"ஆர்.வி.எஸ் புக் ஃபேர் போலாம் வரீங்களா?" காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடந்த ஒரு புத்தகத் திருவிழாவிற்கு கை பிடித்து அழைத்துப் போகாத குறையாக கேட்டார் சிவாண்ணா. எங்களது முதல் பரிச்சியதிர்க்கு பின்பு சேர்ந்து போன ஒரு புத்தகக் காட்சி அது. எந்தெந்த பதிப்பகங்களில் யாரார் எழுதியதை வாங்க வேண்டும் என்று கனகச்சிதமாக பட்டியலிட்டு வாங்குவார். புஸ்தகம் படிப்பது சுவாசத்துக்கு நிகரானது என்று சிரித்துக்கொண்டே சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. கம்ப ராமாயணம், பெரியபுராணம், ஸ்ரீமத் பாகவதம் என்று பல புஸ்தகங்களை அவருக்காக அன்று தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்தேன். இதுபோன்ற உபசரிப்புகளை ஏற்பதற்கு மிகவும் சங்கோஜப் படுவார். "வேண்டாம் ஆர்.வி.எஸ். எங்கிட்ட கொடுங்க" என்று கையிலிருந்து பிடிங்கியது நேற்றைக்கு போல இருக்கிறது.
திருமுறைத்தலங்கள் என்ற புத்தகத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களின் முகவரிகள் இருக்கிறது என்று சொல்லி என்னை கோயில் பாதைக்கு திருப்பியவர் அவர். எந்த ஒரு புஸ்தகத்தையும் ஓ.சியில் வாங்கி படிக்கக் கூடாது என்ற நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தார். "ஆளுக்கு ஒரு காப்பி வாங்கினால் தானே எழுதறவங்களுக்கு இண்டரெஸ்ட் வரும்" என்று கேட்பார். அன்றிலிருந்து எந்த ஒரு புஸ்தகமாக இருந்தாலும் கடையில் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறேன். இசை, சினிமா, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை என்று பல முகங்களில் சிவாண்ணாவை பார்த்திருக்கிறேன்.
இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் வெகு ஜோர் என்று சொன்ன போது "நல்லாத்தான் இருக்கும். ஆனா ஆர்.வி.எஸ். நான் சில பாடல்கள் சொல்றேன்... அப்புறமா சொல்லுங்க..." என்று சொல்லிவிட்டு "படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்.." என்று கனைத்துக்கொண்டு ஆரம்பித்தபோது எஸ்.பி.பி. வந்து எதிர் சேரில் உட்கார்ந்து பாடியது போல இருந்தது. "இது வி.குமார் இசையில் எஸ்.பி.பி பாடியது. இதுல வரும் ரிவர்ஸ் தபேலா இருக்கே... போட்டு பின்னியிருப்பான்.." என்று சொல்லி சிலாகிப்பார். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் "அண்ணா" என்று கூப்பிட்டால் திரும்பவும் என்னையும் "சொல்லுங்கண்ணா" என்பார். பாகவத சிரோன்மணியான அவரது தந்தையாரிடம் மராத்திய அபங்கங்கள் பற்றி கேட்க வந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் அவர்களுக்கு தந்தையின் உடல்நிலை காரணமாக பாட முடியாததால் சில அபங்கங்களை பாடியும் அர்த்தம் சொல்லியும் கொடுத்தார்.
பெரியோர் சிறியோர் வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் மதிக்கத் தெரிந்த ஒரு மாமனிதர். தனது இல்லம் எங்கும் மானிடர்களின் படங்களை பிரேம் போட்டு தொங்கவிடாமல் மகான்களின் படங்களும், தெய்வத் திருவுருவங்களையும் ஒரு படக் காட்சி போல சுவர் தெரியாமல் பார்வைக்கு மாட்டியிருப்பார். ஒரு பத்திரிக்கையின் (சினிமா எக்ஸ்ப்ரெஸ் மற்றும் வெள்ளிமணி) ஆசிரியர் பொறுப்பில் பணியாற்றினாலும் படங்களை எடிட் செய்ய உதவும் போட்டோஷாப் என்ற மென்பொருளை இயக்கக் கற்றுக் கொண்டு அதில் மிகுந்த தேர்ச்சி அடைந்தார். அவர் போட்டோஷோப்பில் அலங்கரித்துக் கொடுத்த அண்ணாமலையார் இன்னமும் எங்கள் வீட்டு கூடத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவார். விசாரசருமர் என்ற பெயரில் ஆரம்பித்த சொற்பொழிவு "சண்டிகேஸ்வரர்" என்று அபாரமாக முடித்து எல்லோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்திய நிகழ்வும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது. நான் முதன் முதலில் ஏதோ கிறுக்கி கொண்டு போய் காண்பித்ததும் "வாத்தியார் ஸ்டைல் நிறைய இருக்கு ஆர்.வி.எஸ். கொஞ்சம் மாத்திக்குங்க. அவரை மாதரி ட்ரை பண்ணாதீங்க. ஆனாலும் அங்கங்க உங்களோடு குறும்பு கொப்பளிக்குது" என்று உளமார பாராட்டி தட்டிக்கொடுத்தார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மரணச் செய்தியோடு துவங்கியது. ஒரு அரை மணி நேரம் எனக்கு "கிர்..." ரென்று இருந்தது. நினைவலைகள் முன்னும் பின்னும் சிவாண்ணாவை ஏந்திக்கொண்டு தறிகெட்டு ஓடியவண்ணம் இருந்தது. அவர் தொப்பை குலுங்க சிரித்தது, ஜோக் அடித்தது, "நல்லா இருக்கா" என்று வசீகரப் புன்னகையோடு புது ருத்ராட்ச ப்ரேஸ்லெட் போட்டுக்கொண்டு கேட்டது, "சட்டை எப்படி?" என்று கேட்டதற்கு "தேங்காய் சீனிவாசன் மாதிரி இருக்குண்ணா.." என்று சொன்னதும் தே.சீனிவாசன் போலவே பேசிக் கிண்டலாய் சிரித்தது, "எந்த வீட்ல இருக்கீங்க?" என்று கேட்டு என்னை விஷமமாக கலாய்த்தது, "ஆர்.வி.எஸ் ஒரு படம் வச்சிருக்கேன் பார்த்தீங்கன்னா அசந்துடுவீங்க.." என்று கூப்பிட்டு பல ஊர் கோவில்களின் அற்புதப் படங்களை காட்டியது இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் என்னை புரட்டி புரட்டி அடித்தது.
வீட்டிற்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். உறவினர்கள் வரும் வரை அண்ணா காத்திருக்க வேண்டுமாம். சிதையூட்டுவதர்க்கு முன்னர் குளிரூட்டி வைத்திருக்கிறார்கள். அவரது ஆறாவது படிக்கும் மகள் வீட்டில் நடப்பது தெரியாமல் அங்குமிங்கும் நடமாடும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. நாளைக்கு அவரை மின்சார மார்க்கமாக......... வேண்டாம்...
இந்தப் பதிவை முடிப்பதற்கு முன்னால்.... ஓரிரு மாதங்களுக்கு முன்னர் "அவர் ஜெயிலுக்கு போயிருக்கார்" என்ற ஒரு உன்னத படைப்பை எழுதி தனது தகப்பனார்க்கு எனது வலைப்பூ மூலமாக அஞ்சலி செலுத்தினார். அவர் பெயரை போடக்கூடாது என்று அன்புக் கட்டளையிட்டார். "ஏன்?" என்று நான் கேட்டதற்கு "ச்சே.ச்சே. அப்பாவைப் பற்றி நான் ஏதோ ரொம்ப கதை விட்டதா யாராவது நினைச்சுப்பாங்க.. வேண்டாம் ஆர்.வி.எஸ். அது அப்பாவுக்கு நல்லா இருக்காது" என்றார். நினைக்கையில் எனக்கு கண்களில் நீர்க் கோர்க்கிறது......
ரொம்ப ஜாலி மூடில் இருக்கும் போதெல்லாம் "எஸ் ஷிவா ஹியர்..." என்று அமெரிக்க ஆக்செண்டில் ராகமாக செல்போனில் பேசியது இன்று முழுவதும் என்னைச் சுற்றி சுற்றி வருகிறது. காதுகளில் ரீங்காரமிடுகிறது. சிவாண்ணா!!!!!!!!!!
-

29 comments:
அருமை நண்பரின் இழப்புக்கு வருத்தங்கள்..அவரது ஆன்மசாந்திக்கு பிரார்த்தனைகள்...
இந்த பதிவில் நிங்கள் எழுதியதை படிக்கும் பொழுது பல்துறை பத்திரிக்கையாளர் என்பது புரிகிறது அதுவும் தினமணி போன்ற தரமான பத்திரிக்கையின் ஆசிரியரை இளவயதில் இழப்பது தமிழ் வாசகர்கழுக்கும் இழப்புதான்...
எங்கள் அஞ்சலிகள். பழகியவர்களின் மறைவு மனதை மிகவும் பாதிக்கும். நீங்கள் சொல்வதிலிருந்து பழகுவதற்கு மிகவும் எளிமையானவராகவும் இனிமையானவராகவும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. (சத்யா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தபோது இவ்வளவு விவரங்கள் எனக்குத் தெரியாது. உங்கள் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்)
எங்களது அஞ்சலிகள்.
வருந்துகிறேன்.
படத்தில் அவர் இளம் வயது தோற்றம் அனால் ஏன் இப்படி ஆனது? எதுவும் உடல் நலக்குறைவா என்ன ?
உங்கள் அன்பு நெஞ்சில் உங்கள் சிவாண்ணா ஜீவனுடந்தான் இருக்கிறார் RVS . கலங்காதீர்கள்.
என்னுடைய ப்ரதனைகளும் அவர்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்டுகிறேன்
வார்த்தையில் விவரிக்க முடியாது
சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன்
தினமணியில் அவரின் புகைப்படம் வந்திருந்து அதைப் பார்த்தபோதே பகீரென்றிருந்தது. உங்களிடம் அவர் பற்றி இன்று பேசலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அவரின் புகைப்படத்தின் கீழே தெரிந்துகொள்ள முடியாத பல ஆத்மார்த்தமான தகவல்களைப் படித்தபோது அவரின் மறைவு மிகவும் கனத்தது. அவரின் மகளுக்கும் மனைவிக்கும் அந்தப் பிரிவு இன்னும் எத்தனை ஆழமான ரணமாக இருக்கும்? உங்களுக்கும் அவரின் குடும்பத்துக்கும் என் ப்ரார்த்தனைகளுடன் இணைந்த அஞ்சலிகள்.
அகால மரணங்கள் ரணங்கள்.
முதலிரண்டு பத்திகளைப் படித்த போதோ வித்தியாசத்தை உணர்ந்தேன்..
உங்களுடன், நாங்களும் எங்களது அஞ்சலிகளை தெரிவிக்கிறோம்..
That is a sad news. May his soul rest in peace.
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா! நன்னா ஹாஸ்யமாவும் இஷ்டமாவும் நம்ப கூட பேசிண்டு இருக்கரவா திடீர்னு மறையும் போது அது நம்மை நிலைகுலைய வைக்கர்து. ஆறாவது படிக்கும் மகள் என்னையும் கண் கலங்க வைத்தாள்!..:((
மிகவும் வருந்துகிறேன்.
உன்னுடைய இந்த ஆத்மார்த்தமான பதிவை படித்தவுடன்
அந்த ஆத்மாவின் அருமை அறிந்தேன்
அவரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின்
பதத்தில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
அருமை நண்பரின் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
நீங்க அவர பத்தி எழுதியிருக்கற இந்த eulogy படிக்கும் போது- எனக்கே அவர personal -ஆ தெரிஞ்சா போல ஒரு உணர்வு ஏற்பட்டது... ரொம்பவும் கஷ்டமா இருந்தது- படிக்க! சில நல்ல மனுஷாளுக்கு இப்படி அகால மரணம் நடக்கறத விட ஒரு கொடுமை இருக்க முடியாது! May my prayers reach his family!
உங்கள் சிவாவின் மரண செய்தி கேட்டு நீங்கள் போய்க கொண்டிருந்தபோது நான் உங்களைக் கூப்பிட்டதும். இரண்டு மணி நேரங்களில் என்னைப் பார்க்க என் தம்பிவீட்டுக்கு நீங்கள் சோகமாய் வந்ததும் நினைத்துக் கொள்கிறேன்.
மரணம் உடல்களை மட்டும் தானே நிம்மிடம் இருந்து பிரிக்க முடியும்? நேரில் சொன்ன ஆறுதலை,வலையிலும்
சொல்கிறேன் ஆர்.வீ.எஸ்!
RVS
நண்பரின் இழப்புக்கு வருத்தங்கள்.
//அவரது ஆறாவது படிக்கும் மகள் வீட்டில் நடப்பது தெரியாமல் அங்குமிங்கும் நடமாடும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது//
ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மதிகெட்ட எமனை நினைந்துவிட்டால்.
என் நண்பன் இப்படி தான் போன மாதம். நான்காம் படிக்கும் பிள்ளையை விட்டு செல்லும்படி அவன் ஆயுசு முடிந்தது
கொடுமை
ஆத்மா சாந்தி அடையட்டும்.
இனிய நட்பு நெஞ்சைத்தொடுகிறது.
ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன்.
பத்திரிக்கையில் ஏற்கனவே செய்தி அறிந்தேன். உங்கள் பதிவு வாசிக்க வருத்தம் அதிகமாகிறது. அவர் மனைவி வேலைக்கு செல்கிறாரா? இல்லா விடில் அந்த குழந்தை படிப்பிற்கு நாம் ஏதாவது செய்யலாம். தொலைபேசியில் பிறகு பேசுகிறேன்
உங்கள் நண்பரின் இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
வருந்துகிறேன் ஆர் வி எஸ் ..
எனது வருத்தங்களும்..
எனது வருத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி. சிவாண்ணாவின் நினைவாக்கிரமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது. இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் என்று விவேக் புதுப் புது அர்த்தங்களில் சொல்லும் வசனம் நினைவுக்கு வருகிறது. நாட்கள் பறக்கிறது. இதோ பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த சிவாண்ணா போய் மூன்று நாட்கள். ஓ.கே Thats Life! முடிந்தால் இன்று இரவு புதிதாக ஏதாவது ஒன்று பதிகிறேன்.
என்னுடைய சோகத்திற்கு ஆறுதல் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.
அவரும் நானும் சேர்ந்து ரசித்த எதைப் பார்த்தாலும், கேட்டாலும் அவர்தான் முன்னே வந்து நிற்கிறார்!
எங்களது அஞ்சலி.
நகைச்சுவையாக ஆரம்பித்து கண்கலங்க வைத்து விட்டீர்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சில மனிதர்களுக்கு மரணமில்லை நாம் அவர்களை மறக்காத வரை.
At the end of it all, memories is all we are left with, memories is all we create for our children. A peaceful man left us in an untimely death.
That tells us that life is such. RVSM, continue writing about folks around you. They are immortal once there is something written about them.
மனம் நெருங்கியவர்களின் மரணம் தரும் வலி தாங்க முடியாதது. என் அஞ்சலிகள்.
Post a Comment