உமையொருபாகன் கார் அன்று கிளம்புவதில் அதிக சிரமம் எடுத்துக்கொண்டது. இத்தனைக்கும் நாள் பூரா ஒதிய மர நிழலில் இளைப்பாறிக்கொண்டு தான் இருந்தது. அவரைப்போல அந்த வண்டியும் கொஞ்சம் வயதானதுதான். தள்ளாமை வந்துவிட்டது அதனால் ஓடுவதற்கு தள்ளுமுல்லு கேட்குமோ என்று நினைத்தார். தன் கேசத்திற்கு கார்னியர் கலர் நேச்சுரல் பூசுவது போல அதற்க்கும் வயதை குறைக்க (அ) மறைக்க அவ்வப்போது பட்டி பார்த்து பவுடர் பூசி சிங்காரித்திருக்கிறார். சாவியை இட்டவுடன் இரண்டு மூன்று முறை கமறியது. நான்காம் முறையாக கிளப்பும்போது படிக்காதவன் "லக்ஷ்மீமீமீ.... ஸ்டார்ட்...." கார் டிரைவர் ரஜினி நினைவுக்கு வந்து வண்டி பின்னால் திரும்பி எந்தப் பொருளும் இல்லாத பின் இருக்கைகளை பார்த்து "ஒன்றும் இல்லை" என்று புன்முறுவல் பூத்தார். ஹோண்டா சிட்டியில் இருந்து குனிந்து நிமிர்ந்து தொண்ணுறு கிலோவை அசைத்து வந்து தொந்தி பிதுங்க போனேட் திறந்து பாட்டரியை பார்த்தார். அமேரான் அமெரிக்கையாய் உட்கார்ந்திருந்தது. போல்ட் நட் ஒன்றும் புரியவில்லை. அறைந்து சாத்தினார். திரும்பவும் உள் சென்று இக்னிஷன் கீ கொடுக்க ஒரு தடவை உதறி ஸ்டார்ட் ஆனது. இரண்டு மூன்று முறை ஆக்சிலேட்டருக்கு வலிக்கும் வரை "டர்.ர்...ர். டர்.ர்...ர். " என்று உதைத்து ரேஸ் கார் போல சீறினார். பிறகு பொறுமையாக கியர் மாற்றி அலுவலக வாசலில் செக்யூரிட்டி அடித்த சல்யூட்டுக்கு பாதி கை தூக்கி அரையளவு பதில் மரியாதை செலுத்தி விட்டு இருபது, நாற்பது என்று படிப்படியாக கியர் தட்டி வேகம் கூட்டி வீட்டுக்கு விரட்டினார்.
முதல் சிக்னலில் சிகப்பிற்கு நிற்கும் போது மனதில் காலை காட்சி கருப்பு வெள்ளையில் ஓடியது. ஷு மாட்டி அலுவலகம் கிளம்பி ஷோ கேஸில் மூக்குக் கண்ணாடி எடுக்கும்போது அந்த நோக்கியாவில் மொத்தம் ஐந்தாறு மிஸ்ஸுடு கால்கள். JK. அடுத்தவர் மொபைலை அலசுவது பக்கத்து வீட்டு பாத்ரூமை எட்டிப் பார்ப்பது போன்ற அநாகரீக செயல் என்று நோக்காமல் வந்துவிட்டார். ஆனால் மனது மறக்காமல் அழியாத மார்க்கரால் குறித்துவைத்துக் கொண்டது. ஆபீசில் வேலை பார்க்க விடாமல் அந்த நோக்கியா காலர் டுயூனை விடாமல் மூளை ராகம் பாடிக் கொண்டிருக்கிறது. யாராக இருக்கும்? ஜெயக்கண்ணனா? ஜெயக்குமாரா? எந்த ஜெய விஜய கருமாந்திரமோ. மீளமுடியாத சரமாரியான கேள்வி கணைகளின் குறுக்கே கை நீட்டியது ஒரு தர்மக் கணை. அழுக்கு குழந்தையை இடுப்பில் ஏந்தி கார் ஜன்னல் கதவு தட்டி வயிற்றை தடவிக் கொண்டு கையேந்தி "ஐயா.." என்றது ஒரு தலையில் முக்காடு போட்ட அயல் மாநில பெண் பிச்சை. தலையில் ரத்தக்கரை மை தோய்த்த ஒரு பிளாஸ்திரி கட்டுப் போட்டு போதையூட்டப்பட்ட கைகால் முளைத்த வளர்ந்த குழந்தை. கண்கள் சொருகி ஒரு மந்த நிலையில் லாஹிரி உலகத்தில் இருந்து ஏக்கப் பார்வை பார்த்தது. சிரிப்பு, அழுகை, பாசம், நேசம், பசி, பள்ளி, படிப்பு, விளையாட்டு என்று எல்லாவற்றையும் மறந்து துறந்து பிறந்த பிச்சைக் குழந்தை. பர்ஸ் திறந்து காசு எடுப்பதற்கும் பச்சை விழுவதற்கும் சரியாக இருந்தது. ஈ மொய்த்த குழந்தைக்கு ஈந்தருள முடியவில்லை.
