Wednesday, May 25, 2011

வாயாடி வங்கம்மா

அக்கடான்னு திண்ணையில் உட்கார்ந்து ரொம்ப நாளாச்சு. எலக்ஷன் ஜுரம் முடிந்து தமிழகத்திற்கு மம்மி returned. King Maker என்று கேப்டனுக்கு புகழாரம் சூட்டி கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் ஓரம் அவசரமாக அற்பசங்கைக்கு ஒதுங்கும் சுவற்றில் மணக்க மணக்க போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். திகார் ஜெயில் முக்கியஸ்தர்களால் நிரம்பி வழிகிறது. ஆங்கிலம் தெரிந்தால் கம்பி எண்ண வேண்டும் போலிருக்கிறது. வாட் எ டேஞ்சரஸ் லாங்குவேஜ். தமிழ் வாழ்க! "இங்கு அரசியல் பேசாதீர்கள்" என்று திண்ணையில் சுண்ணாம்பினால் எழுதிய ஒரு போர்டு போட்டிருக்கிறது. வேற சில விஷங்களைப் பார்ப்போம்.

********** வாயாடி வங்கம்மா ************

செல்ஃபோனில் வாய் ஓயாமல் பேசுபவர்களைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப அலர்ஜி. "ஆ.ஆமாமா..." என்று ஒரு காட்டுக் கத்தல், "ஹலோ.. அலோ..லோ..லோ" என்று ஒரு கூப்பாடு, "ஹாஹ்.ஹா..ஹா.கீ..கீ..கீ." என்று ஒரு அதிர் வேட்டு சிரிப்பு, "ஸ்.சு..சு..ஸ்." என்று கொஞ்சம் குசுகுசு, மளுக்கென்று கழுத்து சுளுக்கும் வரை மண்டையை தலையாட்டி பொம்மை போல ஆட்டுவது என்று பல சேஷ்டைகளுடன் நந்தனம் பஸ் ஸ்டாப்பிலும், சென்ட்ரல் ஸ்டேஷன் ஜன சமுத்திரத்திற்கு மத்தியிலும் இடங்களில் நின்று இவர்கள் வாயாடுவது மகா கொடுமை. சில கனவான்கள் காதுக்கும் வாயுக்கும் போனை துடுப்போட்டி பேசுவார்கள். இக்காலத்தில் செல்போன் இல்லாமல் தெருவில் யாரையும் காண்பதரிது. இந்த அமெரிக்கப் பெண்மணி ரயில் பயணத்தின் போது பதினாறு மணிநேரம் தொடர்ந்து பேசி சாதனை படைத்திருக்கிறார். எப்படி சாப்பிட்டார், எப்படி இன்னபிற காரியங்கள் செய்தார் என்று தெரியவில்லை. சக பயணிகள் காவல் துறைக்கு பிராந்து கொடுத்து பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.






கடைசியில் இந்த அமெரிக்கப் பெண்மணி தான் அவமானப்படுத்தப்பட்டதாக அறைகூவி அங்கலாய்த்தாரம்.

************* 10-10-10-10 ***********


20-20 கிரிக்கெட் மாட்சுகள் இன்னும் கொஞ்ச நாள் கழித்து சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடும். அடுத்தது என்ன செய்யலாம் என்று விளையாட்டாக பேசியபோது எனது அலுவலக நண்பர் இருபது இருபது போட்டிகளை பத்து பத்து ஓவராக ரெண்டு இன்னிங்க்ஸாக வைக்கலாம் என்றார். முதல் பத்து ஓவர் ஒரு அணி மட்டை பிடிக்கும் அடுத்த பத்து ஓவர் எதிரணி. இப்படி ஆளுக்கு ரெண்டு இன்னிங்க்ஸ் டெஸ்ட் மேட்ச் போல ஆடலாம் என்றார். ஐடியா நன்றாகத் தான் இருக்கிறது, சொன்ன நண்பருக்கு அடுத்த லலித் மோடி ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றேன். சிரிக்கிறார். ஆடுகளத்தில் இன்னிங்க்ஸ் பிரேக்கில் யாத்தே யாத்தேயலாம்.

*********** ஜாம் பஜார் ஜக்கு ************

மனோரமா ஆச்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல்.





