காலை ஏழு மணிக்கு வாசலில் வந்து எட்டிப் பார்த்தால் தெரு வெறிச்சோடி போயிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையின் சோம்பேறி வேளையை நினைவுபடுத்தியது. நேற்றிரவு கோயம்பேடு தாண்டுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. க்ளட்சுக்கும் ஆக்சிலேட்டருக்கும் கால் நர்த்தனம் ஆடி களைத்து ஓய்ந்துவிட்டது. இன்றைக்கு தேர்தல் விடுமுறை, நாளைக்கு அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் நம்பியவர்களுக்கு தமிழ் வருடப் பிறப்பு, சனிக்கிழமை மகாவீர் ஜெயந்தி அப்புறம் சன்டே. நடுவில் வெள்ளி மட்டும் ஆபிசுக்கு பங்க் அடித்தால் ஐந்து நாட்கள் விடுமுறை என்ற லாபக் கணக்கு வைத்துக்கொண்டு குழந்தை குட்டியோடு பொட்டி படுக்கையுடன் ஆயிரம் ஆயிரம் பேர் ஒரு சேனையாய் அந்தக் குட்டியோண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தை நேற்றிரவு முற்றுகையிட்டார்கள். காலையில் இருந்து கை காண்பித்து சலித்துப் போன போ.போலிஸ் "போங்கடா போக்கத்துவனுகளா.." என்று ஒதுங்கி சிக்னல் கம்பத்தில் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்தது.
பிளாட்பாரத்தில் இருசக்கர வாகனாதிகள் ரேஸ் போனார்கள். ஆட்டோ அன்பர்கள் வளையத்திற்குள் நுழையும் கழைக் கூத்தாடி பெண்டிர் போல முரட்டுத்தனமாக ஸெல்ப் டிரைவிங் வண்டிகள் பின் சென்று "உர்.உர்"...என்று உறுமி மிரட்டி மூர்க்கத்தனமாய் இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறினார்கள். வண்டி நிறைய துருபிடித்த முறுக்குக் கம்பி ஏற்றிக்கொண்டு நுனியில் சிகப்பு கட்டாமல் பனியன் போட்ட கிளி டோர் தட்டி மிரட்டி பின்னால் வருவோரை அலகு காவடியில் சொருகும் லாவகத்தோடு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சடன் பிரேக் அடித்து சேதாரம் ஆகாத ஏமாற்றத்தில் ஆமை வேகத்தில் கிளப்பி இன்ச் இன்ச்சாக நகர்ந்தார்கள். இந்த சென்னை மாநகரின் ரோடுகளுக்கு ஏகபோக உரிமையாளர்களான மாநகர பேருந்து ஓட்டுனர்கள் அக்கம் பக்கம் மற்றும் கீழே பார்ப்பது அகௌரவமான செயல் என்று பாரதியின் நேர்கொண்ட பார்வையுடன் எதைப் பற்றியும் கவலைப்படமால் கூட்டத்திற்குள் வண்டியை விட்டு அடித்தார்கள். இவ்வளவு இன்னல்களையும் நடுச் சாலை கொடுஞ் செயல்களையும் மீறி எங்கள் குல தெய்வம் வெங்கடாசலபதி புண்ணியத்தில் இரவு பன்னிரண்டரைக்கு வாகனத்திற்கும் எனக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமாக வீடு வந்து சேர்ந்தேன்.
காலையில் முதல் ஓட்டு என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்த கடமை வெறியில் சீக்கிரம் எழுந்திருந்த போது நான் கண்ட காட்சி தான் இந்தப் பதிவின் முதல் இரண்டு வரிகள். "ரிப்பன் வெட்டி போலிங் பூத் திறக்க உங்களைத்தான் கூப்பிடறாங்க" என்ற வீட்டு லேடிசின் கேலிப் பேச்சையும் மீறி நமது பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் ஜரூராக கிளம்பினேன். மனைவியும் அம்மாவும் எனக்கு இசட் பிரிவு பாதுகாவலர்கள் போல என்னுடன் தோளுக்கு ஒருவராய் வந்தார்கள். ஒரு தேர்தலில் நடிகர் திலகம் சிவாஜி ஓட்டுப் பறிபோன மாதிரி என்னுடையதும் களவு போவதற்கு முன்னர் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு மிகவும் அவசரப்பட்டேன். கட்சி சின்னம் அச்சடித்து வீடுவீடாக ஸ்லிப் கொடுக்கும் ஒரேயொரு உபயோகமான வேலையைக் கூட இந்த முறை தேர்தல் ஆணையம் கழகங்களிடம் இருந்து பிடிங்கிக் கொண்டது. கருப்பாகவும் வெள்ளையாகவும் நம்மை அச்சடித்து அடையாளம் தெரியாத அகோர முகத்துடன் தோராயமாக அது நாம் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு சீட்டை முன்பே வீடு தேடி வந்து கொடுத்திருந்தார்கள்.