அடுத்த சிக்னல் வருவதற்குள் நடைபாதையில், ஸ்கூட்டியில், பஸ்ஸில், காரில், ஆட்டோவில், பில்லியனில் என்று ஆயிரமாயிரம் பேர் அவளைப் போலவே சிரித்தார்கள், நடந்தார்கள், பேசினார்கள், தலை கோதி வேடிக்கை பார்த்தார்கள், தும்மினார்கள், வாய்க்கு நேர் கைசொடுக்கி கொட்டாவினார்கள், தூங்கினார்கள். எங்கெங்கும் அவள் முகம். இன்று வரை என்ன குறை வைத்தோம்? சந்தான செல்வத்தை தவிர எந்த செல்வம் இல்லை வீட்டில்? சோபாவில் இருந்து எழுந்திருக்காமலே நாள் பூராக தலையில் கை முட்டுகொடுத்து பொம்பளை ரங்கநாதராக சயனித்திருக்கலாம். ஒரு சீரியல் விடாமல் பார்க்கலாம். தொட்டதெர்க்கெல்லாம் வேலைக்காரர்கள் மற்றும் காரிகள். கண் அசைவிற்கு காபியும் தலை அசைவிற்கு டிபனும் முப்போதும் கிடைக்கும். பச்சை துரோகி. அப்படி என்ன குறை. பனிரெண்டு வயது வித்தியாசம் ஒருத்தியை பத்தினியாக வாழ விடாதா என்ன. நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்து மனதை சப்பாத்தி மாவாக பிசைந்தது. கொஞ்ச நாட்களாக இவளின் போக்குவரத்து எதுவும் சரியில்லை. இந்த கர்பமாகாத கற்புக்கரசியை இன்றைக்கு என்ன ஏது என்று கேட்டு விசாரித்து உண்டு இல்லை என தீர்த்துவிட வேண்டியதுதான்.
போர்டிகோவில் வண்டியை டயர் தீய்ந்து அலற "க்ரீச்ச்..."சிட்டு நிறுத்திவிட்டு ப்ரீஃப்கேஸை ரப்பர் பந்து போல சோபாவில் விசிறி எறிந்துவிட்டு அந்த மொபைலை தேடி உள்ளே விரைந்தார் உமையொருபாகன். கார் சத்தம் கேட்டு கையில் காஃபியோடு வந்த மனைவி அன்பான பார்வையை கண்ணால் வீசி வாயால் கேட்டார் "ஏங்க இந்த ஜெயா காப்பகத்த்லேர்ந்து தினமும் அஞ்சாறு தடவை ஃபோன் பண்றாங்க. ரெண்டு பசங்களோட படிப்பு செலவை முழுசா ஏத்துக்கறோம் அப்படின்னு சொன்னோம். நீங்க மீட்டிங் ஆபிஸ்ன்னு ரொம்ப பிசியா சுத்திகிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்?"
