"ஸார்! உங்க மாருதி ஸ்விஃப்ட் டிஸயர் வண்டி குர்கான்லேர்ந்து லாரியில லோடாயிடுச்சு. ஒரு வாரத்துல இங்க வந்துடும். ஃபண்டு ரெடி பண்ணிக்குங்க.." என்று டீலரிடம் இருந்து கீச்சுக்குரலில் ஒரு எச்சுக்'குட்டி'வ் ஃபோனியதும் என்னுடைய டிஸயர் பூர்த்தியான சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை. அந்தத் தொலைபேசி அழைப்பிலிருந்து ரோடில் எத்திசை நோக்கினும் அத்திசையில் ஒரு மாருதி டிஜயர் பண்ணையார் மிடுக்காக நின்றிருந்தது. கொஞ்சம் வெயிட்டான வண்டி.
சமீபத்தில் தென்காசி குற்றாலம் போயிருந்த போது கூட மரக்கிளைகளில் குடித்தனம் பண்ணும் வால் இருக்கும் மாருதிகளை பார்க்கும் போதும் எனக்கு நாலு காலிருக்கும் மாருதி ஞாபகம் தான். ஆடி, பி.எம்.டபிள்யூ என்று தனவான்கள் பவனிக்கும் கார்களை பார்த்தால் கூட மாருதியின் அம்சமாகவே தோன்றியது. நிறமாலை போல கார்மாலை நோய் தாக்கியவனாகப்பட்டேன். சென்னை மாநகரின் காருக்குள்ளிருந்த கா(ர்)ரர்கள் என்னையும் இருகால் மாருதி போலவே பார்த்ததை இங்கே பகிர நான் துளிக்கூட விரும்பவில்லை. பத்தாயிரம் அச்சாரம் கொடுத்து ரெண்டு மாசத்துக்கு முன்னால் ஒரு சுபயோக சுபதினத்தில் பதிவு செய்தேன். (பு)கார்ப் படலமாக பதிவு கூட இட்டிருந்தேன்.

"என்னோட முதல் காரும் மாருதி கம்பெனியார் தயாரித்ததுதான். என்னுடைய விஸ்வாசத்தை பாராட்டி லாயல்டி போனஸ் எதுவும் தருவீங்களா?" என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாக கேட்டேன். உலகத்திலேயே நான் தான் கடைந்தெடுத்த கேனையன் என்று பார்வையால் பட்டம் கொடுத்து பார்த்த அந்த விற்பனைப் பிரதிநிதி "ஹ்ஹும்" என்று உடம்பு முழுவதும் ஒருவித ஜெர்க் கொடுத்து "டிஜயர் வித்தா எங்களுக்கே இன்சென்டிவ் கிடையாது உங்களுக்கு போயி ஏதாவது தருவாங்களா? அது தன்னால விக்குது சார். அதோட அமைப்பு அப்படி.." சொல்லிவிட்டு அடுத்த வேலை பார்க்க போவது போல "யேய்.... அந்த வளசரவாக்கம் கஸ்டமர் என்ன சொன்னாங்க?" என்று தேடிய ஏதோ ஒன்று கிடைக்காத ஏக்கத்தில் இருந்த பக்கத்து இருக்கை ஃபீல்ட் ஆபீசரைப் பார்த்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.
ஆசைப்பட்டு மனம் பறிகொடுத்து விட்ட காதலியை கை பிடிக்க அவள் சர்வாதிகார அப்பா, கண்டிப்பான அம்மா, டிராயர் போட்ட தம்பி, அவள் வீட்டு புசுபுசு ஜிம்மி, "கய்தே" மற்றும் "கஸ்மாலம்" வாய் நிறையச் சொல்லும் வேலைக்காரி என்று யார் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்வது போல வெட்கம் மானத்தை விட்டு "எவ்ளோ நாள் ஆகும்?" என்று நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு வாய்விட்டு கேட்டேன்.
மறுபடியும் ஒரு அலட்சிய லுக் விட்டார். ஒரு ஈனப்பிறவியாக என்னை பார்த்துவிட்டு "இவ்ளோ நாள் உள்ள இருந்துட்டு வந்தியா?" என்று மானசீகமாக ஒரு கேள்விக்கணை தொடுத்து, "நாலு மாசம் ஆகும். அஞ்சு மாசம் கூட ஆகலாம். உங்களுக்கு லக் இருந்தா சீக்கிரம் கிடைக்கும்" என்று சொல்லி என் முகத்தில் என் அதிர்ஷ்டத்தை ஆராய்ந்தார். இதற்கெல்லாம் காழியூர் நாராயணிடம் ஜாதகம் பார்க்க வேண்டுமா என்று ஒருமுறை விசனப்பட்டேன். கர்ச்சீப் எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு "சீக்கிரம்ன்னா ஒரு ரெண்டு மாசத்துல கிடைக்குமா?". விடாப்பிடியாக கேட்ட என்னை "பத்தாயிரம் பணம் கட்டி ரிஜிஸ்டர் பண்ணிக்குங்க. பார்க்கலாம்" என்று வாயிலிருந்து முத்துக்களை உதிர்த்து சம்பாஷணையை கச்சிதமாக முடித்துக்கொண்டார்.
பாடிகாட் முனீஸ்வரனிடம் மனதார வேண்டிக்கொண்டு பணம் கட்டிவிட்டு வந்தேன். மூன்றாவது மாத ஆரம்பத்தில் என் பிரார்த்தனை பலித்து இந்தப் பதிவின் முதல் வரி ஃபோன் கால், வண்டி கிடைக்கப் போவதை அறிவித்தது.
வெள்ளைக் காலர் பாங்குக்காரர்கள் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று வேலை பார்த்தார்கள். எப்போது கேட்டாலும் "அப்ரூவலுக்கு போயிருக்கு" என்று ஒற்றை வரி பதிலை உதிர்த்தார்கள். அதற்குள் "ஒரு வாரத்துக்குள்ள நீங்க மீதிப் பணம் கட்டி வண்டி எடுக்கலைன்னா வண்டி வேற யாருக்காவது அலாட் ஆயிடும்" என்று கொலை மிரட்டல் விடுத்தார் கார் விற்பனை பிரதிநிதி. எடுக்கும் வண்டிக்கு மாற்றாக எனது காதல் வாகனத்தை அவர்களுக்கு சாசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். Wagon -R என்பதை எப்போதும் நான் Wagon full of Romance என்று சொல்வது வழக்கம்.
டீலரின் உயரதிகாரியை மொபைலில் பிடித்தேன். விபரம் விசாரித்தேன். "நோ ப்ராப்ளம் சார்! கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணுங்க..." என்று விண்ணப்பித்து என் நெஞ்சில் பாலை வார்த்தார். நாளுக்கு நாலு ஃபோன் கால் வீதம் போட்டு விடாமல் பேங்க் மக்களை குடைந்து திருகி லோனை ரெடி செய்தேன். கல்லும் கரைந்து கடன் அலாட் ஆகியது. டீலர் நேரடியாக வங்கிக்கு சென்று வரைவோலையை பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் எனது பழைய வண்டியை அவர்களுக்கு தருவதாக எழுதிக் கொடுத்திருந்ததால் பழம் வண்டிகளை வாங்கும் துறையிலிருந்து ஒரு துரை பேசினார். "ஸார்! ரெண்டு வாரத்துக்கு மேல ஆவுது. இந்த வெள்ளிக் கிளமை நீங்க புதுசு எடுக்கலன்னா... ப்ளீஸ்..." என்று சௌஜன்யமாய் சட்டையை கொத்தாக பிடிக்காமல் கெத்தாக அதிகாரம் செய்தார்.