ஓட்டுப் போடும் அரசினர் பள்ளியின் வகுப்பறை வாசல்களில் நோஞ்சான் போலீசார் சிலர் திடகாத்திரமான லத்தியுடன் நின்றிருந்தார்கள். இயந்திரப் துப்பாக்கி ஏந்திய வடநாட்டு காவலர்கள் சிலரும் ஆங்காங்கே நின்றுகொண்டு "ஹை..ஹை" என்று ஹிந்தியில் பேசி ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள். "இருபத்து ரெண்டு அங்கே இருக்கு" என்று உள்ளே நுழைந்தவர்களிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கி ஒருத்தர் ஓட்டுப் போட வந்த கும்பலை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். என்னைவிட மிகவும் சிரத்தையாக ஒரு பத்து பேர் கியூவில் எனக்கு முன்பாக வரிசையில் கதை பேசிக் கொண்டு நின்றிருந்தார்கள். கூன் விழுந்த ஈர்க்குச்சி போல இருந்த ஆறடி தாத்தா வாத்தியாரை நினைவுப்படுத்தினார். "சீனியர் சிடிசன்லாம் தனி கியூ சார்" என்று ரெண்டு பேர் அவரை வரிசையில் இருந்து கிளப்பி விட்டார்கள். கிளம்பி சரியாக தவறான இன்னொரு கேட்டில் நேராக நுழைந்தார் கூன் பெரியவர். அனுகூலமாக சொல்லி எங்கள் கதவுக்கு அவரை திருப்பி விட்டார்கள்.
அசராமல் கடமையை ஆற்றி விட்டு வெளியே வந்தவருக்கு பெண்கள் சைடில் இருந்து அழைப்பு வந்தது. "அங்கே உக்காருங்கோ" என்ற கட்டளைக்கு கீழ்ப் படிந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சிரமபரிகாரம் செய்துகொண்டார். பிள்ளைகளுக்கு ஃபாரின் சாக்லேட் கிடைத்த சந்தோஷம் போல ஓட்டுப் போட்ட மகளிர் சில பேர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்கள். இவர்களை எல்லாம் போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போட மாட்டார்களா? "உம்... ராணியம்மா.. " என்று கை தட்டி கூப்பிட்ட பெண்மணியும் கூப்பிடப் பட்ட பெண்மணியும் ராஜ வம்சம் போல நிச்சயம் தோன்றவில்லை. ராணியின் அம்மா என்று பதம் பிரித்து தெரிந்து கொண்டேன். "புள்ளைக்கு மொட்டை போட்டோம். குமாரு நல்லா இருக்கா? உங்களுக்கு சுகரு இப்போ இறங்கியிருக்கா ஏறியிருக்கா" என்று குடும்பத்தின் ஷேமலாபங்கள் விசாரிக்க ஆரம்பித்தார். கதவருகே பெண்பால் ஈர்க்குச்சிக்கு காக்கி மாட்டியது போல இருந்தவர் "அம்மா... நவுருங்க.. இங்க நின்னு கத பேசாதீங்க..." என்று ஸ்ட்ரிக்ட் டீச்சர் தோரணையில் விரட்ட ராணி அம்மா முறைத்தார்கள். முகம் சுணங்கி நகர்ந்தார்கள்.