"எந்த காப்பகம்?"
"ஜெயா குழந்தைகள் காப்பகம்"
"........"
"செக் எழுதி கொடுங்க. அடுத்த முறை கால் வந்தா தவறாம அட்டென்ட் பண்ணனும். தப்பா நினைச்சுப்பாங்க." என்று சொல்லிவிட்டு உமையொருபாகனின் வாமபாகம் உள்ளே சென்றது.
நாலைந்து முறை JK என்ற தவறிய அழைப்புகளின் இரண்டெழுத்து, மின்மினிப் பூச்சி போல கண்ணுக்குள் மினுக்க சந்தேகப்பட்ட பாழும் மனது சைலென்ஸ் ஆக வெகு நேரம் பிடித்தது. டீப்பாயில் வைத்த காஃபி சூடு ஆறிக் கொண்டிருந்தது.
பட விளக்கம்: சந்தேகத்தின் உச்சத்தில் மன உளைச்சலில் இருக்கும் இந்த நபரை வலைபோட்டு தேடி கண்டுபிடித்த இடம் http://www.bsimple.com/
-
போர்டிகோவில் வண்டியை டயர் தீய்ந்து அலற "க்ரீச்ச்..."சிட்டு நிறுத்திவிட்டு ப்ரீஃப்கேஸை ரப்பர் பந்து போல சோபாவில் விசிறி எறிந்துவிட்டு அந்த மொபைலை தேடி உள்ளே விரைந்தார் உமையொருபாகன். கார் சத்தம் கேட்டு கையில் காஃபியோடு வந்த மனைவி அன்பான பார்வையை கண்ணால் வீசி வாயால் கேட்டார் "ஏங்க இந்த ஜெயா காப்பகத்த்லேர்ந்து தினமும் அஞ்சாறு தடவை ஃபோன் பண்றாங்க. ரெண்டு பசங்களோட படிப்பு செலவை முழுசா ஏத்துக்கறோம் அப்படின்னு சொன்னோம். நீங்க மீட்டிங் ஆபிஸ்ன்னு ரொம்ப பிசியா சுத்திகிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்?"
"எந்த காப்பகம்?"
"ஜெயா குழந்தைகள் காப்பகம்"
"........"
"செக் எழுதி கொடுங்க. அடுத்த முறை கால் வந்தா தவறாம அட்டென்ட் பண்ணனும். தப்பா நினைச்சுப்பாங்க." என்று சொல்லிவிட்டு உமையொருபாகனின் வாமபாகம் உள்ளே சென்றது.
நாலைந்து முறை JK என்ற தவறிய அழைப்புகளின் இரண்டெழுத்து, மின்மினிப் பூச்சி போல கண்ணுக்குள் மினுக்க சந்தேகப்பட்ட பாழும் மனது சைலென்ஸ் ஆக வெகு நேரம் பிடித்தது. டீப்பாயில் வைத்த காஃபி சூடு ஆறிக் கொண்டிருந்தது.
பட விளக்கம்: சந்தேகத்தின் உச்சத்தில் மன உளைச்சலில் இருக்கும் இந்த நபரை வலைபோட்டு தேடி கண்டுபிடித்த இடம் http://www.bsimple.com/
-
37 comments:
உங்கள் நடை நன்றாக உள்ளது . தொடர்ந்து எழுதவும்
அருமையான எழுத்து நடை சார்... இன்றுதான் உங்கள் எழுத்துக்களை முதல்முறையாக ரசித்து படிக்கிறேன்.,... ஆங்காங்கே சுஜாதா சாரின் ஸ்டைல் தெரிகிறது...
யாம் பெற்ற சந்தோஷங்களோடு, சந்தேக கதையின் பலனை முழுதாய் அனுபவிக்க அண்ணாவிற்கு இரண்டு பெட்டி மத்தாப்புக்கள் மற்றும் ஒரு பெட்டி அருமை,சூப்பர்களும் பார்சல் செய்ய உத்தரவிடுகிறேன்.. ;)
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா! :)
நல்லாயிருந்துச்சு.