"வண்டி என்கிட்டே தான் இருக்கு. உங்களுக்கு எப்ப வேணுமோ வந்து தாராளமாய் எடுத்துக்குங்க" என்று நான் தாரை வார்த்துக் கொடுத்த ரதத்தை அழைத்துக் கொண்டு போக சொல்லிவிட்டேன். அந்த பழைய வண்டி வாங்கும் ஊழியர் தன் தயாள குணத்தால் "பரவாயில்லை.. புதுசு வந்ததும் இந்த வண்டியைக் கொடுங்க..." என்று எனக்கு சலுகை கொடுத்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சுபதினத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் பூஜை போட்டு வண்டி எடுத்தேன். வண்டியின் மேனியில் முதல் கோடு விழும் வரை அக்கம்பக்கம் பிலாக்கு பார்க்காமல், ஒட்டாமல் உரசாமல் ஓட்டுவேன் என்று உறுதி கூறுகிறேன். புதிதாக இறக்கிய வண்டிக்கு புது பேன்ட் சட்டையாக சீட் கவர் மாட்டிவிட்டேன். கூலிங் கிளாஸாக சன் கண்ட்ரோல் ஃபிலிம் ஒட்டிவிட்டேன். ஆட்டோ, மாநகர பஸ் போன்ற சென்னை நகரத்தின் சாலை பயில்வான்களை சேவித்து வழிவிட்டு ஓரமாக செல்ல பழகிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் பழியாய் பக்கத்தில் வந்து சகட்டுமேனிக்கு ஹாரன் அடித்து சீண்டி என்னையும் கோதாவில் இறக்க முயற்சிக்கிறார்கள். சேப்பாயி உன் கற்பை காப்பாத்திக்கோ!
பின் குறிப்பு: வண்டி எடுத்ததும் வானவில் மனிதனை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் விண்ணில் ஏறிப் பறந்தேன்.
-

47 comments:
வந்த இடம் நல்ல இடம்
வரவேண்டும் எந்தன் சேப்பாயி
இன்று முதல் இனிய சுகம்
தர வேண்டும் எந்தன் சேப்பாயி..
வாழ்த்துக்களுடன்....
சமீபத்தில் தென்காசி குற்றாலம் போயிருந்த போது கூட மரக்கிளைகளில் குடித்தனம் பண்ணும் வால் இருக்கும் மாருதிகளை பார்க்கும் போதும் எனக்கு நாலு காலிருக்கும் மாருதி ஞாபகம் தான். //
சேப்பாயிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் மைனரே. ஜமாயுங்கள். //பாடி கார்டு முனீஸ்வரர் துணை// ன்னு ஸ்டிகர் ஒட்டியாச்சா?
வாழ்த்துக்கள்.
mixi-ட்டீங்க போங்க! :)
Car வாங்கரதுல ஒரு தனி சந்தோஷம் தான், sir! எங்க அப்பா-வோட 'hand gear' இருக்கற Premiere Padmini Feat car ல தான் நான் வண்டி ஓட்ட கத்துண்டேன்... அந்த வண்டிய- திருச்சி லேர்ந்து -தஞ்சாவூர்-மாயவரம்-வைதீஸ்வரன்கோவில் னு ஒரு பெரிய ட்ரிப் ஓட்டினேன், college முடிச்சப்றம், அப்பா அம்மா வோட. எங்க அப்பா சொன்னா- இந்த 20 வருஷத்துல, இந்த வண்டி இத்தன speed ஆ போகும்-னே எனக்கு தெரியாது- ன்னு! ஏதோ ரங்கன் சித்தம்- அது ஒரு piece ஆ என் கைலேர்ந்து திரும்பி வந்துது, ஆத்துக்கு... இன்னும் 2 வருஷம்... ஜம்முன்னு ஒரு Accord வாங்கலாம்-னு plan லாம் போட்டு வெச்சிருக்கேன்... பாக்கலாம்!
Congrats, sir! :)
Congrats Anna.. :)
சேப்பாயி - Nice name. :)
@Ramani
கவிதையாய் வாழ்த்து சொன்னதற்கு நன்றி சார்! ;-))
கௌதமர் ஆசையைத் துறக்கச் சொன்னாலும் சொன்னார் ஆசையை(desire) இப்படித் துறந்து(opened) விட்டீர்களே ஆர்விஎஸ்.
எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் பழைய சேப்பாயி.
என்றென்றும் வாழ்க புதிய சேப்பாயி.
