எங்கெங்கு காணினும் அலைகளடா என்று கற்றை கற்றையாக ராஜாங்க விஷயங்கள் காற்றிலும், பேப்பரிலும் நாடெங்கும் அக்கு அக்காக பிரித்து மேய்ந்து பேசி அலசி ஆராய்ந்து வரும் இவ்வேளையில் இந்த திண்ணைக் கச்சேரியின் மற்றுமொரு எடிஷன் இங்கே. "அலோ அலோ...லோ... யார் பேசறது... ஒன்னும் கேக்கலை.. ஒன்னும் கேக்கலையா..." என்று செல்லை இங்க் தீர்ந்து போன பேனா போல உதறிவிட்டு "ஏன் சார் யார் பேசறதும் காதில உழமாட்டேங்குதே இது தான் லேட்டஸ்ட் ஊழலா..." என்று வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத ஒரு அப்பாவி மற்றொருவரிடம் தன் "சொல் கேக்கா செல்" காட்டி ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தார்.
*************** ஷா **************
நண்பர் மோகன்ஜி திகட்ட திகட்ட 'ஜா' எழுதச் சொல்லி நான் அதை தனியாக ஜாலிலோ ஜிம்கானா என்று பதிவெழுதி ஜகரக் கும்மி அடித்தது எல்லோரும் அறிந்த விஷயம். கோபி அடுத்தது ஷகரம் கேட்கிறார். தினமும் கல்யாண சாப்பாடு மக்களுக்கு அஜீரணம் ஆகிவிடும் என்பதால் கொஞ்ச நாள் பொறு தலைவா! அப்புறம் வேறு பாஷையில் கலக்கலாம். இதுவல்லாமல் நண்பர் ஒருவரிடம் மொக்கை போட்டு பேசிக்கொண்டு இருக்கும் போது இது போல வடசொற்கள்/எழுத்துக்கள் தமிழோடு கலப்புமணம் புரிவது பற்றியும் அதை எதிர்ப்போரும் பற்றி ஒரு ஜோக் (க)அடித்தார்.
தீவிர தமிழ் பக்தர்கள் சிலர் வட சொல் கலக்காமல் எழுத வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஒருமுறை அவர்கள் பேட்டைக்கு வரும் மேதகு ஆளுநரை கீழ் கண்டவாறு ஆளுயர பேனர் வைத்து வரவேற்றார்களாம்.
"அன்பிற்கினிய சாவை வருக வருகவென்று வரவேற்கிறோம்"
பாஷை தெரியாத ஷா விற்கு இது ஒன்றும் ஷாக்கிங்கா இருக்காது. ரைட்டா?
********** சென்னையில் பதுங்கு குழிகள் ************
மழை சமயத்தில் ரெட் ஹில்ஸ் பக்கம் கடலும் ரோடும் சரசமாடிய இடம். |
பாதாளலோகத்தின் நுழைவாயில்? |
மழைத்தண்ணி, சாக்கடைத் தண்ணின்னு எங்களுக்கு வேற்றுமை பாராட்டத் தெரியாது. இந்த பஸ் ட்ரைவரை கண்ணை கட்டி கடல்ல உட்டா கூட ஓட்டுவாரு போலருக்கு. |
குழியில் விழுந்து
உடைகள் நனைந்து
உயிரை எடுத்த உறவே......
என்று ஒரு பாட்டெழுதி ரிடயர் ஆன "பா" வரிசை இயக்குனர்களை வைத்து "குழிகள் ஓய்வதில்லை" என்று படம் எடுக்கலாம். வரப்புயர வாழ்வுயரும் என்பது போல் ரோடுயர சென்னை உயரும். ரோட்சைடு ரோமியோக்களுக்கு இப்பள்ளங்களினால் பேராபத்து காத்திருக்கிறது. தலை சுளுக்கும் வரை திருப்பி பிகர் வெட்டும் போது மழை வெட்டிய பள்ளத்தில் விழுந்து முகத்தை பேத்துக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இரண்டு ஆள் பதுங்கி பாரத யுத்தம் தொடுக்கும் அளவிற்கு சென்னையின் சாலைகள் பங்கர் குழிகளால் நிறைந்திருக்கிறது. மூன்றாவது கியர் மாற்றினாலே "மவனே..உனக்கு அவ்வளவு தெனாவட்டா... வா.. உன்னை வச்ச்சுக்கிறேன்" என்று கடகடா குடுகுடு நடுவிலே பள்ளம். மதம் பிடித்த யானையே துரத்தினாலும் இந்த ரோடில் ஓடினால் நாம் தப்பித்துக் கொள்ளலாம். மிகைப் படுத்தாமல் சொல்கிறேன் இன்று காலை இரண்டு சக்கர வாகனத்தில் போன ஒரு மத்திம வயது அன்பர் முன்சக்கரம் ஒரு புதைகுழியில் இறங்கி செங்குத்தாக அப்படியே கீழே விழுந்து வாரினார். சரி சில்லரை. இத்தனைக்கும் அவர் ஊர்ந்து தான் போனார். சட்டைப் பையில் இருந்து தெறித்து விழுந்த நோக்கியா மொபைல் அவர் நோக்கும் போதே ஒரு காரின் பின் சக்கரத்தில் அரை பட்டு சக்கையாகிப் போனது. கண்ணெதிரே நடந்த இந்த அவலத்தை யாரேனும் கட்சிப் பிரமுகர்கள் கழக கண்மணிகள் பார்த்தால் இலவச அலைபேசி திட்டம் ஒன்றை தயாரித்து அரசின் கஜானா காசைக் கரியாக்கலாம்.

******** உருளை சிப்ஸ் **********
ஜங்க் ஃபுட் என்று கெட்ட பெயர் சூட்டி இதை அழைத்தாலும் பொட்டிக்கடையில் இருந்து அடுக்குமாடி கட்டிடக் கடை வரை நீக்கமற நிறைந்து எங்கும் வியாபித்திருப்பது இந்த உருளை சிப்ஸ். Potato chips are omnipotent and omnipresence. தொட்டுக்க கரகர மொறுமொறுவென்று ரெண்டு சிப்ஸ் அள்ளிப் போட்டால் தன்னால நாலு பிடி சோறு அதிகமா உள்ளே போகுது. ஸ்கூல் வகுப்பறையில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டா குண்டாய்டுவே என்று அறிவுரை லெக்சர் கொடுத்தாலும் அதே பள்ளியின் கான்டீன் வாசலில் கலர் கலர் பாக்கெட்டுகளாக சிப்ஸ்ஸும் சீஸ் பால்சும் தோரணம் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். பட்டி தொட்டி, நாடு நகரம் என்ற வேறுபாடின்றி எல்லா பள்ளிகளிலும் இதே நிலைதான். எங்கு போனாலும் கரக். மொறுக்.
உருளைக்கிழங்குகள் மொத்தமே பதினைந்து நிமிடத்தில் புற அழுக்கு நீக்கி, சின்னதும் பெருதுமாய் சைஸ் பார்த்து ரகம் பிரித்து சீவி, மறுபடியும் கழுவி, 350 டிகிரியில் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் பொறித்து, கிராம் கிராமாக அளந்து பாக்கெட் அடித்து வெளியே வந்து விழுகிறது. பார்க்கும் போதே சாப்பிடவேண்டும் போல இருக்கிறது. நூறு கிராம் சிப்ஸ் எத்தனை நிமிடங்களில் நம்மால் கொறிக்கப்படுகிறது?
********** மடிசார் மாமிகள் ************
மடிசார் மாமிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் திருவாளர் தக்குடுபாண்டிக்காக இந்த கீழ் கண்ட பாடல் இங்கு ஸ்பெஷலாக வெளியிடப்படுகிறது. அப்படியே சுடிதார் மாமிகள் பற்றியும் ஆராய்ச்சி செய்து மாமியாராய்ச்சி மையத்தில் ஒரு தீசிஸ் சப்மிட் செய்யப் பணிக்கப்படுகிறார். இதற்க்கு மேலதிக தகவல்களுக்கு மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவி மடிசாருடன் வரும் காட்சிகளும், கண்ணடித்து கமலஹாசனின் (வக்கீல் யக்ஞ சுப்ரமணியம்) இடுப்பைக் கிள்ளும் கைவேலைகளையும் நன்றாக நாளைக்கு நாலு வேளை வீதம் பார்த்து மேலும் இந்தத் துறையில் துரை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
கடைசியாக கேட்ட ஜோக்:
கீழ் கண்ட இந்த வசனம் ஏதோ விளம்பரத்தில் வந்ததாக பேசிக்கொள்கிறார்கள்.