சந்தேகம் ஒரு கொடிய மன நோய்! அது மிகப் பெரிய மன உளைச்சலை தரும்.... நல்ல கதை!!!
பரவாயில்லை, போனாபோகுது பாஸ் மார்க் போட்டாச்சு. அடுத்ததடவ இன்னம் நெறைய மார்க்க எடுக்கணும் .
நா அரபில பின்னூட்டம் போட ஆரம்பிக்கட்டா?
சந்தேகம் இழுத்துச்செல்லும் தூரமும் அதிகம், சிக்கலும் அதிகம்...படத்தோடு கதையும் அருமை..
தொடர் ஊக்கத்திற்கு நன்றி எல்.கே ;-) ;-)
@philosophy prabhakaran
நன்றி... ;-) சுஜாதா என்பது மிகப்பெரிய மேரு மலை.... நான் ஒரு கலங்கிய குட்டை.... ;-)
@Balaji saravana
மிக்க நன்றி தம்பி.. உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ஒரு சரவெடி பதிவு தயார் செய்து கொண்டிருக்கிறேன். முடிந்ததும் பதிகிறேன். ;-);-)
@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றி ;-)
@சிவா
நன்றி ;-) சந்தேகப் பேயினால் ரகுவரன் புரியாத புதிரில் "ஐ நோ" சொல்லி சித்தாராவைப் படுத்துவார். ;-)
@கக்கு - மாணிக்கம்
அரபியில் பின்னூட்டம் போடலாம். ஆனால் தமிழ் விளக்கத்துடன். ;-) ;-) ;-)
நன்றி பத்துஜி ;-) ;-)
தீபாவளிக்கு ரெடியா.. என்ன ஒன்னும் பேச்சே காணோம்.. ;-)
உங்கள் எழுத்து நடை நன்றாய் உள்ளது நண்பரே. கதை சொல்லிய விதம் அருமை. தொடருங்கள்.
படமும் கதையும் அபாரம்!!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
@வெங்கட் நாகராஜ்
நன்றி நண்பரே ;-) ;-)
@Chitra
நன்றி சித்ரா வாழ்த்துக்கும் பாராட்டுக்கும். ;-) ;-) ;-) ;-)
கதையைப்போலவே படத்தை பற்றிய
விவரமும் டாப்பு.
@சைவகொத்துப்பரோட்டா
நன்றி! பட விளக்கத்தை ஸ்பெஷலாக கவனித்ததற்கு ;-)
கதை நல்லா இருந்துச்சுங்க.
@இளங்கோ
நன்றி ;-)
JK is OK
nice story
@Madhavan
Thanks ;-)
சந்தேகக் கோடு.. அது சந்தோஷக் கேடு.. அழுத்தமா கதையை சொல்லியிருக்கீங்க.. படம் அருமை.
சந்தேகக் கோடு.....அது சந்தோஷக் கேடு...
Superb sir!! the flow was excellent! loved the photo along your post!
@மோகன்ஜி
மோகன் அண்ணா.... கருத்துக்கு நன்றி ;-)
@ஸ்ரீராம்.
அதெப்படி நான் பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பெரும் ஒரே கமென்ட் போட்டீங்க... ஆச்சர்யமா இருக்கு ஸ்ரீராம். ;-) ;-)
@Matangi Mawley
Thanks ;-) ;-)
உங்க கதை சொல்லும் பாங்கு அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்
@மனசாட்சியே நண்பன்
நன்றி ;-)
கதையே உல்டாவோனு தோணிச்சு. உள்ளே சென்ற வாமபாகத்தோட முகபாவம் எப்படி இருந்ததுனு சொல்லியிருந்தீங்கன்னா இது சந்தேகக் கோடு கேசா சாமர்த்தியக் கோடு கேசானு மூளையப் பிச்சிட்டிருக்கலாம்.. நல்லவர் நீங்க. நச்சுனு முடிச்சிருக்கீங்க.