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க... ;-))
@கக்கு - மாணிக்கம்
எங்க குல சாமி செவென் ஹில்ஸ் பாலாஜி! அவரை ஒட்டிட்டேன்! வாழ்த்துக்கு நன்றி மாணிக்கம். ;-))
@அமைதி அப்பா
நன்றி அமைதி! ;-))
@Matangi Mawley
பிரீமியர் பத்மினி ஒரு அட்டகாசமான வண்டி... ஊர்ல ஒரு தடவை பத்மினி வர்றா வர்றான்னு குரல் விட்டது ஞாபகம் வருது..
ஹோண்டா சிட்டி போகலாம்ன்னு இருந்தேன்... என் மச்சினன் அந்த வண்டி வச்சுருக்கான். மாருதின்னு பேரே மங்களகரமா இருக்கறதுனால..... இதுல ABS மற்றும் AirBag இருக்கு...
வாழ்த்துக்கு நன்றி. ;-))
@இளங்கோ
Thanks Thambi. ;-))
@சுந்தர்ஜி
வாழ்த்துக்கு நன்றி ஜி! சேப்புக்கு ஒரு கவர்ச்சி உண்டு... என்ன நா சொல்றது... ;-))
உங்க காரின் புகைப்படம் நன்றாக உள்ளது. ஆனால் படத்தின் பின்னணியில் வெளிநாட்டு கட்டிடங்கள் தெரிகிறதே. சேப்பாயியை அயலகம் அழைத்து சென்று இருந்தீர்களா? எது எப்படியோ, லீவ் நாட்களில் சென்னையில் ஊர் சுற்ற எனக்கு ஒரு கார் இரவல் கிடைக்கப்போகிறது என்பதை நினைக்கையில்..."என்றென்றும் புன்னகை. முடிவிலா புன்னகை" !! ஓஹோ...அலைபாயுதே!!"
சிலிக்கான் காதலியை பார்க்குமுன் சேப்பாயி வந்துவிட்டது... முதலில் ஒரு ரவுண்ட் அடிப்போம்... மாருதி ஸ்விஃப்ட் 5 மாதம் ஆகிறதா...வண்டிக்கு ஏக கிராக்கி வந்துவிட்டது...
ஜூலை மாதம் வரும் பொழுது அம்பத்தூரிலிருந்து பெருங்களத்தூர் வரை பைபாஸில் ஒரு ஓட்டம் விடுவோம்...ரோடும் ஜோரு காரும் ஜோரு.
Congrats Venkat
செகப்பு காரு supperu
வழக்கம் போல உங்க டச் பதிவில
யாரும் கார டச் பண்ணாம பாடுக்கொங்க
கோதவில எல்லாம் இறங்க வேணாம்
வாழ்க வளமுடன் மன்னை மைனர்வாள்
உங்கள போல செகப்ப இருக்கிறவங்க பொய் சொல்லமாட்டங்க
செகப்பு காரும் நல்ல வளம் தரும்
சேப்பாயி....!!
வாழ்த்துகள்.
Congrats.,
Raghu
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார்.
உங்கள் சேப்பாயி நெடுங்காலம் நீடூழி வாழட்டும். சேப்பாயிக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்கவும் வாழ்த்துக்கள்.
//Wagon -R என்பதை எப்போதும் நான் Wagon full of Romance என்று சொல்வது வழக்கம்.//
சூப்பர்.நல்ல விரிவாக்கம்.
சேப்பாயி... செல்லமா சேப்பின்னு கூப்பிடலாமா? வேண்டாம் சேப்பாயின்னு இருக்கட்டும்....
அட என்ன ஆச்சு எனக்கு... உங்க சேப்பாயி பார்த்தவுடனே காதல் வந்திருச்சு மைனரே....
Congrats ,congrats.
seppayi looks awesome.
@! சிவகுமார் !
ஒரு சாம்பிளுக்கு அந்த படம் போட்டேன். எல்லா சிகப்பு டிஜயரும் இப்படித்தான் இருக்கும். நன்றி சிவா! ;-))
@பத்மநாபன்
வாழ்த்துக்கு நன்றி. ஜூலையில் பெரிய ரவுண்டாக போவோம் பத்துஜி! சந்திப்பதற்கு ஆவலாய் காத்திருக்கிறேன். ;-))
@A.R.ராஜகோபாலன்
Thanks Gopli. Your recent post on Tirumala yathra is very good. Will come and comment. Thanks.
