Sunday, April 17, 2011

சென்னை டூ மன்னை

Haridhra Nadhi


ஆறு மாதத்திற்கு ஒரு முறை தஞ்சைத் தரணியின் ஞாபகங்கள் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய காவிரி போல என் நெஞ்சில் சுழித்துக் கொண்டு ஆறாக ஓடும். அந்த ஆற்றுக்கு அணையாக ஆபிஸ் வந்து குறுக்கே நின்று பல்லைக் காட்டி சிரிக்கும். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ரெட்டை மாட்டு வண்டியாய் குடும்பத்தை சிரமமில்லாமல் இழுக்கிறோம். ஒருவருக்கு லீவ் கிடைத்தால் மற்றொருவருக்கு இருபத்து நான்கு மணிநேரம் ஆணி பிடுங்க அவசியம் இருக்கும். அம்பேத்கர், மகாவீரர் மற்றும் என் அலுவலக நண்ப மேலாளர் போன்றோரின் ஆசியால் போன வாரம் எனக்கு இயந்திரம் வைத்து போரடிக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் நெற்களஞ்சியத்திர்க்கு செல்லும் பெரும் பேறு கிடைத்தது. இந்நாளில் வெள்ளையடித்த எல்லைக்கல் நட்டு நிறைய தரிசுகள் நகர்களாக ப்ரமோஷன் பெற்றிருந்தன.
 
சொந்த வண்டியில் போனால் டங்குவார் கிழிந்துவிடும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் தேசிய கீதம் பாட வாடகைக்கு கார் அமர்த்தி மன்னைக்கு புறப்பட்டோம். வெள்ளைச் சீருடையில் வந்த பார்த்தசாரதியை வண்டியை முதலில் நேராக புள்ளிருக்குவேளூருக்கு விடச் சொன்னேன். போகும் வழியில் ஸ்ரீகாழியிலிருந்து சமுத்திரக் கரையில் இருக்கும் திருமுல்லைவாசல் என்ற சம்பந்தர் பாடல் பெற்ற சிவஸ்தலம் சென்றேன். கோயிலுக்கு நேர் எதிரே கூப்பிடும் தூரத்தில் வங்காள விரிகுடா. சுனாமியின் போது அந்த முல்லைவனேஸ்வரர் கோவிலைத் தாண்டி அலையரக்கன் ஊருக்குள் நுழைய முடியவில்லையாம்.

vaitheeswaran koil

சீர்காழியில் இருந்து மாயவரம் செல்லும் பாதையில் வரும் ஹேர் பின் பெண்டு திரும்பியதும் மேலக் கோபுரவாசலில் வழக்கம் போல ஏதோ ஒரு மாநில டூரிஸ்ட் வண்டி நின்றுகொண்டிருந்தது. அதன் பின்பக்க டயர் அடியில் அதில் வந்திருந்த பக்தர்களின் குழந்தைச் செல்வங்களின் சுச்சா கக்கா சமாஜாரங்கள் போராட்டமில்லாமல் சகஜமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. Incredible India! நாடி ஜோஸியக்காரர்கள் நிராதரவாக கொளுத்தும் வெய்யிலில் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் பெருமக்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார்கள். அதை இருவர் வாய் பிளந்து கேட்டு நம்பிக்கைச் சாறு பருகிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து தட்டி போர்டில் அகத்தியர் கமண்டலத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்.

அம்மன் சன்னதி கோபுரவாசலில் தனியாக சில்லறைக் காசு எண்ணிக்கொண்டு திருவோட்டுடன் உட்கார்ந்திருக்கும் காவி உடை பிச்சைக்கார பெருமகனைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. பாசி ஆடையை களைந்த சுத்தமான திருக்குளம். துர்நாற்றம் இல்லாமல் பாடி ஸ்ப்ரே அடித்திருந்தது. படித்துறையில் உட்கார்ந்திருந்த பொரிக்கடைக்காரருக்கு லாபம் சம்பாதித்து தரும் "வா..வா..வா.." என்று ஆகாரத்திற்கு தண்ணீர் மட்டத்திற்கு வந்து கோயிலுக்கு வருவோர் போவோரைப் பார்த்து வாயைப் பிளக்கும் நிறைய கெண்டையும் கெளுத்தியும் வாங்கி விட்டிருக்கிறார்கள். இறங்கி தலையில் நீரை ப்ரோக்ஷனம் செய்துகொண்டோம். எக்க விடாமல் குனிய விடாமல் கசங்க விடாமல் கர்ப்பக்ரஹத்தில் இருந்து வைத்தீஸ்வரன் அருள் புரிந்தார். அடியார்களின் திருக்கூட்டம் இல்லை. நெற்றியை பரபரவென்று தூணில் தேய்த்தால் பட்டை இட்டுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் குங்குமத்தாலும் விபூதியாலும் தூணுக்கு அபிஷேகம் செய்திருந்தார்கள். தையல்நாயகி சன்னதி வாசலில் "அம்பாள் அருள் புரிந்தால் தான் இந்த இடத்தை விட்டு நகருவேன்" என்று சபதம் செய்து அழிச்சாட்டியமாக யாரையும் பார்க்கவிடாமல் அந்தாதி படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சமீப காலத்தில் பாட்டியான அந்த அம்மணியை தாண்டி தரிசித்துக் கொண்டு வெளியே வந்தோம். இரண்டு பேர் காலால் எத்தியதில் முட்டியை தேய்த்துக்கொண்டே ஏக கடுப்பில் இருந்தார். அங்காரகன் சந்நிதியில் நிறைய பேர் சிகப்பு வஸ்த்திரம் கொடுத்து செவ்வாயிடம் வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டார்கள். நிமிஷத்தில் கருப்பு அங்காரகன் ஒரே செக்கச் செவேலென சிகப்பானார்.

திருவாரூரில் முதல்வர் வந்த தடம் நன்றாக தெரிந்தது. இரவில் வண்டியின் தலை விளக்கில் ரோடு ஃபேசியல் போட்டது போல பளபளத்தது. அலுங்காமல் குலுங்காமல் சென்றதில் என் சிறிய பெண் சௌகர்யமாக உறங்கினாள். ரோடோரங்கள் குண்டு குழியில்லாமல் செம்மண்ணால் மட்டமாக நிரவியிருந்தன. சைக்கிள்காரர்கள் தைரியமாக ரோட்டை விட்டு இறங்கி பஸ் கார்களுக்கு மனமுவந்து வழிவிட்டார்கள். யார் முதல்வர் ஆனாலும் ஒரு முறை தேசாந்திரம் போய் வந்தார்கள் என்றால் பொதுமக்கள் முதுகு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி பாராட்டும். செல்வியில் சாப்பாடு போடுகிறார்களா என்று கேட்பதற்கு முயலவில்லை. பஸ் ஸ்டாண்ட் ஓர பிரபலமான வாசன் வாசனை இல்லாமல் போட்ட டிஃபன் ஜீரணம் ஆவதற்கு ரோட்டில் கடகடா கிடுகிடு நடுவிலே பள்ளம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். சவளக்காரன் தாண்டும் போது அந்தப் பனைமர இடைவெளியில் தூரத்தில் பெரிய கோவில் கோபுரத்தின் விளக்கு நிலாவுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தது. தூக்கத்திலும் மன்னை அற்புதமாக இருந்தது. ஊரில் நான் கால் வைத்தவுடன் நிச்சயம் குறைந்தது ஒரு நூறு பேருக்காவது நித்திரையில் புரை ஏறி இருக்கவேண்டும்.

இன்னும் இரண்டு நாட்கள் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரம் சுற்றி ஐந்தாறு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பார்த்தேன். எல்லாவற்றையும் எழுதினால் இந்தப் பதிவு குமுதம் பக்தி மற்றும் சக்தி விகடன் போன்ற ஆன்மீக பத்திரிக்கைகளுக்கு போட்டியாகிவிடும் என்று இத்தோடு இப்போது நிறுத்திக்கொள்கிறேன். அவ்வப்போது திண்ணையில் நிறைய பகிர்கிறேன்.

