ஓணத்திற்கு விசேஷமாய் இந்த இசைத்தொகுப்பை வெளியிட ச்சிந்திச்சு. பக்ஷே தாமஸமாயி. இசைக்கு மொழி கிடையாது. ஒரு புல்லாங்குழலுக்கோ வயலினுக்கோ கிட்டாருக்கோ பாஷை உண்டா? ஒரு அமெரிக்க குழந்தை “ம்...க்க்ர்..ர்ர்..ம்...” என்று ஜொல்லொழுக மழலையிட்டால் இரசிப்போம் இல்லையா அது போல இதையும் இரசிக்கலாம்.
இந்த முறை பாடல் பதிவிட்டு ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதாக சகோதரி கோவை2தில்லி குறைப்பட்டுக்கொண்டார்கள். அந்த கோயமுத்தூர் அம்மணியின் குறை தீர்க்க எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த சில சேர நன்னாட்டு பாடல்கள் உங்கள் செவிகளுக்கும் மனதுக்கும் இதமாய்...
இந்த முறை பாடல் பதிவிட்டு ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதாக சகோதரி கோவை2தில்லி குறைப்பட்டுக்கொண்டார்கள். அந்த கோயமுத்தூர் அம்மணியின் குறை தீர்க்க எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த சில சேர நன்னாட்டு பாடல்கள் உங்கள் செவிகளுக்கும் மனதுக்கும் இதமாய்...
தாஸேட்டன் என்று அன்போடு அழைக்கப்படும் ஜேசுண்ணாவின் குரலுக்கு மயங்காதோர் உண்டோ? மலையாளத்தில் யார் பாடினாலும் அது ஜேசுதாஸ் மாதிரி இருக்கு என்று என் நண்பனொருவன் பிதற்றினான். நிச்சயம் எல்லோரோடும் ஒப்புமைப்படுத்தக்கூடிய குரல் அல்ல அது. இப்பதிவில் எம்.ஜி.ஸ்ரீகுமாரின் சில பாடல்களும் அடக்கம்.
இதில் நிறைய லாலேட்டனுடைய பாடல்களைத் தந்திருக்கிறேன். கொஞ்சம் வினீத்தும். வடக்கன்வீர கதாவில் மட்டும் முகம்மது குட்டி மாதவிக் குட்டியுடன் நடித்தது.
முதலில் கிலுக்கம்!!
கிலுகில் பம்பரம்... சம்சகம்... ம்..ம்..ம்.. சம்சகம்..
அதே கிலுக்கத்திலிருந்து.... மீனவேனலில்...
இது ஒரு அற்புதமான பாடல். சரணங்களுக்கிடையில் வீணையின் துணையில் ஆளைக் கொள்ளை கொள்ளும் பாடல். ஸ்ரீவித்யா வீணை வாசிப்பது போல அபிநயிக்கும் கோபிகே நின்விரல்.....
கோபிகா வசந்தம்.... கௌதமி கர்நாடகப் பாடகரான மோகன்லாலுடன் ப்ரேமையாய் நடித்த ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா...
கொச்சு மோனாக வினீத்தும் கொச்சு மோளாக மோனிஷையும் நடித்த இந்தப் பாடல் இரு இளசுகளின் காதல் விருந்து. நம் கண்களுக்கும் தான்... செவிக்கும் வைத்துக்கொள்வோமே!!
மஞ்சள் ப்ரசாதவும்...
பரதத்திலிருந்து கோபாங்கனே... சுரமுரளியில் ஒழுகும்..... ராதிகே வரு..வரு... ஓமணே வரு...வரு... நீலாம்பரியில்.......
காலாபாணியிலிருந்து மலையாள ஆலோலங்கிளி தோப்பிலே.... தமிழில் எஸ்.பி.பி குழைந்திருப்பார்!!... எம்.ஜி.ஸ்ரீயுடையது கொஞ்சம் ஸ்ட்ரைட்டாக இருக்கிறது.,.. பிரியதர்ஷனின் காமிராவுக்காகவே ஆயிரம் தடவை பார்க்கலாம்...
தூக்கிக் கட்டிய குடுமியுடன் மம்மூட்டியும் காந்தக் கண்ணழகி மாதவியும்.. ஒரு வடக்கன் வீர கதாவில்.. சந்தன லேப சுகந்தம்....
நெடிமுடி வேணு மேக்கபில்லாத ரம்பாவுக்கு கர்நாடக இசைக் கற்றுக்கொடுக்கும்... ஆந்தோளனம்... வினீத் மலையாள ராமராஜனாக நடித்த சர்க்கம் படத்திலிருந்து.....
எண்டே கேரளம்!!!
அடுத்த முறை தீந்தமிழ் பாடல்களோடு......
-
34 comments:
தமிழ்ப் பாடல்களை
தங்களின் வர்ணனையில்
தவறாமல் படித்து ரசிக்க
தவமாய்த் தவமிருக்கிறேன்;
மைனரின் அவ்விடத்து பாடல்கள் கொலக்ஷன் அடிப்பொலியாய் அமைஞ்சு போயீ....
பாடல்கள் நல்ல தேர்வு.
இசைக்கு மொழியில்லை என்பது உண்மை..
ஹிஸ்ஹைனஸ் அப்துல்லவில் இன்னோரு பாடலான பிரமதவனம் வேண்டும்..எனக்கு மிகவும் பிடிக்கும்.
அடிச்சு பொளிச்சு சாரே...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா படப் பாடல்கள். மற்றவையும் கேட்கிறேன். முன்பே கேட்டிருந்தாலும்.. :)
@Viswanath V Rao
விசு....தவமெல்லாம் வேண்டா!
நிச்சயம் செய்கிறேன். :-))
@பத்மநாபன்
பத்து சாரே!! நந்தி!! :-))
@RAMVI
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவின் எல்லாப்பாடலும் எல்லோருக்கும் பிடிக்கும். :-))
கருத்துக்கு நன்றி! :-)
@வெங்கட் நாகராஜ்
வினீத்தின் மஞ்சள் ப்ரசாதவும்... அற்புதமாக இருக்கும் தலைநகரமே! :-))
பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்ததில் எல்லாம் மறந்து போயி..
Present Sir
@ரிஷபன்
சரி சாரே!! :-)
@Madhavan Srinivasagopalan
Attendance given! :-)
அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:
இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)
ஒருமுறை வாருங்களேன் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
செம்மீன் படத்துல வர்ற ஹிட் சாங்கை தவிர மலையாள படப்பாடல்கள் குறித்த பரிச்சயம் எதுவும் எனக்கில்லை சாரே! இப்பாடல்களின் ஆடியோக்களை ரிலீஸ் செய்தமைக்கு நன்றி.
எந்தா சாரே!போஸ்ட் எப்ப போட்டது?ஞான் நோக்கிட்டில்லா!
எந்தா மதுர கானம் தந்து?!
பிரமதவனம் சோங் ஞானும் ப்ரேமிச்சு.
அடுத்த போஸ்ட்டுக்கு ஞான் வெயிட் செஞ்சு!
ஹைய்யோ!!.. கிலுக்கம் படத்துப் பாட்டுகளை இவ்ளோ நேரம் கேட்டுட்டு இங்க வந்தா, இங்கியும் கிலுக்கம் :-))
வளரெ நன்னாயிட்டுண்டு கேட்டோ .. அத்றையும் மதுரமாணு :-))
காலா பானுயுடெ கானங்ஙள் கேழ்க்காம் ஈ ஜென்மம் ஒந்நு போரா..