நான்கு அரசுத்துறை ஊழியர்கள் வரிசையாக பெஞ் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். நான் ஸிலிப் கொடுத்தவுடன் சரசரவென்று பக்கம் புரட்டி டிக் அடித்துக் கொண்டார் ஒரு பெண்மணி. அடுத்தவர் இன்னொரு புத்தகத்தில் குறித்துக்கொண்டு "சார்! வெங்கடசுப்ரமணியன்" என்று ஒரு மூலையைப் பார்த்து குரல் கொடுத்தார். திரும்பி பார்த்தால் நான்கு பேர் கையில் வாக்காளர் புத்தகத்துடன் கரை வேஷ்டியுடன் அலர்ட்டாக உட்கார்ந்திருந்தார்கள். பூத் ஏஜெண்ட்ஸ். அவர்களும் தன் பங்கிற்கு குறித்துக் கொண்டார்கள். அப்புறம் இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர் ஆகப் போகும் ஒரு கண்ணாடி போட்ட பெரியவர் நோட்டு ஒன்றில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு இடது கை ஆட்காட்டி விரலில் நீலக் கலர் நெயில் பாலிஷ் அடித்து ஒரு ரோஸ் ஸ்லிப் கொடுத்தார். அதை நான்காமவரிடம் கொடுக்க அவர் ஒரு மறைவிடத்தை காண்பித்தார். அவர் அழுத்த நான் அழுத்த "பீப்" கேட்டவுடன் எனது வாக்கை உறுதி செய்து கொண்டு நகர்ந்தேன். அந்தக் கரை வேஷ்டி நான்கும் என் முகத்தை ஒருதடவை ஏற இறங்க பார்த்துக் கொண்டது.
பெண்கள் தரப்பு வரிசை வழக்கம் போல வேகவேகமாக முன்னேறி தாயும் தாரமும் வெளியே எனக்காக காத்திருந்தார்கள். குடிமாற்றி வேறு தெரு போனவர்கள் இருவர் "உங்களுக்கு இருக்கா.. எனக்கு இல்லை.." என்று அங்கலாய்த்து பேசிக்கொண்டிருந்தார்கள். லத்தி சுழற்றி "இங்க நிக்காதீங்க.. போங்க... போங்க..." என்று விரட்டினார் ஒரு கடா மீசை போலீஸ். "எங்கள விரட்டுங்க.. அராஜகம் பண்றவங்களை உட்டுடுங்க..." என்று காத தூரம் வந்த பிறகு முனுமுனுத்துக்கொண்டே சென்றார். வீட்டிற்கு வந்தவுடன் முதலில் தலை முழுகினேன். ச்சே.ச்சே. தினமும் ஸ்நானம் பண்ணுவதைத் தான் சொன்னேன்.
பட உதவி: தனக்கு ஓட்டு போடும் வயதுதான் என்று நிரூபித்த ஸ்னேஹா படம் கிடைத்த இடம். http://nkdreams.com
-

74 comments:
வடை எனக்கே மீத fistu..
இருங்க படிச்சுட்டு வரேன்
மனார்குடி மைனர் தன் குடும்பத்தாருடன் சென்று அக்கறையாக வாக்களித்துவிட்டு வந்துள்ளார். வழக்கம் போல சுவாரஸ்யமான இடுகை.
அதுசரி, இவ்வளவு பிரெஷா ஒட்டு போட்ட சினேகாவின் படம் எப்படி கிடைத்தது?
ரைட் ரைட்.. :)
வாக்களித்தற்குப் பாராட்டுக்கள்.
நானும் வாக்களித்து விடுகிறேன்..
ஓட்டுப் போடும் அரசினர் பள்ளியின் வகுப்பறை வாசல்களில் நோஞ்சான் போலீசார் சிலர் திடகாத்திரமான லத்தியுடன் நின்றிருந்தார்கள்.
...LOLlu!
//இயந்திரப் துப்பாக்கி ஏந்திய வடநாட்டு காவலர்கள் சிலரும் ஆங்காங்கே நின்றுகொண்டு "ஹை..ஹை" என்று ஹிந்தியில் பேசி ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள்//
ஹி ஹி ஹி ஹி உங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னு நாசூக்கா சொல்றது புரியுது ஹா ஹ ஹா ஹா...
வோட் போட்டாச்சு..
தீபாவளி அன்று கங்கா ஸ்னானம் ஆச்சா? என்று கேட்பது போல, இன்று உங்களிடம் ஓட்டு போட்டாச்சா? என்று கேட்கலாம் என நினைத்தேன். அதற்குள் பதிவாகவே போட்டுட்டுங்களே மைனரே :)
me too voted early
நானும் உன்கூடவே வந்து ஓட்டு போட்டமாதிரியான ஒரு பிரம்மையை ஏற்படுத்தியது, உன் அனுபவ கட்டுரை
"சடன் பிரேக் அடித்து சேதாரம் ஆகாத ஏமாற்றத்தில் ஆமை வேகத்தில் கிளப்பி இன்ச் இன்ச்சாக நகர்ந்தார்கள். இந்த சென்னை மாநகரின் ரோடுகளுக்கு ஏகபோக உரிமையாளர்களான மாநகர பேருந்து ஓட்டுனர்கள் அக்கம் பக்கம் மற்றும் கீழே பார்ப்பது அகௌரவமான செயல் என்று பாரதியின் நேர்கொண்ட பார்வையுடன் எதைப் பற்றியும் கவலைப்படமால் கூட்டத்திற்குள் வண்டியை விட்டு அடித்தார்கள்."
இத்தனை எதார்த்த நடைக்கு எத்தனை பாராட்டினாலும் தகும்
வாக்கை பதிவு செய்து விட்டு வாக்கு பற்றிய பதிவையும் சூட்டோடு சூடாக பதிவு செய்து விட்டீர்கள்..
ஓட்டு போடும் இன்று மட்டும் நமக்கு மன்னர் மரியாதை ...
நம்ம ஓட்டு இருந்து அதை போட்டுவிட்டு மையோடு வெளியே வருவதே பெருமையான விஷயம்..
இந்த விவரமெல்லாம் சரிதான் ஆனா யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு கடைசி வரை
சொல்லவே இல்லையே சார்?
***************************
எனது பதிவில் தங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்
http://suharaji.blogspot.com/2011/04/blog-post.html
எங்கள் குடும்பத்தில் இறந்து போன (5 வருடம் முன் ) எல்லார் பேரும் மற்றும்
வெளி நாட்ல இருக்கற என் பேரும் voters லிஸ்டில் இருந்ததாம்
கசின்ஸ் உட்பட 9 பேர் வோட்டு போடவில்லை பேர் இல்லாததால் .
"நம்ம ஓட்டு இருந்து அதை போட்டுவிட்டு மையோடு வெளியே வருவதே பெருமையான விஷயம்"..
you are lucky
// ஓட்டுப் போடும் அரசினர் பள்ளியின் வகுப்பறை வாசல்களில் நோஞ்சான் போலீசார் சிலர் திடகாத்திரமான லத்தியுடன் நின்றிருந்தார்கள்.//
மாலை வரையுலும் தாக்குப் பிடிப்பார்களா?!!
சுவாரஸ்யம்.
Voted.
Voted.
Voted.
//வீட்டிற்கு வந்தவுடன் முதலில் தலை முழுகினேன்.//
:):)
ஓட்டுப போட்ட விஷயத்தை இவ்வளவு சுவாரசியமாய் எழுதியதற்காக நானும் உங்களுக்கு ஒ(ட்டு) போட்டாயிற்று, போதுமா?
//அப்புறம் சன்டே//
அப்புறம் SUN day...? நிறைய LEAVE(S) வரும்னு கூட சொல்லலாம்...
//ஓட்டுப் போடும் அரசினர் பள்ளியின் வகுப்பறை வாசல்களில் நோஞ்சான் போலீசார் சிலர் திடகாத்திரமான லத்தியுடன் நின்றிருந்தார்கள்//
போக்கிரி படம் பார்த்த உடனே எழுதுன பதிவா?
//அந்தக் கரை வேஷ்டி நான்கும் என் முகத்தை ஒருதடவை ஏற இறங்க பார்த்துக் கொண்டது.//
இனி அவங்களுக்கு ப்ளெக்ஸ் பேனர் வசனம் எழுத சரியான ஆள் நீங்கதான்னு புரிஞ்சிக்கிட்டாங்க..வாழ்த்துகள்.
//வீட்டிற்கு வந்தவுடன் முதலில் தலை முழுகினேன்.//
தலைக்கு மேலே வெள்ளம் போகும்போது கூடவா...?
கண்ணாடிக்குள்ள கொஞ்சம் மூஞ்சி தெரியுதே..அந்த சினேகா அக்கா சம்பளம் ஒரு கோடி வேணும்னு சொல்றது ரொம்ப ஓவர்..அள்ளிக்கோ அள்ளிக்கோ அரசு கஜானாவில் அள்ளிக்கோ..
