Sunday, December 12, 2010

ரஜினி - தி மானேஜ்மென்ட் குரு

ஒரு நாள் தெருவில் ஒரே கோலாகலமாக இருந்தது. விழாக்கோலம் பூண்டிருந்தது. வழக்கம் போல் சைக்கிளை கொண்டு போய் குட்டிச் சுவற்றில் சாய்த்துவிட்டு, ஏதோ கெட்டால் குட்டிச் சுவரு போல நானும் போய் உட்கார்ந்துகொண்டேன். அப்பு மிகவும் குதூகலமாக இங்குமங்கும் சர்க்கஸில் வருவது போல சுழன்று வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்வமாக அவனை நெருங்கி "என்னடா? என்ன விசேஷம். தெருவையே ரெண்டு பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்ற விசாரிப்புக்கு சொன்ன பதிலில் தான் உறைந்து போய் சிரித்தேன். என்ன பதிலா? "இன்னிக்கி 'படிக்காதவன்' ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறோம்." என்றான். பிளந்த வாயை மூட முடியாமல் சிரிக்க வைத்தான். "நீங்கெல்லாம் படிச்சிகிட்டு தானே இருக்கீங்க?" என்று கேட்டதற்கு முறைத்துக் கொண்டு ஓடிவிட்டான். ரஜினி பஞ்சு என்று ஒரு நண்பன். சென்னைக்கு வந்து ரஜினி இவன் தோளில் கை போட்டு சிரிப்பது மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு ஊரில் வந்து இறங்கிவிட்டான். ரஜினி ஆசி பெற்று வந்தவன் அங்கிருந்த ரஜினி ரசிகர்களுக்கு அருளாசி வழங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டான்.

முதலில் ஒரு ரஜினி படம்.


இன்று ரஜினியின் பிறந்தநாள். திரையுலக சூப்பர் ஸ்டாருக்கு ஒரு பதிவெழுதுவது வலையுலக நியதி என்று பதிவுலக பின்னூட்ட சூப்பர் ஸ்டார் "ஆனந்த வாசிப்பு" பத்மநாபன் அன்புக் கட்டளையாக பின்னூட்டியிருந்தார். அதற்காக இதோ பிடியுங்கள் இந்த சிறப்பு பதிவை. சில வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் ரஜினியின் பட வசனங்களில் இருந்து மிகவும் உபயோகமாக மேலாண்மை பாடங்கள் சிலது நாட்டு மக்களுக்கு எடுத்திருந்தார்கள். இங்கே கீழிருப்பது என்னுடைய சிறிய சொந்த முயற்சி.


பீட்டர் ட்ரக்கருக்கு பாடம் எடுத்த ரஜினியின் புகழ்பெற்ற சில வசனங்கள் கீழே.


இது எப்டி இருக்கு?
வாழ்க்கையிலோ ஆபீசிலோ எந்த ஒரு வேலையையும் செய்து முடித்துவிட்டு பெரியோரோ சிறியோரோ "இது எப்டி இருக்கு?" என்று ஒரு ஒபினியன் கேட்பது ரொம்ப அவசியம். அப்படி சக தொழிலாளிகளிடமும் ஊழியர்களிடமும் கேட்கும்போது அவர்களும் உள்ளம் குளிர்ந்து தங்களது வேளைகளில் கர்மசிரத்தையுடன் ஆத்மசுத்தியோடு ஐக்கியமாகி அணி உணர்வு மேலோங்கி கம்பனி லாபத்தில் தழைக்க வழி செய்கிறது.

சொல்றான், செய்யறான்
மேனேஜ்மென்ட் சொல்றதை ஏன் என்னன்னு புரட்சித்தனமா எதிர் கேள்வி கேட்காம கடமை உணர்ச்சியோட வேலை செய்யறவன் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வருவான்னு சொல்றார். ஆபீசில் நமக்கெல்லாம் தலைவராக இருப்பவர் எது சொன்னாலும் சிரமேற்க்கொண்டு "சொல்றான், செய்யறான்" என்று செய்து முடிப்பவர்கள் அலுவலகத்தில் சுலபத்தில் பல படி முன்னேறி பல ப்ரோமோஷன்கள் பெற்று வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ்வார்கள்.

உன் வாழ்க்கை உன் கையில்
எந்த ஒரு லீகல் மற்றும் ஆபிஸ் காண்ட்ராக்ட் போன்ற முக்கியமான மேட்டரிலும் பார்த்து ஜாக்கிரதையாக நிதானமாக ஒன்றி படித்து கவனமாக கையெழுத்து போடவும். இல்லையேல் ஆபத்தில் மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும்படி கூட ஆகலாம். அதற்குத்தான் உன் வாழ்க்கை உன் கையில் என்ற மிகப்பெரும் தத்துவ உபதேசம் உதவுகிறது.

என் வழி தனி வழி
நமக்கிட்ட எந்த ஒரு பணியையும் வித்தியாசமாக செய்வதற்கு முயற்ச்சிக்க வேண்டும். ஒரு சிந்தனா சிற்பியாக முழுமூச்சோடு ஈடுபட்டு காரியத்தில் வெற்றி கொள்ள வேண்டும். அப்படி செய்யும் வேலைகள் நமக்கு பெருமை தேடித்தருவதோடு அலுவலகத்திலும் நம்முடைய மதிப்பும் உயரும். 

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி 
இது பாஸ்களுக்காக சொல்லப்பட்ட திருவாசகம். அதிகாரிகள் அவர்களுடைய கட்டளையை ஒரே ஒரு முறை தன் கீழ் வேலை பார்க்கும் செல்வங்களுக்குச் சொன்னாலே நூறு முறை சொன்னது போன்று புரியும்படி அருள வேண்டும். எல்லா கார்பொரேட் அலுவலகங்களும் இதுபோன்ற உயரதிகாரியை நியமித்தால் எடுத்த எல்லா காரியத்திலும் வெற்றி நிச்சயம். நிறைய திட்டப்பணிகள் சரியான கம்யூனிகேஷன் இல்லாமல் தான் தோல்வி அடைகிறது.

நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்
ஒரு திட்டப்பணியை எவ்வளவு லேட்டாக வேண்டுமானாலும் செய்து முடிக்கலாம், ஆனால் அதை முடிக்கும் பொழுது மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கோமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அந்த காரியத்தில் ஜெயம் நமக்குதான். (யாருப்பா அது.. ஜெயம்ன்னா யார் சார்ன்னு கேக்கறது...)

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
கம்பனியின் முதலாளி நாம் ஒழுங்காக வேலை செய்கிறோமா என்று பார்ப்பதற்கு முன்னறிப்பு எதுவுமின்றி சிங்கிளாக சடாரென்று தாவி கம்பனி உள்ளே சிங்கமாக நுழைவார். கம்பனி போனில் மணிக்கணக்காக கடலை போடுவோர் கையும் களவுமாக ஃபோனும் வாயுமாக பிடிபடுவர். ரஜினியின் இந்த அறிவுரை இளசுகளுக்கு மிகவும் முக்கியமான மந்திரம் இது.


அசந்தா அடிக்கறது உங்க ஸ்டைல் அசராம அடிக்கறது என் ஸ்டைல்
இது டேட்டாஎன்ட்ரிகாரர்களுக்காக சொன்ன பஞ்ச் டயலாக். பக்கத்தில் இருக்கும் பிகரோடு கடலை போட்டு வாய் அசந்தா அதற்க்கு அப்புறம் டேட்டா என்ட்டர் பண்ணுவதை வழக்கமாக கொண்ட கடலை வறுக்கும் கும்பலுக்கு மத்தியில் யாரோடும் வாயாடாமல் அயராமல் அசங்காமல் டைப் அடித்து வாழ்க்கையில் முன்னேற சொல்கிறார்.

பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் ஒன், டூ, த்ரீ...
எந்த ஒரு வேலையையும் அந்தந்த சமயத்தில் வேளை மாறாமல் முடிக்கவேண்டும். ஒரு கால அவகாசம் நிர்ணயம் செய்து அதை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி அந்த காலக்கிரமத்திர்க்குள் முடிக்கிறார்களா என்று மீட்டிங் மேலே மீட்டிங் போட்டு கைசொடுக்கி எண்ணிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த வேலை உருப்படும். பசங்களை வேலை செய்யவிட்டுக் கவுண்ட்டிங் ஸ்டார்ட் செய்து எண்ணி முடித்து எண்ணியவண்ணம் செயல் முடிக்க சொல்கிறார்.

ஜுஜுபி 
வேலையில் மிகவும் டென்ஷனான நேரங்களில் "ஜுஜுபி" என்ற தாரக மந்திரத்தை பதினெட்டு  முறை உச்சாடனம் செய்ய வேலைப் பரபரப்பு படிப்படியாகக் குறைந்து மக்களுக்கு சாந்தம் உண்டாகும். அமைதியாக உணர்வார்கள். கார்பொரேட் கம்பனிகளில் பொது மேலாளர் நிலையில் இருக்கும் உயர் அதிகாரிகள் காலையிலும் மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் மூக்கை பிடித்து இதை சொல்லும்போது அவர்கள் புத்துணர்வு பெறுகிறார்கள் என்று மத்திய மனித வள மேம்பாடு ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பின் குறிப்பு:
ரஜினி பக்தர்களின் கவனத்திற்கு. இது கிண்டலாக எழுதப்பட்ட பதிவு இல்லை. வித்தியாசமாக எழுதப்பட்டது அவ்வளவே.  சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பட உதவி: www.ndtv.com

-

35 comments:

பொன் மாலை பொழுது said...

பதிவும் சும்மா அதிருதுல்ல?.....அது !

balutanjore said...

dear rvs

idhu romba nallave irukku

parattukkal

(amam neengal edhavadhu pozhippurai konar notes madhiri podalame?)

balu vellore

வேழமுகன் said...

nice :)

ஸ்ரீராம். said...

நல்லாருக்கு....

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி...!

பத்மநாபன் said...

இந்த ஜுஜூபி பதிவனின் பின்னூட்டத்தையும் மதித்து வித்தியாசமான சூப்பர் பதிவுக்கு நன்றி ..பாராட்டு... நண்பன்..( ஒரிஜனல் தளபதி ஸ்டைலில் ).

சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் களை எடுத்து மேலாண்மையில் ஒட்டவைத்தது சூப்பர் ..கையோட உங்க பொறியாளர்களுக்கு மெசஜ் வச்ச மாதிரியும் இருக்கு ..ஒழுங்கா இதை படிச்சு வேலை செஞ்சாங்கன்னா ,தப்பிச்சாங்க இல்லாட்டி பாபா கௌண்டிங் ஸ்டார்ட்டுன்னு சொல்லிருவிங்க போல..

செளந்தர்யா கல்யாணத்துக்கு உங்களுக்கு அழைப்பு வந்தது போல் அவரது மணிவிழாவிற்கும் அழைப்பு வந்திருக்குமே....

ரஜினி , சச்சினெல்லாம் இளைநர்களின் சுறுசுறுப்பு ஹார்மோன் சுரக்க வைப்பவர்கள்....
ஸ்டைல் மன்னன் வாழ்க பல்லாண்டு.

( யூட்டியில் இருந்து ஒரு பாட்டு கூட கிழிறக்காமல் இப்பதிவு போட்டதற்கு மா. ந. வழக்கு போட யூட்டி நிர்வாகம் ஆலோசனையில் உள்ளது )

RVS said...

கக்கு - மாணிக்கம்
வாழ்த்துக்கு நன்றி மாணிக்கம். இன்னும் நாலைந்து பஞ்ச் டயலாகுக்கு எழுதலாம் என்று நினைத்தேன். பதிவு ரொம்ப நீளமாய்டும் என்ற பயத்தில் அடக்கி வாசித்து முடித்துக்கொண்டேன். ;-)

RVS said...

@balutanjore
நன்றி பாலு சார்!
நான் உரை போட்டால் அது தீ.வி.பி உரை.. ஹி.. ஹி.. ;-)

RVS said...

@வேழமுகன்
மொதோ முறையா எட்டிப் பார்த்திருக்கீங்க. ரஜினி உங்களை கொண்டு வந்துட்டாரா? அடிக்கடி வாங்க.. இப்படி ஒத்தை வார்த்தையில் எல்லாம் பேசக்கூடாது. நம்ம சைட் கமேன்ட்டேலாம் படிச்சீங்க இல்ல. கமெண்டுகள் கூட ஒரு பதிவு மாதிரி இருக்கும். ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நூறு தடவையும் பாராட்டை பெற்றுக்கொண்டேன். நன்றி ஸ்ரீராம். ;-)

Varadharajan K said...

Nice post. Creative Thinking I should say. Beauty lies in the eyes of the beholder. Congrats on this post!!!

RVS said...

@பத்மநாபன்
எங்கள் தளபதி எப்போதும் ஸ்டைலாகத்தான் சொல்வார் என்று எங்களுக்கு தெரியும்.

//கையோட உங்க பொறியாளர்களுக்கு மெசஜ் வச்ச மாதிரியும் இருக்கு//
ரொம்ப கரெக்ட்டு.
//.ஒழுங்கா இதை படிச்சு வேலை செஞ்சாங்கன்னா ,தப்பிச்சாங்க இல்லாட்டி பாபா கௌண்டிங் ஸ்டார்ட்டுன்னு சொல்லிருவிங்க போல..//
நம்மளை சுத்தி இருக்குற கூட்டம் அன்பால கூட்டினது... அந்தமாதிரி எல்லாம் வேலை வைக்க மாட்டாங்க...

//செளந்தர்யா கல்யாணத்துக்கு உங்களுக்கு அழைப்பு வந்தது போல் அவரது மணிவிழாவிற்கும் அழைப்பு வந்திருக்குமே....//
இல்லை பத்துஜி. நாம அவ்ளோ பெரிய ஆள் இல்லை. (மணிவிழா கொண்டாடினாரா என்ன? )

//( யூட்டியில் இருந்து ஒரு பாட்டு கூட கிழிறக்காமல் இப்பதிவு போட்டதற்கு மா. ந. வழக்கு போட யூட்டி நிர்வாகம் ஆலோசனையில் உள்ளது )// ஒரு முறை வித்தியாசமா முயற்சி செய்து பார்க்கலாம்ன்னு தான்... நல்லா இருந்ததா இல்லையா?
(அப்படியும் அந்த ரஜினி-கேஸ்ட்ரால் விளம்பரம் யூட்டி தான் ;-) )

Varadharajan K said...

I am happy to read this post especially after all the recent sickening Rajni jokes(teasing him) and in bad taste. Hope this turns the trend. Let your tribe live long....

RVS said...

@Varadharajan K
Thank You Mr. Varadharajan. I think you are entering into my site for first time. Pl. do visit regularly.. I wish to give variety to my readers.
( To your ears only... I am learning to write in tamil....really... belive me...)
Thanks for your comment. ;-) ;-)

RVS said...

@Varadharajan K
Thanks Varadh. !!! ;-)

மோகன்ஜி said...

ரொம்ப புத்திசாலித்தனமாக யோசித்திருக்கிறீர்கள்! அடுத்து வடிவேலு டயலாக்கில் இன்றைய அரசியல் குழப்பங்களை கொளுத்திப் போடுங்களேன்! இந்தப் பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் போது,தொலைபேசிய ரஜினி பக்தனான ஒரு தெலுங்கு நண்பருக்கு, அதே தெலுகு டப்பிங் டயலாக்குகளில் மொழிமாற்றி, முதல் நாலை சொல்லுவதற்குள் நாக்கு தள்ளி விட்டது.ரொம்ப ரசித்தார் அந்த
எம்.பி .ஏ!
அடுத்து வடிவேலு டயலாக்கில் இன்றைய அரசியல் குழப்பங்களை கொளுத்திப் போடுங்களேன்!

பத்மநாபன் said...

//(அப்படியும் அந்த ரஜினி-கேஸ்ட்ரால் விளம்பரம் யூட்டி தான் ;-) ) // அதனால தப்புச்சிட்டிங்க கேஸ் போடலைன்ட்டாங்க...
மணி விழா குடும்பத்துக்குள் நடத்தியிருக்கார்கள்...இலங்கை பதிவர் போட்டிருந்தார் -இப்ப சிக்க மாட்டிங்குது....
மோகன்ஜி யின் வேண்டுகோளை வழிமொழிகிறேன்...கருப்பு நாகேஷின் அலப்பறையை அரசியலாக்கி அலாசுங்கள்..( நேரம் கிடைக்கும் பொழுது - உங்க கற்பனைச்சிறப்பு நேயர் விருப்பமாக மாறிவருகிறது )
சில எடுத்து கொடுப்புகள்:
வட்டச்செயலாளர் வண்டுமுருகன்....

பிச்சுமணிக்கு கிடைத்த அரசு வேலை,

( இசைரசிகராகிய உங்களை என் பின்னுட்டத்தில் கும்மிக்கு ஐயப்பரோடு உங்களையும் அழைத்துள்ளேன் )

RVS said...

@மோகன்ஜி
ஏதேது... தெலுகுல துபாஷித்திட்டீங்களா!!! சரி சரி...
வடிவேலு..... முயற்சி பண்றேன்....... யாராவது ஆட்டோ அனுப்பிட்டா... துணிந்தவனுக்கு கொலையுலகமும் வலையுலகம்.. ரைட்...ரைட்... ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி எடுத்து கொடுப்புகள் அமர்க்களம்...
கூடிய சீக்கிரம் எழுத வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது.. முயற்சிக்கிறேன்... நன்றி ;-)

வெங்கட் நாகராஜ் said...

தலைவர் சொல்ல வரத சரியா புரிஞ்சிக்கிட்ட முதல் ஆள் நீங்கதான்! :)

எங்கயோ உசுப்பேத்தி விடறா மாதிரி இருக்குன்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பு இல்லை :))))

தக்குடு said...

குடுத்த வாக்கையும் குடுத்த பொருளையும் திருப்பி வாங்கர பழக்கம் இல்லாத நம்ப பாசத்துக்குரிய RVS அண்ணாவோட பதிவு சூப்பர்!!...:)

@ பத்துஜி - உசுப்பேத்தி! உசுப்பேத்தி! உடம்பை ரணகளமாக்குவது எப்படி?னு ஒரு புஸ்தகம் எழுதலாம்...:))

Chitra said...

Super! Cool! Good ones! :-))

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு:))

கிறுக்கன் said...

Think positive attitude...
Super!!!

-
கிறுக்கன்

Madhavan Srinivasagopalan said...

நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு..

நானும்தான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி...!

ADHI VENKAT said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இளங்கோ said...

சூப்பர் ஸ்டாருன்னு சொன்னா சும்மாவா? :)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
சரி... சரி.. நிஜமாகவே ரஜினியின் பஞ்ச்களை வைத்து எம்.பி.ஏ விற்கு கிளாஸ் எடுக்கிறார்களாம். ;-)

RVS said...

@தக்குடுபாண்டி
பாராட்டுரை வழங்கிய பாசக்கார பயபுள்ள தக்குடுவுக்கு நன்றி. உடம்பே ரணகளம் ஆனாக் கூட எழுதுவோம்ல... ;-)

RVS said...

@Chitra

Thank You Chitra!! ;-)

RVS said...

@வித்யா
நன்றி. என்னங்க ஒரே வார்த்தையில சொல்லிடீங்க.. ;-)

RVS said...

@கிறுக்கன்
நான் கிறுக்கியதை ரசித்த கிறுக்கனுக்கு நன்றி ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி நூறு தடவை மாதவா... ;-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றிறி றி றி றி றி றி றி.... ;-)

RVS said...

@இளங்கோ
கரெக்டுதான்.. இளங்கோன்னா கும்மாதான்.. ;-)

ADHI VENKAT said...

தென்குடித்திட்டை பதிவு -

http://kovai2delhi.blogspot.com/2010/12/blog-post_13.html

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails