நமஸ்கார். நீங்கள் இந்தியாவின் ஊழல் அரக்கனை சம்ஹாரம் செய்யப் போராடினீர்கள். உண்ணா நோன்பிருந்து சத்யாகிரஹப் போராட்டம் நடத்தினீர்கள். நவீன இந்தியா கண்ட முழு ஆடை காந்தியாக திகழ்கிறீர்கள். ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பதற்கு மாறாக ஜனங்களுக்கான லோக் பால் மசோதாவை பாராளுமன்றத்தில் அரியணை ஏற வைத்தீர்கள். ராம் லீலா மைதானத்திலமர்ந்து லஞ்ச ராவணனை ஒழிக்கும் திட்டத்துக்கு வக்காலத்து வாங்கினீர்கள். அருந்ததி ராய் போன்ற புத்திஜீவிகளின் அறிவுசார் எதிர்ப்பைச் சமாளித்து வெற்றி பெற்றீர்கள். நமது பாரதத்திலிருந்து ஒளிபரப்பப்படும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் வாரத்திற்கு மேல் (ஒரு சனி, ஞாயிறு உட்பட) அயராது முழு நேரப் பணியாற்றினீர்கள். பத்திரிக்கை அன்பர்களின் பத்து நாள் செய்திப் பசிப்பிணி போக்கியருளினீர்கள்.
லஞ்சம், ஊழல் போன்ற தீய சக்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக தக்காளி சட்னி போல நசுக்குபவை என்பதை ஆட்டோகாரர் முதல் ஆட்டோமொபைல் கம்பெனி நடத்தும் முதலாளி வரையிலும் உளமார உணரவைத்தீர்கள். “மம்மீ...டாடீ” மட்டுமே சொல்லத் தெரிந்த எல்.கே.ஜி பயிலும் மழலைகளைக் கூட “ஐ அம் அண்ணா” என்று டி-ஷர்ட், தொப்பி போட வைத்து பேச சக்தியளித்தீர்கள். மன்மோகன் சிங் மற்றும் அவரது சகாக்களின் தூக்கத்தைக் கெடுத்தீர்கள். போராட்டம் என்றால் கல்லெறி, பஸ் கண்ணாடி உடைப்பு, தீ வைத்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவைகளைத் தவிர்த்து வேறு என்னவென்று தெரியாத இளைஞர் பட்டாளத்துக்கு அறவழிப் போராட்டத்தின் லைவ் டெமோ தனியாளாய் காட்டினீர்கள். அனைத்திற்கும் நன்றிகள். வாழ்த்துகள்.
காவிக் கறையும் படிந்த அரசு அலுவலகத்தில் குண்டு ஊசி குத்துபவரிலிருந்து குளு குளு அறையில் இனிஷியல் மட்டும் போடும் பொதுத்துறை அதிகாரி வரை அனைவரையும் இந்த ஜன் லோக் பால் வட்டத்திற்குள் வளைக்கவேண்டும் என்ற உம்முடைய நோக்கம் சிறப்பானதே! சில சந்தேகங்கள்.
பாரத் மாதா கீ ஜெய்!!
வந்தே மாதரம்!!!
இப்படிக்கு,
(நீங்கள் யோக்கியதை இல்லை என்று பலர் நீரூபிக்க முயன்றாலும்)
தங்கள் மீது மிகுந்த மரியாதையுள்ள,
இந்தியக் குடிமகன்.
பட உதவி: http://www.indiaecho.com
ஒரு கேள்வி : ஒரு பதில்
இந்த லெட்டரை அண்ணா படிப்பாரா?
கஞ்சனூர் கடைத்தெருவில் நின்று கொண்டு “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே!!” என்றும், “ஓபாமாவை நான் ஒன்று கேட்கிறேன்....” என்றும் கூம்பு ஸ்பீக்கர் கட்டி கோலி சோடா மீட்டிங்கில் தலைமை தாங்கி பேசுவதைப் போல இதை லைட்டாக எடுத்துக்கொள்ளவும். நன்றி
படிக்கும் பலே அண்ணாக்கள் பதில் சொன்னாலும் சரி!
-
காவிக் கறையும் படிந்த அரசு அலுவலகத்தில் குண்டு ஊசி குத்துபவரிலிருந்து குளு குளு அறையில் இனிஷியல் மட்டும் போடும் பொதுத்துறை அதிகாரி வரை அனைவரையும் இந்த ஜன் லோக் பால் வட்டத்திற்குள் வளைக்கவேண்டும் என்ற உம்முடைய நோக்கம் சிறப்பானதே! சில சந்தேகங்கள்.
- இதுவரை திட்டம் போட்டுத் திருடியக் கூட்டத்தை இந்த லோக் பால் சட்டத்திற்குள் கொண்டு வர முடியுமா?
- ”நீங்க எங்களுக்கு இந்த ஆர்டர் கொடுத்தீங்கன்னா, உங்களோட பொண்ணுக்கு எங்க கம்பெனியில கியாரண்டியா வேலை தரோம்” போன்ற பண்ட மாற்று டீல்கள் இதற்குள் அடங்குமா?
- ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் எண்ணெற்ற கோடி ரூபாய்கள் இந்தியாவிற்குள் வந்தால் லிட்டர் பெட்ரோல் லிட்டர் மினரல் வாட்டர் விலைக்கு வாங்கலாமாம். அதற்கு எதாவது வழி உண்டா?
- அரசுத்துறையில் இருப்போர் லஞ்சம் வாங்கினால் மட்டும் தான் இது எடுபடுமா இல்லை தனியார்த் துறையில் இருப்போரையும் இதில் தூண்டிலிட்டு மாட்டலாமா?
- தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் திருவாளர் அல்பாசை பொதுஜனத்தின் மேலும் இச்சட்டம் பாய வாய்ப்பு உள்ளதா?
- சுங்கச்சாவடி என்று பத்தடிக்கு ஒரு தரம் தாராளமாக ஒரு சூப்பர் டீலக்ஸ் சொகுசு ஏர் பஸ் பயணக் கட்டணத்தை வசூலிக்கும் தங்க நாற்கர சாலை பராமரிப்பாளர்களை கூண்டில் நிறுத்த முடியுமா?
- சிறு சிறு காரணம் காட்டி ”உஹும்.. சரியில்லை.. ரிஜெக்ட்டட்” என்று சரியாக எட்டுப் போட்டாலும், துட்டுக் கேட்டால் பாலுக்கு போவேன் என்று சொல்லப் போகும் ”அண்ணா காந்தியவாதி”களை லைசென்ஸ் தராமல் ஹிம்சிப்பவர்கள் இதற்குள் அகப்படுவார்களா?
- லஞ்சம் வாங்காமல் தனக்கு வேண்டியப்பட்ட பந்துக்களின் பொது விதிமீறல்களை வேடிக்கை பார்க்கும் ஆபீசர்களுக்கும் இது பொருந்துமா?
- ஜன் லோக் பாலில் மூலாதாரமாக இருக்கும் எழுவர் குழுவின் நாணயக் கற்பை யார் மேற்பார்வையிடுவார்?
- போஃபர்ஸ் வழக்குகள் போல வெளிநாட்டினர் லஞ்சம் கொடுக்கல் வாங்கலில் தேசம் தாண்டி கடல் கடந்து ஈடுபட்டால் அவர்களையும் ஒரு கொக்கி போட்டு உள்ளே இழுத்து போட முடியுமா?
பாரத் மாதா கீ ஜெய்!!
வந்தே மாதரம்!!!
இப்படிக்கு,
(நீங்கள் யோக்கியதை இல்லை என்று பலர் நீரூபிக்க முயன்றாலும்)
தங்கள் மீது மிகுந்த மரியாதையுள்ள,
இந்தியக் குடிமகன்.
பட உதவி: http://www.indiaecho.com
ஒரு கேள்வி : ஒரு பதில்
இந்த லெட்டரை அண்ணா படிப்பாரா?
கஞ்சனூர் கடைத்தெருவில் நின்று கொண்டு “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே!!” என்றும், “ஓபாமாவை நான் ஒன்று கேட்கிறேன்....” என்றும் கூம்பு ஸ்பீக்கர் கட்டி கோலி சோடா மீட்டிங்கில் தலைமை தாங்கி பேசுவதைப் போல இதை லைட்டாக எடுத்துக்கொள்ளவும். நன்றி
படிக்கும் பலே அண்ணாக்கள் பதில் சொன்னாலும் சரி!
-
43 comments:
//அண்ணா! ஒரு விஷயம் தெரியுமா? இதுவெல்லாம் லோக் பாலில் வர முடியாதோ என்று ஐயப்பட்டு என் சிற்றறிவு சிந்தனை செய்யும் போதெல்லாம் நிறைய 420 ஐடியாக்களாக வந்து குவிகிறது. ஆகையால் ஒரு கலக்கமான உள்ளத்தோடு இக்கடிதத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன்.//
நல்ல பதிவு. ஆமாம் இன்னும் நிறைய 420 ஐடியாக்கள் இருக்கு பாஸ்.
வேலைக்கு போகல, ஆப்செண்ட் போட்டிருக்காங்க, அதனால் சம்பளம் கொடுக்கல, சம்பளம் கொடுக்க முடியாதுன்னு மேலதிகாரியே சொல்லியிருக்காரு. அப்படின்னா நான் வேலைல இருக்கேன்னு தானே அர்த்தம். அப்ப மூணு வருஷம் வேலை செஞ்சாச்சுன்னுதானே அர்த்தம்.
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து இருக்காரு.
அதுவும் அவரோட அடிப்படை உரிமையாம்.
இந்த மாதிரி பேசற ஆட்கள அண்ணா ஹசரா மாதிரி மகாத்மாக்களால் மட்டுமே தண்டிக்க முடியும்
அவர் படிக்கலேன்னா என்ன.. நாங்க படிச்சுட்டோம்..
கேள்வியின் நாயகனே.. இந்தக் கேள்விகளுக்கு பதில் ஏதைய்யா..
“மம்மீ...டாடீ” மட்டுமே சொல்லத் தெரிந்த எல்.கே.ஜி பயிலும் மழலைகளைக் கூட “ஐ அம் அண்ணா” என்று டி-ஷர்ட், தொப்பி போட வைத்து பேச சக்தியளித்தீர்கள்.
அருமையான பதிவு.
நன்றி.
எனக்கென்னவோ
திருடனாய்ப் பார்த்து
திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க
முடியாதுன்னு
தோணுது;
”மே அன்னா ஹு” என்று தொப்பி போட்டுக் கொண்டவர்களிடமும் கேள்வி கேட்டு பாருங்களேன் மைனரே.
நிறைய கேள்விகள் அதுவும் சார் சோ பீஸ் [420] கேள்விகள் நிறைய இருக்கிறது...
பார்க்கலாம் எப்படி இதையெல்லாம் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று...
கஞ்சனூர் கடைத்தெருவில் நின்று கொண்டு “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே!!” என்றும், “ஓபாமாவை நான் ஒன்று கேட்கிறேன்....” என்றும் கூம்பு ஸ்பீக்கர் கட்டி கோலி சோடா மீட்டிங்கில் தலைமை தாங்கி பேசுவதைப் போல இதை லைட்டாக எடுத்துக்கொள்ளவும்.
இது தான் சூப்பரு!
பொருத்து இருந்து பார்ப்போம் எனதான் நடக்குதுன்னு....
கஞ்சனூர் கடைத்தெருவில் நின்று கொண்டு “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே!!” என்றும், “ஓபாமாவை நான் ஒன்று கேட்கிறேன்....” என்றும் கூம்பு ஸ்பீக்கர் கட்டி கோலி சோடா மீட்டிங்கில் தலைமை தாங்கி பேசுவதைப் போல இதை லைட்டாக எடுத்துக்கொள்ளவும். நன்றி
இது தான் சூப்பரு! இதை வைகோ தான் ரொம்ப போடுவாரு!
கஞ்சனூர் தூள்.
அன்னா எல்லாம் கன்னா பின்னா rvs.
// (நீங்கள் யோக்கியதை இல்லை என்று பலர் நீரூபிக்க முயன்றாலும்) //
(பம்பரக்)கட்டை நடுல இல்லை..
வேக்கு ஊக்கு..
வெளிக்குத்து விழுந்தா உள்குத்து..
@கும்மாச்சி
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கும்மாச்சி! உங்களைப் போன்றோர் நிறைய அரசியல் பதிவு எழுதுகிறீர்கள். நன்றாக உள்ளது. :-)
@ரிஷபன்
ரொம்ப கஷ்டமான கேள்வியா? :-)
@Rathnavel
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா! :-)
@Viswanath V Rao
நூறு சதம் உண்மை விசு! :-)
@வெங்கட் நாகராஜ்
எனக்கென்னமோ இந்த லோக் பால் தேறும்னு நம்பிக்கையில்லை... இருந்தாலும் ஊழலை ஒழிக்க ஒரு நல்ல முயற்சி. ஆரம்பம். :-)
@Anonymous
நன்றி அனானி அண்ணா!! :-)
@MANO நாஞ்சில் மனோ
பார்க்கலாம். பார்க்கலாம்.. எங்க ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளையே காணோம்? :-)
@Shabeer
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஷபீர்! அடிக்கடி வாங்க ப்ரதர். :-)
@அப்பாதுரை
நன்றி சார்! கன்னா பின்னா கமெண்ட் சூப்பர்! :-)
@Madhavan Srinivasagopalan
சுத்தமா ஒன்னும் புரியலை மாதவன்! :-)
அவசியமா பதில் தேவை படும் கேள்விகள்.
சாதரணமாக எல்லோருக்கும் எழும் கேள்வி தான் இது. நீங்கள் அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?" என்ற பதிப்பை படித்து பாருங்களேன் ...!
அண்ணாவின் லோக்பால் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு பிள்ளையார் சுழியாக இருக்கும். இதுபோன்ற சட்ட வரைவுகள் பிற்காலத்தில் இன்னும் செம்மை படுத்தப்படலாம். அதற்கு முன்பே லோக்பாலை ஒதுக்கக்கூடாது என நினைக்கிறேன்.
இது அரசுக்கு மட்டுமே. தனியார் இதில் வராது :)
கண்டிப்பா கருப்பு பணம் திரும்பி வராது. அப்படி நாட்டுக்குள் அது வந்தால் டாலரில் பில் பண்ணும் நிறுவனங்கள் பணால் ஆகும் (இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். டாலர் குறையும் )
420 ? haa haa
கடிதம் கிடைத்தது
மிக்க மகிழ்வு
விரைவில் பதில் போடுவார் ,
நாமலே எவ்ளோ யோசிக்குபோது
அவரும் நிச்சயம் யோசித்து இருப்பார் என்று நம்புகிறேன்
தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் திருவாளர் அல்பாசை பொதுஜனத்தின் மேலும் இச்சட்டம் பாய வாய்ப்பு உள்ளதா?/
ஹஹா
வெரி சாரி not in the list.
.if like that people wont support us.."
may be wrong...
Valga Bhartham.
இருக்கும் சட்டமே போதும் எனும் போது , புது சட்டம் போட வைக்க இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன் ? எனும் ஓரு கேள்வி தான் உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் ஆதாரம் .... ஒரே பதில் இந்த மக்கள் பிக்கல் ஆட்சியெல்லாம் பத்துவருஷம் மூட்டை கட்டி வைத்துவிட்டு .... நாட்டின் நலம் வளம் நாடும் ஓரு இரும்புக் கை யிடம் ஆட்சியிடம் ஒப்படைத்தால் தான் சாத்தியம் ....
// RVS said...
@Madhavan Srinivasagopalan
சுத்தமா ஒன்னும் புரியலை மாதவன்! :-)
Sunday, September 04, 2011 //
பம்பர வெளையாட்டுல.. 'அமுக்கு டப்பான்' ஆடினது இல்லையா..?
'உள்குத்து' -- இதுதான் நா சொல்ல நெனைச்சது..
இதை லைட்டாக எடுத்துக்கொள்ள சொல்வது எவ்வகையில் நியாயம் ஆர்.வி.எஸ்? வரும் உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் மனுதாக்கல் செய்யப்போகும் செய்தி அறிந்தேன்.வெற்றி நமதே!ஒட்டறோம்...ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டறோம்!!
அன்னாவையும் வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சாசா? நான் ஒரு அண்ணன் உமக்கு போதாதா?
நெத்தியடிக் கேள்விகள்!உங்கள் கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதுதான் உண்மை.
லஞ்சம் ஊழல் சமூகத்தின் புற்றுநோய் என்ற விழிப்பு இளைஞர்மத்தியிலும், நடுத்தர வர்க்கத்தின் மத்தியிலும் ஏற்ப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
நல்லவை நடக்கட்டும்
@அமுதா கிருஷ்ணா
ஆமாங்க... கருத்துக்கு நன்றிங்க :-)
@வெட்டிப்பையன்...!
சரிங்க... படிக்கிறேன்.. கருத்துக்கு நன்றிங்க... :-)
@நீச்சல்காரன்
நானும் முற்றிலும் இதை ஆதரிக்கிறேன். இருந்தாலும் மனதில் பொங்கி எழுந்த சந்தேகங்களை அள்ளித் தெளித்தேன்!
கருத்துக்கு நன்றி நீச்சல்! ரொம்ப நாளா ஆளையே காணோம். :-)
@எல் கே
உங்கள் தெளிவுரைக்கு நன்றி எல்.கே! :-)
@சி.பி.செந்தில்குமார்
இது சில பேருக்கு 840ங்க... :-))
@siva
கருத்துக்கு நன்றி சிவா!! :-))
@பத்மநாபன்
இதை நம்ப தலைவர் சுஜாதா ஒரு வரியில் சொல்லியிருப்பார்!
”தேவை ஒரு கருணையுள்ள சர்வாதிகாரி!!“னு
கருத்துக்கு நன்றி! :-)
@Madhavan Srinivasagopalan
ஏதோ புரிஞ்சா மாதிரி இருக்கு சார்! :-)
@! சிவகுமார் !
நல்லா போஸ்டர் ஒட்டுங்க... எல்லோரும் சேர்ந்து என்னை ஊரை விட்டு வெளியில ஓட்டட்டும்.. :-))
@மோகன்ஜி
அண்ணா! அற்புதமான கருத்துக்கள். இது போல எழுதத் தெரியாதுன்னுதான் தருமி மாதிரி கேழ்வ மட்டும் கேட்டுடறது... ஹி..ஹி. :-)
//ஆதிரா ஒரு தமிழ் டாக்டர். தமிழுக்கு டாக்டர் இல்லை பைந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் பற்றி இருப்பவைகளை அந்தந்த வரிகளை மேற்கோள் காட்டி ஔஷதக் கட்டுரைகள் எழுதும் டாக்டர். அவை எல்லாம் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளியாவது சிறப்பு. நெல்லிக்கனியின் விசேஷ மருத்துவக் குணங்கள் பற்றி தேவலோக அமுதத்துளி என்று எழுதிய பதிவு இங்கே. //
அன்புள்ள ஆர்.வி.எஸ். எவ்வளவு அழகா அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். இதை நான் பார்க்காமலே இருந்து விட்டேனே.
இந்த மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல ஆய்வேடு ஒப்படைத்தும் கொசுறு வேலைகளால் சரியாக வலைப் பூக்களில் பார்வை பதிக்க இயலவில்லை. அதனால்தான். மேலும் எனக்குத் தெரியவில்லை இந்த விஷயமே.
எப்படி நன்றி கூற...தாமதமான நன்றி அறிவித்தலுக்கு முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்.
நீங்கள் இருக்குமிடம் தேடி வருகிறது என் நெஞ்சத்து நன்றி மலர்.... விழியோரப் பனித் துளிகளுடன்.. நன்றி@! நன்றி!
Post a Comment