சுவாரஸ்யம். அதெப்படி ஸ்ரீராம் மூன்று முறை ஓட்டுப் போட்டார்?
மைனர்வாள் ஓட்டு போடர்து கூட உறியடி உத்ஸவம் மாதிரி சுவாரசியமா சொல்லுவார்!!..:)
நா ரெண்டு ஒட்டு போட்டேன்.....
................
................
................
................
................
................
................
................
................
................
இன்ட்லில ஒண்ணு.. தமிழ்மணத்துல ஒண்ணு.. மொத்தம் ரெண்டு..
ஓட்டு.
சித்திரை புதுவருடவாழ்த்துகள்.
NOTED....
VOTED?????
சாயங்காலம் வேல முடிஞ்சு வீட்டுக்குப்போய் காலங்கார்த்தால ஓட்டுப்போட்டுட்டு வர்றதுக்குள்ள எத்தன நடந்திருக்கு ஆர்விஎஸ்?
சுவாரஸ்யம்-விறுவிறுப்பு-அட்டகாசம்-ஆர்விஎஸ்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அதெல்லாம் சரி.. ஒங்க ஏரியாவுல ஓட்டுக்கு எத்தனை பட்டுவாடா செய்ஞ்சாங்க ?
(சும்மா.. ஒரு கிக்குக்கு தான்)
மன்னையில் இருக்கிறேன். ஞாயிறு திங்கள் வாக்கில் அனைவருக்கும் பதிலும் புதிய பதிவும் இடுகிறேன். கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. ;-))
very Intersting rvs...
//"geetha santhanam said...
சுவாரஸ்யம். அதெப்படி ஸ்ரீராம் மூன்று முறை ஓட்டுப் போட்டார்?"//
தமிழ்நாடு தேர்தல்,
தமிழ் மணம்,
இன்டலி...!
//RVS said...
மன்னையில் இருக்கிறேன். //
மன்னை இருக்கும் திசை நோக்கி வசந்த காற்று வீசிக்கொண்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. சூரியன் பெரும்பாலும் மேகத்தினூடே மறைந்து கொள்வதாகவும் கேள்விப்பட்டேன். (அய்யய்யோ.. நான் அரசியல் பேசலீங்கோ..)
மன்னை சென்ற மன்னா .. சொந்த மண்ணுக்கு சென்ற இடைவெளியிலும் வலையை சுற்றி இருக்கும்( ''இங்க வந்துமா'' எனும் அரசியின் கொமட்டடி தாண்டி ) உமது கொற்றம் ஓங்குக ...அடுத்த தேர்தலில் நீங்கள் நிற்கும் தொகுதியில் வந்து கள்ள ஓட்டு போடப்படும் ....
@siva
இருங்க படிச்சுட்டு வரேன்.. என்று நான்கு நாட்களாக காணாமல் போன சிவாவைக் கண்டுபிடித்து தருவோருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.. ;-)))
@கக்கு - மாணிக்கம்
கூகிள் இருக்க கவலை இல்லை மாணிக்கம். கருத்துக்கு நன்றி. ;-)
@சமுத்ரா
Thanks. ;-)
@Balaji saravana
ரைட் ரைட்.. ரைட் ரைட்.. ரைட் ரைட்.. :)
@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு நன்றிகள். ;-))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாக்களித்ததற்கு நன்றிகள். ;-)
@Chitra
Yes. Lollu of India.. ;-))
@MANO நாஞ்சில் மனோ
அரைகுறைத் தமிழ் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே. ;-))
@ரிஷபன்
நன்றி சார்! ;-))
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! ;-))
@எல் கே
Gud LK ;-)
@A.R.RAJAGOPALAN
மனமார்ந்த பாராட்டுக்கு நன்றிகள் பல கோப்லி. ;-))
@பத்மநாபன்
இருவரியில் கமென்ட்டில் பதிவெழுத உங்களால் மட்டுமே முடியும் பத்துஜி. ;-))
@raji
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போட்டேன். ;-)) தொடர் பதிவு எழுதுகிறேன். ;-)
@angelin
கருத்துக்கு நன்றி. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? அடிக்கடி வாங்க சகோ. ;-)))
@Reggie J.
நிச்சயம் தாக்குப் பிடித்திருப்பார்கள். அப்பப்போ டி, டிபன், சாப்பாடு என்று வயிற்ருக்கு இறக்கிக் கொண்டே இருந்தார்கள். ;-))
@ஸ்ரீராம்.
மூன்று ஓட்டு போட்ட ஸ்ரீராம் வாழ்க. ;-))
@இளங்கோ
;-) ;-) ;-) ;-)
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
நன்றிங்க மேடம். உங்களது வாக்கு என் வாக்கை மேம்படச் செய்யட்டும். ;-))
@! சிவகுமார் !
SUN டே? உங்களோட நுண்ணரசியல் தாங்க முடியலை சிவா! எனக்கு பயமா இருக்கு.. ;-))
@! சிவகுமார் !
ஆமாம்.. பேனர் எழுதற ஆளுக்கு எவ்ளோ கொடுக்கறாங்க? ;-))
நீங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி ஓட்டளித்து, சூட்டோடு சூடாய் சுவையான பதிவாக்கி கலக்கி விட்டீர்கள். தாமதத்துக்கு ஸாரிங்க!
@! சிவகுமார் !
உஷ்... அடுத்ததா அவங்களும் ஏதாவது கட்சியில கொ.ப.செவா சேர்ந்துடப் போறாங்கா.. அப்ப நீங்க நினச்சது நடக்கும். ;-))
@geetha santhanam
நன்றி மேடம். ;-))
@தக்குடு
கோந்தே... பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-))
@Madhavan Srinivasagopalan
மாதவா... உனது ஓட்டுகளுக்கு மிக்க நன்றி. ;;-)
@மாதேவி
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.. ஓட்டுக்கும்தான்.. ;-))
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
Thank you Sir!! ;-)
@சுந்தர்ஜி
மிக்க நன்றி ஜி! ஒரு நான்கு நாட்கள் தொடர்பில் இல்லை. எல்லோரையும் படிக்கிறேன். ;-))
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க.. உங்களுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-))
@Madhavan Srinivasagopalan
ஒன்றும் இல்லை.. சைபர் ரூபாய் கொடுத்தார்கள். ;-))
@ஆனந்தி..
பாராட்டுக்கு நன்றிங்க.. முதல் வருகைக்கும் தான். இனிமேல் அடிக்கடி வாங்க சகோ. ;-))
@! சிவகுமார் !
ஹி..ஹி.. நீங்க பேசாட்டாலும் உங்க வாய் அரசியல் பேசுதுங்கோ.. ;-))
@பத்மநாபன்
வீட்டில் இடித்தது உமக்கு எப்படி தெரிந்தது... முக்காலமும் உணர்ந்த ஞானி நீங்கள் பத்துஜி. ;-))
@மோகன்ஜி
சாரிஎல்லாம் எதுக்குன்னா... நீங்க எப்ப படிச்சாலும் எனக்கு மகிழ்ச்சியே... ரொம்ப நன்றி.. ;-)))
@ RVS anna - //வீட்டில் இடித்தது உமக்கு எப்படி தெரிந்தது// மைனர்வாள், நீங்க பிட்டுக்கு மண் சுமந்தவர் மாதிரி அண்ணா, உங்களை மன்னைல இடிச்சா தோஹால, சவுதில எல்லா இடத்துலையும் உணரப்படும்...:)
குறிப்பு - நான் சொன்னது சாப்பிடும் பிட்டு மட்டுமே!..:PP
//குறிப்பு - நான் சொன்னது சாப்பிடும் பிட்டு மட்டுமே!..:PP//
குறிப்பால் உணர்த்துவதில் கில்லாடி தக்குடு நீ ......
@தக்குடு
ஹா.ஹா... பிட் மற்றும் அடித்தல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது தக்குடு. நான் ஒரு அப்பிராணி. பிட் என்றால் என்ன? புட்டு தெரியும் பிட்டு தெரியாது? எனக்கு தெல்லேது... (அடாடா... ஒரு கமென்ட் போட முடியலையே.. சுத்தி சுத்தி வார்றாங்கப்பா... ) ;-)
@பத்மநாபன்
Bit குறிப்பறிந்தேன். ;-))
Post a Comment