வாசலில் சைக்கிளை மெயின் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். வீட்டுக் கதவை தட்டுவதற்கு முன்னால் பக்கத்து சந்தில் யாரோ ஓடியது போலிருந்தது. கண் இரண்டையும் கூர்ப்பாக்கி காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் அலையவிட்டான். "சர ..சர.. பர.. பர... சரக்..சரக்.." என்று காய்ந்த பூவரசு இலைச் சருகுகள் மிதிபடும் ஓசை.
வலது கைக் கடிகாரம் மணி இரவு பதினொன்று நார்ப்பத்தைந்து என்று காட்டியது. தூரத்தில் தெருவிளக்கு மினுக்கிக் கொண்டிருந்தது.
வீடும் தெருவும் நிம்மதியாக தூங்கிகொண்டிருந்தது. மயான அமைதி. நிர்ஜனமான தெரு. தலை கோதும் காற்று. தலையாட்டும் மரம். தக்கினியோண்டு நிலா. ஒரு நாய் "ஊ...." என்றால் தீர்ந்தது.
நிசப்த வேளையில் திடீரென்று வேகமாக தெருமுனை திரும்பிய வெற்று லாரி ஒன்று "பாம்" என்று ஹாரனால் அலறிக்கொண்டே அதன் அங்கங்கள் தடதடக்க ஓடியது. அவனுக்கு உள்ளுக்குள் படபடத்தது. வெளியே வியர்த்தது. அந்த நேரம் பார்த்து தெருவிளக்குகள் ஒட்டுமொத்தமாக சட்டென்று அணைந்து மொத்த தெருவையும் இருள் கவ்விக்கொண்டது. மீண்டும் காம்பவுண்டு ஓரம் "சரக்..சரக்.. பரக்..பரக்..".
தைரியலட்சுமி உள்ளே தூங்கிக்கொண்டிருந்தாள். அவன் சம்சாரம்.
போனவாரம் ஐம்பது வயதாகும் பக்கத்து வீட்டு அம்முக்குட்டி பாட்டியிடம் ஜன்னல் வழியாக செயின் பறிப்பு. அதுக்கு முதல் வாரம் வாசலில் கிடந்த தாத்தா காலத்து கர்ண பரம்பரை சேர் கொள்ளை போயிருந்தது. நேற்றைக்கு இரவு தெரு முக்கில் ஒதுங்கப் போன பக்கத்து வீட்டு புது மாப்பிள்ளை கணேசனை மிரட்டி ப்ரேஸ்லெட் திருடப்பட்டது. கழுத்து செயினை எடுத்து பேன்ட் டிக்கெட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டான்.
திரும்பவும் "சரக்..சரக்..பர்க்..பர்க்..". அவனுக்கு திக்.திக்.திக்.
மெதுவாக பதுங்கி பம்மி நடந்து சென்று காம்பவுண்டு தாண்டி தில்லாக எட்டிப்பார்த்தான் வீரக்குமார். ச்சே! குட்டிப் போட்டு புதுசா அம்மாவான பெண் நாயும் ஒரு கடுவன் பூனைக் குட்டியும் ஒன்றின் மேல் ஒன்று ஏறி சருகு சரசரக்க கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தன.
நிம்மதியாக கதவை தட்டினான். ஐந்து நிமிடங்கள் கழித்து கொட்டாவியோடு தைரியம் கதவைத் திறந்தது. சிரித்துக்கொண்டே "குட்டிப் போட்ட நாயும் பூனையும் ஒண்ணா சேர்ந்து சந்துல என்னமா வெளயாடுது. பயமே இல்லாம!"
"அப்படி..." என்ற கேள்வி தைரியம் வாயிலிருந்து கொட்டாவியோடு கலந்து கடைசியாக "யா?" என்று வெளியே வந்தது.
"ம்... என்ன மாதிரி!" என்று நெஞ்சைத் தட்டி சொன்னான்.
தைரியம் அர்த்தபுஷ்டியாக சிரித்தது.
பட உதவி: http://www.unprofound.com/
பின் குறிப்பு: முன்னூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கதை எழுத ஆசை. தீர்த்துக்கொண்டேன்.
-
42 comments:
என்னை மாதிரி.....
சூப்பர் முடிவு
ஆசையை தீர்த்துக்கொண்டேன்
எனச் சொல்லவேண்டியதில்லை
அழகாகவே சொல்லி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
/// ஐம்பது வயதாகும் பக்கத்து வீட்டு அம்முக்குட்டி பாட்டியிடம் ///
இதெல்லாம் ரொம்பத்தான் ஓவரு நைனா.....அப்புறம் அம்மா புள்ளைங்க அல்லாம் ஒண்ணா சேந்துகினா அம்பேல் தான் வாஜாரே!
இவருதான் தில்லு துரையா ?
தைர்யலக்ஷ்மிக்கு வீரக்குமார் சொன்ன திகில் கதையை (முந்நூறு வார்த்தைகளுக்குள் பாராட்டுவதானால்) சபாஷ்.(300 தடவை)
உங்ககிட்ட இருந்து ஒரு குட்டிக்கதை!!! நல்லவேளை இக்கதையை இருட்டில் படிக்கவில்லை.
பின் குறிப்பு: முன்னூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கதை எழுத ஆசை. தீர்த்துக்கொண்டேன்.
.... nice. :-)
தைரியலட்சுமியின் கணவன் வீரக்குமாரின் வீரம் திகிலடிக்கிறது
wow 300words...
within that nice lesson also..
really great mynar wall..
valga valamudan.
நல்லா இருக்கு சகோ.
"தைரியம் அர்த்தபுஷ்டியாக சிரித்தது".:)
300 வார்த்தைக்குள் கதை. தைரியமான முயற்சி – தைரியலக்ஷ்மி தான் நீங்க! :) நல்ல முயற்சி மைனரே…
கதைக்கான கருவைவிட
கதாப்பாத்திரத்திர்க்கான தேர்வு
கதையை போலவே அருமை
தைரியசாலிதான் நீங்க.. 300 வார்த்தைகள்தானான்னு எண்ணிகிட்டு இருக்கேன்
Good one
எப்படியெல்லாம் கதை விடறிங்க..உங்க தில்லை பாராட்டுகிறேன்...
தில்லாத்தான் எழுதியிருக்கீங்க
புரியலைனு சொன்னா சிரிப்பாகளோ? புரிஞ்ச மாதிரி இருக்கு..
hmm gud
@Ramani
முயற்சியை வாழ்த்தியமைக்கு நன்றி சார்! ;-)
@கக்கு - மாணிக்கம்
HA..HA..HA.... ;-))
@Madhavan Srinivasagopalan
ஹி..ஹி.. கண்டுபிடிச்ச நீங்கதான்... ;-))
@சுந்தர்ஜி
ஜி! பதிலுக்கு 300 நன்றிகள். ;-))
@! சிவகுமார் !
'குட்டி' கதை கூட ஒன்னு கை வசம் இருக்கு... அப்புறமா அவிழ்த்து விடறேன்.. நன்றி சிவா. ;-))
@Chitra
Thanks. ;-))
@இராஜராஜேஸ்வரி
இந்த மாதிரி கதையைப் பார்த்து பயப்படாதீங்க...;-)))
@siva
Thanks mannaiyin maindhane! ;-))
@கோவை2தில்லி
நன்றி சகோ. ;-))
@மாதேவி
ha..ha..ha.. ;-)))))
@வெங்கட் நாகராஜ்
தல.. நான் தைரிய லக்ஷ்மன். ;-))
@A.R.RAJAGOPALAN
நன்றி கோப்லி! ;-))
@ரிஷபன்
பாருங்க சார்! முன்னூறுக்கு குறைச்சலாத்தான் வரும். கருத்துக்கு நன்றி. ;-))
@இளங்கோ
Thank you. ;-)
@பத்மநாபன்
பத்துஜி! நன்றி. எப்படியெல்லாம் எல்லாரயும் படுத்த முடியுமோ அப்படியெல்லாம் படுத்திடலாம்ன்னு... ;-))
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
நன்றி மேடம்! நிறைய புதிதாக முயற்சி செய்கிறேன். ;-))
@அப்பாதுரை
தல.. இதானே வேணாங்கறது... ;-)))
@எல் கே
Thanks L.K. ;-))
கதை சூப்பர்ங்க.முன்னூறு வார்த்தைகளுக்குள்.வாழ்த்துக்கள்.
ஆர்.வீ.எஸ்! என்னை விடவா ஒருவனுக்கு தில் வேணும்?
நேற்று சோரன் தூங்கிவிழும் நள்ளிரவிலே, உங்க தில் பதிவை, உங்கக் கணனியில் உங்க வீட்டில் உங்களை வச்சுக்கிட்டே பார்த்தேனே! சிங்கத்தின் பிடரியில் ரிப்பன் வச்சு ஜடை பின்னி விட்டுட்டு வந்தது போல் அல்லவா இருந்தது?
பாட்டிக்கு கூட பாக்யராஜ் ஸ்டைல்ல ரசனையோட பேர் வைக்கர்துல மைனரை யாரும் அடிச்சுக்க முடியாது!!! பத்துஜி இதை எப்பிடி கவனிக்காம விட்டார்!!!...:)))
@ஜிஜி
நன்றிங்க... ரொம்ப நாளா ஆளைக் காணோமே! ;-))
@மோகன்ஜி
அண்ணா! உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! சிங்கமா..... உங்க அலப்பறை தாங்க முடியலை... ;-))
@தக்குடு
தக்குடு... பத்துஜி புது அசைன்மென்ட்ல பிசி..... பாக்கியராஜ்?... ;-))
Post a Comment