நீலாம்பரி தேஷ் என்று ரசிக்க ஆரம்பித்து கேட்டுக் கொண்டிருக்கும்போதே என் கணினி சத்தத்தை நிறுத்தி மௌனப் படம் காண்பிக்க ஆரம்பித்து விட்டது. ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். கேட்டவரை சுகம்...
//ஹிஸ்ஹைனஸ் அப்துல்லவில் இன்னோரு பாடலான பிரமதவனம் வேண்டும்.///
மிக அருமையானப் பாடல் :)
வளரெ நன்னாயிட்டுண்டு கேட்டோ .. அத்றையும் மதுரமாணு :-))
காலா பானுயுடெ கானங்ஙள் கேழ்க்காம் ஈ ஜென்மம் ஒந்நு போரா..
//
நான் எங்க இருக்கேன்
எப்படி எங்க வந்தேன் :)
பாடல் கேக்க முடியாதய சதி பண்ண நிர்வாகம் ஒழிக
அதான்னே பாத்தேன், என்னடா இந்த மனுஷர் பேசாம இருக்காரேனு நினைச்சேன், அதுவும் கேரளால விழானா மைனர் மார்ல சந்தனம் இருக்க வேண்டாமா? :PP "மீண்டும் கோகிலா"ல வருவாளே அந்த மாதவியா இது? (ஒன்னுமில்லை ஒரு ஜெனரல் நோலேட்ஜுக்கு கேட்டுண்டேன்)
நேயர் விருப்பத்தை பூர்த்தி செய்ததற்காக தாமஸமாய் ஒரு நன்னி....
சுட்டி கொடுத்ததுக்காக ஒரு நன்னி..
பக்ஷே ஞான் கேட்டது எண்டே தமிழ்நாட்டு பாடலானு.....80ஸ்
வெயிட் செய்யானு...
நீங்க செலக்ட் பண்ணிருக்க பாட்டெல்லாம் வச்சு பாத்தா உங்களுக்கு வயசு அம்பது , அம்பத்தஞ்சு இருக்கும் போல :))
@! சிவகுமார் !
எல்லாப் பாட்டும் முத்துக்கள்! :-)
@raji
மணிப்ரவாளமா தமிழ்-மலையாளம் கலந்து அடிச்சு விடறீங்க... பேஷ்..பேஷ்... :-))
@அமைதிச்சாரல்
எனக்கு ஃபுல் மலையாளம் அறிஞ்சிட்டில்லா... ஞான் செமி அறிங்......:-))
@ஸ்ரீராம்.
ரீஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டீங்களா ஸ்ரீராம்!! :-)
@எல் கே
எல்லோருக்கும் தெரிந்த பிரமதவனம் வேண்டாம்னுதான் கோபாங்கனே போட்டேன்!! :-)
@siva
பொறுமையா வீட்ல போயி கேளுங்க சிவா! நல்லா இருக்கும். நன்றி. :-)
@தக்குடு
மீண்டும் கோகிலால இடுப்பைக் கிள்ற மாதிரி வரது ஸ்ரீதேவின்னு சொல்லி நான் மாட்டிக்கவா?
எனக்கு இதுல ஜென்ரல் நாலெட்ஜ் கொஞ்சம் கம்மி!! :-))
@கோவை2தில்லி
நன்றி சகோ!! அடுத்தது தமிழ்தான்!! :-)
@மோகன் குமார்
அம்பதா... அம்பத்தஞ்சா... கரெக்டா ஒன்னு சொல்லுங்க... தட்டாம ஏத்துக்கிறேன்!! :-))
#ஒரு சின்ன விஷயம்.. எனக்கு சம்பூர்ண ராமாயணப் பாடல்கள் கூட பிடிக்கும். இப்ப சொல்லுங்க எவ்ளோ வயசுன்னு...
கருத்துக்கு நன்றி மோகன்!! :-))
விடுவோமா....பார்த்துட்டோம்ல.......கேட்டுட்டோம்ல...!
கண்களுகும் கருத்துக்கும் விருந்தளித்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
Post a Comment