@siva
வாழ்த்துக்கு நன்றி. நான் நிறைய பொய் சொல்லுவேன்....... புரை தீர்ந்த நன்மை பெயக்கும் எனின்!! ;-))
@ஸ்ரீராம்.
நன்றிங்க... ;-))
@Raghu
Thanks Raghu Sir! Long Time.. No See.... What happend? ;-))
@எல் கே
நன்றி எல்.கே. ;-))
@ஜிஜி
வாழ்த்துக்கு நன்றிங்க ஜி.ஜி. ;-))
ரொம்ப சந்தோஷம் அண்ணா! அடுத்த தடவை சென்னை வரும் போது உங்க கூட ஒரு ரவுண்ட் அடிக்காம ப்ளைட் ஏறர்தா இல்லை.
உங்களோட பழைய வண்டியை வாங்கினவர் அவாத்து மாமி கிட்ட "...... எல்லாருக்கும் அப்புறம் கடைசியா இந்த வண்டியை ஒரு மைனரு வெச்சுருந்தாரு அதுக்கு அப்புறம் நாம வெச்சுருக்கோம்"னு சொல்லிண்டு இருந்தாராமே!!...:PP
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! சேப்பியவிட சிகப்பி நல்லா இருக்கா? ;-))
@angelin
Thank You very Much. ;-))
@தக்குடு
உங்களோட குசும்பு இருக்கே!.. அந்த மாமா கவுண்டமணியும் இல்லை... நான் சொப்பன சுந்தரியும் இல்லை.. ;-))
வாழ்த்துக்கு நன்றி. ;-))
வாழ்த்துக்கள். சேப்பாயி - ட்ரேட்மார்க்/காபிரைட் பண்ணியிருக்கீங்களா?
@அப்பாதுரை
வாழ்த்துக்கு நன்றி தலைவரே! காப்பிரைட் பண்ணிடலாம்ன்னு சொல்றீங்களா? ;-))
நானொருத்தன்... காரை முதன்முதலாய் நேர்ல பார்த்துட்டு பதிவை மெள்ளமா பார்க்கிறேன்..
உங்க செப்பாயில உங்க பக்கத்துல உட்கார்ந்துகிட்டு சுத்தினது ஜானவாச ஊர்கோலம் மாதிரியில்ல இருந்தது?..
கொஞ்சம் பளிச்சுன்னு யாராவது போனால் டாஷ்போர்டுல ஒரு பச்சை விளக்கு உங்களைப் பார்த்து கண்ணைகண்ணை அடிக்குதே... அது என்ன டேக்னாலஜி தல??
வாழ்த்துக்கள்.
@மோகன்ஜி
நன்றி அண்ணா!
ஒரு விஷயம்.... நேற்றைக்கு சேப்பாயிக்கு ஒரு ஆக்சிடென்ட். நின்னுகிட்டு இருக்குரவ மேல மரம் முறிஞ்சு உழுந்திடுச்சு. நல்லவேளையாக எங்களுக்கு ஒன்னும் ஆகலை.... ;-)))
@மாதேவி
நன்றி. ;-))
சேப்பாயிக்கு கருப்பு கயிறு, எலுமிச்சம்பழம் கட்டியாச்சா ?????
குற்றாலத்துல சீசன் தொடங்கியாச்சு. எல்லா அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. ஒரு டூர் போட வேண்டியதுதானே
உங்கள் சேப்பாயிக்கு திருஷ்டி சுத்திப் போட்டுட்டீங்களா ?
சென்னை வந்தா ஏத்திக்கிட்டு சுத்திக் காட்டுரீகளா ?
@Ponchandar
வரணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு. இங்க உடமாட்டாங்க போலருக்கே. அழைத்தமைக்கு மிக்க நன்றி சார்! ;-))
@சிவகுமாரன்
சுத்திப் போட்டாச்சு. சுத்தியும் வந்தாச்சு.
நிச்சயமா சிவா... வாங்க.. ;-))
Post a Comment