் ஒரு கல்யாணம் நடக்கிறது. வீதியின் முனையில் தள்ளுவண்டியில் காய்கறி வருகிறது. இக்காலத்தில் காண முடியாத காட்சி.
இந்த கொலுவிற்கான முன்னேற்பாடுகளை இங்கே அழுத்திக் காண்க.
முகப்புத்தகத்தில் பகிர்ந்ததை இங்கே எனது ப்ளாக் தோழர்களுக்காக.......
இப்படங்களை உபயோகிப்பவர்கள் இந்த பதிவிற்கு ஒரு சுட்டி கொடுத்தால் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் பெறுவார்கள்!! :-)
எல்லோருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!
-
46 comments:
ராஜகோபால எல்லாரையும் நல்லபடியா பாத்துக்கோ
வாழ்க வளமுடன்
நன்னா இருக்கு உங்க ஆத்து கொலு:)
ரொம்ப அழகான கொலு. பொம்மைகளுக்கு வயசாக வயசாகத்தான் பொலிவு கூடுதலாகும்.
என்னிடம் வயசானது ஏதுமில்லை என்னையும் கோபாலையும் தவிர:-)))))
கல்யாண செட், ஸ்வாமி ஊர்வலம், யானை எல்லாம் பிரமாதம்!
நம்ம வீட்டில் குட்டியா ஒரு கொலு வச்சுருக்கேன். வந்து சுண்டல் வாங்கிக்குங்க.
ஓய். உங்கள் ஊரிலேயே இருக்கும் உங்க ஊர்க்காரரை கொலுவிற்கு கூப்பிடீரா? என்னய்யா கொடுமை இது !! இதை பாக்கற மாதிரியாவது உங்க வீட்டுக்கு வந்திருப்போமில்ல !
இப்போல்ல
தள்ளு வண்டி காய்கறி காரன் மட்டுமா இல்லை,
யாருமே
கோலம் போடுவதில்லை, அதனால
கோலமாவு விக்கறவன்
காணவில்லை;
பல பேருக்கு
தலைல முடி இல்லை (POP cutting); அதனால
பூ விக்கரவே
இல்லை;
சைக்கிள்ல முல்லைப்பூ கொண்டு வந்து
'முல்லை ரொம்ப தொல்லை' வியாபாரக்
குரல் இப்போ இல்லை;
கடலை வாங்க வாசல் வந்தா
கன்னித்தீவு மாதிரியான
சீரியல் ல ஒரு
சீன் போய்டுன்னு பயம்; அதனால
வீட்டு வாசல்ல கடலை
விக்கறவங்க இல்லை;
இன்னு எவ்ளவோ
இல்லை கள்;
இதச்சு
இருக்குதேன்னு நெனச்சி
இன்பமா
இருந்துப்போ RVSM;
பகிர்வுக்கு நன்றி. மன்மோகன் பொம்மை இல்லாதது பெருங்குறை.
கொலு அழகா இருக்கு. 60 வருடமும், 50 வருடமும் ஆன பொம்மைகள் பொலிவுடன் நன்றாக இருக்கிறது.
கல்யாண செட்டும்.. காய்கறி வண்டிக்காரன்....அருமை.
கொலு ரொம்ப அழகா இருக்கு .நவராத்திரி வாழ்த்துக்கள் .மறக்காம எனக்கு சுண்டல் அனுப்பிடுங்க
பதினாறு வகை சுண்டல் சாப்பிட்டுப் பெருவயிறு வளர்க்க! வாழ்க!
கொலு அருமை.
சுண்டல் தான் மிஸ்ஸிங்.
நல்வாழ்த்துகள் :)
கொலு பார்க்க அழகாக இருக்கிறது.
கொலு அருமை... அதிலும் பழைய பொம்மைகள் அனைத்தும் அருமை....
சுண்டல் பார்சல்ல அனுப்ப முடியுமா?
பொம்மை கோலு வெச்சாச்சா?
சுண்டல் எங்கே?
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
இந்த கணினி யுகத்தில் பொறுமையாக இவ்வளவு அருமையா படிகட்டி, அதற்கு வேட்டி விரித்து , கொலு பொம்மைகளை கடவுளரோடு அடுக்கி அழகான படம் எடுத்து கண்களுக்கு விருந்தளித்த உங்களுக்கு தொப்பி தூக்கிய வணக்கம்...
அழகான கொலு! உடன்தன்னே ரெண்டு தொன்னை சுண்டல் அனுப்பி வைக்கவும்... நாக்கு நமநமங்குது மச்சினரே!
எழுபது வயதான பொம்மைகள் மனம் கொள்ளைகொண்டன. நவராத்திரி இனிய வாழ்த்துக்கள்.
சுண்டல் கிடையாதா?
சூப்பர் கொலு.....
எல்லோருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
சிறந்த முறையில் கொலுவரிசைகளைக் அமைத்து பொம்மைகளை ஒரு வாரத்துக்குக் கட்டிப்போட்டு நவராத்திரிகளையும் நடாத்திக் கொண்டிருக்கும் திருவாளர்.இராவெசு அவர்களுக்கு மத்திய சென்னை முப்பத்தேளாவது வட்டத்தின் சார்பில் இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவித்து பாராட்டி மகிள்கிறேன்.வணக்கோம்.
So beautiful!!! It's always a great joy to see these dolls... :)
Happy Navraathri...
கீழே அந்த இரண்டு செட்டியார் பொம்மைகளும் தனியாக துணை இல்லாமல் உக்காந்திருக்கே .பாவம் தல ! சீக்கிரமா ஜோடி சேருங்க !!
கொலு அழகா இருக்கு..
@siva
நிச்சயம் காப்பாத்துவார்ப்பா!! :-)
@துளசி கோபால்
வயசப் பத்தி யாராவது பேசினாலே படையப்பா படத்தில வர நீலாம்பரியோட வசனம் தான் ஞாபகம் வருது... :-))
நீங்களும் வாங்க... :-)
@மோகன் குமார்
மோகன்.. அவசியம் வாங்க... நீங்கல்லாம் நம்ம வீட்டு விசேஷத்துக்கு கூப்பிட்டுதான் வரணுமா? :-))
@ViswanathV
கள்.. இல்லைன்னு சொல்றியா? :-)
@! சிவகுமார் !
சோனியா பர்மிஷன் கொடுக்கவில்லை... :-)
@கோவை2தில்லி
பாராட்டுக்கு நன்றிங்க. :-)
@angelin
சுண்டல் பார்சல் வந்துகிட்டேயிருக்கு.. எங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்!! :-)
@அப்பாதுரை
வாழ்த்துக்கு மிக்க நன்றி! எவ்ளோ சாப்ட்டாலும் வயிறு ஏற மாட்டேங்குது... இது வரம் தானே தலைவரே!! :-)
@ரிஷபன்
சார்! இந்தப் பக்கம் வந்தீங்கன்னா தரேன்.. :-)
@இளங்கோ
வாழ்த்துக்கு நன்றி! ஊர்ல இல்லையா? :-)
@ஸ்ரீராம்.
நீங்களும் வாங்களேன்!! :-)
@வெங்கட் நாகராஜ்
பார்சல்ல அனுப்பிட்டேன். சாப்பிட்டுவிட்டு பதிலனுப்பவும். :-)
@RAMVI
மேடம் வீட்டுக்கு வாங்க சுண்டல் தரேன்!! :-))
@பத்மநாபன்
இராத்திரி ரெண்டு மணி ஆச்சு!! :-))
பாராட்டுக்கு நன்றி! :-)
@மோகன்ஜி
உடம்பை பார்த்துக்குங்கண்ணா!! நேர்ல வரும்போது சுண்டல் தரேன்!! :-)
@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு நன்றி மேடம்! :-)
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
நிச்சயமா... வீட்டுக்கு வாங்க மேடம்.. :-)
@Kannan
வாழ்த்துக்கு வாழ்த்துங்க... :-)
@சுந்தர்ஜி
வட்டமே.... மாவட்டமே... பாராட்டுப் பத்திரம் படித்ததற்கு கோடி நன்றிகள். :-)
@Matangi Mawley
Thank you Matangi!! :-)
@கக்கு - மாணிக்கம்
அவங்க ரெண்டு பேரும் பிரம்மச்சாரி செட்டியார்!! ஜோடி கிடையாது .... ஹி..ஹி... நன்றி தல.. :-)
@அமைதிச்சாரல்
மேடம்!! ரொம்ப நன்றி!! :-)
//இப்படங்களை உபயோகிப்பவர்கள் இந்த பதிவிற்கு ஒரு சுட்டி கொடுத்தால் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் பெறுவார்கள்!! :-) //
இப்ப தெரியுது எப்படி உங்களுக்கு ஹிட்ஸ் ஏறுதுன்னு..
:-) good photos.. thanks for sharing.
Post a Comment