கடைசியாக போன வருஷத்தில் கும்பாபிஷேகம் கண்ட எங்களூர் முதல்வன் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை தரிசித்தேன். சிறுவயதில் நானும் என் சித்தியும் மட்டும் ஏகாந்தமாக சுற்றிவந்த விண்ணை முட்டும் மதிலெழுந்த பிரகாரங்கள் இப்போது மக்களால் நிறைந்து வழிகிறது. மன்னை மக்கள் பக்தியில் திளைக்கிறார்கள். வாசலில் என்னுடன் படித்த ராஜகோபால் "செங்கமல"த்துடன் உட்கார்ந்து பற்கள் தெரிய சிரித்தான். "சௌக்கியமா?" கேட்டதற்கு என் பெண்ணிற்கு இலவசமாக ஆசீர்வாதம் செய்யச் சொன்னான். தும்பிக்கையாழ்வாரிடம் கடன் இல்லாமல் மாமூல் இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டேன். தும்பிக்கையில் இருந்து அவன் கைலிக்கு காசை லாவகமாக மணி ட்ரான்ஸ்பர் செய்தது செங்கமலம். தூண்களில் புதிது புதிதாக நிறைய ஸ்வாமிகள் முளைத்திருக்கிறார்கள். தனது வயதான அன்பு மனைவியை துவஜஸ்தம்பம் அருகில் மங்கலான வெளிச்சத்தில் நிறுத்திவைத்து 1 MP மொபைல் கேமராவில் பத்தடி தள்ளி நின்று தோராயமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். அத்தனை வயதிலும் பக்கத்தில் நிற்க அப்படி என்ன பயமோ? அம்பாள் சன்னதி சுற்றி நிறைய ஸ்வாமி படங்கள் வரைந்திருக்கிறார்கள். ஏலுகொண்டலவாடாவை பார்ப்பது போல செம்பகலக்ஷ்மி தாயார் சந்நிதியில் "பார்த்தவங்க வெளிய வாங்க.... பார்த்தவங்க வெளிய வாங்க..." என்று இழுத்து தள்ளாத குறையாக விரட்டினார்கள். அந்தக் கூட்டத்திலும் "என்ன டீச்சர் சௌக்கியமா?" என்று என் சித்தியை நிறுத்தி விசாரித்தார் பட்டர்.

Rajagopalan

ஸ்வாமி சன்னதி நுழையும் போதே ராஜகோபாலனுக்கு கல்யாண அலங்காரம் செய்துகொண்டிருந்த என்னுடன் தெரு கிரிக்கெட் விளையாடிய பிரசன்னா "வாய்யா ஆர்.வி.எஸ்.எம்? சௌக்கியமா?" என்று எங்களூர் பாணியில் விசாரித்து "மூலவரை தரசிச்சுட்டு வா..." என்று உள்ளே அனுப்பினான்(ர்). ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் பரவாசுதேவப் பெருமாள் தங்கக் காப்பில் ஜொலித்தார். நடுவில் மாடு கன்றுகளுடன் சந்தான கோபாலன் சேவை சாதித்தார்.  வெளியே வந்து மீண்டும் கோபாலனை கண்ணார தரிசித்தேன். சிரித்த முகத்துடன் கல்யாண அவசரத்தில் இருந்தார் கோபாலன். மனமார வேண்டிக்கொண்டு "பிரசன்னா... ஒரு போட்டோ எடுத்துக்கட்டா?" என்று உரிமையுடன் கேட்டு "தாராளமா..." என்று சொல்லிவிட்டு அந்த நீல மேக ஷ்யாமளனுக்கு பின்னால் நீல ஸ்க்ரீன் போட்டான் மகானுபாவன். அசையாமல் சிரித்துக்கொண்டே எனக்கு போஸ் கொடுத்தார் ராஜகோபாலன்.

Thiruvizha Night

பின் குறிப்பு: ஐந்தாறு பாகமாக எழுதவேண்டிய மூன்று நாள் டூரை ஒரே பதிவில் வெளியிட்ட எனக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பாரட்டிக்கொள்கிறேன்.  இப்பதிவில் வெளிவந்த படங்கள் நானே என் கண்களால் பார்த்து கைகளால் கிளிக்கியது. எடுத்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் என்னுடைய வலைக்கு ஒரு தொடர்புச் சுட்டி கொடுத்து உபயோகித்துக் கொண்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.


படக் குறிப்புகள்:  
  1. ஒரு சாயுங்கால நேர ஹரித்ராநதியின் தோற்றம். 
  2. வைதீஸ்வரன் கோவிலின் சுத்தமான குளம். 
  3. ராஜகோபாலனின் எழில் மிகு கல்யாணத் திருக்கோலம்.
  4. பெரிய கோவிலின் திருவிழாக்கால இரவுக் காட்சி.
-

51 comments:

இளங்கோ said...

ஹாய், மன்னார் குடிக்கு நாங்களும் வந்த மாதிரி இருக்கு.. :)

பொன் மாலை பொழுது said...

என்ன, மைனரை காணலையே என்ற சிந்தனையுடன் இருந்தேன். சொந்த ஊருக்கு டூர் அடித்துவிட்டு வந்தீர்களா எல்லோரும்.சரிதான்.
எல்லாப்படங்களும் அழகாய் இருக்கு மைனரே.அந்த உற்சவர் மிக அருமை . லைட்டிங் ரொம்ப நல்ல இருக்கு அதில்.

பத்மநாபன் said...

தஞ்சை மாவட்டத்தை நின்று நிதானமாக சுற்றியதில்லை .. உங்கள் அற்புதமான பதிவு அந்த குறையை போக்கடித்தது ... படங்களும் அருமை

அமைதி அப்பா said...

நிறைய விஷயங்களை ஒரே பதிவில் அளித்து விட்டீர்கள் சார்.

இடங்களின் வர்ணனை சூப்பர்!

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் கட்டுரையும் அருமை. ஒரே பகுதியில் முடித்துவிட்டீர்களே மைனரே? அதுதான் கொஞ்சமாய் வருத்தம் :)

மாதேவி said...

மன்னார்குடி கண்டுகொண்டோம்.

ராம்ஜி_யாஹூ said...

அருமை.
அடுத்த முறை மண்ணை மதில்களின் புகைப்படங்களும் பகிருங்கள்.

A.R.ராஜகோபாலன் said...

வெங்கட், ரொம்ப சந்தோஷமான பொறாமையை தூண்டும் பயனானுபவம் , ஆமாம் அந்த டி டி பி ரோடு வீடு என்னாச்சு ???????????
அந்த வீடு கிரஹபிரவேசத்துக்கு பசங்கல்லாம் நைட் தங்கிணோமே ஞாபகம் இருக்கா ?????????
நீ திருவாரூர் ரூட்டை பத்தி எழுத்தும் பொது அந்த வீட்டை பற்றி எழுதுவாய் என எதிர்பார்த்தேன்

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! என்னையும் உப்புமூட்டை சுமையாய் தூக்கிட்டுப் போய் காட்டின மாதிரி இல்லே இருக்கு ? புகை படங்கள் அருமை. அதிலும் உற்சவர் கொள்ளை அழகு. எதுக்கு அவசரமாய் ஒரே பதிவில் முடிக்கணும்? ஆற அமர எழுதப்படாதோ?

Anonymous said...

//வெள்ளைச் சீருடையில் வந்த பார்த்தசாரதியை வண்டியை முதலில் நேராக புள்ளிருக்குவேளூருக்கு விடச் சொன்னேன்//

பார்த்தசாரதி =கண்ணன் = கோபால் = கோபால்சாமி..இப்ப புரியுது.

//ஹேர் பின் பெண்டு திரும்பியதும் //

கல்லூரியை கடந்து சென்றேன் என்று சொல்ல வேண்டியதுதானே..

Anonymous said...

//திருவாரூரில் முதல்வர் வந்த தடம் நன்றாக தெரிந்தது.//

மே 13- க்கு பிறகு தடம் தெரியுமா?

கோயிலுக்கு நேரில் எங்களை அழைத்து சென்றதற்கு நன்றி. பதிவுலக படிக்கட்டில் நடக்காமல், ஜெட்டில் நேராக மாடியில் இறங்குகிறீர்கள். வாழ்த்துகள்.

சிவகுமாரன் said...