மனைவி ஆசையாக கணவனிடம் கொஞ்சும் வசனம் இது.
**************** மேல்கோட்டை **************
பெங்களூருவிலிருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மேல்கோட்டை யோக நரசிம்ஹர் கோயில் படங்கள் இவை. நெட்டில் பொறுக்கியவை. கிரடிட் கீழே கொடுத்துள்ளேன்.
கோயில்:
ஏறும் பாதை:
கலர் படம் கிடைத்த இடம் jithendrian.blogspot.com. கருப்பு வெள்ளை கண்டெடுத்த இடம் http://travel.paintedstork.com/
மழையும் மழை சார்ந்த குழிப் படங்களுக்கும் www.dinamani.com க்கு நன்றி.
-

"எனக்கு என் மாமியாரை பிடிக்கறதை விட உங்க மாமியாரைத்தான் ரொம்ப பிடிக்கும்"
பெங்களூருவிலிருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மேல்கோட்டை யோக நரசிம்ஹர் கோயில் படங்கள் இவை. நெட்டில் பொறுக்கியவை. கிரடிட் கீழே கொடுத்துள்ளேன்.
கோயில்:
ஏறும் பாதை:
கலர் படம் கிடைத்த இடம் jithendrian.blogspot.com. கருப்பு வெள்ளை கண்டெடுத்த இடம் http://travel.paintedstork.com/
மழையும் மழை சார்ந்த குழிப் படங்களுக்கும் www.dinamani.com க்கு நன்றி.
-
47 comments:
போட்டோக்கள் அருமை... தக்குடுபாண்டி குண்டல ஆராய்ச்சியில் இருந்து மடிசார் ஆராய்ச்சிக்கு எப்ப மாறினார் ??? திங்களும் செவ்வாயும் வண்டி ஓட்டி பத்திரமாக அலுவலகம் சென்று திரும்பியது அந்த கடவுளின் உதவியால்
பாதாள நுழைவாயில் பயங்கரமா இருக்கே. மொத்தக் கச்சேரியும் நல்லாத்தான் இருக்கு.
// 350 டிகிரியில் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் //
அந்தளவு டெம்பரேச்சர எப்படி மேஷன் பண்ணீங்க சார் ?
--- Same type joke heard already..
மனைவி (கணவனிடம்) : ஏனுங்க புது பொடவை.. ஒங்க மாமியாருக்கு வாங்கலாம்னுதான சொன்னேன்.. எங்க மாமியாருக்கா கேட்டேன் ?
படங்கள் அருமை அண்ணே! ஷரகம் காவடி பொறுமையா ரெடி பண்ணி செமையா ஆடிடுங்க.. வெய்டிங் :)
//பாதாளலோகத்தின் நுழைவாயில்? //
:))
கச்சேரி களை கட்டுது போங்க. படங்களும், வீடியோவும் அருமை.
எனக்கு என் மாமியாரை பிடிக்கறதை விட உங்க மாமியாரைத்தான் ரொம்ப பிடிக்கும்"
GREAT JOKE!!!
\\குழியில் விழுந்து\\
ஆஹா. என்னா பாட்டு ஒரிஜினல் வெர்ஷன்:))
வெரைட்டியான பதிவு.
திண்ணைக் கச்சேரி அமர்க்களம்.
//அன்பிற்கினிய சாவை வருக வருகவென்று வரவேற்கிறோம்//
//வரப்புயர வாழ்வுயரும் என்பது போல் ரோடுயர சென்னை உயரும்//
வரிகள் நல்லா இருக்குங்க அண்ணா.
திண்ணை கச்சேரி, திண்ணைக் கச்சேரி தான் !!
இண்டேறேச்டிங்கா இருக்கு ப்ரோ சுப்பர்
அதிலும் அந்த சிப்ஸ் ஹிஹி
சென்னையில் பதுக்குகுழி. எல்லா ஊரிலும் அதான் நிலை.
dear rvs
saaa than super
vizhundu vizhundu sirithen
thodarungal
balu vellore
குழியில் விழுந்து.. ரசித்தேன்:)
மடிசார் மாமியை ஆராய்ச்சி பண்றாரா தக்குடு? அவரை வெச்சு நீங்க காமெடி பண்றேளா?
@LK
//திங்களும் செவ்வாயும் வண்டி ஓட்டி பத்திரமாக அலுவலகம் சென்று திரும்பியது அந்த கடவுளின் உதவியால்//
அதே... அதே.... பதே.. பதே... ;-)
@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றிங்க மேடம்.. பாராட்டுக்கள் உங்கள் லேடிஸ் ஸ்பெஷல் கதைக்கும்... ;-)
@Madhavan Srinivasagopalan
மாதவா.. அந்த வீடியோலயே ஒரு பொம்பளை சொல்றாங்க பாருப்பா... ;-)
@Balaji saravana
ஷகரம் ஒரு சாகரம்.. நின்னு ஆடறேன்... ரசித்ததற்கு நன்றி தம்பி... ;-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகர காரரே!!! ;-)
@sakthi
மாமியார் ஜோக் உடனே பிடிச்சிருச்சா... ;-) ;-)
@வித்யா
என்ன!! இதுவே ஒரிஜினல் வெர்ஷன் மாதிரி இருக்கா.. விளையாடாதீங்க...
பதிவை ரசித்தமைக்கு நன்றி ;-)
@கோவை2தில்லி
நன்றி ;-)
@இளங்கோ
நன்றி இளங்கோ.. யாரை நினைச்சு காதல் கவிதை எழுதறீங்க.. வீட்டுக்கு தெரியுமா... ;-)
@Gayathri
காட்டு தின்பண்டம் அது.. நம்மால கொறிக்காம இருக்க முடியாது... சரியா G3? ;-)
@தமிழ் உதயம்
ரொம்ப வருத்தமாயிருக்கு!! ;-( ;-(
@balutanjore
Thank you Sir!!!
@அப்பாதுரை
ரசித்ததற்கு நன்றி அப்பாஜி!! தக்குடுக்கு ரொம்ப பிடிச்ச டிரஸ்.. ஆம்பிளைகள் கட்டிக்கற பஞ்சகஜத்தையே புருஷாள் கட்டிக்கிற மடிசார்ன்னு தான் சொல்லும். தங்கமான பிள்ளை. ;-)
வீட்ட நெனச்சுத் தாங்க கவிதையே எழுதறேன்.. !!
ஸ்ஸ்ஸ்.. முடியல :)
ஹலோ RVS anna, நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன். என்னை எதுக்கு இப்பிடி வம்புக்கு இழுக்கறேள்?..:P
@ பத்துஜி - இந்த மன்னார்குடிகாரர் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க!! என்னோட பேரை போட்டு அவருக்கு தோணினதை எல்லாம் சொல்லிட்டு எங்க அக்கா கைலேந்து தப்பிக்க பாக்கறார்.
பொட்டடோ சிப்ஸ் வீடியோ நல்ல தேர்வுதான் very interesting RVS.
சொல் பேச்சு செல்லா.. விட்டிருந்தா எல்லா செல்லும் சொல் பேச்சு கேட்காமல் போயிருக்கும்.
ஷேக்கு கேக்கு சாப்பிட்டு ஷாக்கானதை ஷோக்கா அரம்பியுங்க ....
ரோட்டில் குழிகளா,,,குழியில் ரோடா ...பதுங்கு குழி சரியாத்தான் இருக்கு...
சூடான சிப்ஸ காட்டி கடுப்பேதாதிங்க..... இங்க டிக்கெட் எடுக்கறப்ப தான் வரும்....
மடிசார் ஆராய்ச்சிக்கு கைடு தயார் என நோட்டிஸ் போட்டு ஒட்டிட்டிங்க
யோக நரசிம்மர் ..புரதான கோவிலின் வண்ணப்படமும் கருப்பு வெள்ளைப்படமும் அருமை
சாலையோர படங்கள் - பயங்கரமாக இருக்கிறது. மக்கள் யாரும் பலியாகாமல் இருக்க வேண்டுமே!
@இளங்கோ
ஓ.கே. பப்ளிக். பப்ளிக்..... ;-)
@தக்குடுபாண்டி
தக்குடு... நீ ஸத்புத்ரன் தான்.. நேக்கு தெரியும்... ஏன் இந்த லோகத்துக்கு தெரியுமே.... ;-) ;-)
@கக்கு - மாணிக்கம்
நன்றிங்க மாணிக்கம். ;-)
@பத்மநாபன்
//ஷேக்கு கேக்கு சாப்பிட்டு ஷாக்கானதை ஷோக்கா அரம்பியுங்க .... //
பேஷா ஆரம்பிச்சுட்டா போச்சு.. ;-)
//ரோட்டில் குழிகளா,,,குழியில் ரோடா ...பதுங்கு குழி சரியாத்தான் இருக்கு...//
கன்னத்துல குழி விழுந்தா ரசிக்கற நாம இதையும் ரசிக்கனும்ன்னு யாராவது சொல்லிடப் போறாங்க.. ;-)
//மடிசார் ஆராய்ச்சிக்கு கைடு தயார் என நோட்டிஸ் போட்டு ஒட்டிட்டிங்க//
இதுல டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணன் தக்குடுவே.. நான் ஒரு கருவி.. அவ்வளவே.. ;-)
நன்றி பத்துஜி ;-)
யோகா நரசிம்மர் படங்கள் அருமை.
உ.கி.சிப்ஸின் தீவீர ரசிகன் நான். வீட்ல கண்ணுல காட்டமாட்டாங்க. பயணங்களில் திருட்டுத்தனமாய் சாப்பிடுவதை போட்டுக் குடுத்துடாதீங்க.
//ஆம்பிளைகள் கட்டிக்கற பஞ்சகஜத்தையே புருஷாள் கட்டிக்கிற மடிசார் // பின்னுறீங்க பெருமாளே!
@Chitra
ஆமாம். மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், இன்று அந்தப் பள்ளங்களை நிரப்பி மராமத்து வேலை செய்தார்கள். அந்த தேங்கிய தண்ணியில் செம்மண் அடித்து குயவன் பானை செய்ய சாந்து குழைத்தது போல செய்துவிட்டார்கள். :-( இப்பவும் ஒருத்தரும் அதில் இறங்க பயப்படுகிறார்கள்.
அப்ப சென்னைங்கறது குழியும்..குழி சார்ந்த இடமும்..
சரியா ஆர்.வி.எஸ்?
@மோகன்ஜி
பெரியவா அனுக்ரஹம் ;-)
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
ஆமாம்.. ஆறாம் வகை... குழிதல்...
;-)
தலைப்பு அருமையா வச்சிருக்கீங்க..
படங்களும், வீடியோவும் கூட சூப்பர் .
@ஜிஜி
பாராட்டுக்கு நன்றி ஜிஜி. நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சோ? ;-)
ஆங்கிலத்தில் வேவ் லெங்த் என்று கூறுவார்களே.. அதுபோல நான் நினைத்துக் கொண்டே வந்தது... வண்டி ஓட்டும் போது (ஸ்கூட்டி)பாடிக்கொண்டும் வந்த பாடல்,
சென்னையில் கொஞ்ச நேரத்திற்கு முன் இருந்தது போல சாலை அடுத்த விநாடியில் இருக்காது.. இந்தத் திடீர் பள்ளங்களைப் பார்த்து நான் மனதில்...
நேற்று இல்லாத மாற்றம் என்னது?
சேற்றில் கண்கள் காணாத பள்ளம் ஏதிது?
இதுதான் சீர் மிகு சென்னை என்பதா?
மக்கள் எலும்பை உடைப்பதா?
கேளிவியில்லையா? கேட்டால் பதிலும் தொல்லையா?//
சுமார் 50 காவலர்களாவது கோயம்பேடு மார்க்கெட் அருகில் பேருந்து சிக்னலில் நிற்பார்கள். எங்கு பள்ளம் என்று காட்ட ஏதும் அறிகுறியைச் செய்ய மாட்டார்கள்..என்ற வருத்தத்துடன்... அதே போல பெரிய பள்ளம் ஏற்ப்பட்டிருக்கும் . உடனடியாக அதைச் சீர் படுத்த மாட்டார்கள்..என்ன சொல்ல கார்ப்பரேஷன்..
RVS நீங்க படம் போட்டு இருக்கீங்களே கோயம்பேடு... அது எங்க ஏரியா...
தினந்தோறும் நான் புதுமை நீச்சல் அடிக்கும் ஏரியா..(டியுப் வைத்துக்கொண்டு அடிப்பார்களே அது போல ஸ்கூட்டி வைத்துக் கொண்டு அடிக்கும் நீச்சல)
//மிகைப் படுத்தாமல் சொல்கிறேன் இன்று காலை இரண்டு சக்கர வாகனத்தில் போன ஒரு மத்திம வயது அன்பர் முன்சக்கரம் ஒரு புதைகுழியில் இறங்கி செங்குத்தாக அப்படியே கீழே விழுந்து வாரினார். சரி சில்லரை. இத்தனைக்கும் அவர் ஊர்ந்து தான் போனார்.// இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுவது நாம் சமுதாயத்திற்குச் செய்யும் கடமை.
ஆனா இந்த மேடு பள்ளத்தில ஒரு வசதியும் இருக்கு RVS. இந்தக் காரணத்தைச் சொல்லிட்டு மழை வந்தா லீவு எடுத்துடலாம்.. இது எப்படி இருக்கு?
மழைக்கு ஏற்ற உருளைக்கிழங்கு சிப்ஸ்..மொறு மொறு..
தேவையான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..
இந்தப் பதிவுக்கு ஒரு மிக நீண்ட பின்னூட்டம் இட்டு இருந்தேன் RVS. அது டூ லென்க்த்துன்னு யூ ர ஐ கேட்டுட்டு அழிஞ்சு போயிடுச்சு... ஆனா அதை மீண்டும் இடுறேன் மாலையில்.. கொஞ்சம் வேலையைப் பார்த்துட்டு வந்து..
பின்னூட்டம் வந்து விழுந்திடுச்சு.. நோ ப்ரோப்ளம்.
நேற்று இல்லாத மாற்றம் என்னது... Super reproduction in another format. I really like your script.
//ஆனா இந்த மேடு பள்ளத்தில ஒரு வசதியும் இருக்கு RVS. இந்தக் காரணத்தைச் சொல்லிட்டு மழை வந்தா லீவு எடுத்துடலாம்.. இது எப்படி இருக்கு?//
காதலர்கள் இருவர் ஒருவராய் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது... மேடு பள்ளங்கள்... பற்றிக்கொள்வதர்க்கு... வசதியாய்...
(நானும் என் மனைவியும் ஒருகாலத்தில் டூ வீலரில் போனதை சொன்னேங்க... )
பெரியதொரு பின்னூட்டத்திற்கு நன்றி. ;-)
//காதலர்கள் இருவர் ஒருவராய் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது... மேடு பள்ளங்கள்... பற்றிக்கொள்வதர்க்கு... வசதியாய்...
(நானும் என் மனைவியும் ஒருகாலத்தில் டூ வீலரில் போனதை சொன்னேங்க... )//
The cat is out of the bag. இது போல பிரச்சனைகள் வரும்போதுதான் குட்டெல்லாம் வெளிப்படும்.. இதெல்லாம் சென்னை வீதியில் நடந்ததா? இன்றும் அந்தத் தெருக்களில்/ பள்ளங்களில் சென்று அசை போடுவது உண்டா? RVS.
Post a Comment