பிச்சைக்கார விவரம் மனதை முள்ளாக் குத்திச்சு.
(நாலஞ்சு தடவை படிச்சேன் சார்.. கமென்ட் போடலை. ஒரு வாரமா ஒரு கை ஓசை. போன வாரம் சின்ன விபத்துல இடதுகைப் பெருவிரல் படுத்துகிச்சு... ஒரு கைலயே தட்டச்சி வெட்டு ஒட்ட கஷடமா இருக்குங்க.. தமிழ் உதயம் எப்படி ஒரு கைலயே முழுப் பதிவு போட்டாரோ?!... நீங்க கெக்கே பிக்குணி மாதிரி ஐபி இல்லியே? அவங்க பாருங்க.. யாரு யாரு எங்கருந்து பின்னூட்டம் போட்டாங்கனு பீடர் மேனுவலா அடிச்சு வுடறாங்க)
அப்பாஜிக்கு...விரைவில் இடது கை பெருவிரல் சீராக வாழ்த்துக்கள்..
//நல்லவர் நீங்க. நச்சுனு முடிச்சிருக்கீங்க.// கதையை முடிக்கறவிதத்துல கூட நல்லவர் கெட்டவர் உண்டா ..எதோ அப்பாஜி டச் தெரியுதே....
கதை நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போட வந்தா, அப்பாதுரை சாரின் பின்னூட்டம் பார்த்துட்டு, கதையை இன்னும் ஒரு முறை படித்தேன்.... ஆஹா, //கார் சத்தம் கேட்டு கையில் காஃபியோடு வந்த மனைவி// கார் சத்தம் கேட்டதும் காஃபியைப் போட முடியுமா? இதுல இன்னும் ஒரு திருப்பமோ;-))))
ஹிஹி, வரலாறு முக்கியம் நண்பரே! அதுனாலியே பின்னூட்டம் எந்த ஐபி அட்ரஸிலிருந்து வந்ததுன்னு பாத்துக்குவோம்!
@கெக்கே பிக்குணி
உமையொருபாகன் என்ற அவரோட பேருக்கு எற்றாமதிரியான பெட்டெர் ஹாஃப் அவுங்க. அந்த டயத்துக்கு ஆபிசிலேர்ந்து வருவாங்கன்னு அவங்களுக்கு தெரியும். அதான் சத்தம் கேட்டதும் காபியோட வந்தாங்க. அந்த மாதிரி ஒரு பத்தினி தெய்வத்தை தான் அவர் சந்தேகப் பட்டுட்டார். இது எப்புடி இருக்கு.
இப்பிடியெல்லாம் அதுக்கு விளக்கம் கொடுக்கலாம். ஆனா நா இப்ப கொடுக்கலை. ;-) ;-) ;-)
உங்களோட அந்த கழுகு கண்ணுக்கு நன்றி.
மீண்டும் மீண்டும் வந்து இதுபோன்ற ஷார்ப் கமெண்ட்டு போட்டு என்னை விளாசுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். நன்றி ;-)
@அப்பாதுரை
ஐய்யையோ என்னாச்சு... யாரும் துரோணர் கிட்ட பிரச்சனை பண்ணினீங்களா. பெருவிரலை தட்சணையா கேட்டுடாங்கள... ஜோக்குக்கு... கெட்ட விரல் நல்ல விரலாக எல்லாம் வல்ல ஏகலைவனை வேண்டுகிறேன். என்னை நல்லவன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. ;-) ;-)
கெ.பி வேற நொண்டி நொங்கு எடுக்கறாங்க.... இந்த பத்து வேற கிளறார்ப்பா.. ரொம்ப பயமா இருக்கு. ;-)
நடு நடுங்கி உட்கார்ந்திருக்கேன்.... அப்பா சாமி..... மோகனப்பா யாராவது காப்பாத்துங்கப்பா.. ;-) ;-)
Post a Comment