சென்றவாரம் ( ஏப்ரல் 3 & 4 ) நானும் திருக்கடையூர் , வைத்தீஸ்வரன் கோயில் சென்றேன். வைத்தீஸ்வரனைப் பற்றி எழுதிய பதிகத்தை அவன் சந்நிதியில் பாடிப் பரவசப்பட்டேன்.
உங்கள் மன்னைக்கும் ஒருமுறை வரவேண்டும்.
பக்தி மணம் கமழும் பகிர்வுக்கு நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

இடுகையும் படங்களும் அருமை..

எல் கே said...

இதெல்லாம் ஒத்துக்கமுடியாது. இன்னும் விரிவா ரெண்டு பதிவு போடணும்..
அப்புறம் ராஜகோபாலனை நான் கடத்திவிட்டேன். லிங்க் தரமுடியாது.

Unknown said...

நல்லா இருக்கே இது? (கேள்விக்குறி, ஆச்சரியக்குறி இல்லை!) 5-நாள் கிரிக்கெட்டை 1-நாளாக்கி, அதையும், 5-ஓவரில் அவசரமா ஆடறாப் போலிருக்கே? துணை தடிகை, கிராமத்து அய்யனாரையெல்லாம் 100 நாள் ஓட்டினீங்க.... இதுல மன்னை மன்னார்...மைனர்னு உங்களுக்குப் பேர் வேற.

எல்கே //இதெல்லாம் ஒத்துக்கமுடியாது. இன்னும் விரிவா ரெண்டு பதிவு போடணும்..
அப்புறம் ராஜகோபாலனை நான் கடத்திவிட்டேன். லிங்க் தரமுடியாது.// வோட கமென்டுக்கு ரிப்பீட்டு.

Unknown said...

அருமை அருமை
ஒரு இரண்டு பகுதிலாவது போட்டு இருக்கலாம்
ரொம்ப வேகமா பதிவு போட்டு இருக்கீங்க..
ஊர் பெருமை பறைசாற்றும்
மன்னை மையினர் வாழ்க

Anonymous said...

உற்சவர் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறார் அண்ணா! எங்களுக்கும் தரிசனம் தரசெய்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரட்டும்! :)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||எனக்கு இயந்திரம் வைத்து போரடிக்கும் முன்னாள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்திர்க்கு செல்லும் பெரும் பேறு கிடைத்தது.||

இந்நாளிலும் தமிழ்நாடுதானே...
தமிழ்நாட்டின் முன்னாள் என்று வந்திருக்கலாமோ..

||அதில் வந்திருந்த பக்தர்களின் குழந்தைச் செல்வங்களின் சுச்சா கக்கா சமாஜாரங்கள் போராட்டமில்லாமல் சகஜமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. Incredible India! ||

||நெற்றியை பரபரவென்று தூணில் தேய்த்தால் பட்டை இட்டுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் குங்குமத்தாலும் விபூதியாலும் தூணுக்கு அபிஷேகம் செய்திருந்தார்கள்.||

||தூக்கத்திலும் மன்னை அற்புதமாக இருந்தது. ஊரில் நான் கால் வைத்தவுடன் நிச்சயம் குறைந்தது ஒரு நூறு பேருக்காவது நித்திரையில் புரை ஏறி இருக்கவேண்டும்.||

உங்களுக்கு நகைச்சுவை கோலத்திற்குப் புள்ளி போல இயல்பாக வருகிறது..ராசகோபால் என்ன சொன்னார்?! என்னைக் கேட்டாரா?!

Madhavan Srinivasagopalan said...

ம்ம்.. போன வருசம் மே ரெண்டாந்தேதி மன்னையில மீட் பண்ணோம்..

இந்த வருஷமும் மே 1 லேருந்து ஒரு பத்து நாள் மன்னையில டூர்.. சொந்த மண்ணை(மன்னை) பாக்குற ஆர்வத்தை அதிகப் படித்திடுச்சு இந்தப் பதிவு.

geethasanthanam said...

உங்கள் பாணியில் அருமையாக இருந்தது பயணக் கட்டுரை. அறிவன் அவர்கள் சொன்னது போல் உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. நானும் இந்த முறை வைத்தீஸ்வரன் கோவில் குளத்தைப் பார்த்து வியந்து போனேன்.

R.Gopi said...

அட..அட..அட...அடடா...

உங்களின் நமக்கு நாமே திட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சது...

ஊர், டூர் எப்படி இருந்தது தல?

தேர்தல் முடிஞ்சோ, தேர்தல் அப்பவோ போயிருக்கீங்க... அந்த அப்டேட்ஸ் கூட போட்டிருக்கலாமே!!??

எனிவே... கோவில் பற்றி எழுதும் போது, அரசியல் வேண்டாம் என்று விட்டு விட்டீர்களோ!!?

தக்குடு said...

பயணக் கட்டுரை ப்ரமாதம் அண்ணா, பெருமாள் கருட வாஹனத்துல அழகா ஆடி ஆடி போகற மாதிரி மைனர்வாளோட எழுத்தும் காட்சிகளை அப்பிடியே படம் பிடிச்சி காட்டிண்டே போகர்து.

//ஊரில் நான் கால் வைத்தவுடன் நிச்சயம் குறைந்தது ஒரு நூறு பேருக்காவது நித்திரையில் புரை ஏறி இருக்கவேண்டும்// அந்த நூறு பேர் இளமை காலங்களில் உங்களுக்கு நெருக்கமான புருஷாளா இல்லைனா பொம்ணாட்டிகளா?னு பத்துஜி கேட்க சொன்னார்..:))

RVS said...

@இளங்கோ
சரி சரி... மன்னார்குடியைப் பிரிக்காதீங்கன்னு எவ்ளோ தடவை சொல்றது. ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மிக்க நன்றி மாணிக்கம். ஊர் அமர்க்களமாக இருக்கிறது. இருந்து பார்க்க கொடுப்பினை இல்லை. ;-(

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! மாயவரம் - கும்பகோணம் - மன்னார்குடி - தஞ்சாவூர் என்று ஒரு வட்டத்தில் சுற்றினால் கண்கள் இரண்டும் பச்சை பிடித்துக்கொள்ளும். அற்புதமான கிராமங்கள். இந்தியா கிராமங்களில் வாழ்ந்தது. ;-))

RVS said...

@அமைதி அப்பா
நன்றி அ.அப்பா! எப்போதும் வண்டி வண்டியாய் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் எல்லாவற்றையும் ஒரே பதிவில்... ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
அப்பப்போ இதுபோல ஒரு ஃபாஸ்ட் ஃபுட் பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம். நன்றி தலை.தல. ;-)

RVS said...

@மாதேவி
மன்னையை ரசித்தீர்களா? நன்றி. ;-)

RVS said...

@ராம்ஜி_யாஹூ
பாராட்டுக்கு நன்றி ராம்ஜி. அடுத்தமுறை நிச்சயம் பகிர்கிறேன். எங்கே அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்கள்? ;-)

RVS said...

@A.R.RAJAGOPALAN
அன்பின் கோப்லி, டி.டி.பி ரோடு பற்றி மன்னார்குடி டேஸ் பதிவாவாக போட விருப்பம். நன்றி. ;-)

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! எல்லோரும் போர் அடிக்கிறது என்று சொல்வதற்கு முன்னால் முடித்துவிடுவோம் என்று முடித்தேன். ராஜகோபாலன் பார்ப்போர் மனதைக் கவரும் கள்வன். சந்தேகமேயில்லை. ;-)

RVS said...

@! சிவகுமார் !
கல்லூரி தாண்டி கொண்டை ஊசி வளைவு திரும்பி என்று எழுதியிருக்க வேண்டும். நன்றி சிவக்குமார். ;-))

RVS said...

@! சிவகுமார் !
தடம் மாறுமா என்று கேட்கிறீர்களா அல்லது தடம் இருக்குமா என்று கேட்கிறீர்களா?
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-))

RVS said...

@சிவகுமாரன்
ஓ... வெரி குட். தங்களது பாமாலையை அவன் சன்னதியில் பாடிப் பரவசமடைந்து இருக்கிறீர்கள். நன்று. பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@அமைதிச்சாரல்
பாராட்டுக்கு நன்றிங்க... ;-))

RVS said...

@எல் கே
அப்பப்போ திண்ணையில் பகிர்கிறேன் எல்.கே. தாராளமா எடுத்துக்கோங்க.. உங்களுக்கு இல்லாததா.... ;-))

RVS said...

@கெக்கே பிக்குணி
நீங்க ஆச்சர்யக்குறி போட்டாலும் பரவாயில்லை மேடம்! அடிக்கடி வரமாட்டேங்கிறீங்க.. அதான் வருத்தமாயிருக்கு. பழைய கதைகளை மேற்கோள் காட்டியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி. ;-))

அப்புறம் இந்த மைனர் அப்படின்னு இவங்கெல்லாம் கூப்பிடறது... எழுத்துல இன்னும் நான் மேஜர் இல்லைங்கரதைத்தான்.. சரியா.... ;-))

RVS said...

@siva
எழுதும் போதே நினைத்தேன். கொஞ்சம் சுருக்கமாகத் தான் எழுதினேன். பாராட்டுக்கு நன்றி சிவா! ;-))

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி என்னை புண்ணியவானாக்கியதர்க்கு!! ;-))

RVS said...

@அறிவன்#11802717200764379909
முன்னாளை மாற்றிப் போட்டுவிட்டேன். சுட்டியதற்கு நன்றி.
பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றி. எனக்கு இலக்கிய ஜல்லி அடிக்கத் தெரியாது. கண்டதையும் படித்ததையும் வைத்து பிழைப்பு நடத்துகிறேன். ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா! மன்னை நாட்கள் உனக்கு மணக்கட்டும். ;-))

RVS said...

@geethasanthanam
நன்றிங்க மேடம். எப்போதும் குளத்தின் மேல்கரை மூலையில் பிச்சைக்காரர்கள் கக்கா போய் வைத்திருப்பார்கள். இம்முறை அதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடியார்க்கு அடியவர் எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறார். பாராட்டுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ;-))

RVS said...

@தக்குடு
ஒரு பாராட்டு பிட்டைப் போட்டு அடுத்த வரியில வாருவது ஒரு கலை. நீங்கள் அதில் கில்லாடி தக்குடு. அந்த நூறு பேரும் சுத்தமான கௌரவர்கள். குணத்திலும் தான். பெண்கள் கனவில் வருவதற்கும் புரை ஏறுவதற்கும் நான் என்ன தக்குடுவா? எனக்கு ஊரில் சேர்மானம் அவ்வளவாக சரியில்லை. அவ்வளவும் சரியில்லாமல் போகாதது கோபாலனின் அருள். வாயைப் பிடுங்கிவிட்டு பத்துஜியை துணைக்கு அழைக்கிறீர்கள். நல்லா இருக்குப்பா! ;-)))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சுஜாதாவின் பார்வையைக் கேட்டு வாங்கிக் கொண்டார்போலிருந்தது உங்கள் வர்ணனைகள். தான் கண்டவை அனைத்தையும் ஒன்று விடாமல் நகைச் சுவையாய் பதிவு செய்வதில் வல்லவர் சுஜாதா. அருமையான படங்கள்.

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

தங்களின் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி மேடம். ;-)

ADHI VENKAT said...

மன்னார்குடியை பார்க்கத் தூண்டியுள்ளது உங்கள் பதிவுகள். படங்கள் அழகு. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மற்றும் மற்ற நவக்கிரக கோவில்களுக்கு 98 (அ) 99 ல் மாயவரத்தில் நடைப்பெற்ற உறவினரின் திருமணத்தின் போது சென்றது.

கே. பி. ஜனா... said...

//ஐந்தாறு பாகமாக எழுதவேண்டிய மூன்று நாள் டூரை ஒரே பதிவில் வெளியிட்ட எனக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பாரட்டிக்கொள்கிறேன். //
Ha Ha! Hilarious!

Kri said...

haridha nadhila full-a thanniya! Perumal picture is very nice! (asayama pose koduthaar-nu comment vera!) Ramu sir kitta solli onna adikka sollanum-da!

RVS said...

@கோவை2தில்லி
பாராட்டுக்கு நன்றி சகோ.
மன்னார்குடிக்கு அவசியம் சென்று வாருங்கள். கோபாலான் அருள் கிடைக்கும். ;-)

RVS said...

@கே. பி. ஜனா...
Thank you Sir!! ;-))

RVS said...

@Krish Jayaraman
Adikka solradhukku Thanks Sekar!! ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails