இருபது முப்பது வினாடிகளில் ஒரு நாட் வைத்து மக்களை அடையவேண்டிய விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்வது என்பது ஒரு செயற்கரிய கலை. பார்த்த பின்பும் மனதிற்குள் திரும்ப திரும்ப ஓடுவதுபோல வெகுஜன ரசனைக்கு விளம்பரப் படம் எடுப்பது நிச்சயமாக பாராட்டப் படவேண்டிய செயல். ஊரில் விளம்பர கம்பனி ஒன்று ஆரம்பிக்கும் ஆர்வத்தில் இருந்த ஆர்வலர் ஒருவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. நான் லொடலொடவென்று வாயால் ஏதாவது சொல்லி வைக்க பிடித்தால் உபயோகப்படுத்தலாம் என்று உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்க்கொட்டையாய் அவர்களோடு சேர்த்து வைத்துக்கொண்டார்கள். ஒரு உணவு விடுதியில் புதிதாக ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்று திறந்தார்கள். அதற்க்கு அவர்கள் ஒரு நோட்டீஸ் விளம்பரம் வடிவமைத்து கேட்டதற்கு "ஐஸ்வர்யா ராய்க்கு பிடித்தது உங்கள் பாட்டிக்கும் பிடிக்கும்" என்று ஐஸ்க்ரீம் படம் போட்டு ஐஸ்வர்யாவையும் போட்டு கீழே அந்த வாசகம் வைத்து விளம்பரம் செய்து கொடுத்தோம். ஹோட்டல்காரர் நன்றாக இருந்தது என்று பாராட்டினார். இதை இங்கே சொன்னதால் எனக்கு ஒரு சீப் பப்ளிசிட்டி ஆகிவிட்டது. எழுதுவதற்கு நேரமும் காலமும் சரியாக அமையாத காரணத்தினால் நான் ரசித்த இரண்டு விளம்பர வீடியோக்களை இங்கே சேர்த்திருக்கிறேன். கண்டு ரசியுங்கள்.
பாஸ்தான் தெய்வம். சொன்ன சொல் வேத வாக்கு. இந்த மூலமந்திரத்தை நன்கு அறிந்த கார்பொரேட் சகாக்கள் குழுமிய மீட்டிங் ஒன்றில் நடப்பது போல எடுத்திருக்கும் இந்த விளம்பரம் டாப் க்ளாஸ். இவர்களின் இச்செயல் கண்டு அயர்ந்து போய் போர்டு அழிக்கும் பாஸ் காட்டும் முகபாவங்கள் எழுத்தில் வடிக்க முடியாதது.
கேடில் விழுச்செல்வம் கல்வி ...
அறிவொளி இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்த போது மன்னையின் விளிம்புகளுக்கு சென்று அரிச்சுவடி பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சமூகத் தொண்டிற்கு நற்சான்றிதழ் கூட கொடுத்தார்கள். மீரா டீச்சர் தான் எங்களுக்கு கோஆர்டினேடர். ஒவ்வொரு சனி ஞாயிறும் மேலவீதி வெஸ்டர்ன் தொடக்கப் பள்ளியில் கூடுவோம். கீழ்கண்ட விளம்பர வீடியோ பார்க்கும் போது எல்லோரும் கல்வியறிவு பெற இன்னும் எவ்வளவு அறிவொளி இயக்கங்கள் தேவைப்படும் என்ற எண்ணம் எழுந்தது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் களைய உதவுவது கல்வி மட்டுமே.
கடைசியாய் ஒரு வெளம்பரம்...
தலைப்பு வெளம்பரம்ன்னு போட்டுட்டு இந்தக் காமடி போடலன்னா இந்தப் பதிவு நிறைவு பெறாது. இவுரு ஊதறதும் அந்தப் பொண்ணு ஆடறதையும் பார்க்கறப்போ தில்லானா மோகனாம்பாள்ல..
ரசித்த உள்ளங்களுக்கு நன்றி.
-
34 comments:
முதல் விளம்பரம் நன்று. இரண்டாவது மனதைத் தொட்டது. மூன்றாவது யாருக்கு விளம்பரம்? நல்ல காமெடி! பகிர்வுக்கு நன்றி.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
www.venkatnagaraj.blogspot.com
www.rasithapaadal.blogspot.com
ஐஸ் விளம்பரம் ஜில்லுன்னு இருக்கு :))
அருமையான விளம்பரங்கள் அண்ணே!
அந்தக் கரகாட்டக்காரன் வெளம்பரம் எப்பவும் செம தான் :)
முதல் இரண்டு விளம்பரங்களும் தந்து, மூன்றாவதாக ஒரு விளம்பரம் போட்டிருக்கிறீர்கள் பாருங்கள் .. அது அக்மார்க் தஞ்சாவூர் குசும்பு....
முதல் படம் பார்த்ததில்லை. ரெண்டாவதும், கடைசியும் பார்த்திருக்கிறேன்.
நன்றிங்க.
கேடில் விழிச்செல்வம் கல்வி// அந்த கண்ணொளியில் அந்த சிறுவன் அந்த ஆங்கில வார்த்தையை படிக்க முடியாமல் தலையை சொரியும்போது என்னையறியாமல் என் கண்ணில் கண்ணீர் நிறைந்துவிட்டது. அருமையான நடிப்பு மற்றும் கருத்து.
முதல் விளம்பரம் புன்னகைக்க வைக்கிறது.
இரண்டாவது விளம்பரம் அழகு. வார்த்தைகள் 'நச்'. எந்த மீரா டீச்சர்?
கடைசி விளம்பரம் க்ளாஸ்...
@வெங்கட் நாகராஜ்
காமெடி + கருத்து = இந்தப் பதிவு. சரியா காபிடல் வெங்கட் நாககிங்.
கருத்துக்கு நன்றி. ;-)
@சைவகொத்துப்பரோட்டா
சொல்லுங்க உங்க கடைக்கும் ஒரு வெளம்பரம் தயார் பண்ணிடுவோம். ;-)
@Balaji saravana
அதுல சொக்கிப் போய் தான் தலைப்பே வெளம்பரம்ன்னு வச்சேன்.. ;-)
@கே.ஆர்.பி.செந்தில்
(தஞ்சாவூர்க் குசும்பு) நம்ம ஜில்லா ஆட்களுக்கு இதெல்லாம் ஜகஜம் தானே செந்தில்!!!
கருத்துக்கு நன்றி. ;-)
@இளங்கோ
நன்றி இளங்கோ. ;-)
@இனியவன்
எனக்கும் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு தான் இனியவன். பெயருக்கு ஏற்றாற்போல் மிகவும் இனிமையாக இருக்கிறீர்கள். கருத்துக்கு நன்றி. ;-)
விழுச் செல்வம் = சிறந்த செல்வம், அழிவில்லாத செல்வம்.
@ஸ்ரீராம்.
கோபாலசமுத்திரம் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவர். எங்கள் தெருவிற்கு பின்னால் பிருந்தாவன் நகரில் இருந்தவர் மீரா டீச்சர். என் அக்காவிற்கு ஆசிரியையாக இருந்தவர். அவர் வீட்டில் உட்கார்ந்து கழித்த காலங்களும் உண்டு. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம் சார்! ;-)
@அன்பரசன்
அது என்னிக்குமே க்ளாஸ். வருங்கால சந்ததியினர் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய வெளம்பரம். ;-)
முதல் விளம்பரம் சிரிக்கவும், இரண்டாவது சிந்திக்கவும் வைத்தது! மூன்றாவது, நினைத்தாலே சிரிக்கலாம்!!
//கே.ஆர்.பி.செந்தில் said...
முதல் இரண்டு விளம்பரங்களும் தந்து, மூன்றாவதாக ஒரு விளம்பரம் போட்டிருக்கிறீர்கள் பாருங்கள் .. அது அக்மார்க் தஞ்சாவூர் குசும்பு....//
என் வலைப்பூவின் தலைப்பை விளம்பரப்படுத்தியதற்கு நன்றி, மாப்ள!!
@தஞ்சாவூரான்
நன்றி தஞ்சாவூரான். ;-)
அண்ணா விளம்பரங்கள் அசத்தல் இரண்டாவது
இன்னும் மாறவில்லையே
நம்மண்ணில் பள்ளிபருவமதில்
புத்தக சுமைக்கு பதிலாக
குடும்ப சுமை சுமக்கும்
சின்னஞ்சிறு நெஞ்சங்களின்
சோகங்கள் ...................
அருமை.
ரகு
முதல் விளம்பரம் நல்ல கற்பனையுடன் கூடிய நகைச்சுவை.
இரண்டாவது அனைவரும் கட்டாயம் உணர்ந்து முயற்சி எடுக்க வேண்டியது.
மூன்றாவது ரசித்தது என்றாலும் இப்பதிவிற்கு பொருத்தமே
நான் விளம்பரங்களை வைத்து ஒரு பதிவுக்கு தயாரித்திருந்தேன்...அதுக்குள் உங்களிடமிருந்து பதிவு...
வலைச்சிக்கலில் இன்னமும் முழுமையாக பார்க்கமுடியவில்லை.வலை நடுநிசியில் பார்க்க விடும்...
அதற்குள்....
அறிவொளி போன்ற சமுக நல்லியக்கங்களை பங்கு பெற்ற சேவை உண்மையில் மகத்தானது... பாராட்டுகள் வாழ்த்துக்கள்...
@dineshkumar
கொடுமைதான் தினேஷ். பல நாட்கள் நானும் மனம் விம்மியதுண்டு. ;-(
@ரகு
நன்றி சார்! ;-)
@raji
மூன்றாவது தான் இப்பதிவின் தலைப்பே ராஜி! முதல் விளம்பரம் ஜோக்காக இருந்தாலும் இக்காலத்தில் நடக்கு நிதர்சனமான உண்மை. இரண்டாவது நம் புத்திக்குள் ஏற வேண்டிய ஒன்று.
கருத்துக்கு நன்றி ;-)
@பத்மநாபன்
பாராட்டுக்கு நன்றி பத்துஜி ;-)
உங்கள் வலைப்பூவில் பின்னூட்டத்தில் அலசல் பிரமாதமா இருக்கு. அசடாட்டம் எதுவும் சொல்லவேண்டாம் என்று உள்ளே வரவில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் சொல்லுங்கள் வந்து ஒரு சீரியஸ் ஊடு கட்டுகிறேன். ;-)
ரொம்ப நல்லா சிரிச்சேன்! very nice!
great!
நீங்க அசடா.... வெவர கொழுந்து ... வூடு, பங்களா அளவுக்கு கட்டுவீங்க...
வாங்க கருத்த எடுத்து விடுங்க..
சிந்தனாவதி அப்பாஜிகிட்ட நம்ம பாட்சா பலிக்கறது கஷ்டம் ..அந்த பொருள் அப்படி... பரந்த விஷயம் ... காற்றில் கத்தி வீசிட்டிருக்கோம்..
அவங்கவங்க முயலுக்கு மூணு கால்....
@Anonymous
சிரித்த அனானிக்கு ஒரு ஓ போட்டுக்குறேன். நன்றி ;-)
@எஸ்.கே
Thanks!! ;-)
@பத்மநாபன்
தர்க்கமா பேசறதை விட குதர்க்கமா பேசியே பழக்கப் பட்டாச்சு. சரி வந்து பார்க்கறேன். நன்றி பத்துஜி ;-)
சூப்பர்.. கலக்கல் போஸ்ட்..
// மேலவீதி //
மேலராஜ வீதி
அடிச்சு வுடுங்க RVS.. இதானே வேணாங்கறது?
Post a Comment