தில்லானா மோகனாம்பாளில் "ஏன்" என்ற வார்த்தையை அபிநயம் பிடித்து இழுத்து சிக்கலாரிடம் பேசி நடித்தது பார்ப்போர் நெஞ்சை அள்ளும். சென்னை செந்தமிழ் ஆச்சி பேசித் தான் கேட்கவேண்டும்.

********* மண்டையடி ***********



தங்கக் கேச மயில் மீது பால் தாக்க வர்றதை பார்த்தும் கூட ஒருத்தன் கேமராப் புடிச்சான் பாரு அவனை.... அவனை...

********* தாலாட்டுதே வானம் ****************
 கமல் பாட்டுதான் ஞாபகத்திற்கு வந்தது. இயற்கை எனும் அழகசுரனை படம் பிடித்த அந்தக் கைக்கு அயோத்திக் குப்பம் வீரமணி போட்டிருந்தது போல ஒரு ப்ரேஸ்லெட் வாங்கிப் போடணும்.




-

31 comments:

sriram said...

வெங்கிட்டு,
//சக பயணிகள் காவல் துறைக்கு பிராந்து கொடுத்து//
அது பிராது, பிராந்து அல்ல.

அப்புறம் பிராது கொடுத்தது கண்டக்டர், சக பிரயாணிகள் அல்ல.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சாய்ராம் கோபாலன் said...

Superb RVS.

Manoroma to the lady getting whacked in the back (reminds me of temple injury to Spinner Ashwin yday in trying to defend a return catch in IPL match) !

Last photo stole the show.

Amtrak is one now even local NJ Corridor train has silent car !!

Anonymous said...

//நந்தனம் பஸ் ஸ்டாப்பிலும்//

அது என்ன குறிப்பாக நந்தனம்???
...................................

20/20 கான்செப்ட்.. இதைத்தானே சச்சின் முன்பே சொன்னார். 50 ஓவர் போட்டிகளை இரண்டு 25 ஆக பிரித்து ஆடலாம் என்று.

........................

Anonymous said...

//அயோத்திக் குப்பம் வீரமணி போட்டிருந்தது போல ஒரு ப்ரேஸ்லெட் வாங்கிப் போடணும்//

அதுக்கு முன்னாடி விஜயகுமார் மோப்பம் பிடிச்சி பின்னாலேயே வருவார். பரவாயில்லையா?

RVS said...

@sriram
பிராது-பிராந்து -- கவுண்டமணி பாணியில் அழுத்தி சொன்னேன்.
விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீராம். என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? ;-))

RVS said...

@சாய்

Thanks Sai! ;-) That photograph is amazing... right? ;-))

RVS said...

@! சிவகுமார் !
நந்தனத்தில் ஒரு நாள் நான் கேட்டேன்.... அதான்! ;-) பத்து பத்து ஓவருக்கு நடுவுல ஒரு குத்தாட்டம் வேற வச்சுக்கலாம். ;-))

RVS said...

@! சிவகுமார் !
சிவகுமார், விஜயகுமார் வருவாரா? ஹா ஹா ... ;-)

எல் கே said...

உம்மோட பிரச்சனையா போச்சு ஓய். அப்டேட் வர மாட்டேங்குது. அத சரி பண்ணும் . ஒவ்வொரு நாளும் தேட வேண்டி இருக்கு .. இதே மாதிரி ஒரு பேஸ்பால் வீடியோ முக நூலில் போட்டேனே பார்க்கலையா ??

அந்த போட்டோ தூள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Nice :))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எழுத ஒண்ணுமில்லாட்டாலும் ஒரு போஸ்ட் தேத்தறது எல்லாராலயும் முடியறதில்ல ஆர்விஎஸ்.

ச்சும்மா வெள்ளாட்டுக்குச் சொன்னேன்.அத நம்பி நெம்பிரக் கூடாது.

பொன் மாலை பொழுது said...

தெருவில் பத்து பேரைக்கண்டால் நிச்சயம் அதில் ஆறு பேர்கள் செல்லுடந்தான் பேசிக்கொண்டுள்ளனர். அதுசரி, செல்போன் வருவதற்கு முன்னர் எதெல்லாம் எப்படி நடந்தது?

/// அந்தக் கைக்கு அயோத்திக் குப்பம் வீரமணி போட்டிருந்தது போல ஒரு ப்ரேஸ்லெட் வாங்கிப் போடணும்.////



லொள்ளு தான். உங்க கைக்கும்தான், ஒன்னு இல்ல ரெண்டுகைக்கும்.

Madhavan Srinivasagopalan said...

திண்ணைக் கச்சேரி போல் கதம்பம் நன்றாக இருந்தது..

அப்பாதுரை said...

அரசியல் எடுத்து விடக்கூடாதோ இன்னும் கொஞ்சம்?

மனோரமா வாழ்க! பாட்டு ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிறேன். 'come teacher near my house... i am saidapet crane' என்று ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாதது குறை.

ரிஷபன் said...

அவியலில் சுவை தூக்கல்..
ஆச்சியின் பாட்டு தூள்..

ஸ்ரீராம். said...

பாவங்க அந்தப் பொண்ணு பார்த்துக் கொண்டிருக்கும்போதே எத்தனை தரம் அடிவாங்குது...! 20-20 போர் அடித்தால் தாஸ் போட்டு தாஸ் ஜெயித்த அணி வெற்றி பெற்றதாகச் சொல்லி விடும் நாள் சீக்கிரம் வரட்டும்!

மோகன்ஜி said...

ஜமாயச்சுட்டீங்க மச்சினரே! அருமையான அவியல். தங்கமயிர்த் தாரகையின் தலையில் பந்து பட்டதற்கு நொந்து போன உம்மை என்ன பண்ணலாம்?!

வெங்கட் நாகராஜ் said...

அப்பாடா திண்ணையில காத்து வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு....

அந்த தங்கத்தாமரை எத்தனை முறை தான் அடிவாங்கும் தலையில.... ஒரு தடவை வாங்கினாலே தாங்காது பாவம்... வீடியோவை எடிட் பண்ணமுடிஞ்சா ஒரு அடியோட நிறுத்திடுங்களேன்...

ஆச்சியின் நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.

எங்க நம்ம பக்கம் ஆளைக் காணோம்....

பத்மநாபன் said...

திண்ணையில் வாயாடி வங்கம்மாவின் கச்சேரி ஜோர்... 10 /10 ஓவர் ஐடியா நல்லாத்தான் இருக்கு..

RVS said...

@எல் கே
ஏன் அப்டேட் ஆகமாட்டேங்குதுன்னு தெரியலை எல்.கே. ;-))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

Thanks Madam. ;-)

RVS said...

@சுந்தர்ஜி
ஹி...ஹி...
உங்களை யாரால நெம்ப முடியும் ஜி! நீங்கள் மகாகனம் பொருந்தியவர்... ;-)))))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
நன்றி மாணிக்கம். நான் அ.கு.வீரமணி இல்லை.. ஐயோ வேண்டாம் சாமி! ;-)))

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா! ;-))

RVS said...

@அப்பாதுரை
அப்பாஜி! you come not i no let you go .... அசத்தல் மொழிபெயர்ப்பு..... அரசியல் எழுத முடியாத அபாக்கிய நிலை தமிழ்நாட்டில் உள்ளது. முடிந்தால் வரும் பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளி எழுதுகிறேன். ;-))

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்! ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
அடிபட்ப்போவோதுன்னு தெரிஞ்சப்புரம் ஓடிப்போய் தள்ளிவிட்டு கட்டிப் பிடிச்சு உருள வேண்டாம்.. ஐடியா தெரியாத கேமரா மேன்... சரியா ஸ்ரீராம்.. ;-))

RVS said...

@மோகன்ஜி
கருங்கூந்தல் கார்மேக அழகியாக இருந்தாலும் வருத்தப்படுவேன் அண்ணா! நன்றி. ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கு நன்றி தலைநகரமே!
கல்யாண நாள் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன். ;-))

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! இன்னமும் பணிச்சுமையில் தள்ளாடுகிரீர்களா? ;-))

அப்பாதுரை said...

என்னா? கருங்கூந்தல் அழகியாக இருந்தாலும் வருத்தப்படுவீங்களா? உங்களை ஏன்னுக் கேக்கறதுக்கு ஆளே இல்லையா?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails